
ArchiveNow watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|

அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
It is a wake-up call !!! | 4/19/2009 |
வகை:
அனுபவம்,
வாழ்த்துக்கள்
|
கூட வேலை பாக்குற ஃபிரண்ட் ஒருத்தர், “இன்னைக்கு வீட்டுக்கு வா, எங்க ஃபிரண்ட் ஒருத்தவங்க வர்றாங்க, நீயும் வந்தா நல்லா இருக்கும். வா” அப்டினு கூப்பிட்டாங்க, ரெண்டு நாளைக்கு சாப்பாட்டு பிரச்னை இல்ல பாருங்க, அதனால போனை வச்ச அடுத்த ரெண்டு மணி நேரத்துல அவங்க வீட்டுல இருந்தேன் நான், பஞ்சுவாலிட்டு முக்கியம் தானே. வரவேண்டிய விருந்தாளிங்க அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு தான் வந்தாங்க.
அப்படியே கூட்டமா, பக்கத்துல இருந்த Marsh Creek State Park Lake க்கு எல்லாரும் போய் ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வந்தோம். இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு போனா அருமையா இருக்கும் போல, இப்போ தான் இலையெல்லாம் துளிர் விட ஆரம்பிச்சிருக்கு.
வீட்டுக்கு வந்து சாப்பிட உக்காரும் போது பேச்சு முகவை சிங்கம், அடுத்த உலக சூப்பர் ஸ்டார் சாம் ஆண்டர்சன் பக்கம் போச்சு. அவரின் ராசாத்தி பாட்டோட சிறப்பம்சங்களையும் அவரது நடனசைவுகளையும் பத்தி படு பயங்கரமா விவாதம் போயிகிட்டு இருந்துச்சு. தொடர்ந்து பேச்சு கொஞ்ச சீரியசாகி சூசன் பயோல் பக்கம் திரும்பியது. பல்லாயிரக்கணக்கான மக்களை வாய் பிளக்க வைத்திருக்கிறார் இந்த 47 வயது யுவதி. இன்னிக்கு ஹாட் டாபிக் இவர் தான்.
Britains Got Talent என்ற தொலைக்காட்சி தொடரில் தனது திறமையை/கனவை நிறைவேற்ற அரங்கத்தில் நுழைகிறாள் சூசன். தனக்கென தனிச்சிற்ப்பாக ஏகப்பட்ட ”நெவர்”, நெவர் டேட்டடு.. நெவர் கிஸ்ஸ்டு.. சொல்லிக் கொள்ளும்படியான வேலை எதுவும் இல்லை. நம்ம“நெனச்சுகிட்டு” இருக்கும் அழகும் இல்லை.
நடுவர் உள்பட பார்வையாளர்கள் முகத்திலும் ஒரு ஏளனம், “இடம் தெரியாம வந்துட்டா போல” எனசொல்லும் பார்வை. உதாரணத்திற்கு இந்த சுட்டியில் “I am trying to be a professional singer” என சூசன் சொல்வதை கேட்டு, ஒரு பெண்ணின் முகம் அடையும் அஷ்டகோணலை பாருங்கள்
பாட ஆரம்பிச்சு ஐந்து வினாடிக்குள் ஒட்டுமொத்த அரங்கமும் ஆச்சர்யத்திலும் ஆரவாரத்திலும் ஆர்ப்பரிக்கிறது, இறுதிவரையிலும் தொடர்கிறது இந்த ஆர்ப்பரிப்பு. பாடிமுடித்ததும் அரங்கமே எழுந்து நின்று கைதட்டி அமர்கிறது.
இது மாதிரி அருமையான திறமைகளை வைத்து கொண்டு பிறரின் கேலிப்பேச்சுக்கு அஞ்சி வெளிக்காட்டாமல் இருந்தால், இவரை ஒரு உதாரணமா எடுத்துகிட்டு பின்னி பெடல் எடுங்க மக்கா. நடுவர் சொன்னது போல் It is a wake-up call.
இது தொடர்பான சுட்டிகள்
சூர்யாவின் உலக அழகி சூசன் பாய்ல் !!
The House Next Door - Links for the Day (April 14th, 2009)
Youtube வீடியோ..
John Scott Lewinski - Susan Boyle Craze Continues as பாஸ்ட் Work Surfaces

22 பின்னூட்டங்கள்:
adutha nimishamae anga irundhirukka venaama.. ennamo ponga.. ungalukku innum surusuruppu varalae :P
//
G3 said...
Pala yugangal kazhichu indha blogla me the firstae :))))
//
ரொம்ப நாளா பதிவே போடலியேங்கிறத என்னா ஒரு சர்காஸ்டிக்கா சொல்றீங்க G3 :) நல்லா இருங்க. நல்லாவே இருங்க..
//
adutha nimishamae anga irundhirukka venaama.. ennamo ponga.. ungalukku innum surusuruppu varalae :P
//
போல்டு பண்ணியிருக்கிறத பாத்தா மறுபடியும் உள்குத்து பயங்கரமா இருக்கும் போல தெரியுதே.. அவங்க ”ஈவினிங் வா”னு காலையில சொன்னாங்க.. இதுக்கு மேலே சீக்கிரம் போனா, அடுத்த நிமிசமே என் நம்பரை ரப்பரை வச்சு அழிச்சுடுவாங்க.. பரவாயில்லையா?
//
G3 said...
video ellam porumaiya appuram paakarennu solli ippo apeat aagikaren :)))
//
இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு :))))))))))))
inimel JKR, SAM ANDY kalacaangana avangalukku irukku.. solliten!!
apdiye idoda potos potu irunda nalla irundurukkum
nalla karuthu aalavanthan
athane tamilar panpadu
punctuality aa sonnen pa
photos pottu erukalam
alagu nirantharamanathu illai
thiramai than mukkiyam
ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடும் நம் எல்லோருக்கும் இந்தப் பெண்ணின் திறமை.. ஒரு சரியானப் பாடம்!!!
@Karthik Lollu
//
inimel JKR, SAM ANDY kalacaangana avangalukku irukku.. solliten!!
//
இதானே வேணாங்கிறது.. கவனிக்க “திறமை” இருந்து வெளிக்காட்டாமல் :)))
//
apdiye idoda potos potu irunda nalla irundurukkum
//
அம்மணிக்கு முக்கியத்துவம் தருவதற்காக தவிர்த்துட்டேன் :)
@sakthi
//
nalla karuthu aalavanthan
//
நன்றிங்க சக்தி :)
//
athane tamilar panpadu
punctuality aa sonnen pa
//
உள்குத்து வெளிகுத்து சைடுகுத்து எல்லாம் பலமா இருக்கு :))
//
alagu nirantharamanathu illai
thiramai than mukkiyam
//
காந்தி/ஐன்ஸ்டீன்/லிங்கன் இவங்க எவ்ளோ அழகா தெரியிறாங்க நமக்கு.. ஏன்? ( நீங்க பதில் சொல்லிட்டீங்க.. அப்போ நான் கேள்வி கேக்கோணும் தானே )
//
Ravee (இரவீ ) said...
மிக சரி ...
ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடும் நம் எல்லோருக்கும் இந்தப் பெண்ணின் திறமை.. ஒரு சரியானப் பாடம்!!!
//
வாஙக் தலை ரொம்ப நாளா ஆளை காணோம். கோபம் எல்லாம் வேணாம் :)) உங்க தொடர்பதிவ கூடிய சீக்க்ரமே போட்டுடுறேன்.. அபப்போ வாங்க :)
அவங்க நம்பர் உங்ககிட்ட இருக்கும்ல?? அப்போ உங்களுக்கு எப்பெப்போ தோணுதோ அப்பல்லாம் திடீர் விசிட் போங்க... அப்பறம் ஒழுங்கா கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க.. ;))))))))
antha ilangai photos eduthuten so
ini neega payappadama varalam ok
தூங்கிட்டு இருந்த எழுப்பி விட்டுடீங்க
Post a Comment