அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

நான் சந்திக்க விரும்பும் நபர் 2/15/2009

பில்கேட்ஸின் தொழில் வித்தைகளையும், வெற்றியையும் விலாவரியாக விவரிக்கும் நம்மில் பெரும்பாலோனோர், தனது பக்கத்து தெருவிலோ, ஊரிலோ அதே போன்றொரு சாதனையை நிகழ்த்தி வருபர்களை கண்டு கொள்வதே இல்லை என்பது கசப்பான உண்மை மேலும் “குண்டூசி விக்கிரவெனல்லாம் தொழிலதிபராம்” என்று கவுண்டமணி ஸ்டைலில் கிண்டல் வேறு. 

கரகாட்டகாரன் படத்தில் தவக்களை ”பழைய ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம்” என்று கூவிக்கொண்டே அந்த தகர டப்பா வண்டியை சுற்றி வரும் நகைச்சுவை காட்சியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. கிராமத்திலிப்பவர்கள் இதுபோன்ற ஒரு வியாபாரியை வாரத்தில் ஒரு நாளாவது சந்திப்பர். எனக்கு இன்னைக்கு வரையிலும் அந்த பழைய பொருட்களை என்ன செய்வார்கள்? என்று தெரியாது, வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக கேட்கவேண்டும். 

அதே போல மதுரை அலங்காநல்லூரை ஒட்டியுள்ள பாலமேடு பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இன மக்கள் இதே தொழிலை செய்து வந்தனர். பாலமேடு அலங்காநல்லூரை ஒட்டியிருந்தாலும், முல்லை பெரியாறு கால்வாய்க்கு வடக்கே (மேலே) இருப்பதால், பெரியாறு கால்வாயால் எந்த பயனும் இல்லை. சாத்தையாறு அணை அருகில் இருந்தாலும் அதனாலும் அப்பகுதி மக்களுக்கு பெரும் அளவில் பயனில்லை. மழை மற்றும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யகூடிய வானம் பார்த்த பூமி.

இப்படி பட்ட சூழலில் இந்த இன மக்கள் 90ன் ஆரம்பத்தில் ”பேரீச்ம்பழம் விற்பது போன்ற தொழிலை விட்டு” சிறிய அளவில் பால்பண்ணை தொழிலை ஆரம்பித்தனர். முதலில் ஒரு சிறு அளவில் தொடங்கப்பட்ட இந்த பால்பண்ணை கூட்டுறவாக விரிவடைந்து பாலமேடு அல்லாது அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுபுறங்களுக்கும் பால் விநியோகம் செய்யபட்டது. அதனின் அடுத்த கட்டமாக கூட்டுறவு பால்பண்ணை பக்கத்து ஊர்களுக்கும் விரிவடைந்தது. 2000ம் வாக்கில் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி, ஒரு திரையரங்கு மற்றும் மதுரை மாநகரின் பால் தேவையையே (50% மேலிருக்கும் என்பது என் யூகம்) நிறைவு செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.  அரசரடி, குரு தியேட்டர் வழியாக பயணம் செய்பவர்கள் “பத்திரகாளியம்மன் பால்பண்ணை” என்று பெயரிடப்பட்ட வாகனத்தை கண்டிப்பாக பார்த்திருக்க முடியும். இது ஒரு அசுர வளர்ச்சியே.

இந்த தொழில் உத்தியை பற்றியோ, வெற்றியை பற்றியோ இதுவரை கட்டுரை எதுவும் பத்திரிக்கைகளில் வெளிவந்ததாக எனக்கு நினைவில்லை.

தூரத்தில் இருக்கும் நிலவை பார்த்து ஏங்கும்/வர்ணிக்கும் நாம் பக்கத்திலிருக்கும் அகல் விளக்கின் அருமையை உணராமல் இருப்பது வருந்ததக்க விச்யமே. அன்னை தெரசாவை பற்றி பக்கம் கட்டுரை எழுத தெரியும் ஆனா தன் சொந்த தாயாரின் விருப்பு/வெறுப்புகளை பற்றி அற்வே தெரியாது. இதே போன்று பல உதாரணங்களை சொல்லலாம். 

ஜனவரி மாதம் முதல் வாரம் எனது பிறந்த நாளை முன்னிட்டு “Slumdog Millionaire" படம் பார்த்துவிட்டு, என்னுடைய சக ஊழியரின் வீட்டுக்கு போய் விடுமுறையை களித்தேன். அங்கே ”தென்றல்” என்றொரு இதழ் சாப்பாடு மேஜையின் மேல் இருந்தது, வழக்கம் போல சாப்பாடை மேய்வதை விட்டு புத்தகத்தை மேய, அதில் பத்ரி சேஷாத்ரி அவர்களின் பேட்டி இருந்தது எனது ஆர்வத்தை இன்னும் அதிகபடுத்தியது, சக பதிவராச்சே. இருந்தாலும் சூழ்நிலை கருதி என்னால் நுனிப்புல் மட்டுமே மேய முடிந்தது. 

நான் விரும்பி படிக்கும் வலைதளங்கள் பல இருந்தாலும் எனக்கு மிகவும் கவர்ந்த வலைப்பதிவு தலைப்புகள்/பெயர்கள் மூன்றே மூன்று. 

1. எண்ணங்கள் ( பத்ரி சேஷாத்ரி ) 
2. தனி
மையின் இசை (அய்யனார்) 
3. பிச்சைபாத்திரம் (சுரேஷ்கண்ணன்)

எண்ணங்கள் என்ற தலைப்பில் தனது எண்ணங்களை விவரிக்கும் பத்ரியை, எனக்கு ஒரு சக பதிவராகத்தான் தெரியும் இந்த தென்றல் இதழின் பேட்டியை படிப்பதற்கு முன். 

அமெரிக்காவில் மேல்படிப்பு முடித்துவிட்டு தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ்நாட்டில் கிழக்குபதிப்பகத்தை தொடங்கி அதை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதற்கு முன் cricinfo.com என்ற தளத்தையும் திறம்பட நிர்வகித்திருக்கிறார்.

எதோ ஒரு படத்தில் விவேக் இரட்டை வேடத்தில் வருவார், அதில் தமிழை வளர்க்க எளிமையான வழியை மிக அழகாகவும் நகைச்சுவையாகவும் சொல்லியிருபபார், “தமிழை வளக்க ரொம்ப எல்லாம் கஷ்டபட வேண்டாம்டா,  ஏட்டுல இருக்கிற தமிழை கம்ப்யூட்டர்ல ஏத்துடா, அதுக்கப்புறம் அதுவா வளந்துடும்” என்று பொருள்படும்படி ஒரு நகைச்சுவை காட்சி. நகைச்சுவைக்காக சொல்லப்பட்டாலும், ஆழமான கருத்து அது. 

அதே கருத்தை செயலில் காட்டி இன்று பெரும்பாலான (ஆதாரம்: இட்லிவடை) பதிவர்கள் தமிழில் பதிவிட (இந்த பதிவு உட்பட)  NHM Writer மென்பொருளை உருவாக்கி ராமருக்கு அணில் உதவியது போல தமிழ் வளர்ச்சிக்கு தன்னால் இயன்றதொரு காரியத்தை செவ்வனே செய்திருக்கிறார். ஏட்டில்/மனதில் மட்டுமே இருந்த தமிழ் இன்று இணையத்தில் கொடிகட்டி பறக்கிறது. இதற்கு இவர் மட்டுமே ஒரு காரணம் என்று சொல்லவில்லை இவ்ரும் ஒரு முக்கிய காரணம்.

பேட்டி முழுவதும் வியாபித்திருந்த, தமிழின் மீதும் தமிழ் படைப்புகளின் மீதும் இவர் கொண்டிருக்கும் தொலைநோக்கு பார்வையுடைய கருத்துகளை கண்டு மெய்சிலிர்த்து போனேன்.  நசிந்து போய் கிடந்த பதிப்பகத்துறையில் கால்பதித்து வெற்றி பெற்றதோடு,  தமிழில் பல்துறைகளிலும் பல படைப்புகள் உருவாக முனைப்புடன் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல தமிழ் ஆர்வலர். நிறைய இளம் எழுத்தாளர்களை உருவாக்கி கொண்டிருக்கிறார். உருவாக்க காத்துக் கொண்டும் இருக்கிறார். சமீபத்தில் நடந்த புத்தகக்கண்காட்சியின் வெற்றியில் இவரின் பங்கும் முக்கியமானது என்றால் அது மிகையல்ல.

பெயருக்கு முன்னே ஒரு பட்டம் இல்லாமல்,  தமிழ் என் மூச்சு, என் பேச்சு என வெற்று கூச்சல் எதுவுமில்லாமல், தாய் மொழியான தமிழ்வளர்ச்சிக்கு மட்டுமன்றி அனைத்து மாநில மொழி வளர்ச்சிக்கும் தன்னால் முடிந்த சில நல்லகாரியங்களை செய்து கொண்டிருக்கிறார்.

நம்ம சக பதிவர் கோவி.கண்ண்ன் தமிழ்நாடு முழுவதும் சூறாவளியா சுழன்று பல பதிவர்களை சந்தித்துவருவது போல், நான் இந்தியா செல்லும் போது சந்திக்கவிரும்பும் நபர் திரு.பத்ரி சேஷாத்ரி.


20 பின்னூட்டங்கள்:

G3 said...
Attendance :)

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
Haiya.. naan dhaan firstu.. office poitu posta padichu commentaren.. thorayama scroll pannathula neenga list potta 3 blog kannula pattuchu.. Idhula ayyanaardhu mattum theriyum.. aana adhulayum naan padicha endha postum enakku purinjadhillai :)

Ungalukku purinjirukkungaradhaala neenga periyaaludhannu naan othukkaren :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
Anonymous said...
Me the 3rd aakum!!

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@G3,
//
Ungalukku purinjirukkungaradhaala neenga periyaaludhannu naan othukkaren :P
//
hahahha.. He used to write about movies a lot :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Karthik,

Technically you are second :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Lancelot said...
appo me the third...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
hmm unmaithan kannuku theriyatha neraya tholil athibargal namma oorla irukaanga...petti kadai vechu maasam 50000 turn over parkuraa oru annana ennaku theriyum...avar padichathu ennamo 8th than...ellam puhisalithanamum ettu kalvinaala varathunu avara parthu kathukitten (annaila irunthu thaan padikiratha vitten :P)

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
gils said...
neenga solrathu kareet thaan..namma oorkara payapullathaana..perusa enatha kilichiruka poraanu oru paasamana feelinga kuda irukalaamla :)

------------- ~~~~~ Thanks to gils ! ~~~~~ -------------
Anonymous said...
Unggal aasei niraivera enathu vazhtukkal.

Avarai santhitha vudan innoru post podunga.. comment poduratha pathi yosikiren

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
சின்னப் பையன் said...
belaaaaaated பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்ல பிடிங்க...

------------- ~~~~~ Thanks to சின்னப் பையன் ! ~~~~~ -------------
சின்னப் பையன் said...
நல்ல அறிமுகம்...

மத்த ரெண்டு பேரைப் பத்தி அடுத்த பதிவுலே சொல்வீங்களா????

------------- ~~~~~ Thanks to சின்னப் பையன் ! ~~~~~ -------------
கோவி.கண்ணன் said...
//நம்ம சக பதிவர் கோவி.கண்ண்ன் தமிழ்நாடு முழுவதும் சூறாவளியா சுழன்று பல பதிவர்களை சந்தித்துவருவது போல், நான் இந்தியா செல்லும் போது சந்திக்கவிரும்பும் நபர் திரு.பத்ரி சேஷாத்ரி.//

முன்கூட்டிய வாழ்த்துகள். பத்ரி அண்ணனை நான் சந்தித்துவிட்டேன். எங்க ஊர்காரர் ஆச்சே !

------------- ~~~~~ Thanks to கோவி.கண்ணன் ! ~~~~~ -------------
கோவி.கண்ணன் said...
//நம்ம சக பதிவர் கோவி.கண்ண்ன் தமிழ்நாடு முழுவதும் சூறாவளியா சுழன்று பல பதிவர்களை சந்தித்துவருவது போல், நான் இந்தியா செல்லும் போது சந்திக்கவிரும்பும் நபர் திரு.பத்ரி சேஷாத்ரி.//

முன்கூட்டிய வாழ்த்துகள். பத்ரி அண்ணனை நான் சந்தித்துவிட்டேன். எங்க ஊர்காரர் ஆச்சே !

------------- ~~~~~ Thanks to கோவி.கண்ணன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Lancelot,
//annaila irunthu thaan padikiratha vitten :P)
//
அது சரி, உன்ன தான் தேடிகிட்டு இருக்காங்க பா


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@viji
//
Avarai santhitha vudan innoru post podunga.. comment poduratha pathi yosikiren
//
appo ithukku peru enna..

kandippa oru post undu santhithavudan :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@ச்சின்னப் பையன் said...
//
belaaaaaated பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்ல பிடிங்க..
//
நன்றிங்க

//
மத்த ரெண்டு பேரைப் பத்தி அடுத்த பதிவுலே சொல்வீங்களா????
//
அவங்கள பத்தி அவ்வளவா தெரியாது. பதிவு படிக்கிறதோட சரி :)))

தெரிஞ்சா கண்டிப்பா போடுறேன்


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
கோவி.கண்ணன் said...
முன்கூட்டிய வாழ்த்துகள். பத்ரி அண்ணனை நான் சந்தித்துவிட்டேன். எங்க ஊர்காரர் ஆச்சே !
//

நன்றி!!!


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Anonymous said...
//பில்கேட்ஸின் தொழில் வித்தைகளையும், வெற்றியையும் விலாவரியாக விவரிக்கும் நம்மில் பெரும்பாலோனோர், தனது பக்கத்து தெருவிலோ, ஊரிலோ அதே போன்றொரு சாதனையை நிகழ்த்தி வருபர்களை கண்டு கொள்வதே இல்லை//

adhuthaan INDIA... Enna seiya?? Ingae kastapathu munnuku varum vilaiyaathu veerargalukku madippu illa.. kodiyil puralum sila pala veerargalukku, innum kaasu koduhtu ukuvipaargal



//பாலமேடு//

Neengal inda oora?? Eppadi inda details la pakkava therinjirukku??? Paalpannai vachadaala thaan paalamedaa?? illa adharkku munnale paalameda??


//இந்த தொழில் உத்தியை பற்றியோ, வெற்றியை பற்றியோ இதுவரை கட்டுரை எதுவும் பத்திரிக்கைகளில் வெளிவந்ததாக எனக்கு நினைவில்லை.//


illai pa.. neenga solli thaan enakke theriyum!!!



//தூரத்தில் இருக்கும் நிலவை பார்த்து ஏங்கும்/வர்ணிக்கும் நாம் பக்கத்திலிருக்கும் அகல் விளக்கின் அருமையை உணராமல் இருப்பது வருந்ததக்க விச்யமே. அன்னை தெரசாவை பற்றி பக்கம் கட்டுரை எழுத தெரியும் ஆனா தன் சொந்த தாயாரின் விருப்பு/வெறுப்புகளை பற்றி அற்வே தெரியாது.//


Simply Superb lines!!!!



//இதற்கு முன் cricinfo.com என்ற தளத்தையும் திறம்பட நிர்வகித்திருக்கிறார்.//


Ippa avar illaiya?? naan thinamum idhula thaan score paapen!!



//NHM Writer மென்பொருளை உருவாக்கி ராமருக்கு அணில் உதவியது போல தமிழ் வளர்ச்சிக்கு தன்னால் இயன்றதொரு காரியத்தை செவ்வனே செய்திருக்கிறார்//


Arumaiyaana software... Rombha nandri....


//நான் இந்தியா செல்லும் போது சந்திக்கவிரும்பும் நபர் திரு.பத்ரி சேஷாத்ரி.//


Vaanga paakalam!!!

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Karthik,

ivlo periya comment pottu ennai thikiladikka vachuttapa :)))


//
Paalpannai vachadaala thaan paalamedaa?? illa adharkku munnale paalameda??
//
haaha.. naan kooda itha note pannaliye.. athukku munnadiya athee per thaan :))

enga ooru peru METTUR close to alanganallur/palamedu


//
Simply Superb lines!!!!
//
Thanks pa!!


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
குட்டிப்பண்ணை said...
பதிவு சிறப்பாக உள்ளது

------------- ~~~~~ Thanks to குட்டிப்பண்ணை ! ~~~~~ -------------