அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

மயங்குகிறான் ஒரு மருத்துவன் 1/27/2009


மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு கடற்கரை கிராம மக்கள், எட்டு ஆண்டுகளாக அரசாங்க நலத்திட்ட உதவியை எதிர்பார்த்து வாழவேண்டிய இழிநிலைக்கு தள்ளபடும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமா கிராமத்தை விட்டு வெளியேறி, நகரத்திற்கு நகர்கின்றனர். இந்த இழிநிலையிலிருந்து மீள அவர்களுக்குத் தேவை ஒரு தொழிற்சாலை வசதி. ஆனால் அதற்கு தடையாக இருப்பது லஞ்சம் மற்றும் ஒரு மருத்துவரின் ஐந்து சேவை கடிதம். இந்த இரண்டு பிரச்னையையும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை நகைச்சுவை ததும்ப தழும்ப விளக்குவது தான் இந்த Seducing Dr. Lewis.

ஒரு தண்டனையிலிருந்து தப்பிக்க டாக்டர் லெவிஸ் இந்த கிராமத்தில் ஒரு மாத்த்திற்கு பணி செய்ய வேண்டா வெறுப்புடன் ஒத்து கொள்கிறார், அவரை அடுத்த ஐந்து வருடத்திற்கும் பணி செய்யவைக்க ஒட்டு மொத்த கிராமமும் செய்யும் செயல்கள் அனைத்தும் நகைச்சுவை சரவெடி.

டாக்டர் லெவிஸ்க்கு கிரிக்கெட்டின் மீது அலாதிப் பிரியம் என் அறிந்து கொண்டு, கிரிக்கெட்டை தெரிந்து கொள்ள இவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் ஹிந்தி லகானை நினைவுபடுத்துகிறது. லகான் இதற்கு முன்னே வெளிவந்து விட்டது குறிப்பிட்த்தக்க் வேண்டிய ஒரு விசயம். 

உதாரணத்துக்கு ”விக்கெட் கீப்பர் ஸ்டெம்ப்க்கும் பேட்ஸ்மேனுக்கும் இடையே இருந்து பந்தை பிடித்து கொண்டிருப்பார்”,  “ஒட்டு மொத்தமாக கிரவுண்டில் ஒரு முப்பது நாப்பது பேர் இருப்பர்”  சில வினாடியே இடம்பெறும் இந்த மாதிரி காட்சிகள் அதிகம். தூரத்தில் இருந்து பார்த்து விளையாட்டை ரசிக்கும் டாக்டர் லெவிஸ் இவர்களை நோக்கி வர,  குட்டு வெளிப்பட்டு விடாமலிருக்க இவர்கள் எடுக்கும் முடிவு செம கிச்சு..கிச்சு.

டாக்டரின் நடவடிக்கையை அறிந்து அவரை வலையில் விழ வைக்க ரெண்டு பெருசுகள்(பெண்கள்) அவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்கிறார்கள். தனது காதலியுடன் பேசும் “சங்கேத” வார்த்தைகள் புரியாமல் மொத்த கிராமமும் ஒருவருக்கொருவர் விளக்கம் கேட்டு திரிவது அக்மார்க் “அப்பாவிதனமான” காமெடி.

டாக்டரை தவிர்த்து குறிப்பிடப்பட வேண்டிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் யுவான், ஜெர்மய்ன், ஹென்றி. இதில் ஹென்றி மட்டுமே நடுத்தர வயதுடையவர் – வங்கி அதிகாரியாக வருகிறார். மற்ற இருவரும் முதியவர்கள் - ஜெர்மய்ன் கதையின் நாயகன், அவரின் நண்பன் யுவான். 

இந்த கிழம் ரெண்டும் பண்ணும் சேட்டை சொல்லி மாளாது, உதாரணத்துக்கு யுவான் தன் மனைவியுடன் குடும்ப சகிதமா படுத்திருக்க, ஜெர்மய்ன் குடிபோதையில் அவர்களுக்கிடையே படுத்து கொள்ள,  விழித்துக் கொள்ளும் யுவானின் மனைவி, ஜெர்மய்னிடம் நாசூக்காக, “உங்க மனைவி (Helene) சுகமா?” என்கிறார். 
”ம்ம். நல்ல சுகம்” என்கிறார்.
”கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, எங்க படுக்கயறையில என்ன் பண்ணிகிட்டு இருக்கீங்க?” என்று தெளிவாகவே கேட்க.
”கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்” என்று ரொம்ப சாதரணமாக சொல்கிறார்.
”வந்தே ரொம்ப நேரமாச்சே. நாங்க எல்லாம் இங்க படுத்துகிட்டு இருக்கோம் தெரியுதா..” என்கிறார்
உடனே நண்பர்/கணவர் இடையில் குறுக்கிட்டு, ”விடுமா எப்பாவாவது வர்ற ஆளு தானே” என்பார் பாக்கனுமே, அதிரடி தான். 

மக்கள் தொகையை கூட்டி காண்பிக்க எடுக்கும் முயற்சி, மீன் பிடிக்கும் போது டாக்டர் ஏமாறாமல் இருக்க வேறு வழியின்றி ஃப்ரோசன் மீனை சிக்கவைப்பது – அதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் வேறு தருவது, டாக்டருக்கு பிடித்தமான Jazz இசையையும் கிர்க்கெட்டையும் வேண்டா வெறுப்புடன் ரசிப்பது என படம் முழுவதும் நகைச்சுவை ரசம் பரவியிருக்கிறது.

பொதுவாக நகைச்சுவை மற்றும் காதல் உணர்வுகளை ரசிக்க தாய்மொழி படங்கள் தான் சிறந்தவை என்பது என் கருத்து. இது ஆங்கில படமல்ல பிரெஞ்சு மொழி படம், கண்டிப்பாக சப்-டைட்டில் உதவியோடு தான் முழு படத்தையும் பாத்தாக வேண்டிய கட்டாயம். இருப்பினும் ஒவ்வொரு பிரேமிலும் மிதமிஞ்சி கிடக்கும் நகைச்சுவை ஒவ்வொன்றும், உணர்ந்து வெகுவாக ரசிக்கும்படி இருந்தது. பொத்து கொண்டு வரும் சிரிப்பை அடக்கமுடியாமல் படத்தை நிறுத்திவிட்டு சிரித்து விட்டு மறுபடியும் தொடர்ந்தேன். 

97ல் பள்ளியில் படிக்கும்போது “உள்ளத்தை அள்ளித்தா” படத்தை அலங்காநல்லூர் அஜந்தா திரையரங்கில் ரெண்டாம் ஆட்டம் பாத்துவிட்டு நட்ட நடு ராத்திரியில் ஒவ்வொரு காட்சியையும் – “என்ன ஐயாயிரம்?.. ஐயாயிரம்” , “நீயே ஒரு டிக்கெட்டு உனக்கெதுக்கு டிக்கெட்டு”, ” என்னது 400 ரூபாயா? டெம்போ எல்லாம் வச்சு கட்த்திய்ருக்கோம்யா, கொஞ்சம் பாத்து போட்டு குடுங்கய்யா.”, “மணிவண்ணன் கட்டையால் அடிபட்டு கீழே விழும்போது ”மம்மீ” என்று கத்தி மயக்கம் போட்டு விழுவது” என் அனைத்தையும் அசை போட்டுகொண்டு விழுந்து விழுந்து சிரித்து கொண்டே வந்தோம். அதே மாதிரியான் ஒரு நல்ல அனுபவத்தை இந்த படம் தந்தது.

22 பின்னூட்டங்கள்:

சின்னப் பையன் said...
விமர்சனத்தை முழுசா படிக்கலே... முதல்லே படத்தை பாக்கறேன்... நன்றி..

------------- ~~~~~ Thanks to சின்னப் பையன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
ச்சின்னப் பையன் said...
விமர்சனத்தை முழுசா படிக்கலே... முதல்லே படத்தை பாக்கறேன்... நன்றி.
//
இதெல்லாம் ரொம்ப நக்கலு ஆமா :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
யாத்ரீகன் said...
போன வாரம்தான் பார்த்தேன்.... அட்டகாசமா இருந்தது, தனியா இராத்திரி பார்த்துக்கிட்டு இருக்கையில விழுந்து விழுந்து சிரிச்சிகிட்டு இருந்தேன்..

------------- ~~~~~ Thanks to யாத்ரீகன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
யாத்ரீகன் said...
போன வாரம்தான் பார்த்தேன்.... அட்டகாசமா இருந்தது, தனியா இராத்திரி பார்த்துக்கிட்டு இருக்கையில விழுந்து விழுந்து சிரிச்சிகிட்டு இருந்தேன்..
//
Same blood..

நைட் ஒரு மணி வரைக்கும் திரும்ப திரும்ப பாத்தேன்.. சிரிச்சுகிட்டே..


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Anonymous said...
how u watch?? online or cd?

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
butterfly Surya said...
நல்ல திரைப்படத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.


சினிமா உலகம் பற்றிய எனது வலை பார்க்கவும்.

நிறை / குறை சொல்லவும்

வாழ்த்துக்கள்.

------------- ~~~~~ Thanks to butterfly Surya ! ~~~~~ -------------
நட்புடன் ஜமால் said...
\\ “உங்க மனைவி (Helene) சுகமா?” என்கிறார்.
”ம்ம். நல்ல சுகம்” என்கிறார்.
”கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, எங்க படுக்கயறையில என்ன் பண்ணிகிட்டு இருக்கீங்க?” என்று தெளிவாகவே கேட்க.
”கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்” என்று ரொம்ப சாதரணமாக சொல்கிறார்.
”வந்தே ரொம்ப நேரமாச்சே. நாங்க எல்லாம் இங்க படுத்துகிட்டு இருக்கோம் தெரியுதா..” என்கிறார்
உடனே நண்பர்/கணவர் இடையில் குறுக்கிட்டு, ”விடுமா எப்பாவாவது வர்ற ஆளு தானே” என்பார் பாக்கனுமே, அதிரடி தான். \\

நல்ல சேட்டைதான்.

------------- ~~~~~ Thanks to நட்புடன் ஜமால் ! ~~~~~ -------------
நட்புடன் ஜமால் said...
இப்பவே கிடைக்குதான்னு பார்க்கிறேன்

------------- ~~~~~ Thanks to நட்புடன் ஜமால் ! ~~~~~ -------------
RAMASUBRAMANIA SHARMA said...
Excellent Review Thiru Alawanthar...Its nice to note that you are basically from Alanganallur...I have also done my college studies from Yadhava College...Spent my earlier days, residing at Thiruppalai...Pl continue writing such articles...

------------- ~~~~~ Thanks to RAMASUBRAMANIA SHARMA ! ~~~~~ -------------
RAMASUBRAMANIA SHARMA said...
s

------------- ~~~~~ Thanks to RAMASUBRAMANIA SHARMA ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
viji said...
how u watch?? online or cd?
//
Viji, DVD la pathen :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
RAMASUBRAMANIA SHARMA said...
Excellent Review Thiru Alawanthar...Its nice to note that you are basically from Alanganallur...I have also done my college studies from Yadhava College...Spent my earlier days, residing at Thiruppalai...Pl continue writing such articles...
//
Hey R.S

Actually I studied in EMG school, which is also come under Yadava college management. School is opposite side to college. Hope you might know that .. I studied there from 5th to 10th :)

ulagam evlo chinnathu paarunga :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
நட்புடன் ஜமால் said...
இப்பவே கிடைக்குதான்னு பார்க்கிறேன்
//

தொடர்ந்த வருகைக்கு நன்றி ஜமால். கண்டிப்பா பாருங்க, பார்க்க வேண்டிய நல்ல படம்


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
G3 said...
:)))))))))))))))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
RAMASUBRAMANIA SHARMA said...
Hi Alawanthar, my Father Mr R. NAGESWARAN, worked for nearly 30 years in E.M.G.HIGH SCHOOL...Though I have completed my school days in Trichy...from 1985 onwards...I stayed back with my parents, at Thiruppalai...Almost every day, we assemble in the morning and evening hours in the school ground for Atheletic & CRICKET practice for nearly 5 years...Hope you must have seen us...Then,upto 2000,worked as a Field Officer, in pharmaceutical marketing for about 11 years,shifted from Madurai to Chennai to Karnataka, now residing at Trichy with my own business network.....you must be a younger brother to me...Very nice to share my whereabouts with you...Keep in touch...

------------- ~~~~~ Thanks to RAMASUBRAMANIA SHARMA ! ~~~~~ -------------
முரளிகண்ணன் said...
Nice Intro.

------------- ~~~~~ Thanks to முரளிகண்ணன் ! ~~~~~ -------------
சின்னப் பையன் said...
அட சூப்பரான படம்னு தெரிஞ்சப்புறம் முழு விமர்சனம் படிச்சுட்டா, படம் பாக்கறப்ப இன்ட்ரஸ்ட் போயிடுமேன்னு சொல்ல வந்தேன்... எங்க நூலகத்தில் இருக்கு இந்த படம்... பாத்துடறேன்.. :-))

------------- ~~~~~ Thanks to சின்னப் பையன் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

Hi RAMASUBRAMANIA SHARMA

Yes. I know Nagesh sir very much, we used to get the scholarship money from him. I studied there from 90-95, then St,Marys MDU, then Mepco sivakasi.

I have heard after my schooling that he got retired. Hope he is doing good now.. its almost 13 years back .

While studying there.. i think, very few times I went to ground :( .. since i was travelling more than 9miles everyday, after schoool i used to rush to catch a bus, Didnt have time to goto ground and all.

Now Im working in USA. Things are going smooth here. Hope you are doing great.

I cant forget, Thiruppalai.. We used to go to Balaji theater. now it is no more :(

keep in touch :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

வாங்க காயத்ரி.. வருகைக்கு நன்றி.. இன்னக்கு கொஞ்சம் கூட்டம் அதிகமாயிடுச்சு :)

முரளிகண்ணன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ச்சின்னப் பையன்,
கண்டிப்பா பாக்கவேண்டிய படம் தல..


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
G3 said...
//வாங்க காயத்ரி.. வருகைக்கு நன்றி.. இன்னக்கு கொஞ்சம் கூட்டம் அதிகமாயிடுச்சு :)//

Hehe.. ini eppavum ippadiyae thaan irukkapogudhu paarunga :))

------------- ~~~~~ Thanks to G3 ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
G3 said...
Hehe.. ini eppavum ippadiyae thaan irukkapogudhu paarunga :))
//

:) .. kadadi koottama iruntha nallathu thaane :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
VG said...
Kindly send me the DVD.

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------