ArchiveNow watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|
அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
மழை - அரசியல் | 11/30/2008 |
நண்பர் லக்கி, "பெய்யெனப் பெய்திடும் மாமழை!” என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் அவருடைய பின்னூட்டங்களுக்கு பதில் எழுத நினைத்து, அது கொஞ்சம் அதிகமாகிவிட, அதை ஒரு பதிவாக்கிவிட்டேன்.
//
பிளாட் போட்டு விற்றால் விசாரிக்காமல் வாங்க நமக்கு எங்கே போயிற்று புத்தி. ஏரியை மடக்கி விற்கிறார்கள். சீப்பாக கிடக்கிறது என்று வாங்கிப் போடுவது யார்?
//
இதில் விற்றவனும், வாங்கியவனும் குற்றவாளிகளே. இதை தடுக்காமல், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அரசியல்வியாதிகளையும், அதிகாரிகளையும் எந்த் LIST-ல சேர்க்கிறது?
நாட்டையும் நகரையும் நிர்வகிக்க தானே மக்கள் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் சரியாக நிர்வகிக்கிறார்களா? கொஞ்சம் நெஞ்ச தொட்டு சொல்லுங்க? இந்த மாதிரி புறம்போக்கு இடங்களை ஒரு அரசியல்வாதி தொடர்பில்லாமல், விற்க முடியுமா?
மறுபடியும் விடாமல்
//ஒரு கோடியே முப்பது லட்சம் பேர் வசிக்க ஏற்ற நகரமா சென்னை? இவ்வளவு பேரையும் அரசியல்வாதிகளா சென்னைக்கு கொண்டுவந்தார்கள்?
//
ஒரு வீட்டில் மூன்று பேருக்கு மேல் வசிக்க முடியாத, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொண்டால் யார் தப்பு? குடும்பத் தலைவன்/தலைவி தானே? இந்த மக்கள் தொகை ஒரே நாளில் பெருகிடவில்லையே. தொழில் நிறுவனங்களை பரவலாக்கிருக்கலாமே? இதற்கும் ஒரு TRADEMARK பதில் உண்டு, ”கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறு இது”.
எந்த ஒரு சின்ன நிறுவனத்தை எடுத்தாலும், ஆண்டு ஆரம்பத்திலேயே அவர்களது குறிக்கோளையும் அதை நிறைவேற்றுவதற்கான, வழிமுறைகள்/சாத்தியக்கூறு/நடைமுறை சிக்க்ல்கள் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து விடுவார்கள்.
நடந்ததை விடுங்கள், இன்னும் இரண்டொரு வருடங்களில், இதே போன்றொரு வெள்ளம் கண்டிப்பாக வரும், அதை எதிர் கொள்ள எதாவது வழிமுறைகள் வைத்திருக்கிறார்களா? அப்படியெனில், அதில் பொதுமக்களின் /அரசியல் வாதிகளின்/அதிகாரிகளின் பங்கு என்ன?
There is a Parasitic Manager's Credo in software industly
Blame the innocent.
Take credit for other's work.
Fire the hero when he tells you off in front of the other parasites.
This quote will perfectly fit to our politician.
நீங்களும் இந்த அப்பாவி பொதுமக்கள் மீது பழி சுமத்திட்டீங்க, ஆமா, இன்னும் ”எங்களுக்கு நிவாரணமா எதாவது பிச்சை போடுங்க”-னு கேக்குறானே அவன் குற்றவாளி தான்.
”தீதும் நன்றும் பிறர் தர வாரா” - சொ,செ,சூ. வைத்துக்கொண்ட பொதுமக்கள் தப்பானவர்கள் தான், குற்றவாளிகள் தான்
உங்கள் பாணியிலே புத்திசாலி தனமா ஒரு கேள்வி. அந்த அரசியல்வியாதியும்/அதிகாரியும் பொதுமக்களில் ஒருவர் தானே?
இதே மாதிரி ஒரு வெள்ளம் 2002 தீபாவளி நேரத்தில் வந்தது, அதில் நேரடியாக பாதிக்கப்பட்டவன் நான். இன்னும் அதே நிலைமை தான் என்று நினைக்கும் போது கொஞ்சம் கவலையா இருக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
6 பின்னூட்டங்கள்:
Removed word verification in comment section and have a new post. Hope you wont hesitate you comment ur view
to Raghavan,
தங்களது ஊக்கத்துக்கும், உற்சாகத்துக்கும் எனது நன்றிகள். I am in the process of changing the template. sorry for the inconvenience that caused.
to வெண்பூ,
இனிமேல் WATERPROOF சுவர் கொண்ட வீடு கட்டி குடியிருக்க வேண்டியது தான். என்ன கொடுமை சார் இது.
to Silly Village Girl,
Thanks for removing the comment verification. Sure I will do. Thanks!
Viji,
Okey lah. I will also put that shoutbox lah and I replied to that comment.
Post a Comment