அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

டும்...டும்...டும்... 2/11/2009

அப்பா - ஒரு தற்பெருமை பிடிச்சவர். தற்பெருமைனா.. உங்க வீட்டு, எங்க வீட்டு தற்பெருமை இல்ல. உலக மகா தற்பெருமை. சில பெருசுக வாயைத் திறந்தா ”நாங்க எல்லாம் அந்த காலத்துல” என் ஆரம்பிச்சு வூடு கட்டி அடிக்கும், அதே போல, மாட்டுற எல்லார் கிட்டேயும் “கிரேக்க மொழியை பற்றியும் கிரேக்க கலாச்சாரத்தை பற்றியும்” கிறுகிறுக்க வைக்கிற அளவுக்கு அடிக்கடி சொல்லி கிச்சு கிச்சு மூட்டுகிறார். தனது வாரிசுகளுக்கு கிரேக்க குடும்பத்தில் தான் சம்பந்தம் பண்ணுவேன் என்று ரெண்டு காலில் நிற்பவர்.

குடும்பம் - பாரம்பரியமிக்க கிரேக்க குடும்பம். கதாநாயகிக்கு ஒரு அம்மா ( ரொம்ப அதிசயம் பாரு), ஒரு தங்கை, ஒரு தம்பி. 1986ல் விஜயகாந்த் நடிக்க இளையராஜா இசையில் வெளிவந்த தழுவாத கைகள் படத்தில் “குடும்பத்தை உருவாக்க சொன்னா, ஒரு கிராமத்தை உருவாக்கி தந்தார் எங்கப்பா” என்ற பாடலை தங்களுக்காக பாடியதை போல ஒரு கிராமத்தை உருவாக்கி வைத்திருக்கும் உறவின கூட்டம். 

கதாநாயகி - முப்பதை தாண்டிய, நல்ல சதைப்பற்றுள்ள, பார்வைக்கு கண்ணாடி துணை தேடும், ”Mid-life Crisis"ல் அடி எடுத்து வைக்கவுள்ள ஒரு பேரிளம்பெண். 

கதாநாயகன் - ஆசிரியர் வேலைபாக்கும் அமெரிக்கர். சொந்தமாக ஒரே அப்பா, அம்மா. டைனிங் டேபிலில் இருக்கும் சாப்பாட்டை கூட “எச்சூஸ் மீ” சொல்லி, பரிமாறும் Privacy குடும்பம். 

காதல் - கதாநாயகிக்கு பையன் மேல் முதல் பார்வையில் காதல்,  இப்போ இருக்கிற மாதிரியே இருந்தா பாட்டி ஆனாலும் ”கல்யாணம்” என்ற வார்த்தையை கூட கேக்க முடியாது என்பதை உணர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்குகிறார்.  தோற்ற மாற்றத்திற்கு பிறகு இவளை பார்க்கும் பையனும் ஒரே பார்வையில் விழுந்துடுறான். காதல் விசயத்தில் ரொம்ப சிரத்தை எடுத்துக்கல இயக்குநர், காமெடியில் கலக்கி எடுத்துள்ளனர்.
கதை - மேலே சொன்ன விசயங்களை வச்சு யூகிச்சு இருப்பீங்க.. அந்த பையனும் பொண்ணுக்கும் எப்படி கல்யாணம் நடக்குதுங்கிறது தான் கதை. குடும்ப சூழல் தெரிஞ்சு எங்காவது ஓடிபோலாம என நாயகி கேக்க, அப்படி எதுவும் பண்ண வேணாம் உங்க குடும்ப முழு சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்க்லாம் என அறிவுறுத்தி, அவர்களின் விருப்பபடியே மதம் மாறி, வீட்டோட மாப்பிள்ளையாகிறார் அந்த பையன்.

கதைகளம் - "Wind City" சிகாகோ.

அழிச்சாட்டியம்/அட்டூழியம்/கலாய்ச்சல்
பொண்ணோட தம்பி, நாயகனுக்கு கிரேக்க மொழியில் கெட்ட வார்த்தையை சொல்லி கொடுத்து மாட்டிவிடுதல், வீம்பு பிடிக்கும் அப்பாவை அவர் வழியிலேயே போய் மடக்குதல்,  ஆம்பள குடும்பத்துக்கு”தலை”யா இருக்கலாம், ஆனா நம்ம தான் கழுத்து, நம்ம இல்லாம அவுகனால் ஒன்னும் ”ஆட்ட” முடியாது என குடும்பதலைவி விடும் ரவுசு, பெண்பார்க்க வரும் மாப்பிள்ளை கூட்டம், பல நாள்பட்ட சோஃபாவின் பாலித்தீன் கவரை கூட பிரிக்காமலிருப்பது, சீக்கு வந்த கோழி ரெக்கைய விரிக்கிற மாதிரி கையை பக்கவாட்டில் நீட்டி, ஆட்டி நடனமாடும் ஒரு கூட்டம். ரெண்டு பேர விருந்துக்கு வரச்சொல்லிட்டு ஒரு ஊரே வூடு கட்டி வெட்டுதல் என அதகளம் பண்ணியிருக்கார்கள் படமுழுதும்.

மாமியாருக்கும் மருமகனும் இடையே ஒரு உரையாடல்:
உங்களுக்கு பசிக்குதா?
இல்ல..
சரி உங்களுக்கு சாப்பிட எதாவது யார் பண்றேன்.

நம்மூரில் திருஷ்டி கழிச்சுட்டு, திருஷ்டி மேல தான் துப்புவார்கள், ஆனா இங்க மனுசன் மேலே துப்புறாங்க.

இந்த நகைச்சுவை படத்திலும் ஒரு செம ஷார்ப் வசனம் “Don't Let your past dictate who you are. But let it be part of who you will become

பி.கு: இந்த படத்தை பரிந்துரைத்த GILS'க்கு எனது நன்றிகள் பல.

20 பின்னூட்டங்கள்:

viji said...
### வீட்டோட மாப்பிள்ளையாகிறார் அந்த பையன். ##

koduthu vacca ponnu.

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
viji said...
##Don't Let your past dictate who you are. But let it be part of who you will become” ###

athe thaa nanum solren.. copy cating la the movie. i wan sue. :P

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
viji said...
### கிரேக்க மொழியில் கெட்ட வார்த்தையை சொல்லி கொடுத்து மாட்டிவிடுதல் ###

:D

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
koduthu vacca ponnu.
//
:)))))))

//
athe thaa nanum solren.. copy cating la the movie. i wan sue. :P
//
apdi patha you cant even publish single post lah :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...
This comment has been removed by the author.

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
வண்ணத்துபூச்சியார் said...
பகிர்விற்கு நன்றி.

பார்க்கவேண்டும்

பல வகையான உலக சினிமாக்கள்
தங்கள் பார்வைக்காகவும் விமர்சனங்களுக்காகவும் என் வலையில் காத்திருக்கிறது.

வாழ்த்துக்கள்.

------------- ~~~~~ Thanks to வண்ணத்துபூச்சியார் ! ~~~~~ -------------
G3 said...
// ஆம்பள குடும்பத்துக்கு”தலை”யா இருக்கலாம், ஆனா நம்ம தான் கழுத்து, நம்ம இல்லாம அவுகனால் ஒன்னும் ”ஆட்ட” முடியாது என குடும்பதலைவி விடும் ரவுசு,//

ROTFL :))))))))))))) sema ravusaa thaan irukku :D

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
?? Comment moderation thookiteengala?? !!!!!

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
வண்ணத்துபூச்சியார் said...
பல வகையான உலக சினிமாக்கள்
தங்கள் பார்வைக்காகவும் விமர்சனங்களுக்காகவும் என் வலையில் காத்திருக்கிறது.
//

இதோ வர்றேன் :))))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
G3 said...
?? Comment moderation thookiteengala?? !!!!!
//
ஆமாம்.. ஆமாம்.. :)

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Karthik said...
Enakku torrents kidaikala... aana paapanum nu unga review thoondi vithadu.. Also gils anna vera reference.... :)

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
//குடும்பம் - பாரம்பரியமிக்க கிரேக்க குடும்பம். கதாநாயகிக்கு ஒரு அம்மா ( ரொம்ப அதிசயம் பாரு), ஒரு தங்கை, ஒரு தம்பி//

Thala TR engayya?? Aasa patha thangachi... ava thaan da en katchi... arivaana thambi... kudipaan da embi

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
//குடும்ப சூழல் தெரிஞ்சு எங்காவது ஓடிபோலாம என நாயகி கேக்க, அப்படி எதுவும் பண்ண வேணாம் உங்க குடும்ப முழு சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்க்லாம் என அறிவுறுத்தி, அவர்களின் விருப்பபடியே மதம் மாறி, வீட்டோட மாப்பிள்ளையாகிறார் அந்த பையன்.//

idhu enna ultava irukku?? eppavume paiyan thaan odi polaama keapan???

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
ச்சின்னப் பையன் said...
நான் பாதி படங்கள் பார்த்த லிஸ்ட்லே இதுவும் ஒண்ணு... :-))

------------- ~~~~~ Thanks to ச்சின்னப் பையன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
ச்சின்னப் பையன் said...
நான் பாதி படங்கள் பார்த்த லிஸ்ட்லே இதுவும் ஒண்ணு... :-))
//

படம் பிடிக்கலையா உங்களுக்கு? இல்ல அந்த பொண்ண பிடிக்க்லையா? :)))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
librarian said...
SOMETIMES HAPPY ENDINGS OCCUR--AT LEAST ON THE MOVIE SCREE AND IN FANTASY

------------- ~~~~~ Thanks to librarian ! ~~~~~ -------------
viji said...
@ karthik

Karthik said...
//குடும்ப சூழல் தெரிஞ்சு எங்காவது ஓடிபோலாம என நாயகி கேக்க, அப்படி எதுவும் பண்ண வேணாம் உங்க குடும்ப முழு சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்க்லாம் என அறிவுறுத்தி, அவர்களின் விருப்பபடியே மதம் மாறி, வீட்டோட மாப்பிள்ளையாகிறார் அந்த பையன்.//

idhu enna ultava irukku?? eppavume paiyan thaan odi polaama keapan???
####

Kaalam kethu pochu ponge.. yenge sellum intha paathei...

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
librarian said...
To Viji
what does "happy-Kan mean???

------------- ~~~~~ Thanks to librarian ! ~~~~~ -------------
viji said...
To librarian: happykan means make happy.

erk y shud u ask the meaning here.. the word was in my post u knw. =(

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Karthik
//

Thala TR engayya?? Aasa patha thangachi... ava thaan da en katchi... arivaana thambi... kudipaan da embi
//
T.R oru Terror theriyum thaane.. :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------