Archive
Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|
அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
பொன் முட்டை இடுற வாத்தை அறுக்கலாமா? | 1/16/2009 |
தான் வேலை பாக்குறேன்னு காமிக்கிறதுக்கு ஆ.. ஊ-ன்ன மீட்டிங் ஒன்னு அரேஞ்ச் பண்ணிடுறானுங்க.. இன்னைக்கு காலையில “At a stretch”-ல ரெண்டு மணி நேரத்துக்கு ஒரே மீட்டிங்.. “Design Meeting”-னு சொல்லி அங்க உக்காந்து கதை கதையா சொல்லிகிட்டு இருக்கான் ஒரு வீணாப் போனவன்.
ஒருத்தன் தேர்வுக்கு பசுவை பத்தி நல்லா படிச்சுட்டு போயிருக்கான், ஆனா துரதிர்ஷ்டவசமா, போன இடத்துல நீதிமன்றத்த பத்தி கட்டுரை எழுத சொல்லிட்டாங்க, பையனும் படிச்சத வீணாக்காம, பசுவை பத்தி விலாவரியா எழுதிட்டு, கடைசியில, ”அந்த பசு நீதிமன்றத்திற்கு பின்புறம் கட்டபட்டிருந்தது” என “நீதிமன்ற” கட்டுரையை முடித்தானாம்.
அந்த மாதிரி, ஒவ்வொரு ஸ்டேட்மண்ட் முடிக்கும் போதும், “We will be using this field in our Design” ஒரு வாக்கியத்தை செயற்கையா சேர்த்து “Design Meeting” போய்கிட்டு இருக்கு. நம்ம நல்ல நாளிலேயே தில்லை நாயகம், பத்து மணி மீட்டிங்க்கு 10:30க்கு தான் போக முடிஞ்சுது, நல்ல வேளை அந்த அரை மணி நேர மொக்கையிலிருந்து தப்பிச்சாச்சு.. ஆனா இன்னும் 1:30 மணி நேரம் இருக்கே. “சாமீ, நீங்க பேசுறதுக்கும் இந்த மீட்டிங்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது தொடர்பா தயார் செய்துட்டு, “சந்திப்புக்கும்” ஏற்பாடு பண்ணுங்கோனு” அறிவுறுத்தி விட்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என வெளியேறும் போது என்னால் காப்பாத்த முடிந்தது மிச்ச அந்த ஒரு மணி நேரம் தான்.
இந்த மொக்கையையும் அரைமணி நேரமா கேட்டுகிட்டு இருந்த எங்க குழு மக்களை பார்த்து சிரிப்பதா, பரிதாபப்படுவதா, அழுவதா என்று தெரியவில்லை.
ரெண்டு வாரமா பெண்டிங்-ல இருந்த ஒரு வேலையை முழு மூச்சா முடிக்கலாமென இருந்தேன். ஏன்னா வெள்ளிக்கிழமை மட்டும் தான் இந்த மீட்டிங் தொல்லை அதிகமிருக்காது.. ஒரே மூச்சில் உக்காந்து வேலை பாக்க வெள்ளி தான் சரியான நாள் எனக்கு.
வேலை ஆரம்பிச்சு போய்கிட்டு இருக்கும் போது, பக்கத்து குழு தலை வந்து, திங்கள்கிழமை விடுமுறை அதுனால யாரும் ஞாபக மறதியில அலுவலம் வரவேண்டாம் என “பெரிய தலை” சொல்ல சொன்னதா கூவினார். காத்துல வந்த சேதிய லேசா காதிலும் வாங்கிட்டு வேலையில் மூழ்கினேன்.
மதிய உணவு முடிந்து சிறிது நேரத்துக்கெல்லாம் “பெரிய தல” யிடமிருந்து ஒரு e-Mail “மக்கா, திங்கள் விடுமுறை கதகதப்பாகவும் பாதுகாப்பாகவும் விடுமுறையை கொண்டாடுங்க. அப்புறம் திங்கட்கிழமை யாராவது வேலை பாக்குறதா இருந்தா எங்கிட்ட முன் அனுமதி கண்டிப்பா வாங்கணும்” அனுப்பிட்டார்.
சரி..சரி.. வேலையை பாக்க விடுங்கப்பா.. வழக்கம் போல ஒரு மூனு மணிக்கு டீ குடிச்சுட்டு வந்து வேலையில் உக்காந்தா நேரம் போனது தெரியல மணி 5. கிளம்ப போகும் போது “Vice Presdient” அம்மணி. “ ஒப்பந்தகாரர்களுக்கு திங்கட் கிழமை விடுமுறையா இல்லையா? என்பதில் சந்தேகம் இருப்பதாக சில வதந்தி. கண்டிப்பாக விடுமுறை தான். விடுமுறையை சந்தோசமா களி(ழி)யுங்கள். உங்க “தலை” வ்ரச் சொன்னா மட்டும் வந்து வேலை பாருங்க” என அவரும் அவர் பங்குக்கு ஓதிட்டு போயிட்டார்.
”என்னய்யா நடக்குது இங்கே” கேள்வி மனச போட்டு குழப்ப, விசாரணையில் இறங்கும் போது, ஒரு சில மக்கள் விடுமுறை இருந்தா அதை கவர் பண்றதுக்காக, ”ஒவர் டைம் பாக்குறேன்” சொல்லி ஒப்பேத்தியிருக்கானுங்க, அதுல ஒருத்தன் தான் அந்த மீட்டிங் பார்ட்டி. ”ஏனய்யா இந்த பேராசை.. அத்தனைக்கும் ஆசைபடுங்கிறது இப்படியா தப்பா புரிஞ்சுக்கிறது.”
போன வருசமே பட்ஜெட்ல ஒரு துண்டு விழுந்துச்சு.. இந்த வருசம் பட்ஜெட்டுல கிங் சைஸ் பெட்ஷீட்டே விழுந்திருக்கு, இந்த நேரத்துல இது தேவையா? பொன் முட்டை இடுற வாத்தின் பொ** அறுக்கலாமா?
Subscribe to:
Post Comments (Atom)
12 பின்னூட்டங்கள்:
#ஒருத்தன் தேர்வுக்கு பசுவை பத்தி நல்லா படிச்சுட்டு போயிருக்கான், ஆனா துரதிர்ஷ்டவசமா, போன இடத்துல நீதிமன்றத்த பத்தி கட்டுரை எழுத சொல்லிட்டாங்க, பையனும் படிச்சத வீணாக்காம, பசுவை பத்தி விலாவரியா எழுதிட்டு, கடைசியில, ”அந்த பசு நீதிமன்றத்திற்கு பின்புறம் கட்டபட்டிருந்தது” என “நீதிமன்ற” ##
ithu kooda nalla irukke.. butti saali paiyan.
//
viji said...
ithu kooda nalla irukke.. butti saali paiyan.
//
சரி தான் இதுதான் புத்திசாலித்தன்மா?
//
ச்சின்னப் பையன் said...
மீட்டிங்கில்லெல்லாம் மடிக்கணிணியில் தமிழ்மணம் பாருங்க
//
வாங்க தல, இப்போ இருக்கிற நிலமையில அதெல்லாம் பண்ணமுடியதுங்க.. பல்ல கடிச்சுகிட்டு இருக்கணும்.. வேற வழி
//Vezhavandhan said...
Pona varusham budget la thundu vizhanthadu..aana indha varusham budgeta "thundu budgetthan"
//
சங்கர், இது நீ தானா? “நானும் இத தான் சொல்ல வந்தேன்”.
Ippadi thaan campus interview GD la pesum podhu, YES YES!! NO NO! I ACCEPT THE POINT! VERY GOOD POINT IT IS! apdi oppethura maadhiri irukku
Ippadi publica enna asinga padhutha kudadhu!!!
//
Karthik said...
Ippadi thaan campus interview GD la pesum podhu, YES YES!! NO NO! I ACCEPT THE POINT! VERY GOOD POINT IT IS! apdi oppethura maadhiri irukku
//
I AGREE WITH YOU ( this is also same kind of statment :) )
Meetingna alarravara neenga.. engalukku main relaxation pointae adhu dhaan.. enga thala kootitu poitu oru 10 nimishathula solla vendiya pointa 2 mani neram pesuvaru.. adhula 1 mani neram "You got my point boss" appadinbaaru.. andha timela naanga pandra settai irukkae.. kannalayae sila reactions kudukkaradhu.. deskukku keezha notepadla edhaavadhu kirukki pakkathula irukkaravangalukku kaamchu avangala sirippu mooti maatividaradhu.. ippadi pala settaigal.. kadaisila romba mokka potaarna.. engalukkula naangalae innoruthar mobileekku call adippom.. avar urgent call maadiri ezhundhu velila povaar.. appuram teamla irukkara 3 perla oruthar poita engatha meeting nadakkaradhu... we will discuss later nu solli sabaya kalaichira vendiyadhu dhaan :D
vaanga gayathri,
ungala maathri oru groupla irunthaa naanum apdi thaan.. but inga nilamaiye vera, if anything went wrong, that guy will tell, "I already informed about this in meeting" apdinu oru kunda thooki pottuduvaan.. athu thaan pirachinaiye..
anyway, etho oru company-la nalla enjoy panreenga pola.. enakkum oru idam pottu vainga .. kaikkuttai tharattaa :)
Srikanth nadicha padam pa....
adhu vandhu su su maari....
naaye virathuvoom la su su nu.. adhu maadhiri
naa ulta panniten
Post a Comment