
ArchiveNow watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|

அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
தாய்ப்பாசம் | 11/27/2008 |
வகை:
கவிதை
|
என் கல்லூரித்தோழி எனக்கு ஈ-மெயிலில் அனுப்பிய தாய்ப்பாசம் பற்றிய கவிதை. இதே போன்று எனக்கு இன்னொரு கவிதையும் அனுப்பியிருந்தாள். இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடித்திருந்ததால், இதை பதிவிட்டுள்ளேன். அவள் ஒரு நல்ல செய்தி சொல்ல முயற்சி செய்கிறாள் என்று நினைக்கிறேன் :) . எனது வாழ்த்துக்கள் அவருக்கு என்றென்றும் உண்டு. இதோ அவர் அனுப்பிய கவிதை:

மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
‘குடை எடுத்துட்டுப்
போக வெண்டியதுதானே’
என்றான் அண்ணன்.
‘எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே’
என்றாள் அக்கா.
‘சளி பிடிச்சுகிட்டு
செல்வு வைக்கப்போற பாரு’
என்றார் அப்பா.
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
“மழையை!”.
------ யாரோ
ஆனால், எனக்கு என்னவோ தந்தை பாசம் தான் அதிகம். அதனால் தான் என்னவோ ”தேவர் மகன்”, ”தவமாய் தவமிருந்து”, “Octorber Sky”, ”வாரணம் ஆயிரம் ( நிறைய ஓட்டைகள் இருந்தாலும்)” படங்களை பிடித்திருந்தது. நீங்கள் படித்து ரசித்த தந்தையைப் பற்றிய கவிதைகளை இங்கே பின்னூட்டமிடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)

4 பின்னூட்டங்கள்:
p/s: whenever u update ur blog u can drop a msg in my shoutbox.. i will have a look. :)
Sure. I will do.
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>
Post a Comment