அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

புழுதி புயலுக்குள் ஒரு யுத்தம் 3/04/2009

புதுவருசத்துக்கு பொல்லாதவன் பாத்தது தான் அதுக்கப்புறம் பாத்தது இது தான். பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் வரிசையில் அடுத்து ஒரு மண்வாசனை கலந்த படம் வெண்ணிலா கபடி (கபாடி) குழு. படமும் அதே வரிசையில் வைக்ககூடிய தரம்.

ஆரம்ப பேருந்து பயணத்தில் தொடங்குகிற  பெயர் சொல்லாத/தெரியாத கதாநாயகி (சரண்யா மோகன்) பச்சை கலர் தாவணியில் அம்சமாக அறிமுகம் ஆகிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை அதே புன்சிரிப்பு உச்சிவரை நேர் வகிடெடுத்த தலையுடன் படம் முழுக்க வந்து பல்லாங்குழி ஆடுறா (மனசுல தான்). பேருந்தில் முதலில் பிச்சிப்பூ வச்சு வர்ற அம்மணி, பின் மல்லிகையயும் சேர்த்து வச்சு, கடைசியில் பிச்சியை விட்டுட்டு மல்லிகையையும்  மட்டும் வச்சுகிட்டு செதுக்கி வச்ச சிலை மாதிரி அம்சமா இருக்கா,  திருவிழா முடிந்து போகும் போது வெள்ளை தாவணியில் தேவதை போல ஜொலிக்கிறார் ( இருங்க துண்டை எடுத்துட்டு வர்றேன்). 

பச்சை கலர் 
(இள)மஞ்சள்
வெள்ளை
கருப்பு
அடர்/இளம் கத்திரி ஊதா பூ
என கலர் கலரா தாவணியில் வந்து, ஒரே தாவணி சாம்ராஜ்யம் நடத்தியிருக்கா, நல்லாவும் பொருந்தியிருந்தது (துண்டு பத்தாது நினைக்கிறேன்.. பெட்ஷீட் வேணும் போல).  


பட படவென பறந்திடபாட்டுல நீல கலரில் தாவணியும் அதே கலரில் பாவடையும் அணிந்து சும்மா செம க்யூட்டா இருந்தது. அதே பாட்டில் வரும்
விரல் பிடித்து நடக்கும் போது
வலிகள் யாவும் மறைக்கிறதே
வரிகள் அருமை.

படத்திலிருந்த நச்வசனங்களில் சில
எடுபட்ட பய”,
ஒரு பாயிண்ட்ல தோத்துட்டோம்”,
குருட்டு கோழி தவிட்டு முழுங்கிட்டு போன மாதிரி
நமக்கு ஆடியன்ஸ் இருக்காங்கண்ணே பதினோரு பேரு கைதட்டுனாங்கண்ணெ

 சில் டச்சிங் சீன்ஸ்
இடைவேளைக் காட்சி,
ஐயப்பன் கபடியாட, யானை சீரியல் பல்பை காண்பிப்பது 

ஊரே திருவிழாவில் மூழ்கி இருக்க, யாருமே இல்லாத ( கெழடுகள் மட்டும் ) தெருவில் காதலை பாடலில் ஆரம்பித்தது நன்றாக இருந்தது, ஏன்னா அதுதான் பல காதல் அரும்ப ரொம்ப சரியான தருணம் இயக்குநரின் கிராம உணர்வு நல்லாவே தெரிந்தது அந்த காட்சியில், அதை தொடர்ந்த அந்த வரிகள் செம ஷார்ப் அண்ட் டச்சிங்

மொதல்ல பாத்தது கனவுல, நான்
முழிச்சு பாத்தது தெருவுல
நெருங்கி பாத்தது நெனப்புல, நான்
தொலஞ்சு போனத சொல்ல தெரியல

 அதே போல பத்து மணிக்கு கரண்ட் போற சீனில் இயக்குநரின் கிராம நுண்ணறிவு தெரிகிறது. அதை அருமையா உபயோக படுத்தியிருந்தார். எங்க ஊர்ல வழக்கமா இரவு 9 மணி வாக்கில் கரண்ட் போகும். மதுரைன்னா புரோட்டா இல்லாமலா, அதுலேயும் ஒரு காமெடி,  இது ஏற்கனவே நாங்க காந்திய வச்சு பண்ணின காமெடி தான், இருந்தாலும் நல்லா தான் இருந்துச்சு.

திருவிழாவில் கோலப்போட்டி மிஸ்ஸிங், கதாநாயகி உள்ளூர் இல்லை என்பதலா? உண்மையில் முட்டி உடைக்கும் போட்டியின் போது, அடி தப்பா விழுவது மாதிரி இருந்தால் கம்பை பிடுங்கிவிடுவர். காமெடிக்காக சில விசயங்கள் சேர்த்திருந்தாலும் நல்லாவே இருந்தது. திருவிழா விளையாட்டின் போது ரேடியோவில் கமெண்ட்ரி சூப்பர். பருத்திவீரன் படத்துல வர்ற ஆரம்ப்ப பாட்டு அளவுக்கு இதுல கிராமிய வாசமில்லை இருந்தாலும் பச்ச உடம்புக்காரி பாட்டுக்க்கு குலுக்கல் அருமையாக தான் இருந்தது. 

மதுரையை காண்பிக்கும் போது, வைகை  ஆற்றின் A.V மேம்பாலமும் தெப்பகுளம் மாரியம்மன் கோவிலை மட்டும் தான் காட்டியுள்ளனர், அரசு மருத்துவமனை சத்தியமா அது மதுரை பெரிய ஸ்பத்திரியே இல்ல. வழக்கமான மதுரையின் லேண்ட் மார்க்கான கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலின் நான்கு கோபுரங்கள் மிஸ்ஸிங்.

கபடி ஆடும்போது ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் விளையாடி வருவார்கள் அதுவும் கபடியின் ஒரு சிறப்பு எனலாம்..
கபோட்ஸ்.. கபோட்ஸ்..
கபோடி..கபோடி..
பல்லிஞ் சடுகுடு.. பல்லிஞ் சடுகுடு...
கபடி கபடி..கபடி
படி..படி..படி (இங்க “கசைலெண்ட்) இப்படி பல.. ஆனா இந்த படத்துல ரெண்டே ரெண்டு முறையை மட்டும் பயன்படுத்தியிருந்தது கொஞ்சம் உறுத்தலா இருந்தது.

பொங்கல் மற்றும் திருவிழாவை காரணமா வச்சு, ஊர்ல இருக்கிற எல்லா வீடும் வெள்ளை எல்லாம் அடித்து ரொம்ப சுத்தமா இருப்பதால், கிராம உணர்வு/வாசனை லைட்டா மிஸ்ஸிங். படத்தில் கொலைமுயற்சி ட்விஸ்ட் அருமையா இருந்துச்சு. முடிவு சோகமா இருந்தாலும், படம் முடிந்தவுடன் நெஞ்சம் கொஞ்சம் கனத்தது.

படத்தின் தலைப்பு வெண்ணிலா கபாடி குழு என்று தான் வர வேணும். அது கபடி இல்ல கபாடி.

பத்தாவது பொதுத் தேர்வு முடிந்தவுடன் ஒரே ஒரு நாள் கணக்கம்பட்டிக்கு போயிருக்கிறேன், இந்த கதாநாயகி மாதிரி, அதனாலேயே இந்த படத்து மேல தனியா ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு போச்சு, கணக்கம்பட்டியில் இருக்கும் போது ஒரே நாள் பழகிய ராணிக்கு இந்த பதிவு சமர்ப்பணம். ராணி நீ எங்க இருந்தாலும் புருஷன் புள்ள குட்டியோட பெயருக்கேத்த மாதிரி ராணி மாதிரி வளமோட வாழ்க

21 பின்னூட்டங்கள்:

உங்கள் ராட் மாதவ் said...
Me the first,
Padichuttu appuram vanthu solren.

------------- ~~~~~ Thanks to உங்கள் ராட் மாதவ் ! ~~~~~ -------------
உங்கள் ராட் மாதவ் said...
Aamaa, eppadi indha padatha ivvalavu porumayaa paaththeenga?

------------- ~~~~~ Thanks to உங்கள் ராட் மாதவ் ! ~~~~~ -------------
Lancelot said...
Indru mudhal Thaavani munnetraa kalagathin thalaiva endru elloraalum anbodu allaikka paduveergal...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
Lancelot said...
//படத்தின் தலைப்பு வெண்ணிலா கபாடி குழு என்று தான் வர வேணும். அது கபடி இல்ல கபாடி.//

enna orru kandupidippu...adraa adraa adraa...

------------- ~~~~~ Thanks to Lancelot ! ~~~~~ -------------
கணேஷ் said...
//வழக்கமான மதுரையின் லேண்ட் மார்க்கான கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலின் நான்கு கோபுரங்கள் மிஸ்ஸிங்//

உண்மை.. இரண்டவாது பாதியில், தாவணியில் வரும் ஃபிகரை பற்றீ எதுவும் சொல்லவில்லை என்பதால் வன்மையாகக் கண்டிக்கிறேன். (எனக்கும் ஒரு கர்ச்சீப் பார்சல். ஹி ஹி)

------------- ~~~~~ Thanks to கணேஷ் ! ~~~~~ -------------
Unknown said...
"RAD MADHAV said...
Aamaa, eppadi indha padatha ivvalavu porumayaa paaththeenga?
March 5, 2009 12:49 AM"

NEENGA GIRAMATHU PAKKAM PONATHEYILAAYA ?
நீங்க கிராமத்து பக்கம் போனதேயில்லையா ?

------------- ~~~~~ Thanks to Unknown ! ~~~~~ -------------
VASAVAN said...
விமர்சனம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

------------- ~~~~~ Thanks to VASAVAN ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@RAD MADHAV
//Me the first,//
Yessu :)

@Lancelot
//
Indru mudhal Thaavani munnetraa kalagathin thalaiva endru elloraalum anbodu allaikka paduveergal...
//
pala kaalama apdi thaanaiyaa kooppittu kittu irukkaanga

//
enna orru kandupidippu...adraa adraa adraa...
//
sakkai miss aaguthu


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@கணேஷ்
//
உண்மை.. இரண்டவாது பாதியில், தாவணியில் வரும் ஃபிகரை பற்றீ எதுவும் சொல்லவில்லை என்பதால் வன்மையாகக் கண்டிக்கிறேன். (எனக்கும் ஒரு கர்ச்சீப் பார்சல். ஹி ஹி)
//
அந்த பிகரை பத்தியும் ஜொள்ள்லாம்னு தான் இருந்தேன்.. அப்புறம்.. பக்கெட்.. பாத்டப் எல்லாம் நெரம்பிடுமோனு ஒரு பயம்.. அதான்


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@ஆகாயமனிதன், RAD MADHAV
//
NEENGA GIRAMATHU PAKKAM PONATHEYILAAYA ?
நீங்க கிராமத்து பக்கம் போனதேயில்லையா ?
//
கரெக்டா சொன்னீங்க பாஸ்..
கட்டடிப்போம்.கட்டடிப்போம்..காலேஜுக்கு
காதலிப்போம்..காதலிப்போம் மேரேஜுக்கு


ஒரு T.R பாட்டு இருக்கு. அத கேளுங்க.. என்ன கிழமை என்ன நிறத்துல தாவணியில வருவாங்க’னு ஒரு இலக்கியம் படைச்சிருப்பார்.. கருந்தாடி வேந்தர்


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
SUREஷ்(பழனியிலிருந்து) said...
//பருத்திவீரன் படத்துல வர்ற ஆரம்ப்ப பாட்டு அளவுக்கு இதுல கிராமிய வாசமில்லை//


பருத்து வீரன் மாதிரி ஒரு கிராமம் அமெரிக்காவில் மட்டுமே இருக்க முடியும். அதுவும் ஆஸ்கர் எதிர்பார்த்து அப்படி வைத்திருப்பார்கள்

------------- ~~~~~ Thanks to SUREஷ்(பழனியிலிருந்து) ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@SUREஷ்

என்ன சுரேஷ் இப்படி சொல்லிட்டீங்க.. மதுரைக்கு பக்கதுல இருக்கிற பருத்தியூரில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையா வச்சு எடுத்தாங்கனு கேள்வி பட்டேன்


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@VASAVAN
//
விமர்சனம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
//
நன்றி. அடிக்கடி வாங்க :))


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
G3 said...
Avvvvvvvvvvvv.. theriyaathanama indha pakkam vandhutaenae.. oru jollu aara irukku :P

unga levelkku towel bedsheet ellam romba kammi.. bucketae thevaipadudhu :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
G3 said...
////
enna orru kandupidippu...adraa adraa adraa...
//
sakkai miss aaguthu//


Mokkai nerayavae irukku :P

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@G3,
//
unga levelkku towel bedsheet ellam romba kammi.. bucketae thevaipadudhu :P
//
punputta manathai pugai vittu aathu


//
Mokkai nerayavae irukku :P
//
innaikku irukku ennoda mokkai :)))) elunthutte.. ithoo varren ( Thanks Ajith Attakasam)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@Lancelot
//
You have been awarded. Please check http://lancelot-oneofakind.blogspot.com/2009/03/cute-is-innocence.html
//

parthen
padithen
------- (office kilambina gap )----
commentinnen :)))))


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
RAMYA said...
Super, பதிவு சம்பந்தப்பட்ட டயலாக்,
நல்ல நகைச்சுவையுடன் எழுதி இருக்கீங்க
வாழ்த்துக்கள்!!!

------------- ~~~~~ Thanks to RAMYA ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

@ RAMYA
//Super, பதிவு சம்பந்தப்பட்ட டயலாக்,
நல்ல நகைச்சுவையுடன் எழுதி இருக்கீங்க
வாழ்த்துக்கள்!!!
//

வாங்க ரம்யா!
முதல் வருகைக்கு நன்றி..
அங்கங்கே மொக்கையின் போது பார்த்தது :)))


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
VG said...
lesa parakuthu, manasu..manasu,....


the last scene.. damn touching + the song.. killing.. really a gud movie..

i was LOL through the movie until they won. (i ony start watch after half movie ny... cuz anne played the movie while i was sleeping on the sofa. after woke u, paathi le irunthu parthen)

then i was a bit sentiment the last part of movie... friday nite i watched it, ippo varaikum, manasu BARAMA irukku, not as the song...

HUH!

=(

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
sakthi said...
gud post alavanthar

------------- ~~~~~ Thanks to sakthi ! ~~~~~ -------------