அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

Mamma Mia! 3/07/2009

 நண்பர் ஹாலிவுட் பாலா அவர்கள் இந்த படத்தை பத்தி ஏற்கனவே எழுதிவிட்டார், அவரோட ரசனையும் என்னோட ரொம்ப ஒத்து போறதுனால, இந்த பதிவும் ஓரே மாதிரி இருந்தா ஆச்சர்ய பட வேணாம் ( நல்லாவே சமாளிக்கிறடானு சொல்றது என் காதுல கேட்டுடுச்ச்சு).. ஒகே ஸ்டார் மூஜிக்.. ஏன்னா இந்த படம் இசையோடு கலந்த காதல் படம்.

கதை ரொம்ப சிம்பிள், பெண் தன்னோட திருமண நாளுக்கு தன்னோட அப்பா இருந்தா நல்ல இருக்கும்னு யோசிச்சு, அம்மாவின் டைரியில் ஒரு புலனாய் நடத்தி, ஒரு மூனு பேருக்கு திருமண அழைப்பிதழ் அனுப்புறா. ஒருத்தருக்கு தானே அனுப்பனும், ஏன்? ஏன்னு.. மண்டைய குடைய வேணாம்.. ஏன்னா அந்த மூனு பேர்ல ஒருத்தர் தான் அவளோட அப்பா, ஆனா அது யாருனு தெரியாதுங்கிறதுனால, போனா போகுதுனு மூனு பேரையும் திருமணத்திற்கு அழைக்கிறாள் அம்மாவுக்கு தெரியாமலே. இதுல காமெடி என்னான்னா அம்மாவுக்குமே தெரியாது யாரு தான் உண்மையான அப்பானு. உண்மையான அப்பா யாருனு கண்டு பிடிச்சாங்களா? கல்யாணம் நடந்துச்சா போன்ற விபரங்களை ரொம்பவும் நகத்த கடிக்க வைக்காம, அதிர்ச்சி அடைய வைக்காம, அழகா கவிதையா சொல்லி இருக்காங்க.

இது ஏற்கனவே மேடை நாடகமாக பல வருடங்களாக, பல்வேறு நாடுகளில் சக்கை போடு போடப்ட்ட கதையை தான் திரைப்படமாக்கியுள்ளனர், எந்தவித சிதைவும் இல்லாமல்

எனக்கு நீல நிறம்ன ரொம்ப பிடிக்கும் என்னோட வலையின் டெம்ப்ளேட்ட பாத்தாலே தெரியும். படம் முழுவதும் கடற்கரைத்தீவின் நடப்பதால், நீல நிறம் ஆக்கிரமிக்கிறது..(அய்யோ...அய்யோ.. நீல படம் நீல வண்ணத்துல இருக்கும்னு நெனச்சா நான் என்ன செய்றது ). கடற்கரை தொடர்பான காட்சிகள் அனைத்தும் Laguna Beach, Californiaவில் எடுத்துள்ளனர்.. வெள்ளை மணலும் நீலநிற கடல்நீரும் என்னா அழகு! அருமையாக காட்சிபடுத்தபட்டுள்ளது அத்துனை இயறகையழகும். மெரீல் ஸ்ட்ரைப் பல இடங்களில் நீல நிற உடை அணிந்து அம்சமா வர்றார்..ம்ம்.. வயசானாலும்.. அப்டியா தான் இருக்காங்க அம்மணி புதுப்பொலிவுடன்.

ஹாலிவுட் பாலா சொன்ன இசை தொடர்பான படங்களில் Enchanted மட்டும் பார்த்துள்ளேன்.. செம க்யூட்டான படம். அடுத்து நான் ரசித்து பார்த்தது CHICAGO, ரிச்சர்டு கியர் மற்றும் கேத்தரீன் ஸீட்டா ஜோன் நடித்த கிரைம் கலந்த இசைபடம். ஒரு ஆல்பத்துல பெயான்ஸிவை (Beyoncé Knowles) பார்த்துட்டு, ஆர்வக்கோளாரில் The Fighting Temptations, Dreamgirls இந்த ரெண்டு படத்தையும் எடுத்து பார்த்த எனக்கு, ரெண்டு படத்தையும் முழுசா முடிக்க முடியவில்ல.. ரொம்ப கடியா இருந்துச்சு.. ஆனா அந்த மாதிரி எந்த சோதனையையும் இந்த படம் தரவில்லை.

படத்தில் இசையை எவ்வளவுக்கெவ்வளவு முக்கியத்துவமா இருந்தததோ அதே அளவுக்கு முக்கியத்துவமா இருந்தது மெரீல் ஸ்ட்ரைப்பின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும். இந்த படத்தை பத்தி பேசிட்டு இவரை பத்தி பேசாம விட்டா அந்த பெண்(தேவதை) பாவம் என்ன சும்மா விடாது. 

இந்த பதிவ எழுதுறக்கு சற்று முன்னே நான் பார்த்த படம் The Devil Wears Prada,  படத்தை தேர்ந்தெடுத்தது என்னவோ Anne hathawayக்கு தான், ஆனா மெரீல் ஸ்ட்ரைப் அம்சமா எல்லாரையும் ஓவர்டேக் பண்ணியிருப்பார். மிடுக்கு, திமிர் கலந்த தோரனையில் அவர் சொல்லும் அந்த ஒருவரி வசனம் That’s All அருமை. இந்த படத்திற்காகவும் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

ரெண்டு வாரத்திற்கு முன்னே நான் பார்த்த, Prime என்றொரு படம் உமாவுடன் நடித்திருந்தார். மெரீல் ஸ்ட்ரைப், உமாவின் மனோதத்துவ ஆலோசகர். உமா, மெரீல் ஸ்ட்ரைப் மகனின் காதலி. மெரீல் ஸ்ட்ரைப் மகன், உமாவை விட பாதி வயதுக்கு சற்றே மூத்தவர். இந்த விசயம் தெரியவர மெரீல் ஸ்ட்ரைப் காட்டும் உணர்ச்சிகள் அபாரம், அதுவும் உமா அவருடைய மகனின் அந்தரங்கத்தை விவரிக்க, மெரீல் ஸ்ட்ரைப் நெளிவாரே பாக்கணும்.. அப்பப்பப்பா.. நடிகையர் திலகம்.

இவர் படங்களில் நான் முதலில் பார்த்தது Out of Africa , ஆஸ்காரை மயிரிழையில் Geraldine Page விடம் தவற விட்டிருந்திருக்கிறார் இந்த படத்திற்காக.

இவரை பத்தி பாலா ஏற்கனவே அதிகமா சொல்லிட்டார் இருந்தாலும் ஒன்னே ஒன்னு சொல்லிட்டு பதிவ முடிக்கிறேன் ( அரசியல் வாதி ரேஞ்சுக்குல பேசுறான் )

எப்படி தான் அழக மெயிண்டெயின் பண்றார்னு தெரியல, இந்தியாவில் இதே மாதிரி அழகை கட்டுக்குள் வைத்திருப்பவர் ஹேமா மாலினி மட்டுமே. நம்ம ரஜினி கமல் எல்லாம் தங்க பேத்திமார் த்ரிஷா, ஸ்ரேயானு கொஞ்ச வயசு பொன்னுங்க கிட்ட ஜோடி போட்டு  (உனக்கேன்பா வயித்தெரிச்சல்.. பல்லு இருக்கவன் பக்கோடா திங்கிறான்.. ) யூத்தை காண்பிக்கிற மாதிரி இல்லாம, தன்னை விட நாலு வயது குறைந்த பியர்ஸ் பிராஸ்னனுக்கு ஜோடியா போட்டி போட்டு அசத்தியிருக்கிற ஒன்னே போதுமே அவரோட அழகையும் இளமையும் சொல்ல.

பி.கு : பாலா இந்த பதிவு, உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால் பொறுத்தருளவும்

32 பின்னூட்டங்கள்:

Lancelot said...
me the first...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
newspaanai said...
தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

------------- ~~~~~ Thanks to newspaanai ! ~~~~~ -------------
G3 said...
//வெள்ளை மணலும் நீலநிற கடல்நீரும் என்னா அழகு! அருமையாக காட்சிபடுத்தபட்டுள்ளது அத்துனை இயறகையழகும்//

Idha padichittu nijamaavae aalavandhaan blogla dhan irukkomannu oru vaati url poi chk pannen... ada avar blog dhaan.. appuram eppadi thalaivar ponnungala pathi pesama iyarkai pathi ellam pesaraaru.. oru velai thirunthitaaronnu yosichikitae padicha.. adutha linela...

//மெரீல் ஸ்ட்ரைப் பல இடங்களில் நீல நிற உடை அணிந்து அம்சமா வர்றார்..ம்ம்.. வயசானாலும்.. அப்டியா தான் இருக்காங்க அம்மணி புதுப்பொலிவுடன்.
//

:))))))))))))))))))))))))))))))))))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
ஹாலிவுட் பாலா said...
//பாலா இந்த பதிவு, உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால் பொறுத்தருளவும்//

பொறுத்தருளுகிறேன்.!!! :-)))))

------------- ~~~~~ Thanks to ஹாலிவுட் பாலா ! ~~~~~ -------------
ஹாலிவுட் பாலா said...
ஆனா.. பதிவுல நீங்க சொல்லியிருக்கற நிறைய மேட்டர்.. நான் கேள்விப்படாதது.

அதற்கு என் நன்றிகள்!!!

------------- ~~~~~ Thanks to ஹாலிவுட் பாலா ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Lancelot
//me the first...//
YESSUNGA :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@ G3
//வெள்ளை மணலும் நீலநிற கடல்நீரும் என்னா அழகு! அருமையாக காட்சிபடுத்தபட்டுள்ளது அத்துனை இயறகையழகும்//

Idha padichittu nijamaavae aalavandhaan blogla dhan irukkomannu oru vaati url poi chk pannen... ada avar blog dhaan.. appuram eppadi thalaivar ponnungala pathi pesama iyarkai pathi ellam pesaraaru.. oru velai thirunthitaaronnu yosichikitae padicha.. adutha linela...

//மெரீல் ஸ்ட்ரைப் பல இடங்களில் நீல நிற உடை அணிந்து அம்சமா வர்றார்..ம்ம்.. வயசானாலும்.. அப்டியா தான் இருக்காங்க அம்மணி புதுப்பொலிவுடன்.
//

:))))))))))))))))))))))))))))))))))

hahhah.. appapppo light'a iyarakaiya pathiyum pesuvom

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@ஹாலிவுட் பாலா
//
//பாலா இந்த பதிவு, உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால் பொறுத்தருளவும்//

பொறுத்தருளுகிறேன்.!!! :-)))))
//

ஹஹஹா நான் எதிர்பார்த்தது தான் :)

//
ஆனா.. பதிவுல நீங்க சொல்லியிருக்கற நிறைய மேட்டர்.. நான் கேள்விப்படாதது.

அதற்கு என் நன்றிகள்!!!
//

தேங்க்ஸ் :)))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஹாலிவுட் பாலா said...
பொருத்தருளினாலும்.. ரெண்டு இடத்திலு ஓட்டு போட்டிருக்கேன்.. சொல்லிபுட்டேன்!!

:-))

------------- ~~~~~ Thanks to ஹாலிவுட் பாலா ! ~~~~~ -------------
viji said...
[[[இதுல காமெடி என்னான்னா அம்மாவுக்குமே தெரியாது யாரு தான் உண்மையான அப்பானு.]]]

anumaiyana varigal... LOL

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
ஹேமா said...
நானும் பார்த்தேன் இந்தப் படத்தை.

------------- ~~~~~ Thanks to ஹேமா ! ~~~~~ -------------
ச்சின்னப் பையன் said...
//(உனக்கேன்பா வயித்தெரிச்சல்.. பல்லு இருக்கவன் பக்கோடா திங்கிறான்.. ) //

அட்லீஸ்ட் எனக்கு பக்கோடா ஜூஸாவது கொடுத்தா பரவாயில்லே.. அதுவும் கிடைக்க மாட்டேங்குதே...

------------- ~~~~~ Thanks to ச்சின்னப் பையன் ! ~~~~~ -------------
ச்சின்னப் பையன் said...
நான் பாக்கலே இந்த படத்தை...

------------- ~~~~~ Thanks to ச்சின்னப் பையன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@viji
//
viji said...
[[[இதுல காமெடி என்னான்னா அம்மாவுக்குமே தெரியாது யாரு தான் உண்மையான அப்பானு.]]]

anumaiyana varigal... LOL
//
ulkuthu veli kuthu ellam bayangaramaa irukku pola

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@ஹேமா

வருகைக்கு நன்றி ஹேமா.

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@ச்சின்னப் பையன்
//
அட்லீஸ்ட் எனக்கு பக்கோடா ஜூஸாவது கொடுத்தா பரவாயில்லே.. அதுவும் கிடைக்க மாட்டேங்குதே...
//

பக்கோடா + பாக்கு உரல் ஓகேவா?

//நான் பாக்கலே இந்த படத்தை..//
ஜூனூன் தமிழில் ஒரு கவுண்டர் அட்டாக் :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Karthik said...
full stop, comma ellam miss aaghudu!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
Maama mia kadhaiye villangama irukke.. ammake appa yaarunu theriyalaiya?? adha gonniyaan???

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
Karthik said...
anyhw will watch it.. But i Like enchanted.. Sema movie.. starting anmation paarthuthu goyyala show maari vandhuthoomnu ninachen... :P Theatre la naa paartha konja aangila padangalil idhuvum ondru.. heroine peru therila.. aana sema figuru!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
gils said...
aalavantharay..abba songs ketrukeengala..me a big fan...athula maama mia gummu :)

------------- ~~~~~ Thanks to gils ! ~~~~~ -------------
viji said...
kuturathunu mudivu aanethuku aprum, sagunam parke mudiyuma yenna....

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
lynda ann said...
MAY i BE ADDED AS A FOLLOWER??
I WILL BE VERY,VERY DISCREET IN MY COMMENTS// ONE MORE CHANCE???

------------- ~~~~~ Thanks to lynda ann ! ~~~~~ -------------
lynda ann said...
this movie helps in not taking life too too seriously!!at least not all the time!!!
lynda anne akka

------------- ~~~~~ Thanks to lynda ann ! ~~~~~ -------------
Lancelot said...
Please Check my blog - u have been awarded :0

http://lancelot-oneofakind.blogspot.com/2009/03/friends-interview.html

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
CZJ padam pottalthan comment illati restuuuuuuuu

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
RAD MADHAV said...
Me the 26th.

Vimarsanam arumai. Ungal eluthil madurai tamilin suvai therikirathu. Vaalththukkal.

Pls Note the point. May be useful in future (for me).

Neenga unmayilele romba nallavaru. Nallavaru. Nallavaru.

------------- ~~~~~ Thanks to RAD MADHAV ! ~~~~~ -------------
viji said...
@ RAD MADHAV,

ni yenna thaa ice vechalum, manushan asara maataru..cuz avaru erkanave ice kude thaa kudumbame nadaturaru.. :D

------------- ~~~~~ Thanks to viji ! ~~~~~ -------------
RAD MADHAV said...
@Aalavanthan Anna,

One Small Doubt, Can u pls tell me the distance between Washington DC to Miami Beach?

------------- ~~~~~ Thanks to RAD MADHAV ! ~~~~~ -------------
gayathri said...
இதுல காமெடி என்னான்னா அம்மாவுக்குமே தெரியாது யாரு தான் உண்மையான அப்பானு

:)))))))))

------------- ~~~~~ Thanks to gayathri ! ~~~~~ -------------
மகா said...
அழகான டெம்ப்ளேட். இப்ப தான் உங்க பிளாக்க முதல் முறையா பார்க்கிறேன். நல்லா இருக்கு

------------- ~~~~~ Thanks to மகா ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
மகா said...

அழகான டெம்ப்ளேட். இப்ப தான் உங்க பிளாக்க முதல் முறையா பார்க்கிறேன். நல்லா இருக்கு
//
முதல் வருகைக்கு நன்றி! மகா :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
gayathri said...

இதுல காமெடி என்னான்னா அம்மாவுக்குமே தெரியாது யாரு தான் உண்மையான அப்பானு

:)))))))))
//

ஆஹா.. நல்ல வேளை கும்மி எதுவும் அடிக்காம் விட்டுடீங்க :))

------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------