
ArchiveNow watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|

அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
த்ரிஷாவும்.. பிரகாஷ்ராஜும்..!!! | 4/10/2009 |
வகை:
சினிமா
|
தலைப்பை படிச்சுட்டு எதாவது விவகராமநெனச்சு வந்தீங்கன்னா, சாரி.. இது அபியும்.. நானும் படத்த பத்தின பதிவு அவ்வளவு தான்.
மேற்கொண்டு எழுதுறதுக்கு முன்னாடி, ராதாமோகனுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் உங்கள் வெற்றியடைய வாழ்த்துகள். இவ்ளோ வாழ்த்துனாலும், நான் இந்த படத்த காசு குடுக்காம தான் பார்த்தேன், சூழ்நிலை இங்கேஎங்கேயும் இந்தபடம் ரிலீஸ் ஆகல, அதனால்தான், ஊருக்கு போகும் போது கண்டிப்பாஇன்னொரு தடவை தியேட்டர்ல பாப்பேன் (என்தங்கை மகளோட )
அழகிய தீயே, பொன்னியின் செல்வன் வரிசையில் இப்போது அபியும் நானும், தலைப்பிலேயே அபிக்குதான் முக்கியத்துவம், ஆனா நடிப்புல யாரையும் பக்கதுல வர விடல மனுசன்.
சிங்கப்பூர்ல இருக்கும் போது, வார இறுதியில் ஒரே டிக்கெட்டில் ரெண்டு படம்பாக்க போவோம். அப்போ முதல் படம் தாஸ் ( லைட்டா கொத்தா இருந்துச்சு, பாட்டெல்லாம் சூப்பர்) பாத்து கொஞ்சம் டயர்டான பொறகு, பொன்னியின்செல்வன் போட்டாங்க, படம் ஆரம்பிச்ச ஒரு பத்து பதினைஞ்சு நிமிசத்துல சிரிச்சு, சிரிச்சு, செம ப்ரஷ்ஷா ஆகிட்டோம். ஒட்டு மொத்த தியேட்டரும் அர்த்தராத்திரியில் விழுந்து விழுந்து சிரிச்சது. அதே மாதிரியான ஒரு அருமையான்படம் தான் இது.
வீட்ட நிர்வகிக்க மனைவியும், வீட்டு வேலைகளை பாத்துக்க ரவி சாஸ்திரியும், தொழிலை நிர்வகிக்க நண்பனும் இருக்க, மனுசன் முழுநேர வேலையா புள்ளமேல பாசத்த கொட்டோனு கொட்டி வளர்க்கும் ஒரு அன்புள்ள அப்பாவின்அருமையான கதை.
எனக்கு ஏ காவுமே ஏ கிஸான், ரகு தாத்தா வரைக்கும் ஹிந்தி நல்லா தெரியும், படத்துல இந்த ஹிந்தி டயலாக் மட்டும் நல்லாவே புரிஞ்சுது.
மாப் கி ஜி; மாப் கி ஜி
மாவு தான் கொட்டிடுச்சே
க்யா?
பரவாயில்ல, ஹிந்தியிலேயும் பரவாயில்ல
நேம் கியா ஹே
ஜஸ்பீர்கால்
ஷ்ச்ஷ்ச் பேர்ல பீர் இருக்கா, அதான் போதையாகிடுச்சு
ம்ம்.. கியா?
அச்சா நேம்
ஆப்கா நாம்
சாஸ்திரி, ரவி சாஸ்திரி
அதுக்குமேல எல்லாம் பஞ்சாபிலே இருந்ததுனால அவ்வளவா புரியல
தான் தேர்ந்தடுத்த சேலையை தவிர்த்தவுடன், வெறுப்புடன் ”லுங்கி இருக்கா?” என்று கேட்பதிலாகட்டும், ஜோகி வண்டி ஓட்டும்போது பேதி கலங்கமுழிப்பதிலாகட்டும், அட்மிசனுக்கு படிச்சுட்டு கேள்வி கேக்க சொல்லிவற்புறுத்துவதிலாகட்டும், சிங் கூட்டத்துகிட்ட மாட்டி முழிப்பதிலாகட்டும், பிரதமர் கிட்ட சல்யூட் அடிச்சு சத்தமாக பேசுவதிலாகட்டும் மனுசன் பின்னிபெடல் எடுத்துள்ளார், நடிப்பு சூரியனய்யா அவன்.
தமிழ் சினிமா உலகில் நான் மதிக்கும் இரண்டு ஜம்பாவன்கள் கமல் மற்றும்பிரகாஷ்ராஜ் தான், இருவரும் இயக்குநர் சிகரம் பாலசந்தரின் கண்டுபிடிப்புஎன்பது ஓர் ஒற்றுமை. தாங்கள் சினிமாவினால் சம்பாதித்தை சின்மாவிலேமுதலீடு செய்து, முடிந்த அளவுக்கு தரமான படத்தை தர போராடும் நல்லஉள்ளங்கள்.இவ்வளவு தூரம் பேசிட்டு, என் ”தலைவி”, மாமீய பத்தி பேசலனே எப்படி. சொந்தகுரல்ல பேசுவதற்காகவே நிறைய டயலாக் இங்கிலீஷ்’ல இருந்துச்சு. ரொம்பஅலப்பறை இல்லாம அடக்கி வாசித்திருந்தது அருமை, கொஞ்ச நாளைக்கு இந்தமாதிரி குருவி, குட்டிசாத்தானை எல்லாம் விட்டுட்டு இந்த மாதிரி படங்கள்லஅப்பப்போ (நோட் பண்ணுங்க மக்களே அப்பபோனு தான் சொல்லி இருக்கேன்) நடிங்க. ”அப்பா வரட்டும்” னு பதிவு திருமண அலுவலகத்தில் சொல்லும்காட்சியில் பாசத்தை மென்மை கலந்த வன்மையுடன் அருமையாகவெளிபடுத்தியிருந்தார்.
அடுத்து ஐஸ்வர்யா. ”உள்ளே வெளியே” படம் மூலம் என்னை மாதிரி விடலைபையன்களின் தூக்கத்தை கெடுத்த தேவதை. அப்போ எல்லாம் கில்லிவிளையாடும் போதெல்லாம் அம்மணி ஞாபகம் தான் வரும். நையாண்டிதர்பாரில் நிகழ்ச்சியில் ”மணி அடிக்கிறத” பத்தி இவர் பண்ண தர்பார்ல யூகி சேதுகொஞ்ச நேரம் அசந்து தான் போனான், நானுந்தான். கன கச்சிதமா ஒரு நடுத்தரகுடும்ப ஸ்திரியா வாழ்ந்திருந்தார். இதுக்கு முன்னே “குத்து”, கொலைனு பலபடங்கள்ல வந்து போனாலும் இந்த படத்தில் (மனசில்)நின்னு போயிருக்கிறார். பிச்சைகாரனை பாத்துட்டு, ”உங்க சொந்த காரங்களா?” என பிரகாஷ்ராஜ் கேக்க, எதிர்த்து கோபப்படும் காட்சி பிடித்திருந்தது.
வசனஙக்ளில் நாடகத்தனமான வாடை அடித்தாலும் நளினம் இருந்தது. படத்தில்பிரகாஷ்ராஜ் அடிக்கடி சொல்லும் Life is beautiful வசனம் அருமையாகஉபயோகபடுத்தபட்டிருந்தது.
நம்ம எப்பவுமே பக்கத்துல இருக்கிறவுங்களை புரிஞ்சுக்க முயற்சி பண்றதேஇல்ல, புரிஞ்சுகிட்டதா தப்பா நெனச்சுகிறோம்
சொன்னா நம்ப மாட்டீங்க , எம்பொண்ணு கல்யாணத்துல மேண்டலின்ஸ்ரீனிவாசன் கச்சேரி வைக்கனும்னு ஆசைபட்டேன்..
வீடு கிட்டதான், ஆனா நான் ரொம்ப தூரம் போகணும்
போன்ற வசனங்களும் கதையையொட்டிய அருமையான உரையாடல்கள்
மனோபாலா அப்பப்போ வந்து எடக்காக கேள்வி கேட்பது கடியா இருந்தாலும், காட்சியிடையே ஒன்றி இருப்பதால் உறுத்தலாக தெரியவில்லை
எனக்கு படத்துல எந்த குறையும் தெரியல்ல ( அதுக்கு என் நல்ல மனசு கூட ஒருகாரணமா இருக்கலாம் ), சில விமர்சனங்களில், பிரகாஷ்ராசின் கேரக்டர்டிரான்ஸிஷன் சரியா இல்லேனு படிச்சேன், ஆனா ”நம்ம குழந்தையை நம்ம பிரியும் போது வருத்த்படுற மாதிரி தானே அன்னைக்கு உங்க அப்பா அம்மா உன்ன பிரிஞ்சு வருத்த பட்டிருப்பாங்கனு” “EMPTHY” பண்ணிவருத்தபடுவதிலேயே தெரிகிறதே அந்த கதாபாத்திரத்தின் முதிர்ச்சி.
அபியும் நானும் – தமிழ் சினிமாவும் ரசிகனும்

33 பின்னூட்டங்கள்:
athane parthen
nijam superb acting
anbana kathai nu sollunga
ivlavu purinjathe pothum nga
nijamave nalla vasanam ithu
oru valkai thathuvum
athanala than unga per aalavanthana????
ovoru kulantha pirakkum podhu kudave oru appavum pirakiran.. enna kulanthainga valarnthuraanga... aana sila appakal?? :)))))))
Ponniyin selvan inga FLOP... nalla irukuma anda padam??
Ore oru oorile ore oreu aiyaa
ore oru aiyaavukku ore oru blogu
ore oru blog la thaan ore oru postu
anda ore oreu post la thaan enooda commentu!!
தமிழ் சினிமா உலகில் நான் மதிக்கும் இரண்டு ஜம்பாவன்கள் கமல் மற்றும்பிரகாஷ்ராஜ் தான்
athanala than unga per aalavanthana????\\
ஹா ஹா ஹா
என்னா சக்தி
செம நக்கல்ஸ் தெரியுது உங்க கமெண்ட்ல இப்பல்லாம்
ஹும் அருமை அருமை
அது எப்பவுமே ...
ம் - ம் - கலக்கல்ஸ் தான்
ippo thaa first time aah publish paneringala??? :P
one of my fav movie... ennoda appa abi appave vida mosam.. yenna nadakka pogutho.... beiyama irukku...
//தலைப்பை படிச்சுட்டு எதாவது விவகராமநெனச்சு வந்தீங்கன்னா, சாரி.. இது அபியும்.. நானும் படத்த பத்தின பதிவு அவ்வளவு தான் ///
:P
//நம்ம எப்பவுமே பக்கத்துல இருக்கிறவுங்களை புரிஞ்சுக்க முயற்சி பண்றதேஇல்ல, புரிஞ்சுகிட்டதா தப்பா நெனச்சுகிறோம் //
ya ya.... :(
ரொம்ப நாடகத்தன்மை இருந்தாலும், வித்யாசமான முயற்சிக்காக பார்க்கலாம் அப்போதான் அடுத்த முயற்சி பண்ணுவாங்க.. :-)
இவ்வளவு நேரம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துது பதிவு..
(மௌனம் பேசியதே ஸ்டைல்லயே படிக்கோனும் :P)
இதைவிட சிம்பிளா நீங்க அம்மணி நடிக்கவே இல்லைனு சொல்லியிருக்கலாம் :D சும்மா வந்துட்டு போறாங்க அம்புட்டுதான் :)
இதுக்கு பேருதான் சைக்கிள் கேப்ல ஏரோப்ளேன் ஓட்றதோ.. நீங்க ஓட்டுங்க ராசா.. நாங்க ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பாக்குறோம் :P
//
அருமையா சொல்லிட்டீங்க பிரகாஷ்ராஜின் நடிப்பை:)
neegalum sonna nammpa mattega itha padichatum nejama unga pnnuku than kalyanamnu nenachen :)))))))))))))
@sakthi
//
athane parthen
//
இல்லேன்னா ஒரு கும்மு கும்மியிருப்பீங்க தானே :)
//
nijam superb acting
//
அதே..அதே
//
anbana kathai nu sollunga
//
அதான் நீங்களே சொல்லீட்டீங்களே :)
//
ivlavu purinjathe pothum nga
//
அப்படீங்கிறீங்க.. ஆத்தா நான் ஹிந்தியிலா பாஸாயிட்டேன் :))
//
nijamave nalla vasanam ithu
oru valkai thathuvum
//
உண்மை :)
//
athanala than unga per aalavanthana????
//
தெரியலியே பா :) (இப்படி கேக்குறவஙகளுகெல்லாம் சொல்ற டெம்ப்ளேட் ”நாயகன்” பதில்)
@Karthik
//
Ponniyin selvan inga FLOP... nalla irukuma anda padam??
//
இந்த படம் பிடிச்சிருந்தா அதுவும் பிடிக்கும்
என்ன மொத வந்துட்டு அப்புற்ம் ஒரு பெரிய இடைவெளீ??
@நட்புடன் ஜமால்
//
சமீத்தில் மிகவும் இரசித்த படம் இது என்று சொல்லலாம்.
//
வாங்க் தல.. பிடிச்சிருந்த மட்டும் தான் பதிவு.. நம்ம வாங்குன அடியெல்லாம் வெளியில சொல்றது இல்ல :)))
//
செம நக்கல்ஸ் தெரியுது உங்க கமெண்ட்ல இப்பல்லாம்
//
ஆமா.. கலக்குறாங்க இப்போ எல்லாம் :)
@ viji
//
ippo thaa first time aah publish paneringala??? :P
//
yes. because of too much "aani" :)
//
one of my fav movie... ennoda appa abi appave vida mosam.. yenna nadakka pogutho.... beiyama irukku...
//
hehe.. avaru thaane payapadanum.. engeyo idikkuthe :)
@யாத்ரீகன்
//
இந்த படம் ஒரு Straight lift from ஒரு ஹாலிவுட் படம்.. அட படம் பெயர் மறந்து போச்சே !!! எதோ father of bride அப்படி வரும்..
//
நீங்க சொன்னது சரி தான்.. படம் பேரு கரெக்ட்.. இந்த படத்த மூனு வருசத்துக்கு முன்னே பாத்திருக்கேன்.. நினைவு படுத்தி பார்க்கையில் கிட்டதட்ட அதே படம் தான்.. கொஞ்சம் நேட்டிவிட்டி கலந்திருக்காங்க..
தகவலுக்கு நன்றி யாத்ரீகன் :)
//
ரொம்ப நாடகத்தன்மை இருந்தாலும், வித்யாசமான முயற்சிக்காக பார்க்கலாம் அப்போதான் அடுத்த முயற்சி பண்ணுவாங்க.. :-)
//
கண்டிப்பா :)
//
ச்சின்னப் பையன் said...
என்ன, இந்த படம் ரிலீஸாயிடுச்சா??????
//
ஆமாங்க.. ஆமா.. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடச்சுடுச்சு..அதே மாதிரி ஏப்ரல் 20 அன்னிக்கு பூச்சாண்டி கடையையும் திறக்க போறாங்க.. அப்பா எவ்ளோ தகவல் சொல்ல வேண்டி இருக்கு :)
//
இவ்வளவு நேரம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துது பதிவு..
(மௌனம் பேசியதே ஸ்டைல்லயே படிக்கோனும் :P)
//
கண்ணன் கேவலமா முழிக்கிற மாதிரி முழிக்கிறேன்
//
இதைவிட சிம்பிளா நீங்க அம்மணி நடிக்கவே இல்லைனு சொல்லியிருக்கலாம் :D சும்மா வந்துட்டு போறாங்க அம்புட்டுதான் :)
//
இதை தான் பின்நவீனத்துவம்னு பெரியவா எல்லாம் சொல்றா :)
//
இதுக்கு பேருதான் சைக்கிள் கேப்ல ஏரோப்ளேன் ஓட்றதோ.. நீங்க ஓட்டுங்க ராசா.. நாங்க ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பாக்குறோம் :P
//
நீங்க தான் சொல்ல மாட்டேன்குறீங்க.. நானுமா சொல்ல கூடாது.. என்ன கொடும G3 இது :)
@Poornima Saravana kumar
//
அருமையா சொல்லிட்டீங்க பிரகாஷ்ராஜின் நடிப்பை:)
//
வாஙக குறுந்தகவல் கலாட்டா அம்ம்ணி.. வருகைக்கு நன்றி :)
@gayathri
//
neegalum sonna nammpa mattega itha padichatum nejama unga pnnuku than kalyanamnu nenachen :)))))))))))))
//
நீங்களும் சொன்னா நம்ப மாட்டீங்க.. இப்போ எல்லாம் நீங்க ரொம்ப தமாஸா பேசுறீங்க..
அட ராமா.. ஏன் என்னை இப்படியெல்லாம் வியாழக்கிழமை அதுவுமா பொய் சொல்ல வைக்கிற :)
ஹெஹெஹா.. ஒரு ரவுண்ட் அடிக்க சான்ஸ் கிடச்சிருக்கு :)
@gayathri
//
neegalum sonna nammpa mattega itha padichatum nejama unga pnnuku than kalyanamnu nenachen :)))))))))))))
//
நீங்களும் சொன்னா நம்ப மாட்டீங்க.. இப்போ எல்லாம் நீங்க ரொம்ப தமாஸா பேசுறீங்க..
அட ராமா.. ஏன் என்னை இப்படியெல்லாம் வியாழக்கிழமை அதுவுமா பொய் சொல்ல வைக்கிற :)
nenga sonnathu poina naan sonnathu unma thane
--> aiyoo pavem. US le rombe aaniyo? veetuku veedu vasapadi mathum thaa irukkumnu nenachen.. aanilaam vera neraiya adicu vekkerangalo??
hehe.. avaru thaane payapadanum.. engeyo idikkuthe :)
----> avaru bayapada poratha nenacha thaa bayama irukku. wait panni parpom. athuku innum rombe varusham irukku. :D
@gayathri
//
nenga sonnathu poina naan sonnathu unma thane
//
”பொய்” பேசுறவன், தான் பேசுறது ”பொய்”னு சொன்னா அது ”உண்மை” தானே.. ஏன்னா அவன் ”பொய்”னு “உண்மை”யை சொல்றான். அப்போ நான் சொன்னது “உண்மை” தானே.
இன்னும் புரியலேன்னா “கோனார்” நோட்ஸ் வாங்கி ”அருஞ்சொற்பொருள்” எல்லாத்தையும் ஒரு தடவை நல்லா படிங்க
மைண்ட் வாய்ஸ் : அப்பாடா இப்போதைக்கு தப்பிச்சாச்சு
@viji
//
--> aiyoo pavem. US le rombe aaniyo? veetuku veedu vasapadi mathum thaa irukkumnu nenachen.. aanilaam vera neraiya adicu vekkerangalo??
//
ஆமா.. நெறயா ஆணியை அடிச்சு வச்சுடுறாங்கபா.. இதுல எது தேவையுள்ள ஆணி, தேவையில்லாத ஆணி கண்டு பிடிக்கிறதுக்குள்ள படாத பாடு படவேண்டியிருக்கு
//
----> avaru bayapada poratha nenacha thaa bayama irukku. wait panni parpom. athuku innum rombe varusham irukku. :D
//
கல்யாணம் முடிஞ்சவுடனே சீக்கிரம் ஒரு பேரனோ பேத்தியோ பெத்து அவர் கையில குடுத்து, கடமைய கண்டினியூ பண்ண் சொல்லுங்க எல்லாம் சரி ஆகிடும்
< அறிவு > (அப்டினு ஒன்னு இருக்கா? ): “புத்தி சொல்றாராம்”
Post a Comment