அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

ஞானப் பல் தந்த தொல்லை 12/29/2008

பஞ்சாயத்து போர்டுகாரங்க பாதி காசுக்கு வாங்கி போட்ட பழைய ட்யூப் லைட் மயங்கி மயங்கி எரியிற மாதிரி கீழ்த்தாடையில யாரோ ஆணி( தேவையுள்ள ஆணியா? தேவையில்லாத ஆணியானு கேக்கபிடாது ஆமா)... வச்சு லேசா குத்துற மாதிரி ஒரு உணர்வு. ஒரு சிறு அமைதிக்கு பின் மறுபடியும் திடீர் வெளிச்சம் போல சுரீர் வலி அதுக்கு மேல தூங்க முடியல.. பாழாப்போன பல் வலி தான்.

அர்த்த(மில்லா)ராத்திரி மூனு மணி ஆச்சு. எங்க ஊர் கல்லு ரோட்டுல 20கி.மீ வேகத்துல போற டிராக்டர்லேயே(இதுல போன பெரும்பாலான நிறைமாத கர்ப்பிணிகளுக்கு, ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு முன்னாடியே சுகபிரசவம் ஆகியிருக்கு) அடிச்சு போட்ட மாதிரி தூங்குற ஆளு, இந்த பல்வலியில் பத்து நிமிசம் கூட கண் அசர முடியல. என்னா வலி.. என்னா வலி.

நேத்திக்கே நம..நம-னு (நமீதா..நமீதா-னு படிச்சா உங்கள் கண்ணுக்கு ஆயுள் கெட்டியா(க்)கும்) லேசா அரிச்சுது/வலிச்சுது, நம்ம தான் வார்னிங்(Warning) மெசேஜ்ஜை மதிக்கிறதே இல்லியே. எர்ரர்(Error) வந்தா மட்டும் தான் எழுந்து என்னானு பாக்குறது, அப்படியே பழகி போச்சு. பொறுத்து பாத்தேன், வலி குறையிற மாதிரி தெரியல.. சரி இது வார்னிங் இல்ல, எர்ரர் தான் புரிய ஆரம்பிச்சுது.

சரி ஆனது ஆச்சுனு என்னோட முதன்மை/குடும்ப மருத்துவருக்கு போன் போட்டேன்.

”என்னா தம்பி இந்த நேரத்துல, அங்க மணி மூனுக்கு மேல இருக்குமே!”

”ஆமாம்மா, எனக்கு பல் வலிக்குது, அதான்”

”எந்த பல்லு? எங்க வலிக்குது? ”

”கடைவாய் பல்லு தான். ஆரம்பிக்குறது என்னவே ஈறுலதான் ஆனா அது அக்ரிவேட்டாகி கன்னம், காது-னு போய் சில சமயம் கண்ணு வரைக்கும் வலிக்குது”

”அது ஒன்னுமில்ல ஞானப் பல் முளைக்குமா இருக்கும்பா அதான், சுடு தண்ணியில உப்பு போட்டு வாய் கொப்பளிச்சுட்டு, வலிக்கிற இட்த்துல கிராம்பு இருந்தா வை, சரியா போய்டும்”

சொன்னபடியே கிராம்பை வச்சுட்டு படுத்தேன், எப்போ தூங்கினேனு தெரியாது.

ஆனைக்கு அப்புறம் பல்ல ஒழுங்கா மெயிண்டெய்ன் பண்றது அகில உலகத்திலேயும் இந்த ஆளவந்தான் ஒருத்தன் தானே. அப்படியிருக்கையில் அவனுக்கு எப்படி பல் வலியெல்லாம் என பயந்தே போனேன். எல்லாம் இந்த ஞானப் பல்லின் மாயம்/தொல்லை தான்

21 பின்னூட்டங்கள்:

பழமைபேசி said...
இஃகிஃகி!

------------- ~~~~~ Thanks to பழமைபேசி ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

நேத்து நான் பட்ட பாடு உங்களுக்கு சிரிப்பா இருக்கு.. ம்ம்.. ம்ம்..


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
நசரேயன் said...
நீங்க காலை மாலை இரண்டு வேளையும் பல் விளக்கனும்,
ஞானப்பல்லா அப்படின்னா என்னா?

------------- ~~~~~ Thanks to நசரேயன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//நீங்க காலை மாலை இரண்டு வேளையும் பல் விளக்கனும்,
//
விளக்கியாச்சு.. விளக்கியாச்சு... எத்தனை தடவ..

//
ஞானப்பல்லா அப்படின்னா என்னா?
//
இன்னும் தெரியாதா? அப்போ நீங்க இன்னும் வயசுக்கு வரல :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
உருப்புடாதது_அணிமா said...
ஞான பல்லா??
அப்படின்னா??

------------- ~~~~~ Thanks to உருப்புடாதது_அணிமா ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
ஞான பல்லா??
//
WISDOM TEETH


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ச்சின்னப் பையன் said...
:-)))

------------- ~~~~~ Thanks to ச்சின்னப் பையன் ! ~~~~~ -------------
அதிரை ஜமால் said...
படமே டெராராக்கீது-ba

------------- ~~~~~ Thanks to அதிரை ஜமால் ! ~~~~~ -------------
gayathri said...
என்னா வலி.. என்னா வலி.

adada valiya kuda ennama rasichi irukenga.neengalum enna matheriya

------------- ~~~~~ Thanks to gayathri ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

ச்சின்னபையன் , வாங்கோ.. வாங்கோ

ஜமால், அத விட டெர்ரரா இருந்துச்சு வலி :(


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
gayathri said...

adada valiya kuda ennama rasichi irukenga.neengalum enna matheriya
//
நாங்க( என்னத்தான் கொஞ்ச மரியாதையோட சொன்னேன்) எல்லாம் எவ்ளொ அடிச்சாலும் தாங்குற நல்லவுக...

அது வேற ஒன்னும் இல்ல.. சும்மா வலிச்சு கிட்டே இருந்தா ஒரு கணக்கு வேணாமா? அதான் எண்ணி(Counting) கிட்டு இருந்தேன்..எண்ணி(Thinking)கிட்டும் இருந்தேன்..

அது ஏன் கவுஜ எழுதுறவுங்களுக்கு பதில் எழுதும் போது மட்டும் நான் இப்ப்டி ஆகிடுறேன்னு தெரியல?


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
வருண் said...
As you know, in the west, they will remove the wishdom teeth as they are not needed and hard to maintain and that dentists dont want to clean few more teeth which are hard to reach :)

------------- ~~~~~ Thanks to வருண் ! ~~~~~ -------------
கவின் said...
\\பெரும்பாலான நிறைமாத கர்ப்பிணிகளுக்கு, ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு முன்னாடியே சுகபிரசவம் ஆகியிருக்கு\\
ஹி..........ஹி..........ஹி

------------- ~~~~~ Thanks to கவின் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
As you know, in the west, they will remove the wishdom teeth as they are not needed and hard to maintain and that dentists dont want to clean few more teeth which are hard to reach :)
//

Yes. its true. Yesterday I went to happy harry's here. Since I dont want to go to office with cloves.

I was searching for pain killer for toothache. Fortunately I couldnt find one, but I found one girl, I just explained the situation in DETAIL to her and I asked her help.

she took me on aisle, we found some medicine but nothing was related to wisdom teeth issue. I was worried and I asked her, Do you have any idea? How long the pain will continue? ( நல்ல ஃபிகரை கண்டா நாலு நாளுக்கு கடலை போடுற அளவுக்கு வாய் கொஞ்சம் நீளம்).

She smiled and told "I removed it already".

yeah.. you are right. in west they will remove that, bcaz they dont require WISDOM anymore... Oops... I missed "teeth" there, how sarcastic guy I am. Please read "teeth" with Wisdom :)

வருண்,
தொடர்ந்த வருகைக்கு நன்றி


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
கோவி.கண்ணன் said...
பல்வலி தாங்க முடியாதது தான், தாடை எலும்பில் வலி தொடங்குவதால் மண்டை முழுவதுமே சம்மட்டியால் அடிப்பது போல் வின் வின் (ஜெயிக்கிறது இல்லே...நாங்களும் கடிப்போம்ல) வலி உயிரெடுக்கும்

------------- ~~~~~ Thanks to கோவி.கண்ணன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

கோவி.கண்ணன்
வருகைக்கு நன்றி!

//
நாங்களும் கடிப்போம்ல
//
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடச்சாச்சு :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Anonymous said...
sarcastic guy-keep your "wisdom "intact
ask yor nurse friend your health advice!

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
cheena (சீனா) said...
அடடே அடடே - ஞானம் வந்தாச்சா - நன்று நன்று - இனிமே வலி எடுத்தா கிராம்புத் திலம் ஒரு சொட்டு விட்டாப் ப்போதும் - வலி பறந்தே போயிடும் - கூடவே ஞானமும்

------------- ~~~~~ Thanks to cheena (சீனா) ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
cheena (சீனா) said...
அடடே அடடே - ஞானம் வந்தாச்சா - நன்று நன்று - இனிமே வலி எடுத்தா கிராம்புத் திலம் ஒரு சொட்டு விட்டாப் ப்போதும் - வலி பறந்தே போயிடும் - கூடவே ஞானமும்
//

உள்குத்து எல்லாம் பயங்கரமா இருக்கு. இது தான் மருத குசும்பா?

முதல் வருகைக்கு நன்றி!


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
cool said...
புத்தாண்டு வாழ்த்துகள்
சுலபமாய் இணையம் மூலம் மாதம் 10000 ரூபாய் சம்பாதிக்க கிழ் கண்ட முகவரியை வெட்டி எடுத்து இணைய முகப்பில் வைத்து பேஸ்ட் செய்து தளத்திட்கு வருகை தருக.
http://www.earnparttimejobs.com/index.php?id=19015

------------- ~~~~~ Thanks to cool ! ~~~~~ -------------
wholesale jewelry said...
how can you write a so cool blog,i am watting your new post in the future!

------------- ~~~~~ Thanks to wholesale jewelry ! ~~~~~ -------------