அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

சொல்லிவிடு வெள்ளி நிலவே 1/20/2009

அமைதிப்படை என்றாலே அமாவசையின் நக்கலும் , அந்த ”அல்வா” வும் தான் எல்லாருக்கு ஞாபகத்துக்கு வரும். என் நண்பன் இப்படத்தோட “மொத்தத்துல சந்தோசமாவும் இருந்துக்கனும்... ஜாக்கிரதையாவும் இருந்துக்கனும்”  என்ற வசனத்தை அடிக்கடி டைமிங்கோட சொல்லுவான்.

ஆனா எனக்கு “சொல்லிவிடு வெள்ளி நிலவே” பாடல் – இளையராஜாவின் இசையில் மனோவும், ஸ்வர்ணலதாவும் பாடிய அந்த மெல்லிசை பாடல் தான் முதலில் நினைவுக்கு வரும். ட்ரம்ஸ் உடன் கலந்து வரும் மெல்லிய குழலோசையோடு அமர்க்களமாக ஆரம்பிக்கும் பாடல் அது.

இந்த பாடல் திரைப்படத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். நான் இரண்டு மூன்று தடவை இந்த படத்தை திரையரங்கில் பார்த்துள்ளேன், இந்த பாடல் இடம் பெறவில்லை. சத்யராஜ் ரஞ்சிதாவை துரத்தும்போது தொடரும் ஆரம்ப இசையோடு அடுத்த காட்சிக்கு தாவிவிடும் படம். 

எனது நெருங்கிய தோழி, எதாவது ஒரு நல்ல மெல்லிசை பாடல் சொல்லுங்களேனு கேட்க, சிறிதும் யோசிக்காமல் நான் சொன்ன பாடல் இது தான். அந்தளவுக்கு எனக்கு பிடித்த பாடல் இது.

ஆண் தன் சோகமான நிலையை எடுத்து சொல்லி காதலை மறுப்பது போலவும் அதற்கு பெண் அவனுக்கு ஆறுதலாக பதிலளிப்பது போலவும் அருமையான மிக ஆழமான வரிகளைக் கொண்டது இப்பாடல்.

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே

உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே
கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போன பின்
நானே என்னை தேற்றினேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா? ஓ...ஓ.
கனவுகள் கலைந்திடுமா?

உன்னை ஒரு போதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன்.. ஓ..ஓ..ஓ..ஓ
குற்றம்புரியாது துன்பக்கடல் மீது ஏன் நான் வீழ்ந்தேன்.ஓ..ஓ..ஓ..ஓ

அந்த கதை முடிந்த கதை
எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல்
என்னுடைய பிறந்த கதை

காலங்கள் தான் போன பின்னும் 
காயங்கள் ஆறவில்லை..ஓ..
வேதனை தீரவில்லை

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா? ஓ...ஓ.
கனவுகள் கலைந்திடுமா?

உறவுகள் கசந்திடுமா? ஓ...ஓ.
கனவுகள் கலைந்திடுமா?

தொட்ட குறையாவும்
விட்ட குறையாகும்
வேண்டாம் காதல்..ஓ..ஓ..ஓ..ஓ

எந்தன் வழி வேறு
உந்தன் வழி வேறு
ஏனோ கூடல் ஓ..ஓ..ஓ.ஓ.

உன்னுடைய வரவை எண்ணி
உள்ளவரை காத்திருப்பேன்
என்னைவிட்டு விலகிச் சென்றால் மறுபடித் தீக்குளிப்பேன்
நான் விரும்பும் காதலனே
நீ இதை ஏற்றுக் கொண்டால் நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்ன்னும் தீபமே
கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் சாய்ந்து போகுமா?
நெஞ்சில் வைத்து ஏற்றினேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்ததம்மா

உறவுகள் கசந்திடுமா? ஓ...ஓ.
கனவுகள் கலைந்திடுமா?
நெஞ்சில் வைத்து ஏற்றிய தீபம் இது காற்றில் அணைந்து போகாது என காதலை வலியுறுத்தும் அந்த வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.

10 பின்னூட்டங்கள்:

ச்சின்னப் பையன் said...
இந்த பாட்டை கேட்டதேயில்லை...

சரி அந்த அல்வா மேட்டரும் மறந்து போச்சு.. இன்னொரு தடவை தேடி பாத்துக்கறேன்.... :-)))))

------------- ~~~~~ Thanks to ச்சின்னப் பையன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
ச்சின்னப் பையன் said...
இந்த பாட்டை கேட்டதேயில்லை...

சரி அந்த அல்வா மேட்டரும் மறந்து போச்சு.. இன்னொரு தடவை தேடி பாத்துக்கறேன்.... :-)))))
//

பாட்டு அவ்வளவு பிரபலமடையவில்லை சரி..

அல்வா மேட்டரு எப்டி மறக்கும்.. மறக்க கூடிய மேட்டரா அது... என்னமோ போங்க.. ஒன்னும் சொல்றதுக்கில்ல...

ம்ம்ம்ம் F5..F5 அழுத்துங்க :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
யாத்ரீகன் said...
மனதை வருடும் பாட்டு.. ஆமா.. படத்துல இந்த பாட்டு இல்லை..

அதே மாதிரி.. நாந்தான் மச்சானை பாத்து சிரிச்சேன்னு ஒரு டயலாக் வரும்.. அதுவும் இங்க ரூம்ல பேமஸ்.. :-)))

------------- ~~~~~ Thanks to யாத்ரீகன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

வாருங்கள் யாத்ரீகன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
kajan's said...
மனதைக்கவரக்கூடிய பாட்டு

------------- ~~~~~ Thanks to kajan's ! ~~~~~ -------------
viji said...
#எனது நெருங்கிய தோழி#

yaarunga avanga.. :D

#உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்ததம்மா#

vidunga..vidunga..evalavo pochu, ithu pona yenna.
yaarunga unga vazhkaiyile puyalai veesi cendra ponnu... :P:P *escape*

NICE SONG... IN MY HP MP3 collection now. :D

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
kajan's said...
மனதைக்கவரக்கூடிய பாட்டு
//
முதல் வருகைக்கு நன்றி கஜன்


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Karthik said...
nalla paathu.. enagayya ungalukku kidaikudhu?? amavasai election results sollum podhu panra adagalam irukke :)

Veetla net illa baasu.. adhunaala adhikadhi vandhu kummi adhikka mudila...

Post ellam preset panniyaachu!!! so naduvula naduvula nambha post varum!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
Karthik said...
nalla paathu.. enagayya ungalukku kidaikudhu?? amavasai election results sollum podhu panra adagalam irukke :)
//

mani-ya koopidura vitham.. mani-oda aala correct panrathu.. pinni pedal eduthiruppan ..


//
Post ellam preset panniyaachu!!! so naduvula naduvula nambha post varum!!
//

kummi thaane adichu vilayadiduvom


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Muthu Kannan said...
அப்படியே வரிக்கு வரி காப்பி அடித்திருக்கிறார்கள்: hari1103.blogspot.com/2011/11/blog-post_03.html. (இங்கு இதைப்பற்றிப் புகார் தெரிவித்திருக்கிறேன். goo.gl/MNiG4O.)

------------- ~~~~~ Thanks to Muthu Kannan ! ~~~~~ -------------