அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

முருகனும்... நானும்... 12/19/2008ஆக்க பிரம்மா; காக்க விஷ்ணு; அழிக்க சிவா என மும்மூர்த்திகளும், கல்விக்கு சரஸ்வதி; செல்வத்துக்கு லட்சுமி; வீரத்துக்கு காளி என முப்பெருந்தேவிகள் இருந்தாலும், பெரும்பாலான புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவருக்கும் அவர் தான் இஷ்ட தெய்வம் என்பதில் இருவேறு இருக்க முடியாது. எனக்கும் தமிழ்க் கடவுள் முருகன் தான் இஷ்ட தெய்வம்.

வரலாற்றின் அடிப்படையில் அவரது படைவீடுகளை கீழ்க்கண்டவாறு வரிசைபடுத்தலாம்
1. திருப்பரங்குன்றம்
2. திருச்செந்தூர்
3. பழனி
4. சுவாமி மலை
5. திருத்தணி
6. பழமுதிர்சோலை

இந்த அறுபடை வீடுகளில் சுவாமி மலை மற்றும் திருத்தணி தவிர மற்ற அனைத்து தளங்களையும் தரிசித்து விட்டாயிற்று. இங்கு குறிப்பிட்த்தக்க இன்னுமொரு முக்கிய அம்சம், நான் பிறந்த மதுரை மாவட்டம் மட்டும் தான் ஒன்றுக்கு மேற்பட்ட (இரண்டு: திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை) படைவீடுகளை கொண்டது.

இது தவிர, மயிலை, கந்த கோட்டம், மருதமலை என குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என அவருக்கு எல்லா மலைகளிலும் ஒரு கோயில் இருக்கும்.

மக்கள் திலகத்தை உயிர் மூச்சாக நினைக்கும் “(நரி)குறவர்கள்” , தங்கள் இனத்தை சேர்ந்த வள்ளியை மணந்த்தால், முருகனுக்கென ஒரு தனியிடத்தை நெஞ்சங்களில் ஒதுக்கியுள்ளனர். இந்த புராணத்தை அடிப்படையாக கொண்ட “ஸ்ரீவள்ளி திருமணம்”  என்ற மேடை நாடகம் இன்றளவும் தமிழக கிராமப் புறங்களில் மிகப்பிரபலம். நாடகத்திற்கு நடிகர்களை தேர்ந்தெடுப்பதில் இருந்து, நாடகம் முடிந்த பல நாட்கள் வரை பின் அவர்களின் ( முக்கியமாக வள்ளி, நாரதர், ஆர்மோனிய வாத்தியர் ) நடிப்பை/இசையை அக்கம் பக்கம் உள்ள அனைத்து ஊர்ப் பெரியவர்கள் விமர்சிப்பதை கேட்கலாம்.

இந்தியத் திருநாட்டின் தேசிய பறவையை வாகனமாகக் கொண்ட எம்பெருமான் தமிழ்க்கடவுள் முருகனுக்கு எல்லாமே ஒன்றுக்கு மேற்பட்டவை தான், வாகனத்தில் இருந்து படைவீடுகள் வரை. பெயர்களும் அப்படியே: சரவணன், ஆறுமுகன், கந்தன், கடம்பன், சுப்ரமணியன், கார்த்திகேயன், குமரன், குகன், வேலன், தண்டாயுதபாணி, செந்தில், சண்முகன் என பல பெயர்களில் மக்களால் விரும்பி அழைக்கப்படுகிறார்.

எல்லா விசயங்களிலும் நம்ம தமிழர்களுடன் சுத்தமா ஒத்து போகாத கேரள மக்கள், இந்த ஒரு விசயத்தில் மட்டும் விதி விலக்கு. பெரும்பாலான கேரள மக்களுக்கு பழனி முருகன் தான் இஷ்ட தெய்வம் கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பனை ஒப்பிடும் போது. என்ன காரணம் என்று விசாரித்து பார்க்கையில் நம்ம முருகன் மேற்கு (கேரளா) நோக்கி அருள்பாலிக்கிறார். ஆனால் ஐயப்பன் கிழக்கு (தமிழகம்) நோக்கி அருள்பாலிக்கிறார். இது ஒரு காரணமாக சொல்லப் படுகிறது. 

தமிழகம் தவிர்த்து பார்க்கும் போது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் முருகனுக்கு வழிபாட்டு தளங்கள் உண்டு. 

2002 தைப்பூசத்திற்கு பழனிக்கு பாதயாத்திரை சென்ற அனுபவத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும். ஓசோன் படலத்தை முழுவதுமாக நுகர்ந்த ஒரு மறக்க முடியாத பயணம்/அனுபவம் அது. கடவுள் நம்பிக்கைக்காக இல்லையென்றாலும் உடல் நலத்துக்காகவாவது இந்த மாதிரி ஒரு பாதயாத்திரை மேற்கொள்வது சால சிறந்தது.  ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்னும் எனக்கந்த வாய்ப்பு கிட்டவில்லை

சிங்கப்பூரில் தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை கிடையாது, ஆனால் மலேசியாவில் உண்டு. 2005 ஆம் ஆண்டு தைபூசத்திற்கு சிங்கப்பூர் தண்டாயுதபாணி ஆலயத்திற்கு சாரை சாரையாக சென்ற மக்கள் கூட்ட்த்தை பார்த்த நண்பர் “எங்க இருந்தாங்க இவ்வளவு மக்களும்?” என்றார் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன். உண்மை தான் தீடீரென பொங்கிய கடல் போல அவ்வள்வு மக்கள் எப்படி அந்த சின்ன நாட்டிலிருந்து(ஊரிலிருந்து) வந்தார்கள் என்று எனக்கும் ஆச்சர்யம் தான்.

அதே 2005 ஆண்டு ஆகஸ்ட் மாதம் மலேசியா சென்றிருந்த போது, பத்து குகை முருகன் கோவிலுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்த்து. அப்போது வானுயர்ந்த முருகன் சிலை கட்டப்பட்ட நிலையில் இருந்த்த்து; திறக்கப்பட வில்லை. 140 அடி கொண்ட உலகிலேயெ மிகப்பெரிய வள்ளி மணவாளன் சிலையை 2006ம் ஆண்டு ஞாயிறு ஜனவரி 29 அன்று திறந்தார்கள். மறுபடியும் பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

முருகன் எனக்கு இஷ்ட தெய்வம் என்று சொல்லும் போது, உடனே என்னை வந்தடையும் கேள்வி “நக்கலான” கேள்வி. ”அவருக்கு ரெண்டு பொண்டாட்டி-ங்கிறதுனாலாயா?” என்று. என்னத்த சொல்றது, நம்ம ஒன்னு சொன்னா, அவங்க வேறொன்னு நினைக்கிறாங்க..அவர்களுக்கெல்லாம் நான் சொல்லும் உவமைக்கதை இது தான்.

ஒரு பையன் தன் அப்பாவிடம்,
”அப்பா, நான் பின்னாளில் கண்ணதாசன் மாதிரி வரணும்னு ஆசைப்படுறேன்” என்றான்.
அப்பாவோ, மிக உற்சாகமடைந்து, “நல்லது மகனே, நிறைய புத்தகங்களை இப்பவே படி” என அறிவுறுத்தினார்.
பையன் நக்கலா ” அவர் மாதிரி புட்டி/குட்டிகளோடு குடியும் குடுத்தனமும இருக்கணும் ஆசை பட்டேன்”  என்று சொன்னானாம்.

ஆலயமணி படத்தில் முருகனின் அண்ணன் நடித்து அறுபடை வீடுகளுடனே ஆறுகட்டளைகளை விளக்கும் ஒரு அருமையான பாடல் இங்கே: 
3 பின்னூட்டங்கள்:

கிரி said...
//எனக்கும் தமிழ்க் கடவுள் முருகன் தான் இஷ்ட தெய்வம்//

எனக்கும் :-)

//பெரும்பாலான கேரள மக்களுக்கு பழனி முருகன் தான் இஷ்ட தெய்வம் //

உண்மை தான். பழனியில் இவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் மலையாள மொழியிலும் தகவல்கள் அங்கு காணப்படும்

//தைபூசத்திற்கு சிங்கப்பூர் தண்டாயுதபாணி ஆலயத்திற்கு சாரை சாரையாக சென்ற மக்கள் கூட்ட்த்தை பார்த்த நண்பர் “எங்க இருந்தாங்க இவ்வளவு மக்களும்?” என்றார் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன்//

உண்மை தான்

//மறுபடியும் பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.//

பாருங்க சூப்பரா இருக்கு

உங்க பதிவு நல்லா இருக்கு

------------- ~~~~~ Thanks to கிரி ! ~~~~~ -------------
gowtham said...
இந்த பதிவை படித்ததும் எதோ முருகன் கோவிலுக்குள் போய் வந்ததை போல் ஒரு உணர்வு.
நன்றி.

------------- ~~~~~ Thanks to gowtham ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

கிரி/கவுதம்,

மிக்க நன்றி, தாங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும்.

//பாருங்க சூப்பரா இருக்கு //
கண்டிப்பா என் பெற்றோருடன் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------