Archive
Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|
அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
அன்பென்ற மழையிலே... | 12/22/2008 |
வகை:
சினிமா
|
தமிழ் சினிமாவில் பெண்களுக் கென்று (கதாநாயகி) அறிமுக/ தனிபாடல் அமைவது அரிது. எனக்கு தெரிந்த வரையில் 1991ல் பிரம்மா படத்தில் S.ஜானகி குஷ்பூ-விற்காக பாடிய “இவளொரு இளங்குருவி; எழுந்து ஆடும் மலர்க்கொடி” பாடலில் ஆரம்பித்தது. அதன் பின் 1992ல் வெளிவந்து சக்கை போடு போட்ட ரோஜாவில் “சின்ன சின்ன ஆசை” பாடல், A.R ரஹ்மானின் அறிமுக இசையில் மின்மினி பாடிய, இந்த பாடலின் வெற்றி இது மாதிரி பாடல் வர ஒரு பிள்ளையார் சுழியாய் அமைந்தது எனபது என் எண்ணம். கவுண்டமணி செந்திலின் வாழைப்பழ காமெடி எவ்வளவு பிரபலமோ அதே அளவு பிரபலத்தை இந்த பாடலும்
அடைந்தது.
இதைத் தொடர்ந்து 1994ல் வெளிவந்த ”மே மாதம்” திரைப்படத்திலும் இயற்கை அழகில் லயித்து தனது விருப்பங்களை/அனுபவங்களை கதையின் நாயகி பாடும் “மார்கழிப் பூவே” தனிப்பாடல் இன்றும் பலரது விருப்பபட்டியலில் தனியிடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சம். அதே ஆண்டு வெளிவந்து பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே வெற்றி பெற்ற ”சீவலப்பேரி பாண்டி” படத்தில் வரும் “ஒயிலா பாடும் பாட்டுல”
"அடி சந்தோச கூத்தாடு, என் சங்கீத சாப்பாடு
ஏய்..மழையே மழையே மேகததை எடுத்து தாவணி நீ போடு;
இந்த காடே என் வீடு என் உறவே என் ஆடு
அட கண்ணீர் சந்தோசம், அது ரெண்டும் என் பாடு
மழை வந்தாலென்ன்ன, இடி வந்தாலென்ன நீ துணிஞ்சு விளையாடு"
அந்த அளவுக்கு பிரபலமடையவில்லை என்றாலும், எப்போது கேட்டாலும் மீண்டும் ஒருமுறை திரும்பக் கேட்க வைக்க்கூடிய அருமையான பாடல்.
பின்னர் 1995 ல் வெளிவந்த ஆசை, பிரகாஷ்ராஜ், அஜித் ( இந்த படத்திற்கு பிறகு “ஆசை” நாயகன் என்றழைக்கப்பட்டார்) மற்றும் இயக்குனர் வசந்த் ஆகியோருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது இந்த படம். இப்படத்தில் இடம்பெற்ற “புல்வெளி புல்வெளி” ( இந்த பாடலுக்கான ட்யூனை இங்கிலாந்து பாடகர் Rod Stewart-ன் Maggie May-யிலிருந்து கொஞ்சம் உருவியிருப்பார் நம்ம
தேனிசை தென்றல்).
“வானம் திறந்திருக்கு பாருங்கள்;
என்னை வானில் ஏற்றிவிட வாருங்கள்”
சித்ராவின் குயிலோசையினாலும் அருமையான காட்சி படுத்தலினாலும் மிகப்பெரிய வெற்றிபெற்றது.
1996ல் வெளி வந்த இந்தியன் “அக்கடானு நாங்க உடை போட்டா” (ஸ்வர்ணலதா) இந்த பாடலுக்கு நடனமாட்டேன் என்று கமல் அடம்பிடித்ததால் தான் ஷங்கருக்கும் கமலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்தி, அதனால் படமும் தாமதமாகி வெளிவந்தது. அதற்கு அடுத்து K.பாலுவின் தாயரிப்பில் தீபாவளிக்கு( பொங்கல்?)பாஞ்சாலங்குறிச்சி (சீமான் இயக்கத்தில்) மற்றும் சேனாதிபதி வெளிவந்தது, அதில் பாஞ்சாலங்குறிச்சி மட்டுமே வெற்றிபெற்றது, இதில் தேனிசை தென்றலின் இசையில் அதே ஸ்வர்ணலதா ஒரு பெண் தன் காதலனின் மீது கொண்டுள்ள ஆசைகளை ஏக்கத்தோடு மனதை வருடும்படி பாடிய ”ஆச வச்சேன்” மெல்லிசை பாடலும்.
மாரளவு தண்ணியில, மஞ்ச தேச்சு நான் குளிக்க, மறைஞ்சு இருந்து நீயும் பாக்க ஆச வச்சேன்;
பசுவ போல மெல்ல வந்து, கொசுவத்தையும் நீ இழுத்து, குசும்பு பண்ண
வேணும்னு ஆச வச்சேன்;
உள்ளூர் சந்தையில, எல்லாரும் பாக்கையில, கண்டாங்கி வாங்கி தர ஆச வச்சேன்;
குத்தாத முள்ளு குத்தி, குதி காலு வலிக்குதுனு, மடி மேல கால போட ஆச
வச்சேன்;
அத்தனையும் பொய்யாச்சே ராசா, இப்போ ஒத்தையில் நிக்குதிந்த ரோசா
அதன்பின் 1997ல் வெளிவந்த AVM-மின் வெள்ளி விழா ஆண்டு படமான, மின்சாரக் கனவில் எனது அபிமான பாடகி அனுராதா ஸ்ரீராம் அறிமுகமான “அன்பென்ற மழையிலே” பாடலும் நல்ல வெற்றி பெற்றது, அனுராதா ஸ்ரீராமுக்கும் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
பின்னர் 1999ல் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த “பூவெல்லாம் கேட்டுப்பார்”, நட்சத்திர ஜோடி சூர்யா-ஜோதிகா இணைந்து நடித்த முதல் படம், மற்றும் ஜோதிகாவுக்கு முதலில் வெளியான படம்( வாலியில் அறிமுகமாகி இருந்தாலும் “பூவெல்லாம் கேட்டுப்பார்” முதலில் வெளிவந்தது என்று நினைக்கிறேன்.) இதில் ஜோதிகா சுத்தி சுத்தி இடுப்பை குலுக்கி ஆடும் குழந்தைத்தனமான நடனம், “பூவ.. பூவ.. பூவே” பாடலுக்கு மேலும் அழகு சேர்த்தது.
”பூவே.. சிறு பூவே.;
உனைப்போல் வாழ்ந்த்திடும் வாழ்க்கை வேண்டுமே;
நீ ஓர் நாள் வாழ்வில் உலகை ஆளும் ராணி;
நீ ராணி என்றும் எனக்கு நல்ல தோழி;”
அதே ஆண்டில் பரத்வாஜின் இசையில் அமர்க்களம் படத்தில் ஷாலினி தன் சொந்தக் குரலில் “சொந்தக் குரலில் பாட” என்ற பாடலை பாடியிருப்பார்.
அறிமுக இயக்குனர்/இசையமைப்பாளர் கவுதம்/ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் 2000ல் வெளிவந்த மின்னலே படத்தில் இடம்பெற்ற “வசீகரா” பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு வசீகரமான பாடல் வரிகளும் துணையாக இருந்தது சிறப்பு.அடைமழை வரும் அதில் நனைவோமே,
”குளிர் காய்ச்சலோடு சினேகம்,
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்;
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்,
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையே தான் எதிர்பார்க்கும்.
எங்கேயும் போகாமல், தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்.”
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமத்த பாடல்கள் பெரும்பாலும் தமிழ் வரிகளை கொண்டிருக்கும். ”ஒம்ஹ ஸியா.. ஒயி லா லா”, “மெஹோ.. மெஹோ” போன்ற மொழி புரியாத ஆரம்ப ஹம்மிங் அவரின் தனித்திறமை.
பின்னர் 2001 ஆனந்தம் படத்தில் “ஒற்றை நாணயம்” பாடல் ஸ்னேகா விற்கு ஒரு நல்ல அறிமுகத்தை தந்தது, ஆனாலும் அதே ஆண்டில் கவர்ச்சி மலை மும்தாஜ் நடித்த “மலே மலே” கன்னா பின்னாவென பிரபலம் அடைந்தது..
2002ல் ப்ரியதர்ஷனின் “லேசா லேசா” ( இந்த படத்தின் ஒரிஜினல் பெயர் “கண்மணி நீ வர காத்திருந்தேன்”, ஆனால் ”லேசா லேசா” பாடல் பதிவிற்கு பின், பாடலின் outcome நன்றாக அமைந்திருந்ததால் பாடலின் ஆரம்ப வரிகளையே படத்திற்கும் வைத்து விட்டார்கள்), த்ரிஷாவின் இந்த அறிமுகபாடலை எனது அபிமான பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடியிருந்தார்.
2003ல் D.Imman இசையில் வெளிவந்த விசில் படத்தில் அனிதா சந்திரசேகர் பாடி, ”தெத்துப்பல் அழகி” ( Who advised her to remove that teeth? ) ஷெரின் நடித்த “அழகிய அசுரா” கிட்ட தட்ட “வசீகரா” பாடல் ஏறபடுத்திய பாதிப்பை ஏற்படுத்தியது.
”உச்சந்தலையில் உள்ள என் அர்ஜுன மச்சம் சொல்லும்;
என்னை சேர்பவன் யாரோ அவன் சகலமும் பெற்று வாழ்வான் என்று”
என அருமையான வரிகள் கொண்ட பாடல். இந்த பாடல் வெற்றியை “திருடா திருடி” படத்தின் “மன்மத ராசா” பாடலின் வெற்றி பாதித்து விட்டது. ஆனால் எனக்கு இன்றும் “ஆஹா கூசுது முத்தம் முத்தம்” என்ற சாயா சிங்கின் அறிமுக பாடல் தான் பிடித்துள்ளது, அதற்கு காரணம் அனுராதா ஸ்ரீராமின் குரல் தான்.
2004ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமான கில்லியில் த்ரிஷாவின் அறிமுகப்பாடல் ( விஜய் இதுக்கு எப்படி ஒத்துகிட்டார்னு தெரியல) ஷா..லா.. ஷா..லா.. மற்றும் பு.கோ.ச. படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ குரலில் “மலர்களே.. மலர்களே” (
ஆடைகள் சுமை தானே அதை முழுதும் நீக்கிவிட்டு குளிப்பேன்;
யாரேனும் பார்ப்பார்கள் என்ற கவலை ஏதுமின்றி கழிப்பேன்,
குழந்தையென மீண்டும் மாறும் ஆசை எல்லோர்க்கும் இருக்கிறதே;
சிறந்த சில நொடிகள் வாழ்ந்து விட்டு என் உள்ளம் சொல்கிறதே,
அழைக்கிற குரலுக்கு வந்து விடுவேன்;
அட இங்கு பணிப்பெண்கள் யாருமில்லையே,
இங்கு விடுதலைக்கிணை என்று ஏதுமில்லையே;
அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி.
பாடலாசிரியர் தாமரை என்று நினைக்கிறேன். அருமையான வரிகள்)
பாடலாசிரியர் தாமரை என்று நினைக்கிறேன். அருமையான வரிகள்)
அபர்ணாவின் தனிப்பாடலும், “அப்படி போடு” பாடல் கொடுத்த அதிர்வில் அமுங்கி போயின. இதே போல “ரன்” படத்தில் “மின்சாரம் என் மீது பாய்கின்றதே” பாடலும் அருமையான பாடலே ஆனால் ”காதல் பிசாசு” பாடலால் பிரபலமடையாமல் போய்விட்ட்து.
இந்த பாடல்கள் அனைத்துமே பெண்கள் பாடி நடித்து, பெண்களை அதிகம் கவர்ந்த பாடல்கள். கொஞ்சம் வித்தியாசமாக, பெண்களுக்கு மிகவும் பிடித்த, ஆண் பாடி நடித்த பாடல் இங்கே.
இன்னொரு மிகப்பிரபலமான பாடலும் உள்ளது. மிகப்பிரபலமான ஆண் பாடகர் பாட, இரண்டு பெண் ஜாம்பவானிகள் நடித்து மிகப் பெரிய வெற்றியை கொடுத்த பாடல். தெரிந்தவர்கள் பின்னூட்ட்த்தில் தெரிவிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
12 பின்னூட்டங்கள்:
நன்றி ராம்சுரேஷ்
வருகைக்கும் ஆதரவுக்கும்.
இசைக்கலப்பு இல்லாமலே இன்றும் மனதில் ரீங்கரிக்கும் எனது ஃபேவரிட்டும் கூட ...
நல்ல டீடெய்ல்ஸ் கலெக்ஷன்
//நல்ல டீடெய்ல்ஸ் கலெக்ஷன்//
நன்றி சதங்கா!
i dunno ler. what song is that??
பூவே பூச்சுடவா (பாடலும், படமும் அதே)
என்க்கு பிடித்த பாடல்
அருமையான பதிவு
கலக்கிறீங்க
”பூவே.. சிறு பூவே.;
உனைப்போல் வாழ்ந்த்திடும் வாழ்க்கை வேண்டுமே;
நீ ஓர் நாள் வாழ்வில் உலகை ஆளும் ராணி;
நீ ராணி என்றும் எனக்கு நல்ல தோழி;”
எனக்கு ரொம்ப பிடித்தமான வரிகள்
நன்றி
கவின்,சேகர்
நன்றி! வருகைக்கும், கருத்துக்கும்
பதிவு கீழ தெரியுது...ஆர்ர்சுவ் மேல தெரியுது...
டெம்ப்ளேட்ல பிரச்சினை இருக்கு...
அதே சமயம் பின்னூட்டம் எல்லாம் பதிவிலயே லோட் ஆகுறமாதிரி வைங்க
//
பதிவு கீழ தெரியுது...ஆர்ர்சுவ் மேல தெரியுது...
டெம்ப்ளேட்ல பிரச்சினை இருக்கு...
அதே சமயம் பின்னூட்டம் எல்லாம் பதிவிலயே லோட் ஆகுறமாதிரி வைங்க
//
அகலத்த கூட்ட சில வேலைகள் செஞ்சேன் அதானால சில பிரச்னைகள்..
சீக்கிரம் சரி செய்து விடுகிறேன்..
நன்றி. வருக்கைக்கும் கருத்துக்கும்.
Post a Comment