அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

நன்றி! நன்றி!! நன்றி!!! 1/30/2009

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை எதிர் கொள்வதில் தான் நம் எதிர்காலமே அடங்கியிருக்கிற்து. அமெரிக்காவில் இருப்போருக்கு இருக்கும் மிகப்பெரிய வியாதி/பிரச்னை தனிமை. தனிமைனா சும்மா அம்மா அப்பாகிட்ட கோவிச்சு போய் கோயில் வாசல்ல/குழாயடியில/கிணத்து மேட்டுல உக்காந்து போற வாற பொண்ணுங்கள சைட் அடிக்கிற தனிமை இல்ல. அத்துவான காட்டுக்குள்ள அர்த்த ராத்திரியில எங்கே இருக்கோம்னு தெரியாம, எங்கே போறோம்னும் தெரியாம மண்ட காய்ஞ்சு மயிரு பூத்து போற ஒரு தனிமை.

”உன்னை சரண்டைந்தேன்” என்ற படத்துல ஒரு டையலாக் வரும். “எங்க ஊர்ல ஒரு நாயை அடிச்சா கூட ஊரே திரண்டு வந்து, என்னானு கேக்கும், ஆனா நகரத்துல ஒரு மனுசனை அடிச்சா, ஒரு நாய் கூட என்னானு கேக்காது”. அதே மாதிரி தான், ஹாஹா என ஆர்பரித்து சிரித்தாலும், ஓ..வென கதறி அழுதாலும் ஒரு பய கூட என்னானு கேக்க மாட்டான். தனியா தான் இருக்கனும். தனியா தான் சிரிக்கனும் லூஸ் மாதிரி.

அதுக்கு தான் இங்க இருக்குற மக்க, லேப் டாப் ஒன்ன மடியில ஒக்காத்தி வச்சுகிட்டு அது கூட பேசி/சிரிச்சு/அழுது/பொலம்பி பொழப்ப ஓட்டிகிட்டு இருப்பானுவ. அப்படி தான் நானும் நாட்களை கடத்தினேன். புதுசா வரும் தமிழ் சினிமாவை எவ்வ்ளவு மொக்கையா இருந்தாலும் பாத்துட்டு, நண்பனுக்கும் போன் போட்டு பட நேரத்தை அதிகமா படத்தை பத்தி ஒரு மொக்க போட்டு ( அவனும் பாத்துட்டு திரும்ப ஒரு ரிவியூ பண்ணுவான் ) நேரத்தை ஒப்பேத்தினோம். 

நம்மளுக்கு இந்த படம் பாக்குறத தவிர வேறெந்த நல்ல பழக்கமும் கிடையாதா.. என்னை போல ஆளுகளுக்கு நேரத்தை கடத்துறது ரொம்ப கஷ்டம். GMAIL. YAHOO,  REDIFF , OFFICE MAIL, DINAMALAR, CNN, TAMILMANAM என எல்லாத்துக்கும் சராசரியா 100க்கு மேல ஹிட் கவுண்ட் கொடுத்து எதோ என்னாலான உதவிய செஞ்சுகிட்டு இருந்தேன். அதுவும் ரொம்ப நாளுக்கு தாக்கு பிடிக்கல.. அப்ப நண்பர் ஒருவரின் மூலமா உதித்தது தான் லைப்ரேரி விஜயாம்..

பொழுது போக்குக்காக படம் பாக்க ஆரம்பிச்சு, படம் பார்க்க நேரமில்லாத அளவுக்கு படங்களை தேடிப் பார்த்தேன். அதற்கு அடுத்த படியாக தான், பார்த்த படங்களில் பிடித்ததை பதிவாகவும் போட ஆரம்பித்தேன். இப்போ புத்தகமும் படிக்க ஆரம்பிச்சாச்சு. அடிக்கடி என்னை லைப்ரேரியில் பார்ப்பதால் லைப்ரேரியன் லிண்டா நல்ல பழக்கமானார். ஏற்கனவே பதிவில் சொன்ன மாதிரி படங்களை எனக்கு தேடி தந்து உதவினார். 

சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நாள் மதிய உணவின் போது சந்திக்கும் போது வழக்கம் போல வழ வழ என பல விசயங்களை பற்றி பேசினேன். அதில் நான் பேசிய முக்கிய விசயங்கள் The World is Flat – புத்தகம் பற்றியது மற்றொன்று எனது நீண்ட நாள் கனவான “விவசாயம்” பற்றியது. 

இது நடந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது, இன்று ( வெள்ளிகிழமை ) அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும்போது ஒரு பார்சல் அமேசானிலிருந்து வந்திருந்தது. பிரித்து பார்த்தால் இரண்டு புத்தகங்கள் ஒன்று நான் பேசிய அதே புத்தகம் மற்றொன்று விவசாயத்தை பற்றிய Hot, Flat and Crowded.  Its surprise gift from Lynda. ஆச்சர்யபட்டு போனேன், நான் பேசியதை உன்னிப்பாக கவனித்திருக்க வேண்டும் அவர். அவருக்கு எனது நன்றிகள் பல. Thanks Lynda
இதே போல எனக்கு எல்லாவித்திலும் உறுதுணையாக இருக்கும் இன்னொரு தோழியையும் இச்சமயத்தில் நினைவு கூர்கிறேன். நன்றி.



22 பின்னூட்டங்கள்:

Anonymous said...
MY PLEASURE!!HOW BLESSED IT WOULD BE TO BE SITTING ON THE SHORE WATCHING THAT BEAUTIFUL OCEAN.

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
VG said...
###வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை எதிர் கொள்வதில் தான் நம் எதிர்காலமே அடங்கியிருக்கிற்து. ####

good tot... this is what i want from u. :)

if u knw how to solve the puzzles of life, then u r nearing the success. :)

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
Anonymous said...
PUZZLES OF LIFE/ CANNOT BE FULLY EXPLAINED.THE SOLUTION IS IN AT LEAST SEEKING SOLUTIONS.THE BEST IS TO TREAT ALL HUMANS AS HAVING THE ESSENCE OF GODS AND BEAR NO ENMITY OR JEALOUSY.
TRY TO LOVE ONE ANOTHER AS WE ARE ALL HUMAN WITH WEAKNESS AND STRENGTHS AND THROW IN SOME HUMOR TO MAKE IT ALL BEARABLE.THEN AGAIN/ WHO KNOWS?? MAYBE ALAGANTHAR.

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Nilofer Anbarasu said...
//மிகப்பெரிய வியாதி/பிரச்னை தனிமை.//
என்னை பொறுத்தவரை தனிமை ஒரு சுகம். அதை அனுபவிக்க தெரியனும்.

------------- ~~~~~ Thanks to Nilofer Anbarasu ! ~~~~~ -------------
Nilofer Anbarasu said...
//அடிக்கடி என்னை லைப்ரேரியில் பார்ப்பதால் லைப்ரேரியன் லிண்டா நல்ல பழக்கமானார். //
;)

------------- ~~~~~ Thanks to Nilofer Anbarasu ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
Nilofer Anbarasu said...
//மிகப்பெரிய வியாதி/பிரச்னை தனிமை.//
என்னை பொறுத்தவரை தனிமை ஒரு சுகம். அதை அனுபவிக்க தெரியனும்
//
வாங்க சார், உங்களை தான் தேடிகிட்டு இருக்கேன் :)

இப்போ நானும் பழகிகிட்டு இருக்கேன்.. ஆனா சுகமா-னா? இல்லேனு தான் சொல்லுவேன்... :(


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
viji said...

good tot... this is what i want from u. :)

if u knw how to solve the puzzles of life, then u r nearing the success. :)
//

உங்க அளவுக்கு இல்லேனாலும், ஓரள்வுக்கு முயற்சி பண்றேனுங்கோ. :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
G3 said...
:)))

Thats so sweet of ur friend :D

Regarding thanimai.. En friennd onsitela irukkumbodhu romba sandhoshamaana vishayamum romba sogamaana vishayamum indha thanimai dhaanan.. Bcoz u have the freedom to be urself. yaaraiyum depend pannaama. At the same time sandhosham/thukkamnu varrappo share pannikka yarumae kooda irukka maataangannu...

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//ஆளவந்தான்
விண்ணையும்.. மண்ணையும்... //

Vinnum mannum mattumae podhuma? Kadal saamrajyam vendaama ;)

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

Gayathri,

Its true.. For sometime you may be feeling both.. Because I felt the same. It was fun, you can go wherever you want, nobody will question you.

Since nobody is going to ask anything, you will not feel that as freedom anymore after sometime,

If someone controls then only , we will be able to understand/feel "what is freedom?". Otherwise no.

But afterwards, it will be worst. People like me who always surrounded with lots of friends, will feel this as TERRIBLE thing :(


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
VG said...
###Nilofer Anbarasu said...
//மிகப்பெரிய வியாதி/பிரச்னை தனிமை.//
என்னை பொறுத்தவரை தனிமை ஒரு சுகம். அதை அனுபவிக்க தெரியனும்.###

ya ya.... unmai... kodumaiyana tanimaiyilum oru sugam undu.. sila samayam manithargal arugil irupathai vida, paadalgal tunai kondu valntidalam vetanai indri...

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
To Anonymous: can u show a person without jealousy or enmity who is still living in this world now?
every single person in this world r selfish.
It is easy to tell, but hard to follow.
if u r one of them. show urself to the world. Y USING ANONYMOUS - aahakz...

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
VG said...
Mr. AA, tanimaiyum freedom-yum interrelated pannathinga. rendum vera vera visyam.

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
Anonymous said...
viji
no-we all have a dark side that we fight.at least we can try to do no harm and spread a little good will around this little world.

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
VG said...
To anonymous: i agree, but it is difficult to change the world. before we change the world, we must change ourself. :)

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
Anonymous said...
To VIJI
HAVE SOME OPTIMISM-AND I READ THIS-FORGIVE YOUR ENEMIES-NOTHING ANNOYS THEM MORE.:)
I DON'T READ TAMIL-WHAT ARE THE POINTS ON FREEDOM??

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
VG said...
TO Anonymous: no way on forgiving enemies. They ony became our enemy after back stabbed us. I'm an ordinary gal. :D

Freedom means, U have the rights on doin anything u wan. BREAK THE RULEZ, CHOOSE THE LEADER and so so. (sorry couldnt think much points)

When we look at loneliness: it is totally different. One u chose it urself, or u r lefted alone. If u chose to be alone, then u r enjoying the loneliness and enjoy the activities such as listening songs, online and so..so..
But, if u r lefted alone, it means u r in the pain. u r not loving the LONELINESS. (sometimes people may end up in BLOGGING, OR WRITE POEM, or THE WORST became DRINKER or CHAIN SMOKER)

I hope u got my points. :)

tq

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
Anonymous said...
Viji
thank you for your reply.I am sorry if you have had the experience of people stabbing you in the back.
loneliness is bad/solitude is good.Yin/Yang.
blogging is great-makes us connected across the world ,across sexes.I am female also.

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
கணேஷ் said...
உங்க கடையிலே இப்பல்லாம் கூட்டம் களைகட்டுது. கொஞ்சம் எனக்கு கத்து கொடுங்க பாஸ்..
உங்களுக்கு டைம் கெடைச்சா "The Alchemist" bu Paulo Coelho படிங்க.. ஞானி ஆயிடுவீங்க..
நீங்க இந்தியால இருந்தா என்னோட புக்க கூரியர் பண்ணி இருப்பேன்.

------------- ~~~~~ Thanks to கணேஷ் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
viji said...
Mr. AA, tanimaiyum freedom-yum interrelated pannathinga. rendum vera vera visyam.
//

etha vachu rendum thani thaningreenga.. both are interrleated thaan. thats why im comparing rasathi


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
ராம்சுரேஷ் said...
உங்க கடையிலே இப்பல்லாம் கூட்டம் களைகட்டுது. கொஞ்சம் எனக்கு கத்து கொடுங்க பாஸ்..
//
கவல படாதீஙக் ராம். நம்ம மக்கள்’ஸ் கிட்ட உங்கள பத்தி சொல்லி இருக்கேன்.. “கும்ம” ரெடியா இருக்காங்க :).. நீங்களும் ரெடியா இருங்க


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
VG said...
yow kannu kuruda??
i've explain to anony what.. go and read ler...
LOOS3

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------