ArchiveNow watchingபாசவலைரவுசு..கள்Categories
About Me |
|
அமர்க்களம்
எனது களமும்...தளமும்...
| தலைப்பு வைக்க தெர்யலே | 1/08/2009 |
|
பின்னூட்டங்கள் (11)
வகை:
நகைச்சுவை,
பொருளாதாரம்
|
|
ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடேசியில மனுசன கடிச்ச கதையா. உலக பொருளாதார வீழ்ச்சி, வீடு கட்டுமான துறையில் ஆரம்பித்து, நிதி நிறுவன்ங்கள், கார் தொழிற்சாலை என பரவி, இப்போ உலக அரங்கில் மிக அதிமுக்கியமான துறையும், எந்த வித சீதோஷ்ண நிலையிலும் , எவ்வித கால சூழலிலும் துளியும் ஆட்டம் காணாமல், இன, மொழி, தேசம் என எந்த எல்லை கோடுமில்லாமல் என்றும் பசுமையாய் இருந்த ஒரே துறை.
இவ்வளவு ஏன் வயது வித்தியாசமின்றி அனைவரையும் வாடிக்கையாளர்களாய் கொண்டிருக்கும், நேற்றுவரை வீறு நடை போட்டு கொண்டிருந்த தனித்துவமிக்க(?) துறையான "அடல்ட் எண்டர்டெயின்மெண்ட்” ஆட்டம் காண தொடங்கி விட்ட்தாம். இந்த துறை சார்ந்த ஒரு நிறுவனம், இனி தொழிலை தொடர்ந்து செய்ய இன்னும் பணம் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வேண்டும் என்கின்றனர்.
அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து தள்ளாடிக் கொண்டிருக்கும் “ங்கொய்யாங்கோ” குழுவை காப்பாற்ற வேண்டி எல்லாம் வல்ல பராக் ஓபாமாவை கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இதை படிக்கும்போது எனக்கு ”கெடக்கிறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியை தூக்கி நடுமனையில் வை” என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வந்தது. நல்ல வேளை ப்ரிண்ட் பண்ண CD எல்லாத்தையும் வித்து/பாத்து குடுங்கனு கேக்காம விட்டாங்க.

உலக அளவில் ஆசியா தான் இந்த துறையில் முண்ணனி வகிக்கிறது. இப்போ தெரியுதா ஜனத்தொகையில் நாம ஏன் முதல், இரண்டாம் இடத்துல இருக்கோம்னு. ஆனாலும் இந்த துறையின் பாதிப்பே இல்லாமல் அடுத்த ஆறேழு மாசத்தில் ”மின்வெட்டு”வீராசாமியின் புண்ணியத்தில் தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் ஒரு எழுச்சி இருக்கும்.
தொடர்புள்ள வீடியோ (செய்தி தொடர்பான வீடியோ தான், சாம்பிள் வீடியோ அல்ல)
பி.கு: எதாவது ஏடாகூடமா தலைப்பு வைச்சு, அதனால் சூடு/பில்டர் ஆகாமல் இருக்க ரொம்ப நேரம் யோசிச்சு வச்ச தலைப்பு.
| பொல்லாதவன் | 1/07/2009 |
புத்தாண்டில் நான் பார்த்த முதல் தமிழ் படம் பொல்லாதவன், ஏற்கனவே ஒரு தடவை பார்த்துவிட்டாலும் இரண்டாம் முறை பார்க்கும் போது அவ்வளவாக அலுப்பு தட்டவில்லை. இது ஒன்றே போதும் இந்த படம் பார்க்க கூடிய படம் என்று சொல்ல. நண்பர் கார்த்திக்கின் வற்புறுத்தலுக்கிணங்க இப்படத்தை பற்றிய என்னுடைய விமர்சனம்
படத்தோட பேரை பழைய ரஜினி படத்திலிருந்தும், படத்தின் ஒரு பாடலை ரஜினி/கமல் நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்தும், கதையின் முக்கிய கருவை “The Bicycle Thief” படத்திலிருந்து எடுத்தாலும், இப்போதைய கால சூழலுக்கு ஏற்றவாறு காட்சியமைப்பிலும் திரைக்கதையிலும் சில திருப்பங்களை/மாற்றங்களை செய்து படத்தை வெற்றிபாதையில் செலுத்தி இருக்கிறார் வெற்றிமாறன், அவருக்கு இது முதல் படமாம்.
பான் பாக் ரவி, பட்டாசு பாலு, வட சென்னைக்கு ஒருவன், தென் சென்னைக்கு ஒரு ரவுடி என தனிதனியாக/வரிசையாக பல கோஷ்டிகளை காட்டி பொறுமையை சோதிக்காமல், ஒரே கோஷ்டியில் மூன்று ரவுடிகளைக் காட்டியிருப்பது கொஞ்சம்ஆறுதலாக இருந்தது, மூன்று ரவுடிகள் இருந்தாலும்.. ஆ... ஊ....ஏய்.. என மயிர் கூச்செரியும் அலறல் காட்சிகள் இல்லாதது மிகப் பெரிய ஆறுதல்.
அதிலும் டேனியல் பாலாஜியை ஒரு சப்பையாக காண்பித்தாலும், அடி மேல் அடி வாங்கினாலும் கடைசிவரை அவர் காட்டும் ஆக்ரோசம்.. வாவ்.. படத்தின் வெற்றிக்கு ஒரு மிகப்பெரிய காரணம் அவர் எனலாம். ஏற்கனவே ”வேட்டையாடு விளையாடு” வில் வில்லனாக நடித்திருந்தாலும் இதில் நல்ல வித்தியாசம் காண முடிகிறது. விறுவிறுப்பான இந்த படத்தில் கதாநாயகனுக்கு ரெண்டே ரெண்டு சண்டைகள் தான் என்பது ஒரு இன்னொரு ஆறுதலான விசயம்.
அவுட்டு மற்றும் டேனியலின் அண்ணனாக வரும் இன்னொரு வில்லன் இருவரும் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அழகாக அண்டர்ப்ளே செய்திருந்தனர். மலையாள முரளி ஒரு பொறுப்புள்ள அப்பாவாக நிறைவாக செய்திருந்தார்.
இப்படத்திலும் ஒரு பொம்மையாக/ ஊறுகாயாக வருகிறார் நாயகி ”குத்து”ரம்யா (எ) திவ்யா( இது தான் உண்மையான பெயராமே), ஜோதிகாவின் இடத்தை பிடித்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை தொப்பையில், முகத்தில் (பால்வடியும்)குழந்தை தோற்றம் இருந்தாலும் மற்ற பாகங்களில் வயதை மீறிய முதிர்ச்சி/கவர்ச்சி. அவ்ளோ பெரிய ஸ்டூல் போட்டு நடக்கும் போதும் தனுஷின் இடும்புக்கும் கொஞ்சம் மேலே இருக்கிறார் உயரத்தில். ”நீயே சொல்” பாடல் காட்சிகளில் இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம், அதற்குரிய வாய்ப்புகள் பாடல் வரிகளில் அதிகமிருந்தன.
பைக் தொலைப்பதற்கு முன்னே எதைப்பற்றியும் கவலையே படாத பொறுப்பற்ற உணர்ச்சியையும், தொலைத்த பின்பு ஒருவித கவலை கலந்த தேடல் உணர்ச்சியையும் கொஞ்சமும் மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. இனிமேல் தறுதலையான வேஷமா கூப்பிடு தனுசை என்றாகிவிட்டது. இந்த படத்தின் இறுதி சண்டை காட்சியில் ”அவர் சூடாகி.. நம்மள சுளுக்கு எடுக்காமலிருந்தது” ஆறுதலான விசயம். காதல் காட்சிகளில் தனுசின் வழக்கமான நெருக்கம் மிஸ்ஸிங், யார் மீது என்ன கோபமோ/பயமோ தெரியல, மன்மதன் தான் இதில் வல்லவன் என்று சொல்லும் படி இருந்தது.

பாடல்களில் எனக்கு பிடித்தது ”மின்னல்கள் கூத்தாடும்”, ” நீயே சொல்” , “படிச்சு பார்த்தேன் ஏறவில்லை” . இப்போ எதுக்கு இந்த “அலிபாபா தங்கம்” பாட்டு வந்துச்சு? என்று கேக்க நினைக்கும் போது, பாடல் முடிந்தவுடன், ”பொறந்த நாளு அதுவுமா” என்றொரு வசனத்தில் தெரிந்தது இயக்குனரின் சாமர்த்தியம்.
”நீயே சொல்” பாடலில் இசையும் பாடல் வரிகளும் அருமை. பாடலுக்கு முன் அந்த ஹம்மிங் அதை ஒற்றிய (salsa /belly நடனத்திற்குரிய இசை என்று நினைக்கிறேன்) இசையும் பல முறை கேட்க தூண்டும் வசீகரம். வரிகளில் எனக்கு பிடித்த சில..
நீயே சொல் உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா?
நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா அடங்குமா?
பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது
காதலில் சில இடங்களில் விதைகள் கிடையாது (இந்த வரி எனக்கு புரியவில்லை, இருப்பினும் ரொம்ப பிடித்திருந்த்து)
போர்வைக்குள் பூப்பூக்க வைக்க வா.. வா..
வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா.. வா.
மரியாதை தெரியாத முத்தம் தா. தா.
கட்டில் மேல் என்ன பண்பாடு காதலா? காதல் வேர் தொடு.. தொடு..
பேசாம படத்துக்கு ”மச்சி நீ கேளேன்” என்றே பெயர் வச்சிருக்கலாம் அந்தளவுக்கு செம காமெடியா இருந்த்து கருணாஸின் அந்த ஒரு வரிக் காமெடி. அதையும் அலுப்பு தட்டாமல் அளவோடு செய்திருந்தனர்.
“அவர் சொன்னதை அவர்கிட்டேயே.. ’நீ கேளேங்கிறியே’ வெக்கமாயில்ல”
“சார் உங்க பெருந்தன்மை எனக்கு புரியுது, இருந்தாலும் அதெப்படி சார் ஒரே ரூம்ல“
“டீக்கடை பையன் சக்கரை அளவை சோதிப்பது”
என டைமிங் காமெடிகள் தனி பிட்டாக இல்லாமல் கதையோட்ட்த்துடன் வலம் வருவது ரசிக்கும் படி இருந்த்து.
பொல்லாதவன் – படம் பார்ப்பவர்களுக்கு அல்ல
| சொர்க்கத்தின் குழந்தைகள் (Children of Heaven) | 1/05/2009 |


| நீங்க நல்லா இருக்கோணும்!!! | 1/04/2009 |
”இல்ல சார், இதுக்கு முந்தின குதிரை எடுப்பு திருவிழாவுக்கு அடுத்து வந்த ஆனி மாசம் தான் பிறந்தா”
”அப்படியே வைச்சாலும் பிள்ளைக்கு மூனு முடிஞ்சு நாலு வயசு ஆரம்பிக்க போகுது.”
”அஞ்சு வருசம் ஆயிடுச்சுனுல்ல நெனச்சுகிட்டு இருக்கேன், மூனு வருசத்துக்கு முன்னாடி தான் சாமி கும்பிட்டோமா?”,
“ஆமா, இந்த வருஷம் சின்ன/ஆயா (Nursary School) பள்ளிக்கூடத்துல கொண்டு போய் விடுங்க, அடுத்த வருஷம் இங்கே சேர்த்துக்கலாம்”.
----------
ஏம்பா கந்தா, “பையனுக்கு சிலேடும், வாய்ப்பாடும் வாங்கி குடுக்கச் சொன்னெனே. என்னாச்சு”
கூச்சம் கலந்த தயக்கத்துடன், “நாளைக்கு மீன் வித்தவுடனே மொத வேல அதான் சார்”
----------
”என்ன சின்னா, சேர்க்கை முடிஞ்சு ரெண்டு மாசம் ஆச்சே. இப்போ பையன கூட்டிட்டு வர்ற?”
“அது வந்து சார், வாத்து மேய்ச்சலுக்கு கூடலூர் கம்பம் போனது தால, வரமுடியாம போய்டுச்சுங்க, நீங்க தான் பெரிய மனசு பண்ணி சேத்துக்கணும்”
----------
”இங்கிலீஷ்க்கு எந்த மாசம்யா?”
“தெரியலேயே சார், தமிழுக்கு மார்கழி மாசம் பொறந்தான்”
“சரி எந்த தேதி?”
”மார்கழி கடேசியில, பொங்கலுக்கு பத்து நாளுக்கு முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை சார்”
“அப்போ தேதியும் தெரியாது.. சரி எந்த வருஷம்?”
“நம்ம கடைக்காரவுக வீடு கட்டி முடிச்ச வருசம் சார்”
“சரி தான்.. “
“டேய் இங்க வா.. உன் வலது கைய தலைக்கு மேல கொண்டு வந்து இடது காதை தொடு பார்க்கலாம்” தொட்டேன்
“சரி சேத்துக்கலாம்”
வீட்டில்
”என்னங்க நான் தான் படிச்சு படிச்சு சொல்லி அனுப்பிச்சேன்ல இங்கிலீஷ்க்கு ஜனவரி மாசம் நாலாம் தேதி-னு இங்க ஜூன் –னு போட்டிருக்கு?”
மக்களின் கல்லாமையையும் அறியாமையயும் புரிந்து கொண்டு; அனைவரையும் அரவணைத்து இன்முகத்துடன் கல்விச் சேவை புரிந்த என்னுடைய இரண்டாம் ஆசான் ஆ.கருப்பையா அவர்களை பொங்கலுக்கு பத்து நாளுக்கு முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை (இன்று) பிறந்த நான் வாழ்த்த வயதில்லாமல் வணங்குகிறேன். நீங்க நல்லா இருக்கோணும்!
| புத்தாண்டு நல்வாழ்த்துக்களும் தீர்மானங்களும் | 12/31/2008 |
சமீபத்தில் வேலை முடிந்து ஆழ்வார்பேட்டையிலிருந்து குரோம்பேட்டைக்கு பேருந்தில் வரும்போது, பல்லாவரம் பேருந்து நிறுத்தத்தில் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த பேச்சாளர் ஒருவர், “ஈராக் போரைக் கண்டித்து, புஷ்ஷை எதிர்த்து” ஆக்ரோஷமாக பேசி தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருந்தார். மேடையில் இருந்ததில் ஐந்தில் ஒரு பங்குதான் மேடை முன் அமர்ந்து அவர் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தனர். மேடையில் மொத்தம் ஐந்து பேர் இருந்தனர்.
புஷ்ஷை எதிர்த்து, மன்மோகன்சிங் தீர்மானம் நிறைவேற்றினால் கூட அதை அவர் கண்டுக்க மாட்டார். அவ்வளவு ஏன் ”ஒரு தடவ முடிவு பண்ணிட்டா அவர் பேச்ச அவரே கேக்க மாட்டார்” அப்படிப்பட்ட மனுசன் புஷ். இவ்வளவு இருந்தும்/தெரிந்தும் அந்த மனிதர், தொண்டை நரம்புகள் புடைக்க அனல் தெரிக்க பேசி காமெடி பண்ணிக்கொண்டிருந்தார். ”தீர்மானம்” என்றவுடனே எனக்கு ஏனோ அந்த பேச்சாளர் நினைவில் வந்து போகிறார்.
என் நண்பர் ஒருவரிடம், இந்த வருடம் உங்களுடைய தீர்மானம்(Resolution) என்ன? என்று கேட்க, அவரோ, “இனிமேல் எந்த தீர்மானமும் எடுக்க கூடாது என தீர்மானம் எடுக்கப் போறேன்” என்றார் நக்கலாக. அப்படி இல்லாம எதாவது ஒரு தீர்மானம் எடுத்து, அதை நிறைவேற்ற முயற்சி செய்றது நம்ம வழக்கம்.
இந்த வருடத்திற்கான என்னுடைய தீர்மானங்கள்:
1. நாளுக்கு ஒருவரை சிரிக்க (சிரிப்பாய் சிரிக்க அல்ல) வைக்கோனும்
2. வாரத்திற்கு ஒரு பதிவாவது (மொக்கையாவது) போடோனும்
3. மாதத்திற்கு ஒரு புத்தகம் (கத பொஸ்தகம் அல்ல) படிக்கோனும்.
4. வருடத்திற்கு நண்பர்களின் எண்ணிக்கையை ஒரு மடங்கு அதிகரிக்கோனும்.
Last but not least
இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மார்பக பரிசோதனை செய்து கொள்ளளுங்கள்( இது பெண்களுக்கு ). ஆண்கள் தமது குடும்பத்திலுள்ள பெண்களை இந்த பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்துங்கள்.(புத்தி சொல்றாராம்)
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.