அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

சொல்லுவோம்ல பதிலு..!!! 5/04/2009

கல்யாணத்துக்கு வரச்சொன்னா வளைகாப்புக்கு வர்ற கதையா.. எப்பவோ டேக் பண்ணதுக்கு இப்போ தான் பதில் போட முடிஞ்சுது.. லேட்டானாலும் லேட்டஸ்டா வருவோம்னு ஒரு ஓல்டு டயலாக் சொல்லி ஆட்டத்தை ஆரம்பிச்சு வைக்கிறேன்..இனி அடிச்சு ஆட வேண்டியது உங்க கையில தான் இருக்கு

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அண்ணன் பேரு சேகர், (இந்தியர்கள்) வம்சா வழியா கடைபிடித்து வர்ற எதுகை மோனைக்காக, அதாங்க ரைமிங்குக்காக வச்சாங்களாம்.. ரொம்பவே பிடிக்கும், அட்டெண்டன்ஸ்’ல பொண்ணுங்களுக்கு அடுத்து நமக்குத்தானே முதலிடம். அப்புறம் பிடிக்காதா என்ன

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
சிங்கத்துகிட்ட கேக்குற கேள்வியா இது. இருந்தாலும் படம் பாக்கும்போதும், கதை படிக்கும் போதும் ஒன்றிபோய் சத்த்ம்போட்டு சிரிப்பது போல, சில சமயம் கண்கலங்குவதும் உண்டு. அது மாதிரி SIMON BIRCH (காமெடி படம் தான்) பாக்கும்போது ஒரு சீன்ல லைட்டா.. ரொம்ப லைட்டா தான் கலங்கிட்டேன்

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
உயர்நிலைபள்ளியில் படிக்கும்போது கட்டுரைகளில் அழகான கையெழுத்து இருந்தது. அது எப்போ எப்படி போச்சுனே தெரியல.. மீட்டிங் நோட்ஸ் எல்லாம் கோழி கிளறின மாதிரி இருக்கு இப்போ.

4. பிடித்த மதிய உணவு என்ன?
சாப்பாட்ட பத்தி யாரு என்ன கேட்டாலும் இப்போதைக்கு என்னொட பதில் ஒன்னே ஒன்னுதான் “சேஞ்ச் த டாப்பிக் ப்ளீஸ்“ .

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
தல” யோட பதில் தான் இதுக்கு.. எனக்கு நண்பராக இருக்க எந்த ஒரு தகுதியும் தேவையில்லை.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
எனக்கு தெரிஞ்ச எல்லா நீர்நிலைகளிலும் குளிச்சாச்சு. இருந்தாலும் அருவி குளியலுக்கு ஈடு இணையே கிடையாது. கல்லூரியை கட்ட்டிச்சுட்டு குற்றாலம் போய் தேனருவியில பளிங்கு மாதிரி தண்ணீர் நிரம்பி இருக்க, அந்த சாரலில் குளித்த சுகமே அலாதி தான்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
இந்த கேள்வி ஆண்களை பற்றியதெனில், அடுத்த பதிலுக்கு தாவிடுங்கோ.. பெண்களை பற்றியதெனில் தொடர்ந்து படிக்கவும். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கு. பொதுவா ”காலை” பாப்பேன்.. (செருப்பு போட்டிருக்காங்களானு பாக்க..இல்ல.. அட மெட்டிய செக் பண்றதுக்கு இல்ல பா) காலை சுத்தமா வச்சிருப்பவங்க நட்பையும் சுத்தமா வச்சிருப்பாங்கனு எதோ ஒரு குப்பை பேப்பர்ல படிச்சதுலேர்ந்து அப்படி.. இப்போ கண்ணை தான் அதிகம் பார்ப்பேன். பொய் சொல்றத கண்ல பாக்கலாம்னு யாரோ சொன்னதுனால.. ஆனாலும் முடியல.. என்னால கண்டு பிடிக்க முடியலியா இல்லா “தெளிவா” பொய் சொல்றாங்க்ளானு தெரியல சாமீய்..

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
விடா முயற்சி: பலனை எதிர்பாக்காத விடா முயற்சி.
விட்டு கொடுத்தல்: நல்ல விசயமா இருந்தாலும் நிறைய எதிர் விளைவுகள் கிடச்சிருக்கு.

9. உங்க "சரி பாதி" கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னை மாதிரி இருந்தா கண்டிப்பா பிடிக்காது

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

கிறிஸ்டன் ஸ்டூவர்டு’னு சொல்ல ஆசை தான்..ஆனா இந்த விசயம் அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா அந்த பிஞ்சு மனசு என்ன பாடுபடும்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
மாநிறம்....ஹிஹி.. இங்கே ஸம்மர் கிட்டதட்ட ஆரம்பிச்சுடுச்சுங்கோ..

12. என்ன கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பொன்விலங்கு (பூவிலங்கு அல்ல) படத்தோட பாட்டு எல்லாத்தையும் ஒரு ரவுண்டு கட்டி (யாராவது mp3 வச்சிருந்தா குடுங்கபா )அடிச்சுகிட்டு இருக்கேன். எல்லாபுகழும் (பூனைகண்ணி) சிவரஞ்சனிக்கே

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை ?
பச்சை. எங்கப்பா நான் படிச்சு பச்சை இங்க்ல கையெழுத்து போடுற அளவுக்கு பெரிய ஆளா வருவேனு ஊரு பூராம் சொல்லிகிட்டு இருந்தாரு.. கையெழுத்து தான் போட முடியல.. அந்த வண்ணமாவது மாறிடலாமே, என்ன நாஞ்சொல்றது

14. பிடித்த மணம் ?
பூ வாசத்தில் மல்லிகை தான் எப்போவும் டாப்பு.
உழவு சமயத்தில் வரும் மண்வாசனையும், கதிரடிக்கும் காலத்தில் வரும் பசுந்தளை வாசனையும்.

15. பிடித்த விளையாட்டு ?
மூழ்கு நீச்சலில் தொட்டு பிடித்து விளையாடுவது. தண்ணீர் சம்பந்தபட்ட அனைத்தும் என சொல்லலாம்.. எப்படியாவது ஒரு WATER THEME PARK போய் ஆசை தீர விளையாடணும்.

16. கண்ணாடி அணிபவரா?
இல்லீங்கோ.. கவனிக்க ”பிரிவையும் நேசிப்பவரே”. எட்டாவது படிக்கும்போது என்னோட ”சைட்” திடீர்னு கண்ணாடி போட்டிருப்பதை பாத்து நானும் போடனும்னு ஆச பட்டேன்.. ம்ம் அது ஒரு அழகிய நிலாக்காலம்.

17. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
HORROR படங்கள் தவிர பாரபட்சமில்லாம எல்லாத்தையும் பிடிக்கும். நகைச்சுவைக்கு எப்போதுமே முதல் மரியாதை தான்.

18. கடைசியாகப் பார்த்த படம்?
தமிழில்: வெண்ணிலா கபாடி குழு – கெராமத்து விளையாட்டு
மலையாளத்தில்: சைக்கிள் சைக்கிள் – ரவுண்டு கட்டி அடிகுடுத்த செம மொக்கை
ஸ்பானிஷில் : (Como agua para chocolate) Like Water for Chocolate – Still its tasting like chocolate
ஆங்கிலத்தில் : Australia – a funny + thrill journey

18. பிடித்த பருவ காலம் எது?
இந்த வசந்த காலம் தான். மொட்டையா இருக்குற மரங்கள் எல்லாம் இளம்பச்சை இலைகளை தாங்கி நிற்கும் அழகே அழகு தான்.

19, என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க ?
இப்போ படிக்கல.. போன வாரம் ரமணி சந்திரனின் ”பார்க்கும் விழி நானுனக்கு” படிச்சேன்.

20. உங்கள் desktop-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அடுத்த கனவுகன்னி வரும்வரை.
21. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : சந்தேகமே இல்லாம சாயந்திரம் அடிக்கும் பள்ளிக்கூட மணியோசை.
பிடிக்காத சத்தம் : அதே சந்தேகமே இல்லாம காலையில் அடிக்கும் பள்ளிக்கூட மணியோசை.

22. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு ?
இதை விட அதிகபட்சம் போக முடியாது, போகவும் கூடாது

23. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
சூப்பரா மொக்கை போடுறேன்னு எல்லாரும் சொல்லிக்கறாங்க :)))) (Thanks: G3) இன்னும் G3 மட்டும் இதை சொல்ல்லை .

24. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.
துரோகம், நம்பிக்கை துரோகத்தைக் கூட தாங்கிக்கொள்ளக்கூடிய எனக்கு.. நம்ப வச்சு கழுத்தறுப்பதை மட்டும் தாங்கி கொள்ள முடிவதில்லை

25. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்.

26. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
பிரபல செய்திதாள் நிறுவனம் உலகத்தில் வாழ்வதற்கு சிறந்த 10 நாடுகளை வரிசைபடுத்தியிருந்தது. அதில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய ஐரோப்ப்பா கண்டத்தை ஒரு விசிட் பண்ண ஆசை.

27. எப்படி இருக்கணும்னு ஆசை?
என்ன ஒரு கேள்வி இது... சந்தேகமே இல்லாம சந்தோசமா இருக்கணும்னு ஆசை.

28. மனைவி(கணவர்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் !
அதாங்க இது.

29. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
வாழ்க்கை வாழ்வதற்கே.. (பழைய கோல்கேட் ஜெல் விளம்பரத்தோட ஆரம்பவரி)

30. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு எது?
தல அவரோட சகோதரத்துவத்தை பத்தின ஒரு சின்ன நிகழ்வை பற்றி சொல்லி இருந்தார். அதே போல நானும் பலமுறை ஏமாத்தியிருக்கேன், ஆனா அடி எல்லாம் என் அண்ணனுக்கு தான். அவந்தான் சின்ன பையன் எதோ பண்ணிட்டான்’னு சொல்லி பெரும்பாலும் என்னை மன்னிச்சு விட்டுடுவாங்க. இளையவனா இருக்கிறதுல அப்படி ஒரு அட்வாண்டேஜ்.

அம்புட்டுதேன்..