
Now watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|

அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
மீட்டிங்கிலிருந்து தப்பிக்க முத்தான பத்து வழிகள் | 2/24/2009 |
ரிசஷன் வந்தாலும் வந்துச்சு, ஆளாலுக்கு மீட்டிங் போட்டு தாக்குறாக. ரெண்டு மூனு மெயில் அனுப்பி பேசி முடிக்க வேண்டிய சின்ன வேலையா இருந்தாலும் ஒரு அரை மணி நேரம் மீட்டிங் அரேஞ்ச் பண்ணி, தலைக்கு மேலே தொங்கும் கத்தியிலிருந்து தப்பி ஒப்பேத்திக்கிறோம்.
இதுக்கிடையில இந்த மீட்டிங் என்னை கூப்பிடல உன்ன கூப்பிடல என உப்புப் பெறாத பாலிட்டிக்ஸ் வேறு. மொத்த எட்டுமணி நேர வேலையில் அஞ்சாறு மணி நேரம் மீட்டிங்கிலேயே கழிக்கும் என்னை போன்ற அப்பாவிகள் படும் துன்பம் சொல்லி மாளாது. இந்த மொக்கையிலிருந்து தப்பிப்பது எப்படி என்று யோசிக்கையில் (அப்பப்போ இதெல்லாம் செய்வேன்) தோன்றியது தான் இந்த பதிவு. ஒகே ஸ்டார்ட் மூசிக்.
1. தூக்கம் வந்தால், கண்ணை மட்டும் திறந்து வைத்து கொண்டு தூங்க முயற்சி செய்யலாம், இல்லையேல், கண்ணை மூடி, கீழே குனிந்து, நோட்பேடில் சீரியஸாக எதாவது கிறுக்கலாம், நெற்றியில் கைவைத்து கண்ணை மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைப்பது உசிதம்.
2. தூக்கமும் வரல, மொக்கையும் தாள முடியலேன்னா, கூச்சமே படாம “Excuse Me” என மெதுவா கூவி வெளிநடப்பு செய்துட்டு, மீட்டிங் முடியுறதுக்கு ஒரு அஞ்சு பத்து நிமிசதுக்கு முன்னாடி லேசா வயித்த தடவிய படியே இருக்கையில் அமர்ந்து கொள்ளாலாம், இதற்கு வசனம் தேவையில்லை,
3. அப்பப்போ அவ்வை ஷண்முகியை பார்த்துட்டு மேலே வானத்த பார்க்கும் டெல்லி கணேஷ் மாதிரி, மேலே ஒரு தடவை பார்த்துட்டு, எல்லார் முகத்தையும் ( கொஞ்ச சிரிச்ச முகத்தோட) பார்த்து ஆக்டிவ் அட்டெண்டன்ஸ் போடலாம். ஆர்வக்கோளாரினால் ரொம்ப அளவுக்கதிமா சிரிச்சு, ஏற்கனவே தூக்கத்துலிருக்கும் சில் ஆன்மாவை எழுப்பி, சாபத்துக்குள்ளாகாதீர்.
4. வெறுமனே பார்த்து சிரித்து கொண்டிருந்தால் போதாது, அப்பப்போ தெளிவா பேசணும், கேள்வி கேக்கணும். ரொம்ப கஷ்டபடாமல் சுருக்கமாக I agree என்று ஆரம்பித்து, ஒருவர் பேசிய அதே வாக்கியத்தை திரும்ப பேசலாம், இதை அவருக்கும் உங்களுக்கும் ஒரு சுமூக உறவு ஏற்படுத்து ஒரு வெள்ளை கொடியாக பயன்படுத்தலாம். பரீட்சையில் கேள்வியையே பதிலாக பக்கமா பக்கமா எழுதுற மாதிரி ரொம்ப சுலமான விசயம் தான், ஒரு தடவை பழகிட்டா பின்ன விடவே மனசு வராது.
5. மீட்டிங்கில் இருப்பவர் எதிர்கட்சியை சார்ந்தவர் எனில், I disagree with you என்று ஆரம்பித்து உங்களுக்கு தோன்றுவதை (மொக்கை போட சொல்லியா தரணும்) பேசலாம், இடையிடையே Performance, Architecture Compliance, Security, Process, Quality, Integration, Modularity, Plan, Objective, Accountability என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்துக் கொண்டால், நீங்கள் டெக்னிக்கலில் பெரிய "கை" என்ற விளம்பரம் ஃபிரியா கிடைக்க வாய்ப்பு உண்டு, பிசினஸ் மக்கள் இருக்கும் போது இவ்வார்த்தைகளை பயன்படுத்தினால், மக்கள் வாயில் ஈ ஆடாமல் கேட்பதற்கான சாத்தியக்கூறு அதிகம், சமீபத்தில் பிரச்னையாக இருக்கும் சில வார்த்தைகளை ஆங்காங்கே சேர்த்துக்கொள்ளுவது புத்திசாலித்தனம்.
6. சில சமயம் மீட்டிங்கில் எல்லாரும் சீரியஸாக எதாவது எழுதுவார்கள் ( அல்லது முயற்சிப்பார்கள்), உங்களுக்கு எழுத எதுமே கிடைக்க்வில்லை ( கவனிச்சிருந்தா தானே கிடைக்கும்) எனில் சமீபத்தில் கேட்டு முனுமுனுக்கும் எதாவது ஒரு பாட்டின் வரியை ஆங்கிலத்தில் எழுதலாம். அதையே வலைப்பதிவில் ஏற்றி ஒரு பதிவின் எண்ணிக்கையில் ஒன்றை கூட்டலாம் - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
7. சில சமயங்களில் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு மேலே சில மொக்கசாமிங்க மொக்க போட்டு தாக்கிகிட்டு இருப்பார்கள், அவர்களிடம் இருந்து தப்பிக்க மொபைல் போனில் மீட்டிங் முடியும் நேரத்திற்கு ( 5-7 கழித்து) அலாரம் செட் பண்ணி வைத்து கொள்ளலாம், அலாரம் அடித்தவுடன் உடனே எடுத்து மிகவும் சீரியஸாக.. “Yeah, I am in meeting now, Its kind of getting delay, I will be able to finish that data issue after coming out of meeting, sorry for the inconvenience caused” னு பரபரப்பா பேசி, எல்லாரையும் ஒரு தடவை கொஞ்சம் வெறிச்சு பார்த்துட்டு.. “I think, We are good now, Shall we wind it up now?” ஒரு கேள்வியையும் அப்பாவியா கேட்டுட்டா கைமேல் பலன் கிடைக்கும். மீட்டிங்க்கு தகுந்த மாதிரி கொஞ்சம் வார்த்தைகளை முன்ன பின்ன போட்டு சமாளிக்க உங்களுக்கு சொல்லியா தரணும்.
8. வெள்ளம் வருவதற்கு முன்னே அணை போடனுங்கிற மாதிரி, இந்த மாதிரி மீட்டிங்கை எல்லாம் முளையிலே கிள்ளி எறிய ஒரு வசதியுள்ளது. உங்க MS Outlook calendarல் Lunch, T Time, Timesheet Submission/Approval, Status document preparation இது போன்ற வழக்கமான வேலைகளுக்கு தனி நேரம் ஒதுக்கி வைத்து கொள்ளலாம். இது நம்ம ரொம்ப ”பிஸ்ஸ்ஸீ”னு ஃபிலிம் காட்ட உதவும், அதையும் மீறி மீட்டிங் அரேஞ்ச் பண்ணிட்டா, பல வேளைகளுக்கிடையே இந்த மீட்டிங் அட்ட்ண்ட் பண்றேன் சொல்லி, இருக்கிற கொஞ்ச நெஞ்ச இமேஜை உயர்த்தி கொள்ள்லாம், ஆர்வக்கோளாறில் bloggingக்கு தனியே நேரம் ஒதுக்கி, உங்களை வச்சு நீங்களே காமெடி பண்ணினால் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல.

9. சில சமயங்களின் நாம் பேசுவது சிலருக்கு புரியாது, நமக்கே பல சமயம் புரியாதுங்கிறது வேறு விசயம். அந்த மாதிரி சமயங்களில், பக்கத்துல இருக்குற போர்டில் உஙகளுக்கு தெரிஞ்ச எல்லா ஷேப்பையும் ( வட்டம், சதுரம், செவ்வகம், நீள்சதுரம், நீள்வட்டம், முக்கோணம்) வரைந்து அதுக்குள்ள சில ஆங்கில வார்த்தையை எழுதி, உங்களுக்கு தெரிந்த Conjuctions words எல்லாம் பயன்படுத்தி மிச்சத்தை ஒப்பேத்தலாம். பேசி முடிச்ச பிறகு, ”This is very very simple diagram to understand, Its not like rocket science or something and it clearly depicts the high-level overview of our project, Please let me know, if you need any clarification on this” என ஒரு பிட்டை போட்டு, நக்கலா லேசா முன்முறுவல் செய்தால், யாருக்கு தான் தன்னை கேனையன் ஒத்துக்க மனசு வரும் சொல்லுங்க, எவனாவது கேள்வி கேப்பான்?
10. அப்படியும் ராகு காலத்துல பிறந்த சில பிசாசுங்க எதாவது புத்திசாலிதனமா கேள்வி கேட்டுச்சுன்னா ஒன்னும் பயப்பட்த்தேவையில்லை. கேள்வி கேட்ட ஆள், உங்களுக்கு வேண்டிய ஆள் எனில், “Hey, It is brilliant question, I am glad you brought this here in this right forum” ஆரம்பிச்சாலே அந்த ஆள் உச்சி குளிர்ந்து பேச்சு மூச்சு இல்லாம உக்காந்துடுவான், அப்புறமென்ன வழக்கமான மொக்கைய ஆரம்பிச்சுட வேண்டியது தான். கேள்வி கேட்ட ஆள் நமக்கு வேண்டாத ஆள் எனில் , நக்கலா ஒரு தடவ சிரிச்சுட்டு, “It is very very basic question, I would say this as dumb question.. hey.. I m just kidding.. good question though” என சுழி போட்டு ஆரம்பிச்சு கேட்ட ஆளின் காதில் புகை வர்ற வரைக்கும் ஒரு காய்ச்சு காய்ச்சினா, அடுத்து கேள்வி அந்த ஏரியாவுல இருந்தே வராது.
11. மீட்டிங் அரேஞ்ச் பண்றவங்ககிட்ட TeleConference நம்பர் அடம்பிடிச்சு வாங்கி, டயல் பண்ணி அட்டெண்டஸ் போட்டுட்டு, ”மியூட்”ல போட்டுட்டு உங்க வேலைய (எதாவது இருந்தா) பாக்க வேண்டியதுதான். ஆனா இதுல அப்பப்போ ஆக்டிவ் அட்டெண்டஸ் போடுறது ரொம்ப ரொம்ப முக்கியம், நீங்க அமைதியா இருந்தா தூங்கிட்டதா நெனச்சுக்குவாங்க – பாம்பின் கால் பாம்பறியும் தானே, ஸோ கேர்ஃபுல்.
12. இது தான் ரொம்ப முக்கியமான கட்டம்.. நம்ம தான் கேடினா, நமக்கு மேல ரெண்டு மூனு கேடிங்க இருப்பானுவ. அவிங்க எல்லாம் எப்படி சமாளிக்கிறாய்ங்கனு பாத்து பழகலாம், ஜஸ்ட் கட் காபி பேஸ்ட் பண்ற மாதிரி தான், மீன் குஞ்சுக்கு நீச்சல் கத்து தரணுமா என்ன? ஆனா, நீங்க காப்பி அடிக்கிற/பழகிற விசயம் அவிங்களுக்கு தெரியாம பாத்துக்கனும், அதனால அவுக இல்லாத மீட்டிங்கா பாத்து உங்க “தனி”திறமைய தைரியமாக காண்பிங்க.
”ப்பூ இதென்ன பெரிய வித்தை.. நாங்கெல்லாம்....” என ஆரம்பிக்கிறவங்க உங்க வித்தையெல்லாம் இங்கே கொட்டிவிட்டுட்டு போங்க, என்னை மாதிரி சில அப்பாவிகளுக்கு பயனுள்ளதா இருக்கும்.
என்னாடா இது 10 வழின்னு சொல்லிடு அதிகமா இருக்குன்னு கிளர்ச்சியடைய வேண்டாம், மண்டைய போட்டு குடையவேண்டாம், போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம். வழக்கம்போல கூட ரெண்டு ரன்னு எக்ஸ்ட்”ராவா” அடிச்சுட்டேன் ஆர்வகோளாறு மிகுதியில், அவ்ளோ தான் மேட்டர். அப்போ நான் வர்ட்டா.
பி.கு 1: எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு
பி.கு 2: நான் எழுதினதுலேயே ரொம்ப்ப்ப்ப ந்நநீநீளமான பதிவு இது தான்.
எதிரெதிர் துருவங்கள் | 2/22/2009 |

தெரியுமா சேதி?.. | 2/16/2009 |

நான் சந்திக்க விரும்பும் நபர் | 2/15/2009 |
பில்கேட்ஸின் தொழில் வித்தைகளையும், வெற்றியையும் விலாவரியாக விவரிக்கும் நம்மில் பெரும்பாலோனோர், தனது பக்கத்து தெருவிலோ, ஊரிலோ அதே போன்றொரு சாதனையை நிகழ்த்தி வருபர்களை கண்டு கொள்வதே இல்லை என்பது கசப்பான உண்மை மேலும் “குண்டூசி விக்கிரவெனல்லாம் தொழிலதிபராம்” என்று கவுண்டமணி ஸ்டைலில் கிண்டல் வேறு.
கரகாட்டகாரன் படத்தில் தவக்களை ”பழைய ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம்” என்று கூவிக்கொண்டே அந்த தகர டப்பா வண்டியை சுற்றி வரும் நகைச்சுவை காட்சியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. கிராமத்திலிப்பவர்கள் இதுபோன்ற ஒரு வியாபாரியை வாரத்தில் ஒரு நாளாவது சந்திப்பர். எனக்கு இன்னைக்கு வரையிலும் அந்த பழைய பொருட்களை என்ன செய்வார்கள்? என்று தெரியாது, வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக கேட்கவேண்டும்.
அதே போல மதுரை அலங்காநல்லூரை ஒட்டியுள்ள பாலமேடு பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இன மக்கள் இதே தொழிலை செய்து வந்தனர். பாலமேடு அலங்காநல்லூரை ஒட்டியிருந்தாலும், முல்லை பெரியாறு கால்வாய்க்கு வடக்கே (மேலே) இருப்பதால், பெரியாறு கால்வாயால் எந்த பயனும் இல்லை. சாத்தையாறு அணை அருகில் இருந்தாலும் அதனாலும் அப்பகுதி மக்களுக்கு பெரும் அளவில் பயனில்லை. மழை மற்றும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யகூடிய வானம் பார்த்த பூமி.
இப்படி பட்ட சூழலில் இந்த இன மக்கள் 90ன் ஆரம்பத்தில் ”பேரீச்சம்பழம் விற்பது போன்ற தொழிலை விட்டு” சிறிய அளவில் பால்பண்ணை தொழிலை ஆரம்பித்தனர். முதலில் ஒரு சிறு அளவில் தொடங்கப்பட்ட இந்த பால்பண்ணை கூட்டுறவாக விரிவடைந்து பாலமேடு அல்லாது அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுபுறங்களுக்கும் பால் விநியோகம் செய்யபட்டது. அதனின் அடுத்த கட்டமாக கூட்டுறவு பால்பண்ணை பக்கத்து ஊர்களுக்கும் விரிவடைந்தது. 2000ம் வாக்கில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி, ஒரு திரையரங்கு மற்றும் மதுரை மாநகரின் பால் தேவையையே (50% மேலிருக்கும் என்பது என் யூகம்) நிறைவு செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அரசரடி, குரு தியேட்டர் வழியாக பயணம் செய்பவர்கள் “பத்திரகாளியம்மன் பால்பண்ணை” என்று பெயரிடப்பட்ட வாகனத்தை கண்டிப்பாக பார்த்திருக்க முடியும். இது ஒரு அசுர வளர்ச்சியே.
இந்த தொழில் உத்தியை பற்றியோ, வெற்றியை பற்றியோ இதுவரை கட்டுரை எதுவும் பத்திரிக்கைகளில் வெளிவந்ததாக எனக்கு நினைவில்லை.
தூரத்தில் இருக்கும் நிலவை பார்த்து ஏங்கும்/வர்ணிக்கும் நாம் பக்கத்திலிருக்கும் அகல் விளக்கின் அருமையை உணராமல் இருப்பது வருந்ததக்க விச்யமே. அன்னை தெரசாவை பற்றி பக்கம் கட்டுரை எழுத தெரியும் ஆனா தன் சொந்த தாயாரின் விருப்பு/வெறுப்புகளை பற்றி அற்வே தெரியாது. இதே போன்று பல உதாரணங்களை சொல்லலாம்.
ஜனவரி மாதம் முதல் வாரம் எனது பிறந்த நாளை முன்னிட்டு “Slumdog Millionaire" படம் பார்த்துவிட்டு, என்னுடைய சக ஊழியரின் வீட்டுக்கு போய் விடுமுறையை களித்தேன். அங்கே ”தென்றல்” என்றொரு இதழ் சாப்பாடு மேஜையின் மேல் இருந்தது, வழக்கம் போல சாப்பாடை மேய்வதை விட்டு புத்தகத்தை மேய, அதில் பத்ரி சேஷாத்ரி அவர்களின் பேட்டி இருந்தது எனது ஆர்வத்தை இன்னும் அதிகபடுத்தியது, சக பதிவராச்சே. இருந்தாலும் சூழ்நிலை கருதி என்னால் நுனிப்புல் மட்டுமே மேய முடிந்தது.
நான் விரும்பி படிக்கும் வலைதளங்கள் பல இருந்தாலும் எனக்கு மிகவும் கவர்ந்த வலைப்பதிவு தலைப்புகள்/பெயர்கள் மூன்றே மூன்று.
1. எண்ணங்கள் ( பத்ரி சேஷாத்ரி )
2. தனிமையின் இசை (அய்யனார்)
3. பிச்சைபாத்திரம் (சுரேஷ்கண்ணன்)

எண்ணங்கள் என்ற தலைப்பில் தனது எண்ணங்களை விவரிக்கும் பத்ரியை, எனக்கு ஒரு சக பதிவராகத்தான் தெரியும் இந்த தென்றல் இதழின் பேட்டியை படிப்பதற்கு முன்.
அமெரிக்காவில் மேல்படிப்பு முடித்துவிட்டு தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ்நாட்டில் கிழக்குபதிப்பகத்தை தொடங்கி அதை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதற்கு முன் cricinfo.com என்ற தளத்தையும் திறம்பட நிர்வகித்திருக்கிறார்.
எதோ ஒரு படத்தில் விவேக் இரட்டை வேடத்தில் வருவார், அதில் தமிழை வளர்க்க எளிமையான வழியை மிக அழகாகவும் நகைச்சுவையாகவும் சொல்லியிருபபார், “தமிழை வளக்க ரொம்ப எல்லாம் கஷ்டபட வேண்டாம்டா, ஏட்டுல இருக்கிற தமிழை கம்ப்யூட்டர்ல ஏத்துடா, அதுக்கப்புறம் அதுவா வளந்துடும்” என்று பொருள்படும்படி ஒரு நகைச்சுவை காட்சி. நகைச்சுவைக்காக சொல்லப்பட்டாலும், ஆழமான கருத்து அது.
அதே கருத்தை செயலில் காட்டி இன்று பெரும்பாலான (ஆதாரம்: இட்லிவடை) பதிவர்கள் தமிழில் பதிவிட (இந்த பதிவு உட்பட) NHM Writer மென்பொருளை உருவாக்கி ராமருக்கு அணில் உதவியது போல தமிழ் வளர்ச்சிக்கு தன்னால் இயன்றதொரு காரியத்தை செவ்வனே செய்திருக்கிறார். ஏட்டில்/மனதில் மட்டுமே இருந்த தமிழ் இன்று இணையத்தில் கொடிகட்டி பறக்கிறது. இதற்கு இவர் மட்டுமே ஒரு காரணம் என்று சொல்லவில்லை இவ்ரும் ஒரு முக்கிய காரணம்.
பேட்டி முழுவதும் வியாபித்திருந்த, தமிழின் மீதும் தமிழ் படைப்புகளின் மீதும் இவர் கொண்டிருக்கும் தொலைநோக்கு பார்வையுடைய கருத்துகளை கண்டு மெய்சிலிர்த்து போனேன். நசிந்து போய் கிடந்த பதிப்பகத்துறையில் கால்பதித்து வெற்றி பெற்றதோடு, தமிழில் பல்துறைகளிலும் பல படைப்புகள் உருவாக முனைப்புடன் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல தமிழ் ஆர்வலர். நிறைய இளம் எழுத்தாளர்களை உருவாக்கி கொண்டிருக்கிறார். உருவாக்க காத்துக் கொண்டும் இருக்கிறார். சமீபத்தில் நடந்த புத்தகக்கண்காட்சியின் வெற்றியில் இவரின் பங்கும் முக்கியமானது என்றால் அது மிகையல்ல.
பெயருக்கு முன்னே ஒரு பட்டம் இல்லாமல், தமிழ் என் மூச்சு, என் பேச்சு என வெற்று கூச்சல் எதுவுமில்லாமல், தாய் மொழியான தமிழ்வளர்ச்சிக்கு மட்டுமன்றி அனைத்து மாநில மொழி வளர்ச்சிக்கும் தன்னால் முடிந்த சில நல்லகாரியங்களை செய்து கொண்டிருக்கிறார்.
நம்ம சக பதிவர் கோவி.கண்ண்ன் தமிழ்நாடு முழுவதும் சூறாவளியா சுழன்று பல பதிவர்களை சந்தித்துவருவது போல், நான் இந்தியா செல்லும் போது சந்திக்கவிரும்பும் நபர் திரு.பத்ரி சேஷாத்ரி.
எங்கிருந்தாலும் வாழ்க! வாழ்க!! | 2/12/2009 |
|

டும்...டும்...டும்... | 2/11/2009 |


ஜெனீஃபர்...மாயா...நயன்தாரா... | 2/09/2009 |

அயல்நாட்டு மருமகள் | 2/08/2009 |

இஸ்ரேலில் உள்ள மோனா மற்றும் சிரியாவில் பிரபல தொலைகாட்சி நகைச்சுவை நடிகர் டால்லல் திருமணத்தில் இரு நாடுகள் செய்யும் குளறுபடிகளை மிக உணர்வுபூர்வமாக விளக்குகிறது The Syrian Bride. கதையின் போக்கையின் யூகிக்க முடிந்தாலும், கடைசி அரைமணி நேரத்திற்கு நம்மையும் கல்யாண கூட்டத்தோடு சேர்ந்து கவலைப்பட வைத்துவிடுகிறார்கள்.
மணப்பெண் அலங்கரிப்பில் தொடங்குகிறது அமைதியாக கதை, மணப்பெண் மணமகனை நேரில் பார்த்தது இல்லை, கல்யாணத்திற்கே மணப்பெண் மட்டும் தனியாக செல்லவேண்டும், உறவினர்/குடும்பத்தினர் யாரும் வர முடியாது. எப்படி இருக்கும் ஒரு பெண்ணுக்கு? உணர்வுகளை கச்சிதமாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருந்தார் மோனாவாக நடித்த Clara. "Do not upset bride on her wedding" என்றொரு மிகப்பிரபலமான அடைமொழி வாக்கியம் உண்டு, ஆனால் இந்த பெண்ணுக்கோ மணநாளே ஒரு போராட்டமாக அமைந்துவிடுகிறது.
இந்த படத்தில் முக்கியமாக எனக்கு பிடித்தது கதாபாத்திரங்களை கையாண்ட விதம். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவமிருந்தது. கல்யாணத்தை படம் பிடிக்கவரும் வீடியோகிராபர் மற்றும் குடியேற்ற துறையில் பணியாற்றும் பெண் உள்பட அனைவரையும் கதையின் ஓட்டத்தினுடே பயணம் செய்த வைத்தவிதம் மிக அருமை.
அடுத்தபடியாக கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள், மோனாவின் தந்தை சிரியாவிற்கு ஆதரவான அரசியல் கொள்கை உடையவர். அவரது மகனே ரஷ்ய பெண்ணை மணந்தவர். குடும்பத்தின் மொத்த பொறுப்பையும் தலையில் தூக்கி சுமக்கும் அக்கா கதாபாத்திரம்.

அரசு அதிகாரிகளின் குளறுபடிகளால் தங்கையின் திருமணம் நின்றுவிடுமே என கலவரப்படும் சகோதரி பாசத்தை, அரசியல் காரணங்களுக்காக தங்கையின் திருமண வைபவத்தில் தந்தையின் பங்கேற்பை தடைசெய்யாமலிருக்க செய்யும் போராட்டத்தை, கண்முன் இருக்கும் கணவனிடம் பேச எதுவுமில்லாமல் கண்காணா இடத்திலிருக்கும் சகோதரனை தொடர்பு கொள்ளும் பாசத்தை, தந்தை-மகனுக்கிடையே உள்ள மனக்கசப்பை கையாள்தல், கணவனின் கையாளாகத தனத்தினால் தனது படிப்பை தொடரமுடியாம வருந்தி நிற்கும் ஒரு அபலை பெண்ணின் நிலையை என பன்முக நடிப்பை பக்காவாக செய்திருந்தார் அக்காவாக நடித்த Hiam Abbass.
இந்த படத்தை பார்க்கும் போது, இதே போல கத்தியின்றி ரத்தமின்றி போரின் கொடூரத்தை நகைச்சுவையோடு பறைசாற்றும் The Life is Beautiful படம் ஞாபகத்தில் வந்து போனது. நம்ம இளைய தளபதி, இந்த படத்தை தமிழ் நாட்டு மக்களும் பார்த்து ரசிப்பதற்கு வாயிலாக இந்த படததின் முதல் பாதியை வரிக்கு வரி இடம்பெயர்த்து ”யூத்” என்ற படத்தை எடுத்தனர்.
இன்னொரு முக்கிய அம்சம் குரவை சத்தம். சந்தோசத்தை வெளிப்படுத்த மக்கள் குரவை இடுகின்றனர். இது நமது தமிழ்நாட்டு மக்களுக்கேயுரிய கலாசாரம் என்று தான் இதுவரை நினைத்திருந்தேன். வளைகுடா நாட்டிலும் இந்த பழக்கமிருப்பது ஆச்சர்யத்தை வரவழைத்தது.
இயற்கையை ஜெயிக்க முடியுமா? | 2/03/2009 |

இன்று அலுவலகத்துக்கு போகும் போது நான் கேட்ட பாடலின் ஒரு வரி தான் இந்த பதிவுக்கு காரணம்
நீரோட்டம் இருந்தா,
ஏரோட்டம் நடக்கும்;
ஏரோட்டம் இருந்தா தேரோடும்.
என ஜானகியின் கொஞ்சும் குழந்தை வாய்ஸில் புதுப் பாட்டு என்ற படத்துக்காக இசைஞானியின் இசையில் பாடிய ”இந்த பூமியே எங்க சாமியம்மா” என ஆரம்பிக்கும் அந்த பாட்டுதான்.
நான் ரொம்ப சின்ன பையனா இருக்கும் போது எங்க ஊர்ல இருந்து ஒரு அரை மைல் தூரத்துல இருக்குற ஒரு கிணத்துல இருந்து இடுப்புல ஒன்னு தலையில ஒன்னு’னு தண்ணி கொண்டு வருவாங்க பெண்மக்கள். எனக்கு நல்லா ஞாபகமிருக்கு எங்க அம்மா தண்ணிக்கு போகும் போது நானும் வருவேன்’னு அடம்பிடிச்சு அழுது தூக்கிகிட்டு போக சொல்வேன் ( பொறந்ததுல இருந்தே அப்டி தான்.. ) , போகும் போது பரவாயில்ல இடுப்புல என்னை தூக்கி வச்சுகிட்டு காலி குடத்தை கையில் பிடிச்சுக்குவாங்க. ஆனா வரும்போது தான் பிரச்னையே, என்னை நடக்க சொல்லுவாங்க, முடியாதுன்னே அடம்பண்ணி (கொடுமக்கார பயபுள்ள, இப்போவாவது நம்புங்கப்பா நான் கொடுமைகாரன் தான்...)அழுவேன். அடம்பிடிச்சு காலை கட்டிபிடிச்சு அழுதுகிட்டே தர தர’னு தரையோடு இழுத்துகிட்டே/அழுதுகிட்டே வருவேன், குடத்துல இருந்து சிந்துன தண்ணிய விட என் கண்ணுல இருந்து சிந்துன கண்ணீர் அதிகமாயிருக்கும்.
அதுக்கப்புறம் ஒரு நாலஞ்சு வருசம் கழிச்சு ஒரு 90 வாக்குல ஒரு அடி பம்ப் போட்டாங்க, ஊரே திரண்டு நின்னு வேடிக்க பாத்துச்சு. மொத்தமுள்ள 400 பேருக்கும் ஒரே அடி பம்ப் தான். நீங்க நிறைய பேப்பர்ல படிச்சு இருப்பீங்க.. குழாயடி சண்டைய பத்தி. ஆனா அப்படி ஒரு தகராறு எங்க ஊர்ல நடந்ததே இல்ல.. ( இனியும் அப்டியே தொடரணும்’னு தான் ஆசை). எங்களோட மனமகிழ் மன்றமே அந்த குழாயடிக்கு பக்கத்துல இருந்த தெரு விளக்குதான். படிக்குறேன் சொல்லிட்டு எதாவது ஒரு புத்தகத்த எடுத்து காலங்காத்தால ஒரு டைம் குறிச்சு “படிச்சு”ட்டு வருவோம். அப்டியே “வேண்டியவங்களுக்கு” குடம் குடமா தண்ணியடிச்சு குடுத்து எங்க பாசத்த தண்ணியாக கொட்டியிருக்கோம்.. ம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்.

இருந்த ஒரே அடிபம்பிலேயும் தண்ணீர் பற்றாகுறை வந்தது இல்ல. அது ஒரு வரபிரசாதமா தான் இருந்தது. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி, பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு தேவையில்லாத ஒரு இடத்துல இன்னொரு குழாயும் போட்டாய்ங்க.. ஆனா அங்க தண்ணி நல்லா இல்லாததுனால ( முன்னமே தெரியும்.. சும்மா கடனுக்கு/கணக்குக்கு போட்டது தானே ) குடிக்கிறது தவிர மத்த எல்லாத்துக்கும் ரொம்ப நல்லாவே பயன்பட்டுச்சு. அதுக்கு அப்புறம் ஆசை யாரை விட்டது, ஊருக்கு ஒரு த்ண்ணி தொட்டி இல்லை என ஒரு வெட்டி கூட்டம் புலம்ப ஆரம்பிச்சது, அதன் பலனா 2000 வாக்கில் ஒரு தண்ணீர் தொட்டியும் ஒரு 4 பொது குழாயும் போடப்ட்டது.
அங்க பிடிச்சது தான் வினை, அதுவரைக்கும் சித்திரையில் கூட தண்ணீர் பஞ்சத்தை பாக்காத ஊரு, தண்ணீர் பஞ்சத்த பார்க்க ஆரம்பிச்சது. அரை மைல் நடந்து போய் தண்ணீர் பிடித்து வரும் போது இல்லாத தண்ணீர் பஞ்சம், ஒரு அடி பம்ப் குழாய் இருந்த போது வராத தண்ணீர் பஞ்சம். நாலு குழாய் இருந்த போது எட்டி பார்க்க ஆரம்பிச்சது. இத்தனைக்கு ஜனத்தொகையில் பெரிய மாற்றமெல்லாம் இல்ல. மிஞ்சி போனா இப்போ ஒரு 500 பேர் இருப்பாஙக. ஆனா தண்ணீர் போதவில்லை.
காரணம் என்னான்னா திறந்த உடனே தண்ணீ வருதா மக்கள் அதன் அருமை தெரியாம, சும்மா புகுந்து விளையாடி இருக்காய்ங்க.. குழாயை திறந்து தண்ணீர் வரலேன்னா, திரும்ப மூடுறதுல்ல, அப்படியே மூடினாலும் சரிவர மூடாததுனால, நிறைய தண்ணீர் வீணா போய்கிட்டு இருந்திருக்கு.
என்னோட சொந்தகார பயபுள்ள தான் இதுக்கு இன்சார்ஜ், என்னாடா மாப்புள, ”தண்ணீ ஒழுங்கா திறந்து விட மாட்டுறியாம்ல, மக்க தண்ணீ இல்லே’னு சொல்றாய்ங்க” என ஒரு தடவை போட்டு வாங்கும் போது, மனுசன் புலம்பி தள்ளிட்டான். குடிக்கிறதுக்கு பயன்படுற தண்ணிய குளிக்க, மாடு குளிப்பாட்ட, ஹோஸ் போட்டு தோட்டத்துக்கு பாய்ச்ச என மக்கள் ரொம்ப அழிச்சாட்டியம் பண்றாய்ங்கடா.. அப்புறம் எப்படி தண்ணி பத்தும் என்றான். அவன் பேச்சிலும் ஒரு உண்மை இருந்தது.
ஆரம்பத்துல அடி பம்புல் இருந்து க்ஷ்டபட்டு தண்ணி எடுத்து வந்ததுனால அதனோட அருமை தெரிஞ்சது. அதை ஒரு செல்வம் மாதிரி பயன்படுத்தினாங்க. சில சமயம் ஆர்வகோளாறுல குடிக்கிற தண்ணிய எடுத்து ஆட்டு மாட்டுக்கு வச்சுட்டு ”வாங்கி கட்டி”யிருக்கேன். கொஞ்சம் கூட வீணாக்கமா பயன்படுத்தியிருக்கோம்.
சமீபத்தில் இதனோட உச்சகட்டமா நாலு குழாய் போதவில்லே’னு, மக்கள் அவங்க வீட்டுக்கொரு குழாய் என ”தனி” யாக அமைத்து கொள்ள ஆரம்பித்தனர். எங்க அப்பாவும் எங்கிட்ட ஒரு ரெண்டு மூனு தடவ ஓதி பாத்தார், நான் காது குடுத்து கேக்கல, அவருக்கு தெரியாதா என்ன? என்னை எப்படி கவுக்கனும்’னு. செண்டிமெண்டா பேசி கவுத்து, எங்க வீட்டுக்கும் “தனி” குழாய் இழுத்தாச்சு.
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வீட்டுக்கு போன் பண்ணும் போதெல்லாம், “அம்மா கிட்ட பேசனும் குடுப்பா” என்றால், ”தண்ணீ பிடிக்க போய்ட்டாடா” என்பார். ”அதான் வீட்டுலேயே குழாய் இருக்கே, பின்னே எங்க போனாங்க’னு விசாரிச்சா.. சரிவர கரண்ட் வராத்துனால, தண்ணிதொட்டியில் தண்ணி நிரப்ப முடியவில்லையாம்.. அதனால ”நோ வாட்டர்”.. அப்போ மறுபடியும் அந்த பழைய அடி பம்ப் குழாயை பயன்படுத்தியிருக்கிறார்கள் நம்ம மின்வெட்டார் புண்ணியத்துல.
இயற்கையை ஜெயிக்க முடியுமா சொல்லுங்க?
