அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

It is a wake-up call !!! 4/19/2009


கூட வேலை பாக்குற ஃபிரண்ட் ஒருத்தர், “இன்னைக்கு வீட்டுக்கு வா, எங்க
ஃபிரண்ட் ஒருத்தவங்க வர்றாங்க, நீயும் வந்தா நல்லா இருக்கும். வாஅப்டினு கூப்பிட்டாங்க, ரெண்டு நாளைக்கு சாப்பாட்டு பிரச்னை இல்ல பாருங்க, அதனால போனை வச்ச அடுத்த ரெண்டு மணி நேரத்துல அவங்க வீட்டுல இருந்தேன் நான், பஞ்சுவாலிட்டு முக்கியம் தானே. வரவேண்டிய விருந்தாளிங்க அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு தான் வந்தாங்க.

அப்படியே கூட்டமா, பக்கத்துல இருந்த Marsh Creek State Park Lake க்கு எல்லாரும்
போய் ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வந்தோம். இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு போனா அருமையா இருக்கும் போல, இப்போ தான் இலையெல்லாம் துளிர் விட ஆரம்பிச்சிருக்கு.

வீட்டுக்கு வந்து சாப்பிட உக்காரும் போது பேச்சு முகவை சிங்கம், அடுத்த உலக
சூப்பர் ஸ்டார் சாம் ஆண்டர்சன் பக்கம் போச்சு. அவரின் ராசாத்தி பாட்டோட சிறப்பம்சங்களையும் அவரது நடனசைவுகளையும் பத்தி படு பயங்கரமா விவாதம் போயிகிட்டு இருந்துச்சு. தொடர்ந்து பேச்சு கொஞ்ச சீரியசாகி சூசன் பயோல் பக்கம் திரும்பியது. பல்லாயிரக்கணக்கான மக்களை வாய் பிளக்க வைத்திருக்கிறார் இந்த 47 வயது யுவதி. இன்னிக்கு ஹாட் டாபிக் இவர் தான்.

Britains Got Talent என்ற தொலைக்காட்சி தொடரில் தனது திறமையை/கனவை
நிறைவேற்ற அரங்கத்தில் நுழைகிறாள் சூசன். தனக்கென தனிச்சிற்ப்பாக ஏகப்பட்டநெவர்”, நெவர் டேட்டடு.. நெவர் கிஸ்ஸ்டு.. சொல்லிக் கொள்ளும்படியான வேலை எதுவும் இல்லை. நம்மநெனச்சுகிட்டுஇருக்கும் அழகும் இல்லை.

நடுவர் உள்பட பார்வையாளர்கள் முகத்திலும் ஒரு ஏளனம், “இடம் தெரியாம
வந்துட்டா போலஎனசொல்லும் பார்வை. உதாரணத்திற்கு இந்த சுட்டியில் “I am trying to be a professional singer” என சூசன் சொல்வதை கேட்டு, ஒரு பெண்ணின் முகம் அடையும் அஷ்டகோணலை பாருங்கள்

பாட ஆரம்பிச்சு ஐந்து வினாடிக்குள் ஒட்டுமொத்த அரங்கமும் ஆச்சர்யத்திலும்
ஆரவாரத்திலும் ஆர்ப்பரிக்கிறது, இறுதிவரையிலும் தொடர்கிறது இந்த ஆர்ப்பரிப்பு. பாடிமுடித்ததும் அரங்கமே எழுந்து நின்று கைதட்டி அமர்கிறது.

இது மாதிரி அருமையான திறமைகளை வைத்து கொண்டு பிறரின்
கேலிப்பேச்சுக்கு அஞ்சி வெளிக்காட்டாமல் இருந்தால், இவரை ஒரு உதாரணமா எடுத்துகிட்டு பின்னி பெடல் எடுங்க மக்கா. நடுவர் சொன்னது போல் It is a wake-up call.

இது தொடர்பான சுட்டிகள்
சூர்யாவின் உலக அழகி சூசன் பாய்ல் !!
The House Next Door - Links for the Day (April 14th, 2009)
Youtube வீடியோ..
John Scott Lewinski - Susan Boyle Craze Continues as பாஸ்ட் Work Surfaces

மறக்கப்பட்ட மரங்கள் 4/17/2009


கிராமத்து வீடு என்றாலே முன்னாடி ரெண்டு வேப்ப மரங்கள், கொல்லை புறத்தில் தென்னை, வாழை, பப்பாளி என வீடை சுற்றி ஒரு சின்னதா ஒரு காடு இருக்கும். அதை தவிர ஊரில் ஆலமரம் (பஞ்சாயத்து நடத்த), அரசமரம், அத்திமரம், பூவரசமரம் என அங்கங்க இருக்கும். இது தான் பாரதிராஜாவின் டிபிகல் கிராமம். எங்க ஊரும் அப்படிதான். எங்க வீடும் அப்படிதான். வீட்டுக்கு முன்னே ரெண்டு வேப்பமரம் உண்டு, கொல்லையில் வாழையும் பப்பாளி மரமும் இருக்கு, தென்னை மட்டும் இல்ல - சில நடைமுறைசிக்கல் காரணத்துனால எங்க அப்பா தென்னை வைக்க ஒத்துக்கல.

இதை தவிர்த்து, ஆலமரம், அரசமரம், அத்திமரம், பூவரசமரம் எல்லாம் என் கிராமத்தில் இருந்தது. இன்னொரு முக்கியம்சமாக இலந்தமரமும் இருந்தது.

இதுவரைக்கும்
எனக்கு அதிகமாக தெரிந்த இந்த மரங்கள் சில இப்போ எங்க ஊரிலே இல்லாம அழிஞ்சு போச்சு. அதை பற்றிய என்னுடைய ஆதங்கமான பதிவு தான் இது. சரி வாங்க ஒவ்வொரு மரமா பாப்போம்.

ஆலமரம் -
இந்த
மரம் பொதுவா குளகரையோரமாகவோ, ஆற்றங்கரையோரமாகவோ தான் இருக்கும். பெரும்பாலும் எனக்குத் தெரிஞ்சு ஆலமரத்தின் அடியில் கோயில் எதுவும் இருந்த்த்தில்லை( தவறா இருந்தா சொல்லுங்க) .ஆலும் வேலும் பல்லுக்குறுதிகேள்விபட்டிருப்பீங்க.. நான் செயல்லேலே இறங்கியிருக்கேன். இருந்தாலும் வேப்பக்குச்சியில இருக்கிற திருப்தி ஆலங்குச்சியில இருந்ததில்லை. ஆலமரத்தின் தனிச்சிறப்பே அதன் விழுது தான். நம்ம எல்லாம் கேள்விபட்டிருப்போம் கூட்டுகுடும்பத்தை ஆலமரத்தோட ஒப்பிட்டு பேசுறத நம்மெல்லாம் கேள்விபட்டிருப்போம், அதுக்கு இந்த விழுதுகள் தான் முக்கிய காரணம்.வெயிலுக்கு மட்டுமல்ல மழைக்கு கூட (பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவங்க) ஆலமரத்தின் அடியில் ஒதுங்கலாம், இலை அவ்ளோ அடர்த்தியாயிருக்கும் அதனால மழையிலிருந்து நனையாமல் ஒதுங்க முடியும். ஆனால் இந்த ஆலமரத்தின் அடியில் ஒரு புல் பூண்டு கூட முளைக்காது, இதுக்கு அதே காரணம் தான்.

புதிதாக
புதிதாக உருவாக்க வில்லையெனினும், இருக்கிற மரங்களை யாரும் அவ்வளவாக அழிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்த மரத்தின் தண்டு எதற்கும் பயன்படாது, எரிப்பதற்கு கூட உகந்த்தல்ல்ல.. அதனால் தான் இன்னும் பல மரஙகளை விட்டு வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

ஒரு
ஒரு காலத்துல எங்க ஊர் குளக்கரையில் ரெண்டு ஆலமரங்களை பொன்னைய்யா என்பவர் தான் நட்டிருந்ந்திருக்கிறார். 1993 வாக்கில் தீபாவளி சமயத்தில் வெள்ளம் காரணமாக, மடை உடைபட்டு ரம் கீழே விழுந்துவிட்ட்து, அவரும் அதே சமயத்தில் இரண்டு நாள் கழித்து இறந்து போய்விட்டார், மரம் விழுந்தது அவருக்கு தெரியாமலே போய்விட்டது. ஊரில் இருந்த எல்லோரும் ரொம்ப பெருமையாவும் ஆச்சர்யாமாவும் பேசினாங்க இந்த ஒற்றுமையை. இன்னும் ஒரு மரம் இருக்கு அங்கேயே, அவர் நினைவாக அடுத்த சந்த்திக்கு.

அரசமரம்:

அரசமரம் -
முத்தாலம்ம்ன்
கோயிலும் முனியாண்டி கோயிலும், எங்கள் ஊரின் கிழக்கு கோடியிலும் அதை தாண்டி வயல் வெளியும், குளம்/கிணறும் இருக்கும். காலையில் கிணறு/குளத்தில் குளித்து விட்டும் பெருசுகள் இந்த கோயிலில் ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஊருக்குள் நுழைவார்கள். பூவரசம் மரத்த வெட்டினாலும் இந்த மரத்தை யாரும் தொடவில்லை, வெட்டும் போது சில வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால், பயந்து விட்டுவிட்டனர் புண்ணியவான்கள், அந்த அளவிற்கு மரத்தின் கிளை நாலாபக்கமும் படர்ந்து விரிந்து இருக்கும். இதன் இலையும் அத்தி மர இலையும் கிட்ட தட்ட ஒரே மாதிரியானவை தான்.

அத்திமரம்:


அத்திமரம் -
மரத்தின் தண்டு பாகம் வெண்ணையின் போல வெள்ளையாக இருக்கும் இந்த மரத்தின் இலையும் அரச மர இலையை போல இருக்கும், பழம் ரொம்ப செந்நிறமாக இருக்கும். இத வச்சு தான் “அத்திபழ செவப்பா?,என் அத்த மக செவப்பா?னு ஒரு சினிமா பாட்டு ஒன்னு வந்துச்சு. இலை அளவில் சிறியதாக இருப்பதால் அவ்வளவாக நிழல் விழாது. நான் படிச்ச பள்ளிக்கூட ப்ளே கிரவுண்டில் இந்த மரம் இருந்த்துச்சு. இப்போ கண்டிப்பா இருக்காது, ப்ளே கிரவுண்ட் எல்லாம் வீடு கட்டா கிரவுண்ட் போட்டு வித்துட்டதா கேள்வி.

இலந்தைமரம் -

கார்த்திகை
இலந்தைமரம் -
கார்த்திகை, மார்கழி
மாசத்துல பூப்பூக்க ஆரம்பிக்கும் தை மாசத்துல பழம் பழுக்க ஆரம்ப்சிச்சுடும் பஜனை ஆரம்பிக்கும் போது அந்த தைமாச குளிர்ல விள்க்கு வெளிச்சத்துல பழத்த் சேகரிக்க ஒரு கூட்டம் எப்போவும் எங்க வீட்டை சுற்றி இருக்கும், அதுல் நாங்களும் இருப்போம் ஏன்னா இந்த மரத்தடியில தான் எங்க வீடு இருந்துச்சு. மரத்துல ஏறியும் உலுப்பிவதுண்டு, ஆனா முள் தொல்ல அதிகம். மரம் முழுவதும் இலையை விட முட்கள அதிகமா இருக்கும் அதுவும் கொக்கி போல இருப்பதால் முள் குத்தினால் கவன்மாக எடுக்க வேண்டும் இல்லையெனில் மொத்த சதையையும் பறிகொடுக்க வேண்டியிருக்கும்.

இலந்த
இலந்த பழ சுவைக்கு ஒப்பிடுகையில் இந்த பலியெல்லாம் தெல்லாம் ரொம்ப சாதாரணம், பல முறை ரத்தம் பார்த்த்துண்டு. இந்த பதிவ நான் எழுதி கிட்ட தட்ட மூனுமாசம் ஆச்சு, ஆணி அதிகமானதால் பதிவிட முடியல, எஸ்ராவின் இந்த பதிவ படிச்ச உடனே நல்ல வேளை தாமதம் ஆச்சுனு மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன். படிச்சுபாருங்க இலந்தபழ சுவைய பத்தி எப்படி எழுதியிருக்காருனு..

இம்மரத்தை
இம்மரத்தை பொதுவா காட்டில் மட்டும் தான் காணமுடியும், அதிர்ஷ்ட வசமாக எங்க வீட்டின் அருகே இருந்தது. ”இலந்த மர வீடுஎன்று எங்க வீட்டுக்கு ஒரு லேண்ட் மார்க் வச்சு பெருமையா சொல்வதுண்டு.

ஆனா
ஆனா ஒரு ஏழு வருசத்துக்கு முன்னே பத்து பைசாவுக்கு உபயோகமில்லாத நாலு ஊரு பெருசுங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து சாமி கும்பிட பணம் வேணும்னு சொல்லி அந்த மரத்தை வெட்டி சாமி பெயரை சொல்லி சாப்டுட்டானுங்க.


நம்ம பூவரசமரம் -
நம்ம கவிஞர்களுக்கு ரொம்ப பிடித்த மரம். என் அறிவிற்கு எட்டிய வரை, இந்த மரம் கிட்ட தட்ட அழிந்தே விட்டது. கிழக்கே போகும் இரயில். 4 ஸ்டூடன்ஸ், சக்திவேல் போன்ற படஙகளில் இத பத்தின பாடல் உண்டு. குசும்புக்கார கவிஞனுங்கு டபுள் மீனிங்க்க்கு தான் பயன்படுத்தி இருக்கானுங்க, கிராமத்துல பொண்ணுங்க மத்தியில் சொன்னா அடி/உதை தான் கிடைக்கும். இல்லே குறைந்த பட்சம் ஒருமுறைப்பாவதுகிடைக்கும். அதன் இலையை மடித்து விசிலாக பயன்படுத்தியிருக்கோம். இலை ரொம்ப மிருதுவாவும் இல்லாம, ஆலமரம் போல கடினமாகவும் இல்லாமல் இடைபட்டதா இருக்கும்.


அதன்
அதன் காயை காம்புடன் ஒடித்து பெணகள் பமபரம் போல சுற்றி விளையாடுவதுண்டு. கரும்பச்சை இலைகளுக்கிடையே இருக்கும் மஞ்சள் நிற பூக்கள் அருமையாக இருக்கும் பார்ப்பதற்கு. அதிர்ஷ்டவசமாக இந்த மரம் எங்க ஊரில் இருந்தது. இதனடியில் முத்தாலம்மன் கோவிலும் இருந்த்து. எதுக்காக இந்த மரத்தை வெட்டுனாங்கனு தெரியல. இப்போ அந்த மரம் இட்த்தை வேப்பமரம் ஆக்கிரமிச்சு இருக்கு. ஆனாலும் எனக்கு அந்த பூவரசமரம் தான் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்துச்சு.

ம்ம்
.. ம்ம்ம்ம்..... அது ஒரு அழகிய நிலாக்காலம்.

த்ரிஷாவும்.. பிரகாஷ்ராஜும்..!!! 4/10/2009



தலைப்பை படிச்சுட்டு எதாவது விவகராமநெனச்சு வந்தீங்கன்னா, சாரி.. இது அபியும்.. நானும் படத்த பத்தின பதிவு அவ்வளவு தான்.

மேற்கொண்டு எழுதுறதுக்கு முன்னாடி, ராதாமோகனுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் உங்கள் வெற்றியடைய வாழ்த்துகள். இவ்ளோ வாழ்த்துனாலும், நான் இந்த படத்த காசு குடுக்காம தான் பார்த்தேன், சூழ்நிலை இங்கேஎங்கேயும் இந்தபடம் ரிலீஸ் ஆகல, அதனால்தான், ஊருக்கு போகும் போது கண்டிப்பாஇன்னொரு தடவை தியேட்டர்ல பாப்பேன் (என்தங்கை மகளோட )

அழகிய தீயே, பொன்னியின் செல்வன் வரிசையில் இப்போது அபியும் நானும், தலைப்பிலேயே அபிக்குதான் முக்கியத்துவம், ஆனா நடிப்புல யாரையும் பக்கதுல வர விடல மனுசன்.

சிங்கப்பூர்ல இருக்கும் போது, வார இறுதியில் ஒரே டிக்கெட்டில் ரெண்டு படம்பாக்க போவோம். அப்போ முதல் படம் தாஸ் ( லைட்டா கொத்தா இருந்துச்சு, பாட்டெல்லாம் சூப்பர்) பாத்து கொஞ்சம் டயர்டான பொறகு, பொன்னியின்செல்வன் போட்டாங்க, படம் ஆரம்பிச்ச ஒரு பத்து பதினைஞ்சு நிமிசத்துல சிரிச்சு, சிரிச்சு, செம ப்ரஷ்ஷா ஆகிட்டோம். ஒட்டு மொத்த தியேட்டரும் அர்த்தராத்திரியில் விழுந்து விழுந்து சிரிச்சது. அதே மாதிரியான ஒரு அருமையான்படம் தான் இது.

வீட்ட நிர்வகிக்க மனைவியும், வீட்டு வேலைகளை பாத்துக்க ரவி சாஸ்திரியும், தொழிலை நிர்வகிக்க நண்பனும் இருக்க, மனுசன் முழுநேர வேலையா புள்ளமேல பாசத்த கொட்டோனு கொட்டி வளர்க்கும் ஒரு அன்புள்ள அப்பாவின்அருமையான கதை.

எனக்கு ஏ காவுமே ஏ கிஸான், ரகு தாத்தா வரைக்கும் ஹிந்தி நல்லா தெரியும், படத்துல இந்த ஹிந்தி டயலாக் மட்டும் நல்லாவே புரிஞ்சுது.

மாப் கி ஜி; மாப் கி ஜி
மாவு தான் கொட்டிடுச்சே
க்யா?
பரவாயில்ல, ஹிந்தியிலேயும் பரவாயில்ல
நேம் கியா ஹே
ஜஸ்பீர்கால்
ஷ்ச்ஷ்ச் பேர்ல பீர் இருக்கா, அதான் போதையாகிடுச்சு
ம்ம்.. கியா?
அச்சா நேம்

ஆப்கா நாம்
சாஸ்திரி, ரவி சாஸ்திரி

அதுக்குமேல எல்லாம் பஞ்சாபிலே இருந்ததுனால அவ்வளவா புரியல

தான் தேர்ந்தடுத்த சேலையை தவிர்த்தவுடன், வெறுப்புடன் ”லுங்கி இருக்கா?” என்று கேட்பதிலாகட்டும், ஜோகி வண்டி ஓட்டும்போது பேதி கலங்கமுழிப்பதிலாகட்டும், அட்மிசனுக்கு படிச்சுட்டு கேள்வி கேக்க சொல்லிவற்புறுத்துவதிலாகட்டும், சிங் கூட்டத்துகிட்ட மாட்டி முழிப்பதிலாகட்டும், பிரதமர் கிட்ட சல்யூட் அடிச்சு சத்தமாக பேசுவதிலாகட்டும் மனுசன் பின்னிபெடல் எடுத்துள்ளார், நடிப்பு சூரியனய்யா அவன்.

தமிழ் சினிமா உலகில் நான் மதிக்கும் இரண்டு ஜம்பாவன்கள் கமல் மற்றும்பிரகாஷ்ராஜ் தான், இருவரும் இயக்குநர் சிகரம் பாலசந்தரின் கண்டுபிடிப்புஎன்பது ஓர் ஒற்றுமை. தாங்கள் சினிமாவினால் சம்பாதித்தை சின்மாவிலேமுதலீடு செய்து, முடிந்த அளவுக்கு தரமான படத்தை தர போராடும் நல்லஉள்ளங்கள்.
இவ்வளவு தூரம் பேசிட்டு, என் ”தலைவி”, மாமீய பத்தி பேசலனே எப்படி. சொந்தகுரல்ல பேசுவதற்காகவே நிறைய டயலாக் இங்கிலீஷ்’ல இருந்துச்சு. ரொம்பஅலப்பறை இல்லாம அடக்கி வாசித்திருந்தது அருமை, கொஞ்ச நாளைக்கு இந்தமாதிரி குருவி, குட்டிசாத்தானை எல்லாம் விட்டுட்டு இந்த மாதிரி படங்கள்லஅப்பப்போ (நோட் பண்ணுங்க மக்களே அப்பபோனு தான் சொல்லி இருக்கேன்) நடிங்க. ”அப்பா வரட்டும்” னு பதிவு திருமண அலுவலகத்தில் சொல்லும்காட்சியில் பாசத்தை மென்மை கலந்த வன்மையுடன் அருமையாகவெளிபடுத்தியிருந்தார்.

அடுத்து ஐஸ்வர்யா. ”உள்ளே வெளியே” படம் மூலம் என்னை மாதிரி விடலைபையன்களின் தூக்கத்தை கெடுத்த தேவதை. அப்போ எல்லாம் கில்லிவிளையாடும் போதெல்லாம் அம்மணி ஞாபகம் தான் வரும். நையாண்டிதர்பாரில் நிகழ்ச்சியில் ”மணி அடிக்கிறத” பத்தி இவர் பண்ண தர்பார்ல யூகி சேதுகொஞ்ச நேரம் அசந்து தான் போனான், நானுந்தான். கன கச்சிதமா ஒரு நடுத்தரகுடும்ப ஸ்திரியா வாழ்ந்திருந்தார். இதுக்கு முன்னே “குத்து”, கொலைனு பலபடங்கள்ல வந்து போனாலும் இந்த படத்தில் (மனசில்)நின்னு போயிருக்கிறார். பிச்சைகாரனை பாத்துட்டு, ”உங்க சொந்த காரங்களா?” என பிரகாஷ்ராஜ் கேக்க, எதிர்த்து கோபப்படும் காட்சி பிடித்திருந்தது.

வசனஙக்ளில் நாடகத்தனமான வாடை அடித்தாலும் நளினம் இருந்தது. படத்தில்பிரகாஷ்ராஜ் அடிக்கடி சொல்லும் Life is beautiful வசனம் அருமையாகஉபயோகபடுத்தபட்டிருந்தது.

நம்ம எப்பவுமே பக்கத்துல இருக்கிறவுங்களை புரிஞ்சுக்க முயற்சி பண்றதேஇல்ல, புரிஞ்சுகிட்டதா தப்பா நெனச்சுகிறோம்

சொன்னா நம்ப மாட்டீங்க , எம்பொண்ணு கல்யாணத்துல மேண்டலின்ஸ்ரீனிவாசன் கச்சேரி வைக்கனும்னு ஆசைபட்டேன்..

வீடு கிட்டதான், ஆனா நான் ரொம்ப தூரம் போகணும்

போன்ற வசனங்களும் கதையையொட்டிய அருமையான உரையாடல்கள்

மனோபாலா அப்பப்போ வந்து எடக்காக கேள்வி கேட்பது கடியா இருந்தாலும், காட்சியிடையே ஒன்றி இருப்பதால் உறுத்தலாக தெரியவில்லை

எனக்கு படத்துல எந்த குறையும் தெரியல்ல ( அதுக்கு என் நல்ல மனசு கூட ஒருகாரணமா இருக்கலாம் ), சில விமர்சனங்களில், பிரகாஷ்ராசின் கேரக்டர்டிரான்ஸிஷன் சரியா இல்லேனு படிச்சேன், ஆனா ”நம்ம குழந்தையை நம்ம பிரியும் போது வருத்த்படுற மாதிரி தானே அன்னைக்கு உங்க அப்பா அம்மா உன்ன பிரிஞ்சு வருத்த பட்டிருப்பாங்கனு” “EMPTHY” பண்ணிவருத்தபடுவதிலேயே தெரிகிறதே அந்த கதாபாத்திரத்தின் முதிர்ச்சி.

அபியும் நானும் – தமிழ் சினிமாவும் ரசிகனும்