”இல்ல சார், இதுக்கு முந்தின குதிரை எடுப்பு திருவிழாவுக்கு அடுத்து வந்த ஆனி மாசம் தான் பிறந்தா”
”அப்படியே வைச்சாலும் பிள்ளைக்கு மூனு முடிஞ்சு நாலு வயசு ஆரம்பிக்க போகுது.”
”அஞ்சு வருசம் ஆயிடுச்சுனுல்ல நெனச்சுகிட்டு இருக்கேன், மூனு வருசத்துக்கு முன்னாடி தான் சாமி கும்பிட்டோமா?”,
“ஆமா, இந்த வருஷம் சின்ன/ஆயா (Nursary School) பள்ளிக்கூடத்துல கொண்டு போய் விடுங்க, அடுத்த வருஷம் இங்கே சேர்த்துக்கலாம்”.
----------
ஏம்பா கந்தா, “பையனுக்கு சிலேடும், வாய்ப்பாடும் வாங்கி குடுக்கச் சொன்னெனே. என்னாச்சு”
கூச்சம் கலந்த தயக்கத்துடன், “நாளைக்கு மீன் வித்தவுடனே மொத வேல அதான் சார்”
----------
”என்ன சின்னா, சேர்க்கை முடிஞ்சு ரெண்டு மாசம் ஆச்சே. இப்போ பையன கூட்டிட்டு வர்ற?”
“அது வந்து சார், வாத்து மேய்ச்சலுக்கு கூடலூர் கம்பம் போனது தால, வரமுடியாம போய்டுச்சுங்க, நீங்க தான் பெரிய மனசு பண்ணி சேத்துக்கணும்”
----------
”இங்கிலீஷ்க்கு எந்த மாசம்யா?”
“தெரியலேயே சார், தமிழுக்கு மார்கழி மாசம் பொறந்தான்”
“சரி எந்த தேதி?”
”மார்கழி கடேசியில, பொங்கலுக்கு பத்து நாளுக்கு முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை சார்”
“அப்போ தேதியும் தெரியாது.. சரி எந்த வருஷம்?”
“நம்ம கடைக்காரவுக வீடு கட்டி முடிச்ச வருசம் சார்”
“சரி தான்.. “
“டேய் இங்க வா.. உன் வலது கைய தலைக்கு மேல கொண்டு வந்து இடது காதை தொடு பார்க்கலாம்” தொட்டேன்
“சரி சேத்துக்கலாம்”
வீட்டில்
”என்னங்க நான் தான் படிச்சு படிச்சு சொல்லி அனுப்பிச்சேன்ல இங்கிலீஷ்க்கு ஜனவரி மாசம் நாலாம் தேதி-னு இங்க ஜூன் –னு போட்டிருக்கு?”
மக்களின் கல்லாமையையும் அறியாமையயும் புரிந்து கொண்டு; அனைவரையும் அரவணைத்து இன்முகத்துடன் கல்விச் சேவை புரிந்த என்னுடைய இரண்டாம் ஆசான் ஆ.கருப்பையா அவர்களை பொங்கலுக்கு பத்து நாளுக்கு முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை (இன்று) பிறந்த நான் வாழ்த்த வயதில்லாமல் வணங்குகிறேன். நீங்க நல்லா இருக்கோணும்!
19 பின்னூட்டங்கள்:
வாழ்க திரு கருப்பையா அவர்கள்! :)
வாழ்க!!வணக்கங்கள்!!!!
தேவா...
குடுகுடுப்பை, வருண், தேவா, கானா பிரபா,
நன்றி, வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் :)
//என்னுடைய இரண்டாம் ஆசான் ஆ.கருப்பையா//
அப்ப உங்க முதல் ஆசான் யாரு?
//
NHM writer la comma support panna maathengidhu pa
//
I am using Tamil Phoenetic Unicode mode, There I can use comma.
//
NOW WATCHINg nu podhureengale.. adhu enna gadget thalaiva?
//
That is list gadget pa
//
ungalukkum pirandha naal vaalthukkal....
//
Thanks Karthik!
//
SIR WHAT ABOUT BIRTHDAY TREAT?.
//
kuduthuduvoom oorukku varum pothu :)
//
அப்ப உங்க முதல் ஆசான் யாரு?
//
என் அம்மா தான்!
//
கபீஷ் said...
Happy birthday to you.! salute to your teacher
//
Thanks kabeesh!
Belated happy birthday too you... :)
//
நசரேயன் said...
உங்களோடு சேந்து நானும் வாழ்த்துகிறேன்
//
வருகைக்கும் வாழ்த்துக்கு நன்றி நசரேயன்
//
viji said...
Itha poto le irukarathu thaan unga sir aah???
//
ithellaam konjam overa theriyal.. he is first president of India and he was a teacher. for more info Click Here
//
Belated happy birthday too you... :)
//
Thank you so much.
Post a Comment