அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

Love Marriage 1/21/2009


புத்தாண்டுக்கு தீர்மானம் எடுத்தாச்சு, மாசத்துக்கு ஒரு புத்தகமாவது படிக்கணும் என்று, அதன்படியே கஷ்டப்பட்டு ஒரு புத்தகமும் படிச்சு முடிச்சாச்சு. அதைப் பத்தின பதிவு தான் இது. நான் படித்த புதினம் "Love Marriage". 

திருமணம் என்பது இருமனம் இணைவது மட்டுமல்ல இரு குடும்பங்களும் (பரம்பரையே) இணைவது என்பதை மிக எளிமையான நடையில் விளக்குகிறார் ஆசிரியர் கனேஷனந்தன். இது இவருக்கு அறிமுக நாவல். பாராட்டுக்கள்.

ஒவ்வொரு பாகத்தின் ஆரம்பத்திலும் “ஒரு திருக்குறளை” பயன்படுத்தியதற்காக சிறப்பு பாராட்டுக்கள்.

1983 கருப்பு ஜூலை யில் புலம் பெயர்ந்த இலங்கை தம்பதியர்க்கு பிறந்த யாழினி தனது குடும்ப உறவுகளையும் திருமணம் போன்ற வைபவங்களையும், இலங்கையில் நிலவும் அரசியல்/போர் சூழலையும் இணைத்து தனது பார்வையில் விவரிக்கிறார் இப்புதினத்தில்.

சமீபத்தில் இணைந்த கலைஞர் குடும்ப பிரச்னையின் போது, செல்வம் யாரு? தயாநிதி மாறனுக்கும் கனி மொழிக்கு என்ன உறவு? செல்வியும் முரசொலி செல்வமும் உடன்பிறப்பா? இப்படி பல கேள்வி எழும், இதுக்கெல்லாம் பதில் சொல்லும் வண்ணம் சில நாட்களுக்கு முன்னே அவர்களின் குடும்ப வரைபட அஞ்சுகத்தாயில் ஆரம்பித்து கனிமொழி பையன் ஆதித்யன் வரைக்கும் மொத்த குடும்பத்தின் வரைபடம் வெளிவந்து தமிழக மக்களுக்கு (எனக்கும் தான்) பெரும் குழப்பத்தை நீக்கியது. 

அதே போல இந்த புதினத்தில் யாழினியின் மொத்த குடும்ப வரைபடத்தையும் முதல் பக்கத்தில் கொடுத்திருந்தனர். தொடர்ந்து படிக்காமல், இடைவெளி (நாட்கணக்கில்) விட்டு படிக்கும் என்னை போன்ற மக்களுக்கு முதல் பக்க வரைபடம், பெயர்களையும் அவர்களின் உற்வுகளையும் உடனடியாக அறிந்து/புரிந்து கொள்ள நல்ல உதவியா இருந்தது.

பல்வேறுபட்ட கதாபாத்திரங்கள், பெரும்பாலும் பெண்களே நிறைந்திருந்த இந்த புதினத்தில் எனக்கு பிடித்தது அந்த குமரன் ( யாழினியின் தாய்மாமன்) கதாபாத்திரமே. அவர் விடுதலை புலியில் இணைந்து, பின்பு சிகிச்சைக்காக கனடா வந்து சொந்த மண்ணில் மூச்சை விடாமல் அந்நிய மண்ணில் மூச்சைவிடுவதை நினைத்து வருந்தும் ஒரு ஆன்மா.

இலங்கையில் ஜெஃப்னா நகரில் தமிழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தையும் இப்புதினத்தில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

முரளியின்( யாழினியின் தந்தை ) உடல் நிலையை இலங்கையின் சூழ்நிலையோடு இணைத்து “To oncologist, everything was potential minefield to be analyzed and dissected, the body merely another bomb anticipating explosion”  என்று வெளிப்படுத்தியது கூர்மை.

அதே போல, டொரண்டோ சர்வதேச விமான நிலையத்தில் குமரனை வரவேற்க காத்திருக்கும் யாழினி, ”In the terminals great cities of the world, we hold passports, but no countries” என்று புலம் பெயர்ந்த மக்களின் உணர்வை பொட்டில் அடித்தாற் போல் விவரித்திருந்தார்.

குறை என்று சொல்ல முடியாது, இதெல்லாம் இருந்திருந்தால் எனக்கு இன்னும் அதிகம் பிடித்திருக்கும். அவை:

ஒருவரின் தோற்றங்களை விவரிக்கும் போது அவரின் குணங்களையும் சேர்த்து விவரிக்கும் பாங்கு இடம் பெறவில்லை உதாரணத்திற்கு”SIDNEY SHELDON” தனது ARE YOU AFRAID OF THE DARK? எனும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்தை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார். She was in her late twenties, an African-American with skin the color of melted honey and a face that was a photographer's dream. She had intelligent soft brown eyes, sensual full lips, lovely long legs, and a figure filled with erotic promise.

அடுத்து, நகைச்சுவை. நகைச்சுவை என்பது மருந்துக்கும் இப்புதினத்தில் இல்லை என்பது ஒரு வருத்தமான விசயம். 

வெளிநாட்டில் வாழும் தமிழ்/இந்திய குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த புத்தகங்களை பரிந்துரைக்கலாம். திருமணம் மற்றும் சொந்த பந்த உறவு முறைகளை பற்றி அறிந்து/புரிந்து கொள்ள பேருதவியாக இருக்கும்

இப்புத்தகத்தை வாங்க விரும்புவோர் இங்கே அழுத்தவும்.

இதனை தொடர்ந்து நான் தற்போது படித்துக் கொண்டிருப்பது “Rich Dad, Poor Dad”. 

அடுத்து படிக்கவிருப்பது The Word is flat,  Raising Your Emotional Intelligence. இது மாதிரியான/தொடர்பான வேறேதேனும் நல்ல புத்தகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். 


12 பின்னூட்டங்கள்:

G3 said...
Me the pharshtu :))))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
G3 said...
Me the pharshtu :))))
//

இங்க அண்டர்கிரவுண்ட் டீலிங் எல்லாம் தேவையே இல்ல. என் கடை கொஞ்சம் காத்தாடிகிட்டே இருக்கும் :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
G3 said...
:)) Nerayya books padikkareenga pola.. vaazhthukkal romba nalla pazhakkam.. enakkum books padikkaradhu pudikkum.. aana idhukkagannu poyellam vaanga maaten.. kedaikara endha booka irundhaalum paarapatchamindri padippen.. oru nanbar romba naala balakumaran-oda irumbu kuthiraigala padinga. supera irukkumnu usupethittirukkaaru.. koodiya seekiram adha vaanganum :)

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
//என் கடை கொஞ்சம் காத்தாடிகிட்டே இருக்கும் :)//

Naanga vandhuttomilla.. inimae eppadi neenga nimmadhiya kaaththu vaangareenganu paathuruvom :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
aana idhukkagannu poyellam vaanga maaten.. kedaikara endha booka irundhaalum paarapatchamindri padippen..
//
even i dont have that habit. This book I got it from library :).. mathapadi, sundal paperai kooda vidama padikkira palakkam undu


//
Naanga vandhuttomilla.. inimae eppadi neenga nimmadhiya kaaththu vaangareenganu paathuruvom
//

enna.. start mooosic -a?


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Anonymous said...
title itself impressive......

looking forward for more story book reviews...

but i'm scare of this marriage life after watched abhiyum naanum. abhiyin appa same as my dad.. ithuku mela yen bayapadarennu vilakka vendiya avasiyam illai. go and watch the movie

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
Anonymous said...
an american born girl with parents from New Delhi highly recommends "For Matrimonial Purposes " by Kavita Daswani She has great insight into the human heart.

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
viji said...

but i'm scare of this marriage life after watched abhiyum naanum. abhiyin appa same as my dad.. ithuku mela yen bayapadarennu vilakka vendiya avasiyam illai. go and watch the movie
//

I have heard some good reviews about that movie. I will have to watch it.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
Anonymous said...
an american born girl with parents from New Delhi highly recommends "For Matrimonial Purposes " by Kavita Daswani She has great insight into the human heart.
//

Thanks for the info


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Raji said...
Road Less Travelled by JohnKeats padinga!

------------- ~~~~~ Thanks to Raji ! ~~~~~ -------------
நட்புடன் ஜமால் said...
நல்ல அறிமுகம்.

------------- ~~~~~ Thanks to நட்புடன் ஜமால் ! ~~~~~ -------------
VG said...
you watch, then u will knw something there.. :(

~nan tooki valartha tuyaram nee!~ my dad shud sing this. LOL

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------