அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

சொர்க்கத்தின் குழந்தைகள் (Children of Heaven) 1/05/2009
தனது கவனகுறைவால் தங்கையின் ஷுவை தொலைத்துவிடுகிறான் அலி. வீட்டின் வறுமையை உணர்ந்து பெற்றோரிடம் இதை பற்றி தெரிவிக்காமல் அண்ணன் – தங்கை இருவரும் எப்படியெல்லாம் சமாளிக்கிறார்கள்? அவர்களுக்கு ஷு கிடைத்த்தா? என்பதை பாசம், கோபம், வெறுப்பு, தியாகம், நேர்மை, நகைச்சுவை, வெற்றி, இழப்பு, தோல்வி, ஆறுதல், துப்பறிதல், வறுமை, திறமை என பலவிதமான உணர்வுகளுடன் மிக மிக இயல்பாக எந்தவிதமான சினிமாத்தனமும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யும் ஈரான் நாட்டு பெர்சியன் மொழிப் படம் தான் இந்த குழந்தைகளின் சொர்க்கம். பொதுவாக சில கலைபடங்களை உக்காந்து பாக்க முடியாது, அந்த மாதிரியெல்லாம் கொடுமை படுத்தாமல் மிக அழகாக இருக்கிறது இந்த சொர்க்கத்தின் குழந்தைகள் 

தியாகம்/நேர்மை
தனது ஷுவை இன்னொரு பெண் அணிந்திருப்பதை பார்த்து, அவளது வீடுவரை பின்தொடர்ந்து சென்று துப்பறிதல், பின்பு தன் அண்ணனை துணைக்கு அழைத்து கொண்டு அந்த ஷுவை வாங்க செல்ல, பின் அவளது குடும்ப சூழல் தெரிந்து கேட்காமலே திரும்பி வருதல் என அந்த பெண் குழந்தை மிக அருமையாக நடித்து இருக்கிறார். பார்ப்பதற்கு மிக அழகாகவும் இருக்கிறார். இந்த காட்சிகளில் எல்லாம் வசனங்களே கிடையாது. அவர்களின் முகபாவங்கள் தான் வசனமே. 

நேர்மை/உதவி
”நான் அலுவலகத்தில் எல்லாருக்கும் தேனீர் தயாரித்து தந்தாலும் என் மகள் எனக்கு தரும் தேனீர் சுவையே தனி”  என சர்க்கரை கட்டியை உதிரியாக்கி கொண்டே, சர்க்கரை எடுத்து கொண்டுவா என்கிறார். ”இங்கே தான் இவ்ளோ சக்கரை இருக்கே இதுல கொஞ்சம் எடுத்துக்க்லாம்ல” என்கிறார் அந்த குழந்தை அப்பாவியாக. இது நமக்கு சொந்தமல்ல, அடுத்தவரின் பொருள் என நேர்மையை விளக்குவது அருமை. குழந்தைகள் சிறுவயதிலும் குடும்பச் சூழலை அறிந்து அனைத்து குடும்ப வேலைகளிலும் பெற்றோருக்கு உதவியாக இருக்கும் கலாசாரத்தை விளக்கும் நல்லதொரு காட்சி அது. 

இழப்பு/வெறுப்பு/பாசம்
ஷுவை தொலத்துவிட்டு சோகத்துடன் தன் தங்கையிடம் தெரிவிப்பது, தன்னை தொடர் ஓட்ட போட்டியில் சேர்த்துக் கொள்ள சொல்லி ஆசிரியரிடம் வற்புறுத்துவது, வேலையில் தன் தந்தைக்கு உதவுவது, தனக்கு பரிசாக கிடைத்த பேனாவை தங்கைக்கு கொடுப்பது, முதியோர்களை மதிக்கும் பாங்கு, என படம் முழுவதும் அலியாக நடித்த அந்த சிறுவன் பின்னி பெடல் எடுத்துள்ளான்.

திறமை/ஆறுதல்
ஒரே ஷுவை அண்ணன் தங்கை இருவரும் மாற்றி மாற்றி அணிந்து வருவதால், அலி பள்ளிக்கு தாமதமாக வர நேரிடுகிறது. ஒருமுறை கண்டிக்கும் தலைமை ஆசிரியர் மறுமுறை அவனை “அப்பாவை அழைத்து வர சொல்கிறார்”, அவனோ வருத்த்துடன், “அவர் இன்று வேலையில் இருப்பார்” என்கிறார். அப்போ நாளைக்கு அழைத்து வா என்கிறார். “நாளைக்கும் வேலையில் இருப்பார்” என்கிறார் அப்பாவியாக.”அப்போ உன் அம்மாவை அழைத்து வா” என்கிறார். பதிலுக்கு “அவருக்கு உடம்பு சரியில்லை” என்கிறான். கடுப்பான ஆசிரியர் ”பெற்றோருடன் வந்தால் வா, இல்லையேல் வராதே” என்று கண்டித்து வெளியனுப்புகிறார். 

கண்களில் நீர் திரண்டு வர, மிரண்டு போய், தன்னை கண்டிக்கும் தலைமை ஆசிரியரிடம் பிரதிவாதம் செய்யும் அந்த ஓர் காட்சி மிகவும் உணர்ச்சிமயமானது. பின்னர் அங்கு வரும் அவனின் வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியரிடம் அவனுக்கு ஆறுதலாக அவனின் நன்னடத்தையையும் திறமையையும் எடுத்து சொல்லி அவனை வகுப்பில் அனுமதிக்க சிபாரிசும் செய்கிறார்.

பாசம்/வெற்றி
தொடர் ஓட்டத்தில் மூன்றாவதாக வருபவருக்கு ஷு பரிசு என்பதை கேள்வி பட்டு, வேண்டுமென்றே மூன்றாவதாக வர அவன் செய்யும் சாமர்த்தியமும், போட்டி முடிந்து மயங்கிய அவனை ஆசிரியர் தெளிவுபடுத்தியவுடன் ” சார் நான் மூனாவதா வந்த்துட்டேனா?” என கேட்கும் காட்சியும் கல் நெஞ்சுக்காரர்களையும் கரைய வைக்கும் உருக்கமான ஒரு காட்சி.

என் நண்பரின் வீட்டுக்கு புத்தாண்டை கொண்டாட சென்றிருந்த போது இப்பட்த்தை எடுத்துகொண்டு போனேன், நேரம் கிடைத்தால் பார்க்கலாம் என்று. நண்பருக்கு இரண்டரை வயதில் ஒரு பையன் இருக்கிறான்.  பையன் சுட்டியாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல அவனை “Good Boy”  என்று பாராட்டினேன். அதற்கு நண்பரின் மனைவி, “Good Boy”-னு சொல்லாதீங்க, “Good Job”-னு சொல்லுங்க என்றார். ஏன்னா, எல்லா குழந்தைகளுமே நல்ல குழ்ந்தைகள் தான் அவர் செய்யும் செயல்கள் தவறாகவோ, சரியாகவோ இருக்குமே தவிர, அவர்களல்ல என்றார் முத்தாய்ப்பாக. அவர் சொன்ன கருத்தை மிக துல்லியமாக/நேர்த்தியாக விவரிக்கிறது இப்படம்.

ஒவ்வொரு காட்சியிலும் கேமிராவை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து படம் பிடித்தது போல இருந்த்து அனைவரின் இயல்பான நடிப்பும் கதையின் போக்கும். சின்ன குழந்தைகளின் பிறந்த நாளுக்கு இது மாதிரியான படங்களை பரிசாக குடுக்கலாம். 


16 பின்னூட்டங்கள்:

கபீஷ் said...
அருமையான படம், நீங்களும் அழகா எழுதியிருக்கீங்க!

------------- ~~~~~ Thanks to கபீஷ் ! ~~~~~ -------------
அரி said...
சொர்க்கத்தின் குழந்தைகள் என்று வரவேண்டும் என நினைக்கிறேன். நல்ல விமர்சனம். பாராட்டுக்கள்.

------------- ~~~~~ Thanks to அரி ! ~~~~~ -------------
பிரேம்ஜி said...
சிறப்பான விமர்சனம். நீங்கள் சொன்னது போல் குழந்தைகளின் பிறந்த நாளுக்கு இது மாதிரி படங்களில் வட்டு நல்ல பரிசாக இருக்கும்.

------------- ~~~~~ Thanks to பிரேம்ஜி ! ~~~~~ -------------
ச்சின்னப் பையன் said...
அருமையா சொல்லியிருகீங்க ஆளவந்தான். இப்பத்தான் ஒரு மாசம் முன்னாடி இந்த படம் பாத்தேன். விமர்சனம் எழுதலாமேன்னு ஒரு நப்பாசை இருந்தது. ஆனா இந்த விமர்சனத்தை பாத்தபிறகு இனிமே விமர்சனமே எழுதறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்...!!!

------------- ~~~~~ Thanks to ச்சின்னப் பையன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

கபீஷ்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

அரி,
மாற்றிவிட்டேன். நன்றி.

பிரேம்ஜி,
நானும் இதை கடைபிடிக்க போறேன்.

ச்சின்னப் பையன்
வருகைக்கு நன்றி.

//
ஆனா இந்த விமர்சனத்தை பாத்தபிறகு இனிமே விமர்சனமே எழுதறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்...!!!
//
உள்குத்து ஏதும் இல்லியே :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ராம்சுரேஷ் said...
கலக்கல் ஆளவந்தான்.

இந்த படத்துல க்ளைமேக்ஸ் பாத்தீங்களா? நச்சுனு இருக்கும். அலி வீட்டுக்கு வருவான். அப்போது அந்த சத்தத்தில் அந்த சிறு பெண் சிரித்துக் கொண்டே திரும்புவாள். அவள் பார்த்ததும் அவன் தலையைக் குனிந்து கொள்வான். அதைப் பார்த்து அவள் சோகமாவாளே! சூப்பர் ரியாக்சன். சொல்ல வந்ததை நம்மூர் போல் பக்கம் பக்கமாக அழுதுகொண்டு சொல்லமால் அழுத்தமாக முகபாவங்களில் மட்டும் சொல்லியிருக்கிறார்கள். wonderful underplay!

அதற்கு முந்தைய சீனில் அவங்க அப்பா ரெண்டு பேருக்கும் புது ஷூ வாங்கி வருவார். இது படத்துக்கு பொருத்தமான் க்ளைமேக்ஸ்! நான் மிகவும் ரசித்து பார்த்த படம்!

------------- ~~~~~ Thanks to ராம்சுரேஷ் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
அதற்கு முந்தைய சீனில் அவங்க அப்பா ரெண்டு பேருக்கும் புது ஷூ வாங்கி வருவார். இது படத்துக்கு பொருத்தமான் க்ளைமேக்ஸ்
//
ரொம்ப சரி. என் நண்பரின் மனைவி, அந்த ஷுவை ரெண்டு பேரும் போட்டுகிற மாதிரி காமிச்சிருக்கலாம் என்றார். எனக்கென்னவோ இது தான் சரியான க்ளைமாக்ஸ் என தோன்றுகிறது.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Karthik said...
Excellent review.. One of my favorite films... Iranian films deal with the world of children like a magician performing a charming spell

This film is played with such beauty and innocence; it is a true pleasure to watch. From the start of the film, we see the relationship between brother and sister, played with equal warmth. Cycling through the city, it is very striking that there is a clear division between rich and poor. We are watching a boy, to afraid to tell his father of the loss of a pair of shoes, riding through streets with billboards advertising cell phones, into rural areas where houses with swimming pools, ornate architecture and luxury are rife.

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
Excellent review.. One of my favorite films... Iranian films deal with the world of children like a magician performing a charming spell
//
Thats true :)

//
This film is played with such beauty and innocence; it is a true pleasure to watch. From the start of the film, we see the relationship between brother and sister, played with equal warmth. Cycling through the city, it is very striking that there is a clear division between rich and poor. We are watching a boy, to afraid to tell his father of the loss of a pair of shoes, riding through streets with billboards advertising cell phones, into rural areas where houses with swimming pools, ornate architecture and luxury are rife.
//
Good point karthik. Similarly there is another one scene where he is going to participate in long distance running race, other boys will be coming with their parents and wearing nice sport dress with good shoes. Without giving much speech/dialogue, they picturised the differences in that scene clearly and effectively.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
குடுகுடுப்பை said...
ரொம்ப நாளா பாக்க நெனக்கிற படம் இந்த வாரம் பாத்துடரேன்

------------- ~~~~~ Thanks to குடுகுடுப்பை ! ~~~~~ -------------
குடுகுடுப்பை said...
ஜூவில கூட வந்தது இது பத்தி

------------- ~~~~~ Thanks to குடுகுடுப்பை ! ~~~~~ -------------
சூர்யா said...
அட்டகாசமானப் படத்துக்கு மிக அருமையான விமர்சனம் தந்துள்ளீர்கள்.

இந்த மாதிரியெல்லாம் நம்மாளுக என்னிக்குத்தான் ‘உலகத்தர' படம் எடுக்கப் போறாங்களோ..?

------------- ~~~~~ Thanks to சூர்யா ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//சூர்யா said...
அட்டகாசமானப் படத்துக்கு மிக அருமையான விமர்சனம் தந்துள்ளீர்கள்.

இந்த மாதிரியெல்லாம் நம்மாளுக என்னிக்குத்தான்
//
வருகைக்கு நன்றி.

புது வருடத்தின் போது நண்பர் ஒருவர் உங்களின் (கிராமத்து விளையாட்டு)பதிவுகளை பற்றி பெருமைபட கூறினார், கொஞ்சம் படித்தேன் ( சில வட்டார மொழிகள் புரியவில்லை.. சில விதிகள் மாறி இருந்தன) ஆனால் நேரமின்மையால் தொடர்ந்து படிக்க முடியவில்லை..

உங்கள் சேவை தொடரட்டும். I am going to add your blog into my google reader subscription

Thanks!


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
நானானி said...
உங்கள் விமர்சனம், படத்தைப் பார்க்கும் ஆவலைத்தூண்டுகிறது.

------------- ~~~~~ Thanks to நானானி ! ~~~~~ -------------
சூர்யா said...
//புது வருடத்தின் போது நண்பர் ஒருவர் உங்களின் (கிராமத்து விளையாட்டு)பதிவுகளை பற்றி பெருமைபட கூறினார்,
//

அப்படீங்களா...? கேக்கரதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க!!

//கொஞ்சம் படித்தேன் ( சில வட்டார மொழிகள் புரியவில்லை.. சில விதிகள் மாறி இருந்தன) //

புரியாதத கேளுங்க.. எனக்குத் தெரியலைனாலும் நம்ம பழமபேசி அப்பங்கிட்ட கேட்டாவது விளக்கஞ்சொல்லிடறெனுங்க..


//உங்கள் சேவை தொடரட்டும். I am going to add your blog into my google reader subscription //

நொம்ப நன்றிங்க!!

------------- ~~~~~ Thanks to சூர்யா ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
குடுகுடுப்பை said...
ரொம்ப நாளா பாக்க நெனக்கிற படம் இந்த வாரம் பாத்துடரேன்
//

//
நானானி said...
உங்கள் விமர்சனம், படத்தைப் பார்க்கும் ஆவலைத்தூண்டுகிறது.
//
கண்டிப்பா பாருங்க.. பாத்து ரசிக்க வேண்டிய படம் தான்.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------