கிராமத்து வீடு என்றாலே முன்னாடி ரெண்டு வேப்ப மரங்கள், கொல்லை புறத்தில் தென்னை, வாழை, பப்பாளி என வீடை சுற்றி ஒரு சின்னதா ஒரு காடு இருக்கும். அதை தவிர ஊரில் ஆலமரம் (பஞ்சாயத்து நடத்த), அரசமரம், அத்திமரம், பூவரசமரம் என அங்கங்க இருக்கும். இது தான் பாரதிராஜாவின் டிபிகல் கிராமம். எங்க ஊரும் அப்படிதான். எங்க வீடும் அப்படிதான். வீட்டுக்கு முன்னே ரெண்டு வேப்பமரம் உண்டு, கொல்லையில் வாழையும் பப்பாளி மரமும் இருக்கு, தென்னை மட்டும் இல்ல - சில நடைமுறைசிக்கல் காரணத்துனால எங்க அப்பா தென்னை வைக்க ஒத்துக்கல.
இதை தவிர்த்து, ஆலமரம், அரசமரம், அத்திமரம், பூவரசமரம் எல்லாம் என் கிராமத்தில் இருந்தது. இன்னொரு முக்கியம்சமாக இலந்தமரமும் இருந்தது.
இதுவரைக்கும் எனக்கு அதிகமாக தெரிந்த இந்த மரங்கள் சில இப்போ எங்க ஊரிலே இல்லாம அழிஞ்சு போச்சு. அதை பற்றிய என்னுடைய ஆதங்கமான பதிவு தான் இது. சரி வாங்க ஒவ்வொரு மரமா பாப்போம்.
ஆலமரம் -
இந்த மரம் பொதுவா குளகரையோரமாகவோ, ஆற்றங்கரையோரமாகவோ தான் இருக்கும். பெரும்பாலும் எனக்குத் தெரிஞ்சு ஆலமரத்தின் அடியில் கோயில் எதுவும் இருந்த்த்தில்லை( தவறா இருந்தா சொல்லுங்க) . ”ஆலும் வேலும் பல்லுக்குறுதி” கேள்விபட்டிருப்பீங்க.. நான் செயல்லேலே இறங்கியிருக்கேன். இருந்தாலும் வேப்பக்குச்சியில இருக்கிற திருப்தி ஆலங்குச்சியில இருந்ததில்லை. ஆலமரத்தின் தனிச்சிறப்பே அதன் விழுது தான். நம்ம எல்லாம் கேள்விபட்டிருப்போம் கூட்டுகுடும்பத்தை ஆலமரத்தோட ஒப்பிட்டு பேசுறத நம்மெல்லாம் கேள்விபட்டிருப்போம், அதுக்கு இந்த விழுதுகள் தான் முக்கிய காரணம்.
வெயிலுக்கு மட்டுமல்ல மழைக்கு கூட (பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவங்க) ஆலமரத்தின் அடியில் ஒதுங்கலாம், இலை அவ்ளோ அடர்த்தியாயிருக்கும் அதனால மழையிலிருந்து நனையாமல் ஒதுங்க முடியும். ஆனால் இந்த ஆலமரத்தின் அடியில் ஒரு புல் பூண்டு கூட முளைக்காது, இதுக்கு அதே காரணம் தான்.
புதிதாக புதிதாக உருவாக்க வில்லையெனினும், இருக்கிற மரங்களை யாரும் அவ்வளவாக அழிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்த மரத்தின் தண்டு எதற்கும் பயன்படாது, எரிப்பதற்கு கூட உகந்த்தல்ல்ல.. அதனால் தான் இன்னும் பல மரஙகளை விட்டு வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
ஒரு ஒரு காலத்துல எங்க ஊர் குளக்கரையில் ரெண்டு ஆலமரங்களை பொன்னைய்யா என்பவர் தான் நட்டிருந்ந்திருக்கிறார். 1993 வாக்கில் தீபாவளி சமயத்தில் வெள்ளம் காரணமாக, மடை உடைபட்டு மரம் கீழே விழுந்துவிட்ட்து, அவரும் அதே சமயத்தில் இரண்டு நாள் கழித்து இறந்து போய்விட்டார், மரம் விழுந்தது அவருக்கு தெரியாமலே போய்விட்டது. ஊரில் இருந்த எல்லோரும் ரொம்ப பெருமையாவும் ஆச்சர்யாமாவும் பேசினாங்க இந்த ஒற்றுமையை. இன்னும் ஒரு மரம் இருக்கு அங்கேயே, அவர் நினைவாக அடுத்த சந்த்திக்கு.
அரசமரம்:
அரசமரம் -
முத்தாலம்ம்ன் கோயிலும் முனியாண்டி கோயிலும், எங்கள் ஊரின் கிழக்கு கோடியிலும் அதை தாண்டி வயல் வெளியும், குளம்/கிணறும் இருக்கும். காலையில் கிணறு/குளத்தில் குளித்து விட்டும் பெருசுகள் இந்த கோயிலில் ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஊருக்குள் நுழைவார்கள். பூவரசம் மரத்த வெட்டினாலும் இந்த மரத்தை யாரும் தொடவில்லை, வெட்டும் போது சில வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால், பயந்து விட்டுவிட்டனர் புண்ணியவான்கள், அந்த அளவிற்கு மரத்தின் கிளை நாலாபக்கமும் படர்ந்து விரிந்து இருக்கும். இதன் இலையும் அத்தி மர இலையும் கிட்ட தட்ட ஒரே மாதிரியானவை தான்.
அத்திமரம்:
அத்திமரம் -
மரத்தின் தண்டு பாகம் வெண்ணையின் போல வெள்ளையாக இருக்கும் இந்த மரத்தின் இலையும் அரச மர இலையை போல இருக்கும், பழம் ரொம்ப செந்நிறமாக இருக்கும். இத வச்சு தான் “அத்திபழ செவப்பா?,என் அத்த மக செவப்பா?”னு ஒரு சினிமா பாட்டு ஒன்னு வந்துச்சு. இலை அளவில் சிறியதாக இருப்பதால் அவ்வளவாக நிழல் விழாது. நான் படிச்ச பள்ளிக்கூட ப்ளே கிரவுண்டில் இந்த மரம் இருந்த்துச்சு. இப்போ கண்டிப்பா இருக்காது, ப்ளே கிரவுண்ட் எல்லாம் வீடு கட்டா கிரவுண்ட் போட்டு வித்துட்டதா கேள்வி.
இலந்தைமரம் -
கார்த்திகை இலந்தைமரம் -
கார்த்திகை, மார்கழி மாசத்துல பூப்பூக்க ஆரம்பிக்கும் தை மாசத்துல பழம் பழுக்க ஆரம்ப்சிச்சுடும் பஜனை ஆரம்பிக்கும் போது அந்த தைமாச குளிர்ல விள்க்கு வெளிச்சத்துல பழத்த் சேகரிக்க ஒரு கூட்டம் எப்போவும் எங்க வீட்டை சுற்றி இருக்கும், அதுல் நாங்களும் இருப்போம் ஏன்னா இந்த மரத்தடியில தான் எங்க வீடு இருந்துச்சு. மரத்துல ஏறியும் உலுப்பிவதுண்டு, ஆனா முள் தொல்ல அதிகம். மரம் முழுவதும் இலையை விட முட்கள அதிகமா இருக்கும் அதுவும் கொக்கி போல இருப்பதால் முள் குத்தினால் கவன்மாக எடுக்க வேண்டும் இல்லையெனில் மொத்த சதையையும் பறிகொடுக்க வேண்டியிருக்கும்.

இலந்த இலந்த பழ சுவைக்கு ஒப்பிடுகையில் இந்த பலியெல்லாம் தெல்லாம் ரொம்ப சாதாரணம், பல முறை ரத்தம் பார்த்த்துண்டு. இந்த பதிவ நான் எழுதி கிட்ட தட்ட மூனுமாசம் ஆச்சு, ஆணி அதிகமானதால் பதிவிட முடியல, எஸ்ராவின் இந்த பதிவ படிச்ச உடனே நல்ல வேளை தாமதம் ஆச்சுனு மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன். படிச்சுபாருங்க இலந்தபழ சுவைய பத்தி எப்படி எழுதியிருக்காருனு..
இம்மரத்தை இம்மரத்தை பொதுவா காட்டில் மட்டும் தான் காணமுடியும், அதிர்ஷ்ட வசமாக எங்க வீட்டின் அருகே இருந்தது. ”இலந்த மர வீடு” என்று எங்க வீட்டுக்கு ஒரு லேண்ட் மார்க் வச்சு பெருமையா சொல்வதுண்டு.
ஆனா ஆனா ஒரு ஏழு வருசத்துக்கு முன்னே பத்து பைசாவுக்கு உபயோகமில்லாத நாலு ஊரு பெருசுங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து சாமி கும்பிட பணம் வேணும்’னு சொல்லி அந்த மரத்தை வெட்டி சாமி பெயரை சொல்லி சாப்டுட்டானுங்க.
நம்ம பூவரசமரம் -
நம்ம கவிஞர்களுக்கு ரொம்ப பிடித்த மரம். என் அறிவிற்கு எட்டிய வரை, இந்த மரம் கிட்ட தட்ட அழிந்தே விட்டது. கிழக்கே போகும் இரயில். 4 ஸ்டூடன்ஸ், சக்திவேல் போன்ற படஙகளில் இத பத்தின பாடல் உண்டு. குசும்புக்கார கவிஞனுங்கு டபுள் மீனிங்க்க்கு தான் பயன்படுத்தி இருக்கானுங்க, கிராமத்துல பொண்ணுங்க மத்தியில் சொன்னா அடி/உதை தான் கிடைக்கும். இல்லே குறைந்த பட்சம் ஒரு “முறைப்பாவது” கிடைக்கும். அதன் இலையை மடித்து விசிலாக பயன்படுத்தியிருக்கோம். இலை ரொம்ப மிருதுவாவும் இல்லாம, ஆலமரம் போல கடினமாகவும் இல்லாமல் இடைபட்டதா இருக்கும்.

அதன் அதன் காயை காம்புடன் ஒடித்து பெணகள் பமபரம் போல சுற்றி விளையாடுவதுண்டு. கரும்பச்சை இலைகளுக்கிடையே இருக்கும் மஞ்சள் நிற பூக்கள் அருமையாக இருக்கும் பார்ப்பதற்கு. அதிர்ஷ்டவசமாக இந்த மரம் எங்க ஊரில் இருந்தது. இதனடியில் முத்தாலம்மன் கோவிலும் இருந்த்து. எதுக்காக இந்த மரத்தை வெட்டுனாங்கனு தெரியல. இப்போ அந்த மரம் இட்த்தை வேப்பமரம் ஆக்கிரமிச்சு இருக்கு. ஆனாலும் எனக்கு அந்த பூவரசமரம் தான் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்துச்சு.
ம்ம்.. ம்ம்ம்ம்..... அது ஒரு அழகிய நிலாக்காலம்.
58 பின்னூட்டங்கள்:
எங்க ஊருல அதை தோட்டமுன்னுதான் சொல்லுவோம் :)_
தப்புங்க. எங்க ஊருல இருக்கிற ஆலமரத்துல அடியில எல்லாம் ஒரு பிள்ளையார் கோயில் கண்டிப்பா இருக்கே
ஆமாங்க. வாடகைக்கு ஆசைப்பட்டு இருந்த மரத்தை எல்லாம் வெட்டிட்டு வீடு கட்டியாச்சு. பழைய போட்டோஸ் எல்லாம் பாக்கும் போது ரொம்பவே சங்கடமா இருக்கும்
@தாரணி பிரியா
//
hi nanthan first nanathan first :)
//
ஆமாஙக.. ஆமா :)
//
எங்க ஊருல அதை தோட்டமுன்னுதான் சொல்லுவோம் :)_
//
ஹஹஹா :)
//
தப்புங்க. எங்க ஊருல இருக்கிற ஆலமரத்துல அடியில எல்லாம் ஒரு பிள்ளையார் கோயில் கண்டிப்பா இருக்கே
//
ஆமாவா... திருத்திடுறேன்.. எழுதும் போதே மைல்டா டவுட்டு இருந்துச்சு. :)
//
ஆமாங்க. வாடகைக்கு ஆசைப்பட்டு இருந்த மரத்தை எல்லாம் வெட்டிட்டு வீடு கட்டியாச்சு. பழைய போட்டோஸ் எல்லாம் பாக்கும் போது ரொம்பவே சங்கடமா இருக்கும்
//
சரி விடுங்க போட்டாவாவது வச்சிருக்கீங்களே :) முடிஞ்சா ஒன்னு ரெண்டு வேம்பு வளருங்கள்
--> all this maram, my house got. :D but in smaller size.
ஆலமரம், அரசமரம், அத்திமரம், பூவரசமரம் எல்லாம்
--> i have not seen in real.
இந்த விழுதுகள் தான் முக்கிய காரணம்.
--> u mean the mega serial??
வெயிலுக்கு மட்டுமல்ல மழைக்கு கூட (பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவங்க) ஆலமரத்தின் அடியில் ஒதுங்கலாம்
--> otungi?? yen ithu asingama pesikithu! :P police pudicithu poidum.
இலந்தை மரம்
---> hahahaha... tamil movies le ketta name. how is this fruit taste?
அதுல் நாங்களும் இருப்போம் ஏன்னா இந்த மரத்தடியில தான் எங்க வீடு இருந்துச்சு.
--> actual yenna is, for side adikka. :D
பூவரசம் மரம்:
--> antha poovukoru arasan poovarasan.... :D
p/s: yenga ungal nagasuvai nyanam? post rombe serious aah irukku? pls..seekirama ICU le admit panunga. anyway ungala naa bully panale.. just konjam numors serthen. avalo thaa u see.. :D
bye!
nalla pathivu annachi
//
ஆமாவா... திருத்திடுறேன்.. எழுதும் போதே மைல்டா டவுட்டு இருந்துச்சு. :)
hahahaahha
ok ippo thiruthidunga
valthukkal
@viji
//
all this maram, my house got. :D but in smaller size.
//
size doesnt matter :)
//
i have not seen in real.
//
then, have u seen in reel?
//
u mean the mega serial??
//
aandava intha ponnukku "ariva" konjam kammiya kuden :)
//
otungi?? yen ithu asingama pesikithu! :P police pudicithu poidum.
//
puthi poguthu paaru pullaikku :) "athai" pidichuttu poi enna pannuvaanga ???
//
hahahaha... tamil movies le ketta name. how is this fruit taste?
//
Its really very tasty lah :) and its rare nowadays
//
yenga ungal nagasuvai nyanam? post rombe serious aah irukku?
//
matter serious'la.. between there are some jolly matters.. but you missed them :D
@sakthi
//
nalla pathivu annachi
//
பொதுவா ஆரம்பம் நல்லா இருக்கும் ஃபினிஷிங் தான் இடிக்கும்.. இங்கே ஆரம்பமே அலம்பலா இருக்கே.. ஏனிந்த கொலவெறி :) :D :-) :P
@sakthi
//
hahahaahha
ok ippo thiruthidunga
//
திருத்திட்டேங்க சக்தி
//
vithyasamana pathivu
valthukkal
//
வருகைக்கு மிக்க நன்றி வீட்டுபுறா :)
சாமிக்கு இலந்தை மரம் பலியா?
அச்சச்சோ(-:
என்ன கொள்ளை?
கொல்லைப்புறமுன்னு சொல்லுங்க.
இலந்தைப்பழப் படம்..... ...சூப்பர்.
@துளசி கோபால்
//
அருமையான மரங்களும் பதிவும்.
சாமிக்கு இலந்தை மரம் பலியா?
அச்சச்சோ(-:
என்ன கொள்ளை?
கொல்லைப்புறமுன்னு சொல்லுங்க.
இலந்தைப்பழப் படம்..... ...சூப்பர்.
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமாஙக் பாவிபயமக்க சாமி பேர சொல்லி சாப்புட்டானுங்க.. ஆனா இப்போ அவனுக யாரும் நல்லாவே இல்ல
படம் போல பழமும் நல்லா இருக்கும். ஐ ரியலி மிஸ் தட் :(
ஆலமரம்,அரசமரங்கள் போன தலைமுறைகளின் இயற்கையின்பால் கொண்டிருந்த பொறுப்பின் சாட்சிகளாக நிற்கின்றன.
இந்த தலைமுறையும் சரி அரசும் சரி ஏனோ இது போன்ற விசயங்களில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை :(
தொடரட்டும் கிராமத்து நினைவுகள்.
Aaha.. adutha tripkku location readya irukku pola ;) point noted :D
Sila karanangalukkaga andha veeta vikkavendiyaadhaayiduchu.. adhukkappuram chedi/maram valakkara aarvam paatikku poiduchu and more over apartmentskku vandhappuram andha optionum illae :D
@ஆயில்யன்
//இலந்தை மரம் பற்றிய நினைவுகளும்,இலந்தை பழங்களும் என் பள்ளி கால நினைவுகளினை மீட்டெடுத்தது !
//
பள்ளி வாசல்ல எதாவது ஒரு பாட்டி இலந்தை, நாவல் , மாம்பழத்தோட நிப்பாங்க தானே :)
//
ஆலமரம்,அரசமரங்கள் போன தலைமுறைகளின் இயற்கையின்பால் கொண்டிருந்த பொறுப்பின் சாட்சிகளாக நிற்கின்றன.
//
உண்மை தான்
// இந்த தலைமுறையும் சரி அரசும் சரி ஏனோ இது போன்ற விசயங்களில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை :(
//
எனக்கு கொஞ்சம் ”ஆர்வகோளாறு” இருக்குனு நெனைக்கிறேன்.. பாப்போம் ஆர்வம் எதுவரைக்கும் போகுதுன்னு
//
மாதேவி said...
நல்ல பதிவு.
தொடரட்டும் கிராமத்து நினைவுகள்.
//
முதல் வருகைக்கு மிக்க நன்றி மாதேவி
//
Aaha.. adutha tripkku location readya irukku pola ;) point noted :D
//
இந்த ட்ரிப்லே கூட போயிட்டு வந்திருக்கலாம், எனனா நாந்தான் அங்க இருந்திருக்க மாட்டேன்
//
G3 said...
Naanga munnadi irundha veetlayum veeta suthi ella maramum vechirundhom.. seetha, sapota, maanga, goyya, pala, pappali, thennai, nellikaai, pookalla kanakambaram, december poo, saamandhi, sampangi, nithyamallinu...
//
ஆம சில பூச்செடியும் இருக்குங்க சொல்ல மறந்துட்டேன்..செம்பருத்தி இருந்துச்சு..மத்த செடி பேரு எல்லாம் ஞாபகமில்லே :(
//
Sila karanangalukkaga andha veeta vikkavendiyaadhaayiduchu.. adhukkappuram chedi/maram valakkara aarvam paatikku poiduchu and more over apartmentskku vandhappuram andha optionum illae :D
//
அட என்ன இப்படி சொல்லிடீங்க, சிஙக்ப்பூர்ல ஒரு பாட்டி அபார்ட்மெண்ட்ல வேப்பமரமே வளக்குறாங்க தெரியுமா? எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரட்டும்..அதுக்கு அப்புறம் எதாவது பார்க்ல போய் தொட்டியோட வச்சுட்டு வந்துட வேண்டியது தான் சொல்லியே வளக்குறாங்க .. ட்ரை பண்ணி பாருங்க
ஆலமரம்:
ஏரிக்கரையோர ஆலமரத்தின் அடிப்பகுதிக்கு அம்மை வார்த்ததுபோல் இருக்கும்.காரணம்
வாய்புண்ணிற்கும்,உதட்டு வெடிப்பிற்கும் (குறிப்பாக மார்கழி மாதத்தில்)ஆலம்பால் வைத்தியபொருளானதால்,
காலைக்கடனுக்காக(ஏரிக்கரைதான் எங்கள் ஊரின் பொதுக்கழிப்பறை) செல்வோர் கல்லாலும்,அறுப்புக்கு செல்வோர் அரிவாளாலும் கொந்தி கொந்தி அப்படி ஆகியிருக்கும். ஆலம்பழ பருவத்தில் அது கிளிகளின் கூடாரம்.பசங்கள பார்த்தும் பயப்படாமல் பழங்களைத் திண்ணும்.அம்புட்டு ருசி.நாங்களும் சாப்பிட்டிருக்கிறோம்.புளிப்பு கலந்த சுவை.
அரசமரம்:
கதிரடிக்கும் களத்தினோரம் பெரிய அரசமரம் இருக்கிறது. நிழல் தருவதொன்றே இதன் தலையாய பணி.எப்போதும் இருவர் (அ) பலர் அமர்ந்து கதையளப்பர். எல்லையிலிருக்கும் அரசமரமொன்று வேப்பமரத்தோடு பிண்ணியிருப்பதால் மஞ்சள் துணிக்கட்டி சாமியாக்கிவிட்டனர்.
இன்னும், புளியமரம்,பூவரசம்,வேப்பம்,முருங்கை போன்ற பல மரங்களுக்கும் கதைகள் இருக்கின்றன. பின்னூட்டமென்பதால்
நிறுத்திக்கொள்கிறேன்.
மரங்களை ஞாபகப்படுத்தியதற்காக நன்றி. அமர்க்களம்.
valthukkal
appadiye ennoda kavithaiyum vanthu erukku padichu parunga
@துளசி கோபால்
//
என்ன கொள்ளை?
கொல்லைப்புறமுன்னு சொல்லுங்க.
//
சொல்லிட்டேன்.. ஹிஹிஹி.. அதாவது திருத்திட்டேன்.. நன்றிங்க.. முதல்ல் எனக்கு புரியல, மரத்த வெடுறத தான் “என்ன கொள்ளைனு” சொல்றீங்களோனு நெனச்சேன்.. தீடீர்னு ஒரு ஞானோதயம் ( அப்பப்போ வரும்) வந்து ஆஹா எழுத்துபிழை இருக்கு, அத தான் சொல்றாங்கனு சொல்லுச்சு :))
நன்றிங்க
@ psycho said...
//
ஆம்,கிராமத்திற்கு மரங்கள் தான் அழகு.
//
தலைக்கு முடி மாதிரி :)
// ஆலமரம்:
ஏரிக்கரையோர ஆலமரத்தின் அடிப்பகுதிக்கு அம்மை வார்த்ததுபோல் இருக்கும்.காரணம்
வாய்புண்ணிற்கும்,உதட்டு வெடிப்பிற்கும் (குறிப்பாக மார்கழி மாதத்தில்)ஆலம்பால் வைத்தியபொருளானதால்,
காலைக்கடனுக்காக(ஏரிக்கரைதான் எங்கள் ஊரின் பொதுக்கழிப்பறை) செல்வோர் கல்லாலும்,அறுப்புக்கு செல்வோர் அரிவாளாலும் கொந்தி கொந்தி அப்படி ஆகியிருக்கும். ஆலம்பழ பருவத்தில் அது கிளிகளின் கூடாரம்.பசங்கள பார்த்தும் பயப்படாமல் பழங்களைத் திண்ணும்.அம்புட்டு ருசி.நாங்களும் சாப்பிட்டிருக்கிறோம்.புளிப்பு கலந்த சுவை.
//
சூப்பர். கிளி போல, மைனாவும் அதிகமிருக்கும். அதே போல ஒரு சில ஆலமரங்களில் ”இளங்கொடியை” கட்டி தொங்க விட்டிருப்பாங்க.. சில மரத்துல ஆணி அடிச்சிருப்பாங்க ( பேயை விரட்டுர்றதா சொல்ல்லி)
//
அரசமரம்:
கதிரடிக்கும் களத்தினோரம் பெரிய அரசமரம் இருக்கிறது. நிழல் தருவதொன்றே இதன் தலையாய பணி.எப்போதும் இருவர் (அ) பலர் அமர்ந்து கதையளப்பர். எல்லையிலிருக்கும் அரசமரமொன்று வேப்பமரத்தோடு பிண்ணியிருப்பதால் மஞ்சள் துணிக்கட்டி சாமியாக்கிவிட்டனர்.
//
ஆண்களுக்கு மரத்தடி.. பெண்களுக்கு கிணத்தடி வம்பளக்க்க.. இப்போ யாரும் வீட்ட விட்டு வர்றது இல்ல, எல்லாம் டீவி செய்த மாயம்
:)
//
இன்னும், புளியமரம்,பூவரசம்,வேப்பம்,முருங்கை போன்ற பல மரங்களுக்கும் கதைகள் இருக்கின்றன. பின்னூட்டமென்பதால்
நிறுத்திக்கொள்கிறேன்.
//
ஒரு பதிவு வேணா போடுங்க.. “கொடிக்காபுளி” மரம் ஒன்னு இருக்க்கு.. அதோட பழம் ரொம்ப அருமையா இருக்கும் மற்ற பழங்களை விட அது வித்தியாசமானது.
//
மரங்களை ஞாபகப்படுத்தியதற்காக நன்றி. அமர்க்களம்.
//
உங்கள் வருகைக்கும், அருமையான கருத்துகளுக்கும் மிக்க நன்றி :)
@sakthi
//
aalavnanthan unga pathivu vikatan la gud blog la vanthu erukku
valthukkal
appadiye ennoda kavithaiyum vanthu erukku padichu parunga
//
pathen.. romba nandringa theriya padithiyathukku.. otherwise i will not know this..
I dont know who send this post to them
//
G3 said...
25 naan dhaan :D
//
நீங்களும் குவார்ட்டரா? நன்றி :)
--> yeah in the photo's u published. :D
aandava intha ponnukku "ariva" konjam kammiya kuden :)
--> enna vechi comedy paneringala?
puthi poguthu paaru pullaikku :) "athai" pidichuttu poi enna pannuvaanga ???
-> i mean if police c couples romance there, they will catch them.. i think u didnt get what i meant
Its really very tasty lah :) and its rare nowadays
--? okey if i visit INDIA, i will ask periapa.. even it is rare, he will get for me. =)
matter serious'la.. between there are some jolly matters.. but you missed them :D
---> aiyayoo appona enaku thaa jokes puriyalainu sollringala? cheri parvale..
thanks for allowing my comment
அதுவும் அதை மிளகாய்,உப்புடன் சேர்த்து அரைத்து தயிர் சாதத்துக்கு தொட்டு கொண்டால்....நாக்கில் எச்சில் ஊரும் சுவைதான்.
இலந்தை வடை என்று எங்கள் பள்ளிகருகில் இருக்கும் ஆயாவிடம் வாங்கி தின்ற நியாபகம் வருதே நியாபகம் வருதே :)
அருமை ஆளவந்தான்
பழையகாலங்களில்
வாழ்ந்தவர்கள் மிகவும்
ஆரோக்கியாம வாழ்ந்த்ததிற்கு
இது மிகவும் முக்கியாமான காரணமாகும்.
//
நீங்க சொல்லி இருப்பது ஒன்றும் தப்பு இல்லைங்க.
ஆனா சாதரனாமா ஆல மரத்தினடியில் கோவில் இருக்குமுங்க.
அப்படியே பறித்து சாப்பிடனும் போல இருந்தது :-)
பிழை பிடித்தல்:-))))
அது இருக்கட்டும்.
சென்னையில் அம்பிகா அப்பளம் கடை இருக்குல்லே....அங்கே இலந்தவடை கிடைக்கும்.
மகளுடைய அதிவிருப்பப் பண்டம்.
நிறைய வாங்கி ஹேண்ட் பேக்லே வச்சுக்கிட்டுத் தின்னுக்கிட்டே வருவோம்.
ஃப்ளைட் லேண்ட் ஆனதும் பாக்கி இருப்பதையெல்லாம் எடுத்துத் தின்னு முடிச்சுட்டுத்தான் இமிக்ரேஷன் வரிசைக்கே போவோம்.
நாய் புடிச்சுரும்லெ!!!!
மன்னிக்கவும்.
மிக அருமையான தொகுப்பு, நீங்கள் கூறி இருக்கும் எல்லா மரங்களுமே
சிறப்பு வாய்ந்தவைகள்.
குறிப்பா வேப்பமரம், ஆலமரம் இவை அனைத்தும், அனைவரும் மறந்த நிலையில் நீங்க நினைவு படுத்தி இருக்கிறீர்கள் என்றுதான் கூறவேண்டும்.
குறிப்பாக இலங்தைப்பழம், எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதில உப்பு மற்றும் காரம் போட்டு இலந்தை வடை என்று விற்பார்கள்.
அதை நான் நிறைய வாங்கி சாப்பிடுவேன். ரொம்ப நல்ல இருக்கும்.
வாழ்த்துக்கள் ஆளவந்தான்.
இது போல் நீங்க நிறைய சாதனைகளை படைக்க
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
nangalum thanga
vesile adichiten itha pani iruka mattana enna.ithaum pani iruken pa
ithlem enga vetla suthi illaye irunhtlaum naan irukarthu keramam than
ithlam ippavum enga oorla iruku pa .
but ithelem rasika than yarum illa enna thavera
rompa than neyapaga sakthi ungaluku ellam sinima pattum neyapagam vachitu irukenga
ama athigama than irukum enna panrathu
அதுவும் கொக்கி போல இருப்பதால் முள் குத்தினால் கவன்மாக எடுக்க வேண்டும் இல்லையெனில் மொத்த சதையையும் பறிகொடுக்க வேண்டியிருக்கும்.
nangalum itha anupavichi irukomla
unga post vikadanla vanthathuku vazthukkal
மா, பலா,தென்னை,வாழை என்று வீட்டை சுற்றியே ஒரு தோப்பு.இழப்புக்களில் இவைகளும்.
@viji
//
--> enna vechi comedy paneringala?
//
sathiyama illa
//
i mean if police c couples romance there, they will catch them.. i think u didnt get what i meant
//
I knew what you meant. I was giving another scenario, but you didnt get that unfortunately :)))
//
okey if i visit INDIA, i will ask periapa.. even it is rare, he will get for me. =)
//
Thats nice :)
//
aiyayoo appona enaku thaa jokes puriyalainu sollringala? cheri parvale..
//
hehe :)
@ lynda ann amma
//
I don't know the words but--the trees and such are a sign to me of the beauty of nature and how we should honor the earth,
//
This is about my childhood memories related to some (missing) trees. I can explain you detail in person.
@பட்டாம்பூச்சி
//
இலந்தை பழத்தின் சுவையே அலாதிதான்.
அதுவும் அதை மிளகாய்,உப்புடன் சேர்த்து அரைத்து தயிர் சாதத்துக்கு தொட்டு கொண்டால்....நாக்கில் எச்சில் ஊரும் சுவைதான்.
இலந்தை வடை என்று எங்கள் பள்ளிகருகில் இருக்கும் ஆயாவிடம் வாங்கி தின்ற நியாபகம் வருதே நியாபகம் வருதே :)
//
என்ன பண்றதுங்க அது மாதிரி ஒரு மரத்த வளர்க்கிறத தவிர வேற வழியில்லை.. முயற்சி செய்றேன் பாப்போம்
@RAMYA
//
அருமை ஆளவந்தான்
பழையகாலங்களில்
வாழ்ந்தவர்கள் மிகவும்
ஆரோக்கியாம வாழ்ந்த்ததிற்கு
இது மிகவும் முக்கியாமான காரணமாகும்.
//
ரொம்பசரி.. நம்ம வெளிவிடும் CO2வை உள்வாங்கி நமக்கு தேவையான O2வை குடுத்துச்சு, ஆனா இப்போ CO2வையே தான் பெரும்பாலும் சுவாசிக்கிறோம் :(
//
நீங்க சொல்லி இருப்பது ஒன்றும் தப்பு இல்லைங்க.
ஆனா சாதரனாமா ஆல மரத்தினடியில் கோவில் இருக்குமுங்க.
//
சரி தாங்க :)
//
இலந்தைப்பழப் படம்..... ...சூப்பர்.
அப்படியே பறித்து சாப்பிடனும் போல இருந்தது :-)
//
நெட்டில் தேடும் போது மாட்டியது, ரொம்ப பிடிச்சு போயிருந்ததால் இங்கே போட்டுட்டேன்
@துளசி கோபால்
//
டீச்சரா இருப்பதில் உள்ள சுகம் இதுதான்.
பிழை பிடித்தல்:-))))
//
ஹஹா :) “திருத்தப்பட்டேன்”
//
சென்னையில் அம்பிகா அப்பளம் கடை இருக்குல்லே....அங்கே இலந்தவடை கிடைக்கும்.
மகளுடைய அதிவிருப்பப் பண்டம்.
//
அம்பிகா அப்பளம் கேள்வி பட்டிருக்கேன். சொல்லீட்டீங்கள்ல போகும் போது ஒரு விசிட் அடிச்சுட வேண்டியது தான்.
//
நிறைய வாங்கி ஹேண்ட் பேக்லே வச்சுக்கிட்டுத் தின்னுக்கிட்டே வருவோம்.
ஃப்ளைட் லேண்ட் ஆனதும் பாக்கி இருப்பதையெல்லாம் எடுத்துத் தின்னு முடிச்சுட்டுத்தான் இமிக்ரேஷன் வரிசைக்கே போவோம்.
நாய் புடிச்சுரும்லெ!!!!
//
அட அதுக்கு ரெண்டு குடுத்துட்டு வரலாம்ல :)))))
@RAMYA
//
உங்களோட இந்த பதிவை நான் மிகவும் தாமதகப் பார்க்கிறேன்
//
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க :))
//
மன்னிக்கவும்.
//
அட என்ன இது பெரிய் பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு.. வழக்கமான “மவனே” ஸ்டைலையே கண்டினியூ பண்ணுங்க :)))
//
மிக அருமையான தொகுப்பு, நீங்கள் கூறி இருக்கும் எல்லா மரங்களுமே
சிறப்பு வாய்ந்தவைகள்.
குறிப்பா வேப்பமரம், ஆலமரம் இவை அனைத்தும், அனைவரும் மறந்த நிலையில் நீங்க நினைவு படுத்தி இருக்கிறீர்கள் என்றுதான் கூறவேண்டும்.
//
நன்றி ரம்யா :)
//
குறிப்பாக இலங்தைப்பழம், எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதில உப்பு மற்றும் காரம் போட்டு இலந்தை வடை என்று விற்பார்கள்.
அதை நான் நிறைய வாங்கி சாப்பிடுவேன். ரொம்ப நல்ல இருக்கும்.
//
எனக்கும் ரொம்ப பிடிச்ச பழம் தான், என்ன பண்றது இப்பொ அதிகமா கிடைக்கிறதில்ல
//
விகடன் "Good Blog" இந்த பதிவு வந்திருக்கின்றது.
வாழ்த்துக்கள் ஆளவந்தான்.
இது போல் நீங்க நிறைய சாதனைகளை படைக்க
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//
மிக்க நன்றி ரம்யா!!
@gayathri
// அதன் இலையை மடித்து விசிலாக பயன்படுத்தியிருக்கோம்.
nangalum thanga
//
அப்பவே ஆரம்பிச்சாச்சு போல :)))
//
அதன் காயை காம்புடன் ஒடித்து பெணகள் பமபரம் போல சுற்றி விளையாடுவதுண்டு.
vesile adichiten itha pani iruka mattana enna.ithaum pani iruken pa
//
நியாயமான கேள்வி தான்
//கிராமத்து வீடு என்றாலே முன்னாடி ரெண்டு வேப்ப மரங்கள், கொல்லை புறத்தில் தென்னை, வாழை, பப்பாளி என வீடை சுற்றி ஒரு சின்னதா ஒரு காடு இருக்கும்.
ithlem enga vetla suthi illaye irunhtlaum naan irukarthu keramam than
//
ஒத்துகிறேன்..நீங்க என்னை மாதிரி ஒரு ”பட்டிக்காடு”னு ஒத்துகிறேன் :)))
//
ஆலமரம், அரசமரம், பூவரசமரம்
ithlam ippavum enga oorla iruku pa .
but ithelem rasika than yarum illa enna thavera
//
அடபாவமே.. நீங்களும் இப்போ உங்க ஊர்ல இல்லியே :))
//
இத வச்சு தான் “அத்திபழ செவப்பா?,என் அத்த மக செவப்பா?”னு ஒரு சினிமா பாட்டு ஒன்னு வந்துச்சு.
rompa than neyapaga sakthi ungaluku ellam sinima pattum neyapagam vachitu irukenga
//
அட ஒரு உதா”ரணத்து”க்கு சொன்னேங்க.. அப்பப்போ இப்டி எதாவது ஒன்னு எடுத்துவிடுவேன் .. அதெல்லாம் கண்டுக்கப்பிடாது ஆமா :)
//
மரம் முழுவதும் இலையை விட முட்கள அதிகமா இருக்கும்
ama athigama than irukum enna panrathu
//
பழத்தோட சுவையை இன்னொரு தடவ நெனச்சு பாருங்க :)
//
அதுவும் கொக்கி போல இருப்பதால் முள் குத்தினால் கவன்மாக எடுக்க வேண்டும் இல்லையெனில் மொத்த சதையையும் பறிகொடுக்க வேண்டியிருக்கும்.
nangalum itha anupavichi irukomla
//
சேம் பிளட்டா ? :)))
//
okpa post nalla iruku so ungala kummi adikama summaa vettutu poren
unga post vikadanla vanthathuku vazthukkal
//
வாழ்த்துக்கு வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி காயத்ரி அனிதா (எப்புடி) :))))
@ஹேமா
//
மரங்களைச் சொல்லி மனதி ஊர் நினைவுகளுக்குள் நீந்த வைத்ததற்கு நன்றி.புளுக்கள் கெந்தி விளையாட இலந்தைந்ப்பழம் தின்றதும்,பூவரச இலையில் பீ..பீ வாசிச்சதும் கனவிலாவது வருமா !
//
நமக்கு எதோ அப்பபோ ஞாபகமாவது வரும்.. அடுத்த சந்ததிக்கு????
// மா, பலா,தென்னை,வாழை என்று வீட்டை சுற்றியே ஒரு தோப்பு.இழப்புக்களில் இவைகளும்.
//
உண்மை தான்
ஆமாங்க.. மரம் அழிஞ்சது மா
ithu eppadi therum
G3 sonnagala
(பி.கு நான் ஒரு கிராமத்தான்)
(பி.கு நான் ஒரு கிராமத்தான்)
You are welcome to come support us.If you hv script of any Good tamil Song please send us
Chinmaya Grameeya Kalai Kuzhu
THAMARAIPAKKAM
cord_tpkm@hotmail.com
Post a Comment