அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

நிகழ் கதைகள்…3 கடையை எப்போ தொறப்பீங்க? 1/29/2009


முழுபோதையில் சரிகிற வேட்டியை இழுத்து பிடித்து ஒரு மூலையை பல்லில் கடித்து, இன்னொரு மூலை வேட்டியை தெரு கூட்ட விட்டு தெனாவெட்டா தெருவலம் வர்றான் நம்ம (டுபுக்கு) ராமன்.

தரைக்கு கீழே புறாக்கூண்டு போல இருக்கும் பலசரக்கு கடையில் தூக்கணாங்குருவி கூடுகள் போல் தொங்கி கொண்டிருந்த தீன்பண்ட பைகளை விலக்கி, “(யோக)வள்ளி பீடி குடு”.

“என்ன பீடிடா?” வெரசா வெரட்டி விடும் நோக்கில் வள்ளி.

“தெனமும் வாங்குறது தான்.. என்னமோ புதுசா கேக்குறா”

வேண்டா வெறுப்புடன் இரண்டு ”ஐந்து பூ மார்க்”  பீடியை எடுத்து திணிக்கிறாள் (யோக)வள்ளி

ஆசிர்வாதம் குடுக்க வரும் யானை, பிள்ளையை நுகர வருவது போல பக்க வந்து ”என்னாது இது?“ – (டுபுக்கு) ராமன்.

சுவாச அறை உருவாக்கியா கீட்டோனும் ராமன் உருவாக்கிய CO2 வும் ஒன்று சேர்ந்து தாக்க, மூச்சடைத்து விம்மி விழி பிதுங்கி “நீ கேட்டது தாண்டா, பூ மார்க் பீடி” மூச்சுகாற்றை விரட்டியடித்தபடி (யோக)வள்ளி.

“அது தான் ப்ப்பூ இருக்குல.. எங்களுக்கென்ன கண்ணு அவிஞ்சா கிடக்கு”

பாசம் கலந்த வெறுப்புடன் ”அவிஞ்சா தான்டா நல்ல இருக்கும் இந்த ஊரும் நாங்களும்”  

“என்னாங்க முனுமுனுப்பு?.. ரெண்ட எடுத்து நீட்டுற.. பாக்கெட்டோட குடுப்பியா”

ஒரு கையால் சட்டை காலரை தூக்கிவிட்டு, பல்லில் கடித்த வேட்டி முனையை கையில் பிடித்து ஒரு காலை மேலே தூக்கி, படி மீது வைத்து படம் காட்ட, வெறுத்துபோன (யோக)வள்ளி, ”இந்தா போய்த் தொல.. மொதல்ல இடத்த காலி பண்ணு.”  

”இத மொதல்லேயெ செஞ்சிருக்கலாம்ல” வெற்றிக் களிப்புடன் ”வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்.. ஓய்..ஹோய்..”

மறுநாள் காலையில் கடைக்கெதிரான திண்ணையில் மழையில் நனஞ்ச கோழியாக (டுபுக்கு) ராமனும்.. சினங்கொண்ட சிறுத்தையாக (யோக)வள்ளி விழிகளாலே விசாரித்துக் கொண்டனர்.

என்ன விசாரிச்சுகிட்டாங்கனு சொல்லவும் வேணுமா? தலைப்பை ஒருமுறை படிங்க (அப்படி தான் ஆரம்பிச்சான் நம்ம (டுபுக்கு) ராமன்).

பி.கு : கதையின் அடிநாதம் ( அப்டி ஒன்னு இருக்கா என்ன?) பலருக்கு சில சந்தேகங்களை எழுப்பியதால், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது ( நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ).

12 பின்னூட்டங்கள்:

viji said...
unga sontha kathei thaane???

yeppadi iruntha ninga, ipadi aitinga.... :D

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
viji said...
unga sontha kathei thaane???

yeppadi iruntha ninga, ipadi aitinga.... :D
//
ஓ.. அந்தளவுக்கு கற்பனை இயல்பா இருக்கு.. உங்க புகழ்ச்சிக்கு நன்றி, வ்ஜி. வருகைக்கும் தான்


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
viji said...
karpanai ille raasa.. UNMAI, NIJAM...

maluppe koodathu

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
ராம்சுரேஷ் said...
மன்னிக்கவும். எனக்கு சரிவர புரியவில்லை. எதுவும் பின்நவீனத்துவ சிறுகதையா?

------------- ~~~~~ Thanks to ராம்சுரேஷ் ! ~~~~~ -------------
Anonymous said...
college life in usa :~)

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
ராம்சுரேஷ் said...
மன்னிக்கவும். எனக்கு சரிவர புரியவில்லை. எதுவும் பின்நவீனத்துவ சிறுகதையா?
//
சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், ”ராம்சுரேஷை தனி மடலில் தொடர்பு கொண்டு அவரின் சந்தேகத்தை தீர்த்து வைத்தாயிற்று”
:)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

// Anonymous said...
college life in usa :~)
//

Anony,
Thanks for visiting. Its Not exactly "college life".. thats just fun photo. story about my village incident :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
G3 said...
//சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், ”ராம்சுரேஷை தனி மடலில் தொடர்பு கொண்டு அவரின் சந்தேகத்தை தீர்த்து வைத்தாயிற்று”//

LOL :)) Thani madalla avara nalla merattiten nnu soldra maadiri irukku :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
G3 said...
LOL :)) Thani madalla avara nalla merattiten nnu soldra maadiri irukku :P
//

நக்கல் தான் :) .. I have made some changes now after his discussion.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
viji said...
karpanai ille raasa.. UNMAI, NIJAM...

maluppe koodathu
//

மழுப்பல் இல்ல ராசாத்தி. நாங்க எல்லாம்.. “ ஏய்.. நான் ரவுடி தான்.. ரவுடி தான் பாத்துக்கோ”-னு கூவுற கூட்டம்..

உண்மைக் கதை தான்.. கொஞ்சூண்டு க்யூமர் கலந்து. ஆனா என்னொடது இல்ல :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
viji said...
##ஆனா என்னொடது இல்ல :)##

ingethan santegame aarambikkutu... :D

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
observer said...
வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html

------------- ~~~~~ Thanks to observer ! ~~~~~ -------------