
Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|

அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
இயற்கையை ஜெயிக்க முடியுமா? | 2/03/2009 |
வகை:
அனுபவம்
|

இன்று அலுவலகத்துக்கு போகும் போது நான் கேட்ட பாடலின் ஒரு வரி தான் இந்த பதிவுக்கு காரணம்
நீரோட்டம் இருந்தா,
ஏரோட்டம் நடக்கும்;
ஏரோட்டம் இருந்தா தேரோடும்.
என ஜானகியின் கொஞ்சும் குழந்தை வாய்ஸில் புதுப் பாட்டு என்ற படத்துக்காக இசைஞானியின் இசையில் பாடிய ”இந்த பூமியே எங்க சாமியம்மா” என ஆரம்பிக்கும் அந்த பாட்டுதான்.
நான் ரொம்ப சின்ன பையனா இருக்கும் போது எங்க ஊர்ல இருந்து ஒரு அரை மைல் தூரத்துல இருக்குற ஒரு கிணத்துல இருந்து இடுப்புல ஒன்னு தலையில ஒன்னு’னு தண்ணி கொண்டு வருவாங்க பெண்மக்கள். எனக்கு நல்லா ஞாபகமிருக்கு எங்க அம்மா தண்ணிக்கு போகும் போது நானும் வருவேன்’னு அடம்பிடிச்சு அழுது தூக்கிகிட்டு போக சொல்வேன் ( பொறந்ததுல இருந்தே அப்டி தான்.. ) , போகும் போது பரவாயில்ல இடுப்புல என்னை தூக்கி வச்சுகிட்டு காலி குடத்தை கையில் பிடிச்சுக்குவாங்க. ஆனா வரும்போது தான் பிரச்னையே, என்னை நடக்க சொல்லுவாங்க, முடியாதுன்னே அடம்பண்ணி (கொடுமக்கார பயபுள்ள, இப்போவாவது நம்புங்கப்பா நான் கொடுமைகாரன் தான்...)அழுவேன். அடம்பிடிச்சு காலை கட்டிபிடிச்சு அழுதுகிட்டே தர தர’னு தரையோடு இழுத்துகிட்டே/அழுதுகிட்டே வருவேன், குடத்துல இருந்து சிந்துன தண்ணிய விட என் கண்ணுல இருந்து சிந்துன கண்ணீர் அதிகமாயிருக்கும்.
அதுக்கப்புறம் ஒரு நாலஞ்சு வருசம் கழிச்சு ஒரு 90 வாக்குல ஒரு அடி பம்ப் போட்டாங்க, ஊரே திரண்டு நின்னு வேடிக்க பாத்துச்சு. மொத்தமுள்ள 400 பேருக்கும் ஒரே அடி பம்ப் தான். நீங்க நிறைய பேப்பர்ல படிச்சு இருப்பீங்க.. குழாயடி சண்டைய பத்தி. ஆனா அப்படி ஒரு தகராறு எங்க ஊர்ல நடந்ததே இல்ல.. ( இனியும் அப்டியே தொடரணும்’னு தான் ஆசை). எங்களோட மனமகிழ் மன்றமே அந்த குழாயடிக்கு பக்கத்துல இருந்த தெரு விளக்குதான். படிக்குறேன் சொல்லிட்டு எதாவது ஒரு புத்தகத்த எடுத்து காலங்காத்தால ஒரு டைம் குறிச்சு “படிச்சு”ட்டு வருவோம். அப்டியே “வேண்டியவங்களுக்கு” குடம் குடமா தண்ணியடிச்சு குடுத்து எங்க பாசத்த தண்ணியாக கொட்டியிருக்கோம்.. ம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்.

இருந்த ஒரே அடிபம்பிலேயும் தண்ணீர் பற்றாகுறை வந்தது இல்ல. அது ஒரு வரபிரசாதமா தான் இருந்தது. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி, பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு தேவையில்லாத ஒரு இடத்துல இன்னொரு குழாயும் போட்டாய்ங்க.. ஆனா அங்க தண்ணி நல்லா இல்லாததுனால ( முன்னமே தெரியும்.. சும்மா கடனுக்கு/கணக்குக்கு போட்டது தானே ) குடிக்கிறது தவிர மத்த எல்லாத்துக்கும் ரொம்ப நல்லாவே பயன்பட்டுச்சு. அதுக்கு அப்புறம் ஆசை யாரை விட்டது, ஊருக்கு ஒரு த்ண்ணி தொட்டி இல்லை என ஒரு வெட்டி கூட்டம் புலம்ப ஆரம்பிச்சது, அதன் பலனா 2000 வாக்கில் ஒரு தண்ணீர் தொட்டியும் ஒரு 4 பொது குழாயும் போடப்ட்டது.
அங்க பிடிச்சது தான் வினை, அதுவரைக்கும் சித்திரையில் கூட தண்ணீர் பஞ்சத்தை பாக்காத ஊரு, தண்ணீர் பஞ்சத்த பார்க்க ஆரம்பிச்சது. அரை மைல் நடந்து போய் தண்ணீர் பிடித்து வரும் போது இல்லாத தண்ணீர் பஞ்சம், ஒரு அடி பம்ப் குழாய் இருந்த போது வராத தண்ணீர் பஞ்சம். நாலு குழாய் இருந்த போது எட்டி பார்க்க ஆரம்பிச்சது. இத்தனைக்கு ஜனத்தொகையில் பெரிய மாற்றமெல்லாம் இல்ல. மிஞ்சி போனா இப்போ ஒரு 500 பேர் இருப்பாஙக. ஆனா தண்ணீர் போதவில்லை.
காரணம் என்னான்னா திறந்த உடனே தண்ணீ வருதா மக்கள் அதன் அருமை தெரியாம, சும்மா புகுந்து விளையாடி இருக்காய்ங்க.. குழாயை திறந்து தண்ணீர் வரலேன்னா, திரும்ப மூடுறதுல்ல, அப்படியே மூடினாலும் சரிவர மூடாததுனால, நிறைய தண்ணீர் வீணா போய்கிட்டு இருந்திருக்கு.
என்னோட சொந்தகார பயபுள்ள தான் இதுக்கு இன்சார்ஜ், என்னாடா மாப்புள, ”தண்ணீ ஒழுங்கா திறந்து விட மாட்டுறியாம்ல, மக்க தண்ணீ இல்லே’னு சொல்றாய்ங்க” என ஒரு தடவை போட்டு வாங்கும் போது, மனுசன் புலம்பி தள்ளிட்டான். குடிக்கிறதுக்கு பயன்படுற தண்ணிய குளிக்க, மாடு குளிப்பாட்ட, ஹோஸ் போட்டு தோட்டத்துக்கு பாய்ச்ச என மக்கள் ரொம்ப அழிச்சாட்டியம் பண்றாய்ங்கடா.. அப்புறம் எப்படி தண்ணி பத்தும் என்றான். அவன் பேச்சிலும் ஒரு உண்மை இருந்தது.
ஆரம்பத்துல அடி பம்புல் இருந்து க்ஷ்டபட்டு தண்ணி எடுத்து வந்ததுனால அதனோட அருமை தெரிஞ்சது. அதை ஒரு செல்வம் மாதிரி பயன்படுத்தினாங்க. சில சமயம் ஆர்வகோளாறுல குடிக்கிற தண்ணிய எடுத்து ஆட்டு மாட்டுக்கு வச்சுட்டு ”வாங்கி கட்டி”யிருக்கேன். கொஞ்சம் கூட வீணாக்கமா பயன்படுத்தியிருக்கோம்.
சமீபத்தில் இதனோட உச்சகட்டமா நாலு குழாய் போதவில்லே’னு, மக்கள் அவங்க வீட்டுக்கொரு குழாய் என ”தனி” யாக அமைத்து கொள்ள ஆரம்பித்தனர். எங்க அப்பாவும் எங்கிட்ட ஒரு ரெண்டு மூனு தடவ ஓதி பாத்தார், நான் காது குடுத்து கேக்கல, அவருக்கு தெரியாதா என்ன? என்னை எப்படி கவுக்கனும்’னு. செண்டிமெண்டா பேசி கவுத்து, எங்க வீட்டுக்கும் “தனி” குழாய் இழுத்தாச்சு.
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வீட்டுக்கு போன் பண்ணும் போதெல்லாம், “அம்மா கிட்ட பேசனும் குடுப்பா” என்றால், ”தண்ணீ பிடிக்க போய்ட்டாடா” என்பார். ”அதான் வீட்டுலேயே குழாய் இருக்கே, பின்னே எங்க போனாங்க’னு விசாரிச்சா.. சரிவர கரண்ட் வராத்துனால, தண்ணிதொட்டியில் தண்ணி நிரப்ப முடியவில்லையாம்.. அதனால ”நோ வாட்டர்”.. அப்போ மறுபடியும் அந்த பழைய அடி பம்ப் குழாயை பயன்படுத்தியிருக்கிறார்கள் நம்ம மின்வெட்டார் புண்ணியத்துல.
இயற்கையை ஜெயிக்க முடியுமா சொல்லுங்க?

16 பின்னூட்டங்கள்:
//
ச்சின்னப் பையன் said...
கொடுமைக்கார ஆளவந்தான் அவர்களுக்கு -> அந்த பாட்டை நான் கேட்டதில்லை....:-))
//
பதிவ போட்டு, சாப்பிட்டு வர்றதுக்குள்ளு சும்மா பின்னூட்ட்தத குடம் குடமா கொட்டியிருக்கீங்க..
யூட்யூபில் தேடினேன், கிடைக்கல..
//
இதுக்காக ச்சின்ன வயசுலே ரோடு ரோடா, இரவும் பகலுமா அலைஞ்சிருக்கோம்னு... :-((
//
உண்மை தெருதெருவா சைக்கிள்ல குடம் கட்டி அலைஞசதுமுண்டு.
//
ஆற்காட்டாராலே ஒரு நன்மை இருந்திருக்கு பாருங்க.
//
:)))
Indha maadiri kozhayadila poi thanni pudikkara situation irundhadhae illae :)
//ஒரு புத்தகத்த எடுத்து காலங்காத்தால ஒரு டைம் குறிச்சு “படிச்சு”ட்டு வருவோம். //
Romba azhuththi soldradha paatha..... ;)
கண்டிப்பா முடியாது:-))
What a pity... :D
###அப்டியே “வேண்டியவங்களுக்கு” குடம் குடமா தண்ணியடிச்சு குடுத்து எங்க பாசத்த தண்ணியாக கொட்டியிருக்கோம்##
Jollu vitingangratha, evalo naasukka solli irukkinga.. paratha koodiya vishyam.
angellam ivalo kashtama? i nvr had this kind of experience. TOUCH WOOD anyway. :)
//
G3 said...
Romba azhuththi soldradha paatha..... ;)
//
hahhha haah :)))).. as i said, ATHELAAM ORU KAALAM :)
//
இயற்கை said...
//இயற்கையை ஜெயிக்க முடியுமா சொல்லுங்க?//
கண்டிப்பா முடியாது:-))
//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இயற்கை.
//
viji said...
###அப்டியே “வேண்டியவங்களுக்கு” குடம் குடமா தண்ணியடிச்சு குடுத்து எங்க பாசத்த தண்ணியாக கொட்டியிருக்கோம்##
Jollu vitingangratha, evalo naasukka solli irukkinga.. paratha koodiya vishyam.
//
ஹி..ஹீ.ஹிஹி..ஜொள்ளா? இல்ல.. அது பாசம் தான்ன் நம்புங்கப்பா :))))))
//
viji said...
the whole story very nice. nalla eluthum tiran ungaluku.
//
உங்கள மாதிரி பெரியவங்களோட ஆசிர்வாதமும் “ஆதரவும்” தான் இதுக்கு காரணம்
All the credit goes to my "Light Giver" :)
YEI yenna kollupa?? yaaru periyavanga? adi vilum...
Unga light giver nalla irukothum nga.. nanum vendikiren. :D
ippa thaan naa inda paatha kethen...
//குடத்துல இருந்து சிந்துன தண்ணிய விட என் கண்ணுல இருந்து சிந்துன கண்ணீர் அதிகமாயிருக்கும். //
Claps!!! Punch ma Punchu!!! Poana post la Anda THANNI.. ippa inda THANNI.... Blog ore kicka thaan irukku
Vaaliba vayasu
Post a Comment