அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

செலீனா - ஓர் இசையின் பயணம் 1/16/2009


80களின் இறுதியிலும் 90-ன் ஆரம்பத்திலும் இசை உலகில் சிறகடித்து பறக்க ஆரம்பித்த பாடகி- செலீனாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் படம். 

மெக்சிகோ-அமெரிக்க தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்த செலீனா. இளமையிலே நல்ல குரல்வளம் கொண்ட செலீனாவின் வசன உச்சரிப்பு போன்ற சின்ன சின்ன தவறுகளை களைந்து மெருகேற்றுகிறார் அவரின் தந்தை. செலீனாவின் புகழ் பரவ ஆரம்பிக்கிறது இசைக்குழுவை விரிவடைகிறது. புதிதாக வந்த கிடாரிஸ்ட் Chris-ஐ காதலித்து பல எதிர்ப்புகளுக் கிடையே மணந்து பின் குடும்பத்துடன் சேர்கிறார். ”வெண்ணெய் திரண்டு வர தாழி உடைந்தது போல” தொடர் வெற்றிகளை படைத்த அந்த இளம் இசைப் புயல் பணத்தகராறினால் தனது ரசிக மன்றங்களின் செயலாளரினால் சுட்டுக் கொல்லப் படுகிறார். 

அவரின் கடைசி மேடை நிகழ்ச்சியில் - அரங்கத்தில் நிறைந்திருக்கும் ரசிகர்களுக்கு கையசைத்து கொண்டே பயணம் செய்யும் காட்சியில் தொடங்கி பின்னோக்கி நகர்கிறது கதை. படம் பார்த்தவுடன் அந்த மேடை நிகழ்ச்சி வீடியோவை தேடி பார்க்கும் போது, உடையிலிருந்து அனைத்தையும் அருமையாக டிரான்ஸ்லேட் பண்ணியது தெரிந்த்து.

முகலாய மன்னன் அக்பரின் அரசவையின் இசைக்கலைஞன் தான்சே-வை பற்றி படித்திருக்கிறேன். அவர் பாடி மேக மல்ஹர் ராகம் பாடினால் மழை வருமாம் தீபக் ராகம் பாடினால் தீப்பிடிக்குமாம். அவரின் தன் இசையால் விலங்குகளையும் கேட்க வைக்க முடியுமாம். 

அதே போல மெக்சிகோ இசை நிகழ்ச்சியில் எதிர்பாராத அள்வுக்கு மக்கள் திரண்டு விட, இவரின் பாடலில் மக்கள் கிளர்ச்சியடைந்து நெரிசல் அதிகமாகி மேடை சரிய ஆரம்பிக்கிறது. இசை நிகழ்ச்சியை தடை செய்வதை தவிர வேறு வழியில்லை என்ற அந்த சூழலில் அனைத்து மக்களையும்/ ரசிகர்கூட்டத்தையும் தன் பாட்டால் கட்டி போடும் அந்த காட்சி அருமையிலும் அருமை. 

இசையை தவிர்த்து பிரச்சினைகளை கையாளும் திறமைசாலியாக இருந்திருக்கிறார் செலீனா. மெக்சிகோவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ஏற்படும் மொழி பிரச்சினையை தன் அன்பால் சமாளிக்கிறார். 

ஒருவர் வாழ்நாள் முழுவதும் செய்யக் கூடிய சாதனையை தன் 24 வயதிலே சாதித்த செலீனா, தனது சொந்த வாழ்வில் தனக்கு சரி என்று பட்டதால், பணம்,புகழ் என எதை பற்றியும் கவலை படாமல், தான் காதலித்த Chris-ஐ தனது 21 வயதில் திருமணம் செய்து கொள்கிறார் தனது 23வது வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்கிறார். ஆனால் விதி விளையாடி விடுகிறது. 

தனது 24வது பிறந்த நாளை கொண்டாட 16 தினங்களே எஞ்சியிருந்த போது அந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. தொடர்ந்து இப்போதைய அமெரிக்க அதிபரும், அப்போதைய Texax கவர்னருமான புஷ். இவரின் பிறந்த நாளை செலினியா தினம் என அறிவித்து அவரின் புகழுக்கும் மேலும் புகழ் சேர்த்திருக்கிறார்.

Jennifer Lopez மிக சரியான தேர்வு. இவர் ஏற்கனவே பிரபல பாடகி என்பதால் மேடை பாடகர்க்குறிய மேனரிசங்கள் அனைத்தும் வெகு சிறப்பாக/இயல்பாக பதிந்திருக்கிறார். இவர் Richard Gere  உடன் நடித்த Shall We Dance? படத்தை விட நடிப்பிலும் நடனத்திலும் இந்த படம் ஒரு படி மேல் என்றே சொல்லலாம். 

தனிப்பட்ட காதல் மற்றும் குடும்ப வாழ்வையும் பொது வாழ்வையும் அவருடைய புகழுக்கு சிறிது களங்கம் வராமல் மிகச்சரியாக கலந்திருப்பது பாராட்டுக்குறிய ஒன்று.

இதே மாதிரியான இசை கலைஞனின் உண்மைக் கதையை விவரிக்கிறது Walk the Line என்ற படம், Joaquin Phoenix மற்றும் Reese Witherspoon  நடித்திருந்தனர். Ladder 49 படத்தில் தீயணைப்புத்துறை வீர்ராக/கதாநாயகனாக நடித்திருந்தாலும் Gladiator படத்தில் வில்லன் கதாபாத்திரமே இவருக்கு சரியாக பொருந்தியது. 

Walk the Line படம் பார்த்து பிறகு, Johnny Cash –ன் live concert ஆல்பம் ஒன்றை பார்க்கும் போது தான், அவரது பாவனைகளை – கிடாரை தலைகீழாக கையாள்வது; பாடும்போது வாயை ஒரு பக்கமாக குவித்துக் கொள்வது முழுவதுமாக என அனைத்தையும் உள்வாங்கி கனகச்சிதமாக Joaquin Phoenix வெளிப்படுத்தியிருந்த்து தெரிய வந்தது.

செலீனா - ஓர் இசையின் பயணம்

2 பின்னூட்டங்கள்:

Karthik said...
Wikipedia la paarthen.. Figure konjam sumaara thaam irukku.. aniyathukku suthu puthaangale??

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

yeah. it was very pathetic


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------