
Archive
Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|

அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
நிகழ் கதைகள்…2 குரல் பரிமாற்றம் | 1/14/2009 |
எவ்வளவு நேரம் தான் அடக்கிட்டு இருக்கிறது, ஆத்திரத்தை அடக்குனாலும் அதை அடக்க கூடாது சும்மாவா சொல்லி இருக்காங்க. "வில்”லில் இருந்து புறப்பட்ட அம்பு போல , எங்கடா இருக்கு கழிவறைனு தேடி கண்டுபிடிச்சு.. ஆ....ரம்பிச்சு.. .போய்கிட்டு இருக்கான் நம்ம (டுபுக்கு) ராமன்.
சிறிது நேர ஆசுவாசத்திற்கு பிறகு, பக்கத்து (கழி)அறையிலிருந்து மெல்லிய குரல் கேட்க, கொஞ்சம் கூர்ந்து கவனிக்கும் போது “ஹலோ எப்படி இருக்கீங்க?” என்றது அந்த குரல்.
யாருடா இது? இங்க வந்து குசலம் விசாரிக்கிறது என்று யோசித்து கொண்டிருக்கையில், மறுபடியும், “என்ன கேக்குதா? நல்லா இருக்கீங்களா?” என்றது அந்த அதட்டல் குரல்.
”ம்ம்.. நல்லா இருக்கேன்” என்று 30டெசிபலில் லேசாக முணுமுணுத்தான் தயக்கத்துடன் (டுபுக்கு)ராமன்.
“சரி, எப்படி போய்கிட்டு இருக்கு?” என்றது மறுமனை குரல்.
என்னடா இது வம்பா போச்சு, நேரங்கெட்ட நேரத்துல கேட்க கூடாத கேள்வி எல்லாம் கேக்குறானு யோசிச்சுகிட்டே. “நேத்துக்கு கம்பேர் பண்ணும் போது இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்ல” என்றான் (டுபுக்கு)ராமன்.
“வெயில் காலம்னாலே இது தான் பிரச்னை. அங்க தண்ணி பிரச்னை எல்லாம் இல்லையே?” என்றது அக்கறையுடன் அந்த குரல்
வேக வேகமா குழாயில தண்ணி வர்றத சோதிச்சுட்டு, “இங்க தண்ணி பிரச்னை இல்லீங்க” என்றான் (டுபுக்கு) ராமன் கொஞ்சம் தெம்புடன். மனசுக்குள் "என்ன ஒரு கரிசனம்" என எண்ணிக்கொண்டான்
“கொஞ்சம் சத்தமா பேசுங்க, சரியா கேக்க மாட்டேங்குது.. இப்ப தான் வந்தீங்களா?” என்றது மறுபடியும் அந்த குரல்.
“ம்ம்.. ஆமா இப்போதான் வந்தேன்.. நீங்க எப்போ வந்தீங்க” என்றான் சிறிதே முனைப்புடன்.
“சரி நான் வச்சிடுறேன்.. அப்புறம் பேசலாம்.. இங்க பக்கத்துல ஒருத்தன் நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிகிட்டு இருக்கான்” என்றது எரிச்சலுடன் அந்த குரல்
டுபுக்கு ராமன் “#@&$##$@#$@#@$@#^*$%#@$@#@$@#”
பி.கு : ”கரு” எங்கோ எதிலோ படித்தது.

8 பின்னூட்டங்கள்:
one of the best jokes.
there is the world now.
Sometimes we will think that they r talking to themselves. sariya kavanica thaan terium, they r with hand free and talking on the pon.
yenge sellum intha paadai
நானானி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வருண்,
போன் அவனுக்கு மூனாவது கை மாதிரி.
விஜி,
லியோனி இதை தான்.. “யாரு பெத்த பிள்ளையோ இப்படி தனியா பேசிகிட்டு இருக்கு”-னு காமெடி பண்ணினார்.
ithulla innoru comedy ennana sella peru pesurathu ettu urukku ketkum - infact antha phone la pesuravaru dubai la iruntha kudaa directaavae ketkuraa mathiri pesuvaayngaa...oru thadava nammakku therincha pannakaararu mobile la pesittu phone vachappa, "enna anachi ippadi kathi pesureeru nu kettaen", "ellae en mavan pattanathulla irukkamvae, ingernthu evlavu thoorathulla irukku pattanam, ellae sathaama pesunaathenla ketkum" appadinaaru...itha naan engalae poi solven...
P.S: I am not from Tirunelveli,,,
//
I am not from Tirunelveli,,,
//
”எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல”ங்கிற மாதிரி இருக்கு.. நீங்க தான் தஞ்சாவூர்னு புரோபைல் சொல்லுதே:)
Post a Comment