Archive
Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|
அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
பொல்லாதவன் | 1/07/2009 |
வகை:
சினிமா
|
புத்தாண்டில் நான் பார்த்த முதல் தமிழ் படம் பொல்லாதவன், ஏற்கனவே ஒரு தடவை பார்த்துவிட்டாலும் இரண்டாம் முறை பார்க்கும் போது அவ்வளவாக அலுப்பு தட்டவில்லை. இது ஒன்றே போதும் இந்த படம் பார்க்க கூடிய படம் என்று சொல்ல. நண்பர் கார்த்திக்கின் வற்புறுத்தலுக்கிணங்க இப்படத்தை பற்றிய என்னுடைய விமர்சனம்
படத்தோட பேரை பழைய ரஜினி படத்திலிருந்தும், படத்தின் ஒரு பாடலை ரஜினி/கமல் நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்தும், கதையின் முக்கிய கருவை “The Bicycle Thief” படத்திலிருந்து எடுத்தாலும், இப்போதைய கால சூழலுக்கு ஏற்றவாறு காட்சியமைப்பிலும் திரைக்கதையிலும் சில திருப்பங்களை/மாற்றங்களை செய்து படத்தை வெற்றிபாதையில் செலுத்தி இருக்கிறார் வெற்றிமாறன், அவருக்கு இது முதல் படமாம்.
பான் பாக் ரவி, பட்டாசு பாலு, வட சென்னைக்கு ஒருவன், தென் சென்னைக்கு ஒரு ரவுடி என தனிதனியாக/வரிசையாக பல கோஷ்டிகளை காட்டி பொறுமையை சோதிக்காமல், ஒரே கோஷ்டியில் மூன்று ரவுடிகளைக் காட்டியிருப்பது கொஞ்சம்ஆறுதலாக இருந்தது, மூன்று ரவுடிகள் இருந்தாலும்.. ஆ... ஊ....ஏய்.. என மயிர் கூச்செரியும் அலறல் காட்சிகள் இல்லாதது மிகப் பெரிய ஆறுதல்.
அதிலும் டேனியல் பாலாஜியை ஒரு சப்பையாக காண்பித்தாலும், அடி மேல் அடி வாங்கினாலும் கடைசிவரை அவர் காட்டும் ஆக்ரோசம்.. வாவ்.. படத்தின் வெற்றிக்கு ஒரு மிகப்பெரிய காரணம் அவர் எனலாம். ஏற்கனவே ”வேட்டையாடு விளையாடு” வில் வில்லனாக நடித்திருந்தாலும் இதில் நல்ல வித்தியாசம் காண முடிகிறது. விறுவிறுப்பான இந்த படத்தில் கதாநாயகனுக்கு ரெண்டே ரெண்டு சண்டைகள் தான் என்பது ஒரு இன்னொரு ஆறுதலான விசயம்.
அவுட்டு மற்றும் டேனியலின் அண்ணனாக வரும் இன்னொரு வில்லன் இருவரும் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அழகாக அண்டர்ப்ளே செய்திருந்தனர். மலையாள முரளி ஒரு பொறுப்புள்ள அப்பாவாக நிறைவாக செய்திருந்தார்.
இப்படத்திலும் ஒரு பொம்மையாக/ ஊறுகாயாக வருகிறார் நாயகி ”குத்து”ரம்யா (எ) திவ்யா( இது தான் உண்மையான பெயராமே), ஜோதிகாவின் இடத்தை பிடித்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை தொப்பையில், முகத்தில் (பால்வடியும்)குழந்தை தோற்றம் இருந்தாலும் மற்ற பாகங்களில் வயதை மீறிய முதிர்ச்சி/கவர்ச்சி. அவ்ளோ பெரிய ஸ்டூல் போட்டு நடக்கும் போதும் தனுஷின் இடும்புக்கும் கொஞ்சம் மேலே இருக்கிறார் உயரத்தில். ”நீயே சொல்” பாடல் காட்சிகளில் இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம், அதற்குரிய வாய்ப்புகள் பாடல் வரிகளில் அதிகமிருந்தன.
பைக் தொலைப்பதற்கு முன்னே எதைப்பற்றியும் கவலையே படாத பொறுப்பற்ற உணர்ச்சியையும், தொலைத்த பின்பு ஒருவித கவலை கலந்த தேடல் உணர்ச்சியையும் கொஞ்சமும் மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. இனிமேல் தறுதலையான வேஷமா கூப்பிடு தனுசை என்றாகிவிட்டது. இந்த படத்தின் இறுதி சண்டை காட்சியில் ”அவர் சூடாகி.. நம்மள சுளுக்கு எடுக்காமலிருந்தது” ஆறுதலான விசயம். காதல் காட்சிகளில் தனுசின் வழக்கமான நெருக்கம் மிஸ்ஸிங், யார் மீது என்ன கோபமோ/பயமோ தெரியல, மன்மதன் தான் இதில் வல்லவன் என்று சொல்லும் படி இருந்தது.
பாடல்களில் எனக்கு பிடித்தது ”மின்னல்கள் கூத்தாடும்”, ” நீயே சொல்” , “படிச்சு பார்த்தேன் ஏறவில்லை” . இப்போ எதுக்கு இந்த “அலிபாபா தங்கம்” பாட்டு வந்துச்சு? என்று கேக்க நினைக்கும் போது, பாடல் முடிந்தவுடன், ”பொறந்த நாளு அதுவுமா” என்றொரு வசனத்தில் தெரிந்தது இயக்குனரின் சாமர்த்தியம்.
”நீயே சொல்” பாடலில் இசையும் பாடல் வரிகளும் அருமை. பாடலுக்கு முன் அந்த ஹம்மிங் அதை ஒற்றிய (salsa /belly நடனத்திற்குரிய இசை என்று நினைக்கிறேன்) இசையும் பல முறை கேட்க தூண்டும் வசீகரம். வரிகளில் எனக்கு பிடித்த சில..
நீயே சொல் உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா?
நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா அடங்குமா?
பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது
காதலில் சில இடங்களில் விதைகள் கிடையாது (இந்த வரி எனக்கு புரியவில்லை, இருப்பினும் ரொம்ப பிடித்திருந்த்து)
போர்வைக்குள் பூப்பூக்க வைக்க வா.. வா..
வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா.. வா.
மரியாதை தெரியாத முத்தம் தா. தா.
கட்டில் மேல் என்ன பண்பாடு காதலா? காதல் வேர் தொடு.. தொடு..
பேசாம படத்துக்கு ”மச்சி நீ கேளேன்” என்றே பெயர் வச்சிருக்கலாம் அந்தளவுக்கு செம காமெடியா இருந்த்து கருணாஸின் அந்த ஒரு வரிக் காமெடி. அதையும் அலுப்பு தட்டாமல் அளவோடு செய்திருந்தனர்.
“அவர் சொன்னதை அவர்கிட்டேயே.. ’நீ கேளேங்கிறியே’ வெக்கமாயில்ல”
“சார் உங்க பெருந்தன்மை எனக்கு புரியுது, இருந்தாலும் அதெப்படி சார் ஒரே ரூம்ல“
“டீக்கடை பையன் சக்கரை அளவை சோதிப்பது”
என டைமிங் காமெடிகள் தனி பிட்டாக இல்லாமல் கதையோட்ட்த்துடன் வலம் வருவது ரசிக்கும் படி இருந்த்து.
பொல்லாதவன் – படம் பார்ப்பவர்களுக்கு அல்ல
20 பின்னூட்டங்கள்:
விஜய் ரசிகர்களிடமிருந்து ஆட்டோ வரும்
இயல்பாக இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கான காரணம். தனுஷ் வில்லனிடம் "நான் உன்கூட போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்னை விட்டுடு" என்று கூறுவது அருமை
குத்து ரம்யா (நாங்க திவ்யான்னு கூப்பிட மாட்டோம் :-D) நடுத்தர குடும்பத்து பெண்ணாக சிறப்பாக நடித்து இருப்பார்..
தனுஷ் கிட்ட, நான் லவ் பண்ணுறேன்னு சொல்லாத வரைக்கும் என் பின்னாடியே சுத்திட்டு இருந்தே இப்ப கண்டுக்கவே மாட்டேங்குற என்று அவர் பைக் தொலைந்த கடுப்பில் இருக்கும் போது புலம்புவது இயல்பாக இருக்கும் :-)
இன்னொரு முறை பார்க்கலாம் ..
அருமையான திரைக்கதை.
இயக்குனர், பாலு மகேந்திராவின் சீடர் என்பதாலேயே
அந்த "நீயே சொல்" பாடல்.
//தனுசின் வழக்கமான நெருக்கம் மிஸ்ஸிங்//
பாத்திரத்திற்கு தோதாக நடித்திருந்தார் என்பதே என் கருத்து.
இந்தப் படத்தில் "வல்லவன்" நடித்திருந்தால்,
இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது..
//
கோவி.கண்ணன் said..
விஜய் ரசிகர்களிடமிருந்து ஆட்டோ வரும்
//
லாரியே வந்தாலும் பருவாயில்ல
//
கிரி said...
"நான் உன்கூட போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்னை விட்டுடு"
//
மிக யதார்த்தமான நச் வசனம் அது. பதிவு செய்ததற்கு நன்றி கிரி.
//
நசரேயன் said...
பழைய படத்திருக்கு புது விமர்சனம் நல்லாத்தான் இருக்கு
//
நன்றி நசரேயன் வருகைக்கும் கருத்துக்கும்
//
Karthick Krishna CS said...
இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்தை தவறவிட்டதற்கு இன்னும் வருந்துகிறேன்.
அருமையான திரைக்கதை.
//
நானும் திரையரங்கில் பார்க்கவில்லை ஆனால் வீட்டுத்திரையங்கத்தில் பார்த்தேன்..
//
சுபாஷினி said...
படம் வெளியானது இப்போதான் தெரியும உங்களுக்கு :) விமர்சனம் புதுசா இருக்கே...:)
//
வருகைக்கு நன்றி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல :)
//
City of God paarthu irukeengala?? Adhoda touches lighta irundaalum, Nambha Chennaikku etha maadhiri maathi irupaanga.. Bikea spare partsa pirichi, ovoru kadaiya vithu.. mannula pudaikardhu, drugs...
//
City of God. A wonderful/terrific movie, I was in shock for a week after seeing that movie. Lot of (Tree Structured)characterization. The way of telling (complex)story is very much impressive. That is my toppest ACTION movie ever, compared to GodFather.
//
Deepavalikku inda padam theeradhu nu naa ATM paaka ponen
//
irunthaalum unakku romba thairiyam thaan.. nameetha nenachu kittu poniyaa :)
//
முதன்முதலாக பைக் வாங்கிய நண்பன் ஆசையோடு அழைப்பதாக நினைத்துக் கொண்டு போகிற சந்தானம், அழைக்கப்பட்டது எதற்காக என்பது தெரிந்ததும் வெகுண்டு எழுவது வெடிச்சிரிப்பு.
//
இதே மாதிரி என் கல்லூரி நாட்களிலும் சில காமெடி நடந்தது
the intro music itself touch my heart...
hey actually she is a good actress also. acted well in THOONDIL.
Arumayana vimarsanam...Dhanushin nadippu than ithulla best...avanga neenga sonna pdalgal padangalai matttum thalluvavillai- "Minnalgal Koothadm " song is the line by line copy of "Smack That" by AKON...
/Meendum santhipom...
//
viswanarayan said...
கொஞசமும் கூச்சமே படாமல் எப்பவோ வந்து போன ஒரு படத்துக்கு விமர்சன்ம் இப்ப எழுதி பத்து ஓட்டும் வாங்கிட்டீங்க கில்லாடி ஐயா நீர்
//
ஓல்டு இஸ் கோல்டுங்க்ணா.. இதை ஒரு பாராட்டவே எடுத்துகிறேன் :)
//
Machchaan said...
ஆமாம் அதுதான் எனக்கும் ஆச்சரியமாக உள்ளது.
//
:)
Post a Comment