Archive
Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|
அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் | 12/17/2008 |
வகை:
நகைச்சுவை
|
"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" இந்த பழமொழி விவசாயியால்(விவசாயிக்காக) சொல்லப் பட்டிருக்கவேண்டும். ஆங்கிலத்தில் இதையே Seize the Moment என்பார்கள். இது தொடர்பான ஒரு நகைச்சுவை கதை இங்கே.
வங்கியை கொள்ளையடித்தவன், காசாளரை சுட்டு கொன்ற பின், அங்கு வரிசையில் நின்ற ஒரு முற்போக்கு பதிவரை ( உள்குத்து எல்லாம் இல்ல ஆமா சொல்லிட்டேன்) ”இந்த கொள்ளையை பார்த்தாயா?” என்றான்.
அதற்கு அந்த பதிவர், ”ஆமா, நான் பார்த்தேன், இதை பற்றி நாளை ஒரு பதிவும் போட போறேன்” என்றார் துடிப்போடு.
“டமால், டுமீல்”, ரத்த வெள்ளத்தில் பதிவர்.
அடுத்து பக்கத்துல மஃப்டியில் இருந்த காவலர் தம்பதியரை பார்த்து கேட்டான் கொள்ளையன், “நீங்க பார்த்தீங்களா?”.
இவர் தான் சட்டகல்லூரி வளாகத்தில் நடந்ததையே சட்டை செய்யாமல் வேடிக்கை பார்த்தவராயிற்றே. அதே பழக்கத்தில் , “இல்லை.. பார்க்கவே இல்லை” என்று தன் தொப்பை மேல் அடித்து சத்தியம் செய்தார்.
உடனே மறுபடியும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, “நான் பாக்கல தான், ஆனா என் பொண்டாட்டி பார்த்துட்டா” என்றாராம் சமயோசிதமாக பொழைக்க தெரிந்த அந்த மனுசன்(காவலர்).
Subscribe to:
Post Comments (Atom)
2 பின்னூட்டங்கள்:
aana antha wife thirudankitta iruntha thuppaakiya vaangi, purushana suttutta, theriyuma
Post a Comment