Archive
Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|
அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
பல கோணங்களில் ஒரே கதை - Rashômon | 12/26/2008 |
சமீபத்தில் 1950ல் புகழ் பெற்ற இயக்குனர் ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசவா இயக்கிய கருப்பு வெள்ளை திரைப்படமான் ரோஸேமான். கமலின் விருமாண்டி படமும் இதே திரைக்கதை நுட்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமே. அதேபோல் ஆயுத எழுத்து, Vantage Point இதே வழி தான்.
காட்டுவழியே மனைவியுடன் பயணம் செய்யும் சாமுராயை, காட்டுக் கொள்ளையன் கொலை செய்து விடுகிறான். சம்பவ இடத்தில் இருந்தவர்கள், சாமுராய், அவனது மனைவி, காட்டுக்கொள்ளையன், மறைந்து இருந்து பார்த்த மரவெட்டி மற்றும் விசயம் தெரிந்து மண்டபத்தில் மழைக்கு ஒதுக்கும் ஒரு நபர் என ஒவ்வொருவரின் பார்வையிலும் கதை விரிகிறது. இறந்த சாமுராய்க்கு அவனது ஆவியை துணைக்கு அழைக்கிறார்கள் சம்பவத்தை விவரிக்க. முழுக்க முழுக்க இயற்கை ஒளியில் அடர்ந்த காட்டில் எடுக்கப்பட்ட அற்புதமான படம்.
ஒரே கதையை அஞ்சு தடவ பார்த்தாலும் கொஞ்சம் கூட அலுப்பு தட்டவில்லை. இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விசயம் என்னவெனில் உண்மையில் நடந்தது என்னவென்று யாருக்கும் (நமக்கும்) தெரியாமல் போவது தான். சாட்சிகள் ஒவ்வொருவரும் நேரில் பார்த்த் சம்பவத்தை வெவ்வேறு கோணங்களில் விவரிப்பதை தான் Rashômon effect என பின்னாளில் நீதி மன்றங்களில் குறிப்பிட் ஆரம்பித்த்னர் அந்த அள்வுக்கு மிகப்பெரிய வெற்றியயும்/பாதிப்பையும் அரை நுற்றாண்டுக்கு முன்னரே ஏற்படுத்தி கொடுத்த படம்.
இந்த மாதிரி படங்களில் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஒரே அலைவரிசையில் இருப்பது மிக அவசியமான ஒன்று. அந்த வகையில் Akira Kurosawa-வின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் Kazuo Miyagawa காட்டுக் கொள்ளையனின் குரூரத்தையும், சாமுராய் மனைவியின் அழகையும், சண்டையையும், ஆரம்ப/இறுதி மழைக் காட்சியையும் மிக நேர்த்தியாக காட்சிபடுத்தியிருப்பார். Akira -வை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றமுதல் படம்.
இங்கு குறிப்ப்டபடவேண்டிய இருவர் காட்டுகொள்ளையனாக நடித்த Toshirô Mifune மற்றும் மரவெட்டியாக நடித்த Takashi Shimura, இவ்விருவரும் Akira-வின் ஆஸ்தான நடிகர்கள். இவ்விருவரும் நடிக்க Akira இயக்கிய The Seven Samurai இன்றும் பல பலகலைகழகங்களில் மேலாண்மை சார்ந்த பாடமாக இருப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன்.
மூன்றரை மணி நேரம் ஓடும் இந்த கருப்பு வெள்ளை படம் - The Seven Samurai எனக்குள் ஏற்படுத்திய அதிர்வு மிக அதிபயங்கரமானது. Akira-வின் இந்த படமும் பல்வேறு மொழிகளில் பல்வேறு விதங்களில் மொழிமாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. Akira-வின் இன்னொரு முக்கிய அம்சம் மழை சம்பந்தபட்ட காட்சிகள், மழை என்றால் அடித்து பெய்யும் அடைமழை தான், தூறல் மழைக்கெல்லாம் இவரின் படத்தில் இடமில்லை.
9 பின்னூட்டங்கள்:
சரவணகுமார்,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
இன்னும் படம் பார்கவில்லை ச்சந்த்ர்பம் கிடைத்தால் பார்கிறேன்
* Even during high noon the parts of the forest that the crew needed to shoot in were still too dark. Rather than use a regular foil reflector, which did not bounce enough light, Kurosawa and cinematographer Kazuo Miyagawa opted to use a full-length mirror "borrowed" from Daiei's costume department. The crew bounced light from the mirror through leaves and trees to soften it and make it look more like natural sunlight. Miyagawa later called it the most successful lighting effect he had ever done.
* In the downpour scenes showing the Rashomon Gate, Kurosawa found that the rain in the background simply wouldn't show up against the light gray backdrop. To solve this problem, the crew ended up tinting the rain by pouring black ink into the tank of the rain machine. The ink is clearly visible on the Woodcutter's face towards just before the rain stops
//
Anda kaalathil padangal evalavu arpudamaaga padaithu irukirargal?? VIrumandi pointa miss panni naa podalaamnu ninachen...sir 1ste pothutheengale!!! :(
//
Yeah.. Evergreen Movie.. there is another one movie IKIRU( this is also a wonderful movie). i will write about that later
//. Quillpad maadhiri nalla vasadiyoda irukkura, aana offline la type panra software kidaikkuma???//
Try this NHM Writer, I am using this one only
http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx
Karthik
Thanks for the additional facts. apart from that Akira this movies based on two different stories.. I will give the story name and author name in detail later
Post a Comment