அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

நன்றி! நன்றி!! நன்றி!!! 1/30/2009

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை எதிர் கொள்வதில் தான் நம் எதிர்காலமே அடங்கியிருக்கிற்து. அமெரிக்காவில் இருப்போருக்கு இருக்கும் மிகப்பெரிய வியாதி/பிரச்னை தனிமை. தனிமைனா சும்மா அம்மா அப்பாகிட்ட கோவிச்சு போய் கோயில் வாசல்ல/குழாயடியில/கிணத்து மேட்டுல உக்காந்து போற வாற பொண்ணுங்கள சைட் அடிக்கிற தனிமை இல்ல. அத்துவான காட்டுக்குள்ள அர்த்த ராத்திரியில எங்கே இருக்கோம்னு தெரியாம, எங்கே போறோம்னும் தெரியாம மண்ட காய்ஞ்சு மயிரு பூத்து போற ஒரு தனிமை.

”உன்னை சரண்டைந்தேன்” என்ற படத்துல ஒரு டையலாக் வரும். “எங்க ஊர்ல ஒரு நாயை அடிச்சா கூட ஊரே திரண்டு வந்து, என்னானு கேக்கும், ஆனா நகரத்துல ஒரு மனுசனை அடிச்சா, ஒரு நாய் கூட என்னானு கேக்காது”. அதே மாதிரி தான், ஹாஹா என ஆர்பரித்து சிரித்தாலும், ஓ..வென கதறி அழுதாலும் ஒரு பய கூட என்னானு கேக்க மாட்டான். தனியா தான் இருக்கனும். தனியா தான் சிரிக்கனும் லூஸ் மாதிரி.

அதுக்கு தான் இங்க இருக்குற மக்க, லேப் டாப் ஒன்ன மடியில ஒக்காத்தி வச்சுகிட்டு அது கூட பேசி/சிரிச்சு/அழுது/பொலம்பி பொழப்ப ஓட்டிகிட்டு இருப்பானுவ. அப்படி தான் நானும் நாட்களை கடத்தினேன். புதுசா வரும் தமிழ் சினிமாவை எவ்வ்ளவு மொக்கையா இருந்தாலும் பாத்துட்டு, நண்பனுக்கும் போன் போட்டு பட நேரத்தை அதிகமா படத்தை பத்தி ஒரு மொக்க போட்டு ( அவனும் பாத்துட்டு திரும்ப ஒரு ரிவியூ பண்ணுவான் ) நேரத்தை ஒப்பேத்தினோம். 

நம்மளுக்கு இந்த படம் பாக்குறத தவிர வேறெந்த நல்ல பழக்கமும் கிடையாதா.. என்னை போல ஆளுகளுக்கு நேரத்தை கடத்துறது ரொம்ப கஷ்டம். GMAIL. YAHOO,  REDIFF , OFFICE MAIL, DINAMALAR, CNN, TAMILMANAM என எல்லாத்துக்கும் சராசரியா 100க்கு மேல ஹிட் கவுண்ட் கொடுத்து எதோ என்னாலான உதவிய செஞ்சுகிட்டு இருந்தேன். அதுவும் ரொம்ப நாளுக்கு தாக்கு பிடிக்கல.. அப்ப நண்பர் ஒருவரின் மூலமா உதித்தது தான் லைப்ரேரி விஜயாம்..

பொழுது போக்குக்காக படம் பாக்க ஆரம்பிச்சு, படம் பார்க்க நேரமில்லாத அளவுக்கு படங்களை தேடிப் பார்த்தேன். அதற்கு அடுத்த படியாக தான், பார்த்த படங்களில் பிடித்ததை பதிவாகவும் போட ஆரம்பித்தேன். இப்போ புத்தகமும் படிக்க ஆரம்பிச்சாச்சு. அடிக்கடி என்னை லைப்ரேரியில் பார்ப்பதால் லைப்ரேரியன் லிண்டா நல்ல பழக்கமானார். ஏற்கனவே பதிவில் சொன்ன மாதிரி படங்களை எனக்கு தேடி தந்து உதவினார். 

சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நாள் மதிய உணவின் போது சந்திக்கும் போது வழக்கம் போல வழ வழ என பல விசயங்களை பற்றி பேசினேன். அதில் நான் பேசிய முக்கிய விசயங்கள் The World is Flat – புத்தகம் பற்றியது மற்றொன்று எனது நீண்ட நாள் கனவான “விவசாயம்” பற்றியது. 

இது நடந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது, இன்று ( வெள்ளிகிழமை ) அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும்போது ஒரு பார்சல் அமேசானிலிருந்து வந்திருந்தது. பிரித்து பார்த்தால் இரண்டு புத்தகங்கள் ஒன்று நான் பேசிய அதே புத்தகம் மற்றொன்று விவசாயத்தை பற்றிய Hot, Flat and Crowded.  Its surprise gift from Lynda. ஆச்சர்யபட்டு போனேன், நான் பேசியதை உன்னிப்பாக கவனித்திருக்க வேண்டும் அவர். அவருக்கு எனது நன்றிகள் பல. Thanks Lynda
இதே போல எனக்கு எல்லாவித்திலும் உறுதுணையாக இருக்கும் இன்னொரு தோழியையும் இச்சமயத்தில் நினைவு கூர்கிறேன். நன்றி.



நிகழ் கதைகள்…3 கடையை எப்போ தொறப்பீங்க? 1/29/2009


முழுபோதையில் சரிகிற வேட்டியை இழுத்து பிடித்து ஒரு மூலையை பல்லில் கடித்து, இன்னொரு மூலை வேட்டியை தெரு கூட்ட விட்டு தெனாவெட்டா தெருவலம் வர்றான் நம்ம (டுபுக்கு) ராமன்.

தரைக்கு கீழே புறாக்கூண்டு போல இருக்கும் பலசரக்கு கடையில் தூக்கணாங்குருவி கூடுகள் போல் தொங்கி கொண்டிருந்த தீன்பண்ட பைகளை விலக்கி, “(யோக)வள்ளி பீடி குடு”.

“என்ன பீடிடா?” வெரசா வெரட்டி விடும் நோக்கில் வள்ளி.

“தெனமும் வாங்குறது தான்.. என்னமோ புதுசா கேக்குறா”

வேண்டா வெறுப்புடன் இரண்டு ”ஐந்து பூ மார்க்”  பீடியை எடுத்து திணிக்கிறாள் (யோக)வள்ளி

ஆசிர்வாதம் குடுக்க வரும் யானை, பிள்ளையை நுகர வருவது போல பக்க வந்து ”என்னாது இது?“ – (டுபுக்கு) ராமன்.

சுவாச அறை உருவாக்கியா கீட்டோனும் ராமன் உருவாக்கிய CO2 வும் ஒன்று சேர்ந்து தாக்க, மூச்சடைத்து விம்மி விழி பிதுங்கி “நீ கேட்டது தாண்டா, பூ மார்க் பீடி” மூச்சுகாற்றை விரட்டியடித்தபடி (யோக)வள்ளி.

“அது தான் ப்ப்பூ இருக்குல.. எங்களுக்கென்ன கண்ணு அவிஞ்சா கிடக்கு”

பாசம் கலந்த வெறுப்புடன் ”அவிஞ்சா தான்டா நல்ல இருக்கும் இந்த ஊரும் நாங்களும்”  

“என்னாங்க முனுமுனுப்பு?.. ரெண்ட எடுத்து நீட்டுற.. பாக்கெட்டோட குடுப்பியா”

ஒரு கையால் சட்டை காலரை தூக்கிவிட்டு, பல்லில் கடித்த வேட்டி முனையை கையில் பிடித்து ஒரு காலை மேலே தூக்கி, படி மீது வைத்து படம் காட்ட, வெறுத்துபோன (யோக)வள்ளி, ”இந்தா போய்த் தொல.. மொதல்ல இடத்த காலி பண்ணு.”  

”இத மொதல்லேயெ செஞ்சிருக்கலாம்ல” வெற்றிக் களிப்புடன் ”வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்.. ஓய்..ஹோய்..”

மறுநாள் காலையில் கடைக்கெதிரான திண்ணையில் மழையில் நனஞ்ச கோழியாக (டுபுக்கு) ராமனும்.. சினங்கொண்ட சிறுத்தையாக (யோக)வள்ளி விழிகளாலே விசாரித்துக் கொண்டனர்.

என்ன விசாரிச்சுகிட்டாங்கனு சொல்லவும் வேணுமா? தலைப்பை ஒருமுறை படிங்க (அப்படி தான் ஆரம்பிச்சான் நம்ம (டுபுக்கு) ராமன்).

பி.கு : கதையின் அடிநாதம் ( அப்டி ஒன்னு இருக்கா என்ன?) பலருக்கு சில சந்தேகங்களை எழுப்பியதால், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது ( நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ).

மயங்குகிறான் ஒரு மருத்துவன் 1/27/2009


மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு கடற்கரை கிராம மக்கள், எட்டு ஆண்டுகளாக அரசாங்க நலத்திட்ட உதவியை எதிர்பார்த்து வாழவேண்டிய இழிநிலைக்கு தள்ளபடும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமா கிராமத்தை விட்டு வெளியேறி, நகரத்திற்கு நகர்கின்றனர். இந்த இழிநிலையிலிருந்து மீள அவர்களுக்குத் தேவை ஒரு தொழிற்சாலை வசதி. ஆனால் அதற்கு தடையாக இருப்பது லஞ்சம் மற்றும் ஒரு மருத்துவரின் ஐந்து சேவை கடிதம். இந்த இரண்டு பிரச்னையையும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை நகைச்சுவை ததும்ப தழும்ப விளக்குவது தான் இந்த Seducing Dr. Lewis.

ஒரு தண்டனையிலிருந்து தப்பிக்க டாக்டர் லெவிஸ் இந்த கிராமத்தில் ஒரு மாத்த்திற்கு பணி செய்ய வேண்டா வெறுப்புடன் ஒத்து கொள்கிறார், அவரை அடுத்த ஐந்து வருடத்திற்கும் பணி செய்யவைக்க ஒட்டு மொத்த கிராமமும் செய்யும் செயல்கள் அனைத்தும் நகைச்சுவை சரவெடி.

டாக்டர் லெவிஸ்க்கு கிரிக்கெட்டின் மீது அலாதிப் பிரியம் என் அறிந்து கொண்டு, கிரிக்கெட்டை தெரிந்து கொள்ள இவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் ஹிந்தி லகானை நினைவுபடுத்துகிறது. லகான் இதற்கு முன்னே வெளிவந்து விட்டது குறிப்பிட்த்தக்க் வேண்டிய ஒரு விசயம். 

உதாரணத்துக்கு ”விக்கெட் கீப்பர் ஸ்டெம்ப்க்கும் பேட்ஸ்மேனுக்கும் இடையே இருந்து பந்தை பிடித்து கொண்டிருப்பார்”,  “ஒட்டு மொத்தமாக கிரவுண்டில் ஒரு முப்பது நாப்பது பேர் இருப்பர்”  சில வினாடியே இடம்பெறும் இந்த மாதிரி காட்சிகள் அதிகம். தூரத்தில் இருந்து பார்த்து விளையாட்டை ரசிக்கும் டாக்டர் லெவிஸ் இவர்களை நோக்கி வர,  குட்டு வெளிப்பட்டு விடாமலிருக்க இவர்கள் எடுக்கும் முடிவு செம கிச்சு..கிச்சு.

டாக்டரின் நடவடிக்கையை அறிந்து அவரை வலையில் விழ வைக்க ரெண்டு பெருசுகள்(பெண்கள்) அவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்கிறார்கள். தனது காதலியுடன் பேசும் “சங்கேத” வார்த்தைகள் புரியாமல் மொத்த கிராமமும் ஒருவருக்கொருவர் விளக்கம் கேட்டு திரிவது அக்மார்க் “அப்பாவிதனமான” காமெடி.

டாக்டரை தவிர்த்து குறிப்பிடப்பட வேண்டிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் யுவான், ஜெர்மய்ன், ஹென்றி. இதில் ஹென்றி மட்டுமே நடுத்தர வயதுடையவர் – வங்கி அதிகாரியாக வருகிறார். மற்ற இருவரும் முதியவர்கள் - ஜெர்மய்ன் கதையின் நாயகன், அவரின் நண்பன் யுவான். 

இந்த கிழம் ரெண்டும் பண்ணும் சேட்டை சொல்லி மாளாது, உதாரணத்துக்கு யுவான் தன் மனைவியுடன் குடும்ப சகிதமா படுத்திருக்க, ஜெர்மய்ன் குடிபோதையில் அவர்களுக்கிடையே படுத்து கொள்ள,  விழித்துக் கொள்ளும் யுவானின் மனைவி, ஜெர்மய்னிடம் நாசூக்காக, “உங்க மனைவி (Helene) சுகமா?” என்கிறார். 
”ம்ம். நல்ல சுகம்” என்கிறார்.
”கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, எங்க படுக்கயறையில என்ன் பண்ணிகிட்டு இருக்கீங்க?” என்று தெளிவாகவே கேட்க.
”கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்” என்று ரொம்ப சாதரணமாக சொல்கிறார்.
”வந்தே ரொம்ப நேரமாச்சே. நாங்க எல்லாம் இங்க படுத்துகிட்டு இருக்கோம் தெரியுதா..” என்கிறார்
உடனே நண்பர்/கணவர் இடையில் குறுக்கிட்டு, ”விடுமா எப்பாவாவது வர்ற ஆளு தானே” என்பார் பாக்கனுமே, அதிரடி தான். 

மக்கள் தொகையை கூட்டி காண்பிக்க எடுக்கும் முயற்சி, மீன் பிடிக்கும் போது டாக்டர் ஏமாறாமல் இருக்க வேறு வழியின்றி ஃப்ரோசன் மீனை சிக்கவைப்பது – அதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் வேறு தருவது, டாக்டருக்கு பிடித்தமான Jazz இசையையும் கிர்க்கெட்டையும் வேண்டா வெறுப்புடன் ரசிப்பது என படம் முழுவதும் நகைச்சுவை ரசம் பரவியிருக்கிறது.

பொதுவாக நகைச்சுவை மற்றும் காதல் உணர்வுகளை ரசிக்க தாய்மொழி படங்கள் தான் சிறந்தவை என்பது என் கருத்து. இது ஆங்கில படமல்ல பிரெஞ்சு மொழி படம், கண்டிப்பாக சப்-டைட்டில் உதவியோடு தான் முழு படத்தையும் பாத்தாக வேண்டிய கட்டாயம். இருப்பினும் ஒவ்வொரு பிரேமிலும் மிதமிஞ்சி கிடக்கும் நகைச்சுவை ஒவ்வொன்றும், உணர்ந்து வெகுவாக ரசிக்கும்படி இருந்தது. பொத்து கொண்டு வரும் சிரிப்பை அடக்கமுடியாமல் படத்தை நிறுத்திவிட்டு சிரித்து விட்டு மறுபடியும் தொடர்ந்தேன். 

97ல் பள்ளியில் படிக்கும்போது “உள்ளத்தை அள்ளித்தா” படத்தை அலங்காநல்லூர் அஜந்தா திரையரங்கில் ரெண்டாம் ஆட்டம் பாத்துவிட்டு நட்ட நடு ராத்திரியில் ஒவ்வொரு காட்சியையும் – “என்ன ஐயாயிரம்?.. ஐயாயிரம்” , “நீயே ஒரு டிக்கெட்டு உனக்கெதுக்கு டிக்கெட்டு”, ” என்னது 400 ரூபாயா? டெம்போ எல்லாம் வச்சு கட்த்திய்ருக்கோம்யா, கொஞ்சம் பாத்து போட்டு குடுங்கய்யா.”, “மணிவண்ணன் கட்டையால் அடிபட்டு கீழே விழும்போது ”மம்மீ” என்று கத்தி மயக்கம் போட்டு விழுவது” என் அனைத்தையும் அசை போட்டுகொண்டு விழுந்து விழுந்து சிரித்து கொண்டே வந்தோம். அதே மாதிரியான் ஒரு நல்ல அனுபவத்தை இந்த படம் தந்தது.

வெளிபடையாய் இரேன் பா.. 1/25/2009


தோற்றத்தை வைத்து எப்படி ஒருத்தரை எடை போடக் கூடாதோ அதே போல பேச்சை (குறிப்பாக கெட்ட வார்த்தையுடன்) வைத்தும் எடை போட கூடாது என்பது என் கருத்து.

என்னோட நண்பன், செம ஜாலி பேர்வழி. அவனுக்கு கூசாம பேச்சுல கெட்ட வார்த்தைகள் வந்து விளையாடும். நாங்க போடாத ஆட்டம் கிடையாது, அவன் தியேட்டர்ல ஆளுக்கு டிக்கட் வாங்குனா, நான் சைக்கிளுக்கு டோக்கன் வாங்கிட்டு இருப்பேன். நல்ல படமா, யாரு நடிச்சது, எந்த தியேட்டரு, காலையா, மாலையா என எந்த கேள்வியும் இல்லாம ஒரு தியேட்டர் விடாம, ஒரு படம் விடாம பாத்துடுவோம். 

கடைசியாய் நாங்க ரெண்டு பேரும் பாத்தது “தூள்” என் நண்பன் பேரும் படத்தில் கதாநாயகன் பேரும் ஒன்னு. மதுரை சிந்தாமணியில் தான் பாத்தோம், சிறப்பு விருந்தினரா விக்ரம், தரணி, “அப்பத்தா” பரவை முனியம்மா வந்திருந்தனர். ரீமா சென், ஜோதிகாவை விட , பரவை முனியம்மாவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் நாங்க குடுத்த வரவேற்பில் தியேட்டரே அதிர்ந்தது. அது தான் நாங்க ரெண்டு பேரும் சேந்து பாத்த கடேசி படம், முதல் படம் என்னனு எனக்கு ஞாபகமில்லை. அவனுக்கும் ஞாபகமிருக்காது.

என் வீட்டுல என் அம்மா ரொம்ப கண்டிப்பு. வெளியில போய் என்ன ஆட்டம் வேணும்னாலும் போட்டுக்கோ. ”ஆனா உன்ன பத்தின எந்த (படிப்பு உட்பட) பிரச்னையும் வீட்டுக்கு வரக் கூடாது”. ஒன்றிரண்டு முறை கம்ப்ளைண்ட் வந்து என் நிலைமை தர்ஸ்ஸாகி, நான் டர்ர்ரானது வேறு விசயம். அது ஒன்னுல தான் அவனுக்கும் எனக்கும் ஒரு சிறு வித்தியாசம். 

மத்தபடி, நாங்க ”திட்ட” பயன்படுத்தாத வார்த்தைகளே கிடையாது, கிராமத்தில பிறந்து வளர்ந்தவங்களுக்கு தெரியும், ”ஸ்ரீவள்ளி திருமண” நாடகத்தில் “பபூன் மற்றும் டான்ஸ்” கேரக்டர்கள் பேசும் வசனம் எப்படி பட்டது என்று. வருடத்திற்கு கிட்ட தட்ட பத்து பன்னிரண்டு நாடகங்கள் பாக்குற எங்களுக்கு அதனோட பாதிப்பு ரொம்பவே இருக்கும்.

இன்னைக்கு நான் வாங்குற சம்பளத்துல ஒரு அஞ்சோ பத்தோ சதவீதத்தை வீட்டுக்குக் குடுத்துட்டு நானும் என் அப்பன் ஆத்தாள பாத்துக்குறேனு சொல்ற நான் எங்கே? தன் குடும்பத்துக்காக தனது திருமண பந்தம் உள்ளிட்ட அனைத்திலும் பெற்றோருக்காக ( அதெல்லாம் ரொம்ப பெரிய விசயம் ) விட்டுக் கொடுத்து அவர்களை கண்ணும் கருத்துமாய் கூடவே இருந்து ( வேறு வழியில்லாமல் இல்ல அவனுக்கு) பார்த்துக் கொள்ளும் அவன் எங்கே? வாயைத்திறந்தால் சும்மா அருவி மாதிரி கொட்டும் கெட்ட வார்த்தை, அதனால அவன் கெட்டவனா? சும்மா வெளி வேசம் போட்டு பூசி மொழுகி (Sugar coated words ) பேசுபவர்கள் நல்லவர்களா?


தமிழ் சினிமா பார்ப்பவர்கள் யாரும் ”சில்க்” என்றொரு வார்த்தையை கடக்காமல் சென்றிருக்க முடியாது. அவரது இயற்பெயர் விஜயலட்சுமி ( இது பல பேருக்கு தெரியாது ). இன்றும் இவரது இடத்தை தனியாளாக யாரும் பிடிக்க முடியவில்லை. அவர் கொலை செய்யபட்டதை (கண்டிப்பாக தற்கொலை செய்திருக்க மாட்டார், இது அவர் மீது நான் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை )கேட்டு வருத்தப்பட்ட ரசிகர்களில் நானும் ஒருவன். 


மதுரை வக்ஃபோடு கல்லூரியில் இவரது மரணத்தை முன்னிட்டு விடுமுறை விட சொல்லி எனது (பள்ளி) சீனியர் மாணவர்கள் அட்டகாசம் செய்த்தாக கேள்வி. அவரது கதாபாத்திரங்கள் அனைத்துமே “போதை” மாதுவாகத்தான் இருக்கும். இதனால் அவர் கெட்டவரா? இன்றுள்ள முண்ணனி நடிகைகளை விட எந்தவித்திலும் தாழ்ந்தவரல்ல என்பது மிகைப்படுத்தபடாத உண்மை.

இதற்கு மற்றுமொரு ”வாழும் உதாரணம்” ஷகிலா. இவர் நடித்த மலையாள படம் எதுவும் நான் பார்த்த்தில்லை ( சொன்னா நம்புங்கப்பா ). இவர் நடித்த கதாபாத்திரங்களை வைத்து இவர் கெட்டவர் என்று சொல்லலாமா? அப்படி சொன்னால் அதை விட கூறுகெட்டதனம் வேறு என்ன இருக்க முடியும்.

எழுத்தாளர் சுஜாதா, “கெட்ட வார்த்தைகளால் என்ன பயன், அதனை ஏன் மக்கள் பயன்படுத்துகிறார்கள்?” என்றதொரு கேள்விக்கு. ”உலகத்தில் கெட்ட வார்த்தைகள் மட்டும் இல்லையென்றால், கிரிமினல் ( அடிதை, கொலை) குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போயிருக்கும்” என்று பொருள்பட கூறியிருந்தார். எவ்வளவு பெரிய உண்மை இது.

தனக்கு பிடிக்காத ஒருசெயலை/ஒருத்தரை வாய்விட்டு திட்டிச்/கொட்டிச் செல்லும் ஒருவன் அடுத்த சில வினாடிகளில் அதை மறந்து விடுகிறான், மனதிலிருந்து இறக்கிவிடுகிறான். அப்படி செய்ய முடியாத அப்பாவிகள் உள்ளுக்குள்ளே குமுறி பல்வேறு நோயின் வாயிலாக வெளிக் கொணர்கிறார்கள். 

வெளிபடையாய் இரு, இருக்கவிடு. என்ன குடியா மூழ்கப் போகுது.  நீ... நீயாயிரு மற்றவரை புண்படுத்தாமல். 


இதே கருத்தை வலியுருத்தி, Anger Management என்றொரு படம் வந்துள்ளது. கோபத்தை கட்டுபடுத்தி ஒருவித கூச்சத்தோடு வாழும் தனது காதலனை(Adam Sandler) ஒரு மருத்துவரின் (Jack Nicholson)உதவியோடு குணப்படுத்தும் ஒரு காதலியின் (Marisa Tomei) கதை, நல்ல நகைச்சுவை படம். Marisa வின் My Cousin Vinny  படம் பார்த்துவிட்டு (இந்த படத்திற்காக இவருக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.) அவரின் நகைச்சுவைக்காக நான் பார்த்தது இந்த படம். ஆனால் இப்ப்டத்தில் இவருக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாமல் போனது வருத்தமே.

வெளிப்படையாக பேசுவதால் சில தொல்லைகளை அனுபவித்து வரும் என் தோழிக்காக இந்த பதிவு

Love Marriage 1/21/2009


புத்தாண்டுக்கு தீர்மானம் எடுத்தாச்சு, மாசத்துக்கு ஒரு புத்தகமாவது படிக்கணும் என்று, அதன்படியே கஷ்டப்பட்டு ஒரு புத்தகமும் படிச்சு முடிச்சாச்சு. அதைப் பத்தின பதிவு தான் இது. நான் படித்த புதினம் "Love Marriage". 

திருமணம் என்பது இருமனம் இணைவது மட்டுமல்ல இரு குடும்பங்களும் (பரம்பரையே) இணைவது என்பதை மிக எளிமையான நடையில் விளக்குகிறார் ஆசிரியர் கனேஷனந்தன். இது இவருக்கு அறிமுக நாவல். பாராட்டுக்கள்.

ஒவ்வொரு பாகத்தின் ஆரம்பத்திலும் “ஒரு திருக்குறளை” பயன்படுத்தியதற்காக சிறப்பு பாராட்டுக்கள்.

1983 கருப்பு ஜூலை யில் புலம் பெயர்ந்த இலங்கை தம்பதியர்க்கு பிறந்த யாழினி தனது குடும்ப உறவுகளையும் திருமணம் போன்ற வைபவங்களையும், இலங்கையில் நிலவும் அரசியல்/போர் சூழலையும் இணைத்து தனது பார்வையில் விவரிக்கிறார் இப்புதினத்தில்.

சமீபத்தில் இணைந்த கலைஞர் குடும்ப பிரச்னையின் போது, செல்வம் யாரு? தயாநிதி மாறனுக்கும் கனி மொழிக்கு என்ன உறவு? செல்வியும் முரசொலி செல்வமும் உடன்பிறப்பா? இப்படி பல கேள்வி எழும், இதுக்கெல்லாம் பதில் சொல்லும் வண்ணம் சில நாட்களுக்கு முன்னே அவர்களின் குடும்ப வரைபட அஞ்சுகத்தாயில் ஆரம்பித்து கனிமொழி பையன் ஆதித்யன் வரைக்கும் மொத்த குடும்பத்தின் வரைபடம் வெளிவந்து தமிழக மக்களுக்கு (எனக்கும் தான்) பெரும் குழப்பத்தை நீக்கியது. 

அதே போல இந்த புதினத்தில் யாழினியின் மொத்த குடும்ப வரைபடத்தையும் முதல் பக்கத்தில் கொடுத்திருந்தனர். தொடர்ந்து படிக்காமல், இடைவெளி (நாட்கணக்கில்) விட்டு படிக்கும் என்னை போன்ற மக்களுக்கு முதல் பக்க வரைபடம், பெயர்களையும் அவர்களின் உற்வுகளையும் உடனடியாக அறிந்து/புரிந்து கொள்ள நல்ல உதவியா இருந்தது.

பல்வேறுபட்ட கதாபாத்திரங்கள், பெரும்பாலும் பெண்களே நிறைந்திருந்த இந்த புதினத்தில் எனக்கு பிடித்தது அந்த குமரன் ( யாழினியின் தாய்மாமன்) கதாபாத்திரமே. அவர் விடுதலை புலியில் இணைந்து, பின்பு சிகிச்சைக்காக கனடா வந்து சொந்த மண்ணில் மூச்சை விடாமல் அந்நிய மண்ணில் மூச்சைவிடுவதை நினைத்து வருந்தும் ஒரு ஆன்மா.

இலங்கையில் ஜெஃப்னா நகரில் தமிழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தையும் இப்புதினத்தில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

முரளியின்( யாழினியின் தந்தை ) உடல் நிலையை இலங்கையின் சூழ்நிலையோடு இணைத்து “To oncologist, everything was potential minefield to be analyzed and dissected, the body merely another bomb anticipating explosion”  என்று வெளிப்படுத்தியது கூர்மை.

அதே போல, டொரண்டோ சர்வதேச விமான நிலையத்தில் குமரனை வரவேற்க காத்திருக்கும் யாழினி, ”In the terminals great cities of the world, we hold passports, but no countries” என்று புலம் பெயர்ந்த மக்களின் உணர்வை பொட்டில் அடித்தாற் போல் விவரித்திருந்தார்.

குறை என்று சொல்ல முடியாது, இதெல்லாம் இருந்திருந்தால் எனக்கு இன்னும் அதிகம் பிடித்திருக்கும். அவை:

ஒருவரின் தோற்றங்களை விவரிக்கும் போது அவரின் குணங்களையும் சேர்த்து விவரிக்கும் பாங்கு இடம் பெறவில்லை உதாரணத்திற்கு”SIDNEY SHELDON” தனது ARE YOU AFRAID OF THE DARK? எனும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்தை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார். She was in her late twenties, an African-American with skin the color of melted honey and a face that was a photographer's dream. She had intelligent soft brown eyes, sensual full lips, lovely long legs, and a figure filled with erotic promise.

அடுத்து, நகைச்சுவை. நகைச்சுவை என்பது மருந்துக்கும் இப்புதினத்தில் இல்லை என்பது ஒரு வருத்தமான விசயம். 

வெளிநாட்டில் வாழும் தமிழ்/இந்திய குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த புத்தகங்களை பரிந்துரைக்கலாம். திருமணம் மற்றும் சொந்த பந்த உறவு முறைகளை பற்றி அறிந்து/புரிந்து கொள்ள பேருதவியாக இருக்கும்

இப்புத்தகத்தை வாங்க விரும்புவோர் இங்கே அழுத்தவும்.

இதனை தொடர்ந்து நான் தற்போது படித்துக் கொண்டிருப்பது “Rich Dad, Poor Dad”. 

அடுத்து படிக்கவிருப்பது The Word is flat,  Raising Your Emotional Intelligence. இது மாதிரியான/தொடர்பான வேறேதேனும் நல்ல புத்தகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். 


சொல்லிவிடு வெள்ளி நிலவே 1/20/2009

அமைதிப்படை என்றாலே அமாவசையின் நக்கலும் , அந்த ”அல்வா” வும் தான் எல்லாருக்கு ஞாபகத்துக்கு வரும். என் நண்பன் இப்படத்தோட “மொத்தத்துல சந்தோசமாவும் இருந்துக்கனும்... ஜாக்கிரதையாவும் இருந்துக்கனும்”  என்ற வசனத்தை அடிக்கடி டைமிங்கோட சொல்லுவான்.

ஆனா எனக்கு “சொல்லிவிடு வெள்ளி நிலவே” பாடல் – இளையராஜாவின் இசையில் மனோவும், ஸ்வர்ணலதாவும் பாடிய அந்த மெல்லிசை பாடல் தான் முதலில் நினைவுக்கு வரும். ட்ரம்ஸ் உடன் கலந்து வரும் மெல்லிய குழலோசையோடு அமர்க்களமாக ஆரம்பிக்கும் பாடல் அது.

இந்த பாடல் திரைப்படத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். நான் இரண்டு மூன்று தடவை இந்த படத்தை திரையரங்கில் பார்த்துள்ளேன், இந்த பாடல் இடம் பெறவில்லை. சத்யராஜ் ரஞ்சிதாவை துரத்தும்போது தொடரும் ஆரம்ப இசையோடு அடுத்த காட்சிக்கு தாவிவிடும் படம். 

எனது நெருங்கிய தோழி, எதாவது ஒரு நல்ல மெல்லிசை பாடல் சொல்லுங்களேனு கேட்க, சிறிதும் யோசிக்காமல் நான் சொன்ன பாடல் இது தான். அந்தளவுக்கு எனக்கு பிடித்த பாடல் இது.

ஆண் தன் சோகமான நிலையை எடுத்து சொல்லி காதலை மறுப்பது போலவும் அதற்கு பெண் அவனுக்கு ஆறுதலாக பதிலளிப்பது போலவும் அருமையான மிக ஆழமான வரிகளைக் கொண்டது இப்பாடல்.

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே

உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே
கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போன பின்
நானே என்னை தேற்றினேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா? ஓ...ஓ.
கனவுகள் கலைந்திடுமா?

உன்னை ஒரு போதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன்.. ஓ..ஓ..ஓ..ஓ
குற்றம்புரியாது துன்பக்கடல் மீது ஏன் நான் வீழ்ந்தேன்.ஓ..ஓ..ஓ..ஓ

அந்த கதை முடிந்த கதை
எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல்
என்னுடைய பிறந்த கதை

காலங்கள் தான் போன பின்னும் 
காயங்கள் ஆறவில்லை..ஓ..
வேதனை தீரவில்லை

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா? ஓ...ஓ.
கனவுகள் கலைந்திடுமா?

உறவுகள் கசந்திடுமா? ஓ...ஓ.
கனவுகள் கலைந்திடுமா?

தொட்ட குறையாவும்
விட்ட குறையாகும்
வேண்டாம் காதல்..ஓ..ஓ..ஓ..ஓ

எந்தன் வழி வேறு
உந்தன் வழி வேறு
ஏனோ கூடல் ஓ..ஓ..ஓ.ஓ.

உன்னுடைய வரவை எண்ணி
உள்ளவரை காத்திருப்பேன்
என்னைவிட்டு விலகிச் சென்றால் மறுபடித் தீக்குளிப்பேன்
நான் விரும்பும் காதலனே
நீ இதை ஏற்றுக் கொண்டால் நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்ன்னும் தீபமே
கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் சாய்ந்து போகுமா?
நெஞ்சில் வைத்து ஏற்றினேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா..ஓ..ஓ..
கனவுகள் கலைந்ததம்மா

உறவுகள் கசந்திடுமா? ஓ...ஓ.
கனவுகள் கலைந்திடுமா?




நெஞ்சில் வைத்து ஏற்றிய தீபம் இது காற்றில் அணைந்து போகாது என காதலை வலியுறுத்தும் அந்த வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.

பொன் முட்டை இடுற வாத்தை அறுக்கலாமா? 1/16/2009


தான் வேலை பாக்குறேன்னு காமிக்கிறதுக்கு ஆ.. ஊ-ன்ன மீட்டிங் ஒன்னு அரேஞ்ச் பண்ணிடுறானுங்க.. இன்னைக்கு காலையில “At a stretch”-ல ரெண்டு மணி நேரத்துக்கு ஒரே மீட்டிங்.. “Design Meeting”-னு சொல்லி அங்க உக்காந்து கதை கதையா சொல்லிகிட்டு இருக்கான் ஒரு வீணாப் போனவன். 

ஒருத்தன் தேர்வுக்கு பசுவை பத்தி நல்லா படிச்சுட்டு போயிருக்கான், ஆனா துரதிர்ஷ்டவசமா, போன இடத்துல நீதிமன்றத்த பத்தி கட்டுரை எழுத சொல்லிட்டாங்க, பையனும் படிச்சத வீணாக்காம, பசுவை பத்தி விலாவரியா எழுதிட்டு, கடைசியில, ”அந்த பசு நீதிமன்றத்திற்கு பின்புறம் கட்டபட்டிருந்தது” என “நீதிமன்ற” கட்டுரையை முடித்தானாம்.

அந்த மாதிரி, ஒவ்வொரு ஸ்டேட்மண்ட் முடிக்கும் போதும், “We will be using this field in our Design”  ஒரு வாக்கியத்தை செயற்கையா சேர்த்து “Design Meeting” போய்கிட்டு இருக்கு. நம்ம நல்ல நாளிலேயே தில்லை நாயகம், பத்து மணி மீட்டிங்க்கு 10:30க்கு தான் போக முடிஞ்சுது, நல்ல வேளை அந்த அரை மணி நேர மொக்கையிலிருந்து தப்பிச்சாச்சு.. ஆனா இன்னும் 1:30 மணி நேரம் இருக்கே. “சாமீ, நீங்க பேசுறதுக்கும் இந்த மீட்டிங்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது தொடர்பா தயார் செய்துட்டு, “சந்திப்புக்கும்” ஏற்பாடு பண்ணுங்கோனு” அறிவுறுத்தி விட்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என வெளியேறும் போது என்னால் காப்பாத்த முடிந்தது மிச்ச அந்த ஒரு மணி நேரம் தான். 

இந்த மொக்கையையும் அரைமணி நேரமா கேட்டுகிட்டு இருந்த எங்க குழு மக்களை பார்த்து சிரிப்பதா, பரிதாபப்படுவதா, அழுவதா என்று தெரியவில்லை.

ரெண்டு வாரமா பெண்டிங்-ல இருந்த ஒரு வேலையை முழு மூச்சா முடிக்கலாமென இருந்தேன். ஏன்னா வெள்ளிக்கிழமை மட்டும் தான் இந்த மீட்டிங் தொல்லை அதிகமிருக்காது.. ஒரே மூச்சில் உக்காந்து வேலை பாக்க வெள்ளி தான் சரியான நாள் எனக்கு.

வேலை ஆரம்பிச்சு போய்கிட்டு இருக்கும் போது, பக்கத்து குழு தலை வந்து, திங்கள்கிழமை விடுமுறை அதுனால யாரும் ஞாபக மறதியில அலுவலம் வரவேண்டாம் என “பெரிய தலை” சொல்ல சொன்னதா கூவினார். காத்துல வந்த சேதிய லேசா காதிலும் வாங்கிட்டு வேலையில் மூழ்கினேன்.

மதிய உணவு முடிந்து சிறிது நேரத்துக்கெல்லாம் “பெரிய தல” யிடமிருந்து ஒரு e-Mail “மக்கா, திங்கள் விடுமுறை கதகதப்பாகவும் பாதுகாப்பாகவும் விடுமுறையை கொண்டாடுங்க. அப்புறம் திங்கட்கிழமை யாராவது வேலை பாக்குறதா இருந்தா எங்கிட்ட முன் அனுமதி கண்டிப்பா வாங்கணும்” அனுப்பிட்டார்.

சரி..சரி.. வேலையை பாக்க விடுங்கப்பா.. வழக்கம் போல ஒரு மூனு மணிக்கு டீ குடிச்சுட்டு வந்து வேலையில் உக்காந்தா நேரம் போனது தெரியல மணி 5. கிளம்ப போகும் போது “Vice Presdient”  அம்மணி. “ ஒப்பந்தகாரர்களுக்கு திங்கட் கிழமை விடுமுறையா இல்லையா? என்பதில் சந்தேகம் இருப்பதாக சில வதந்தி. கண்டிப்பாக விடுமுறை தான். விடுமுறையை சந்தோசமா களி(ழி)யுங்கள். உங்க “தலை” வ்ரச் சொன்னா மட்டும் வந்து வேலை பாருங்க” என அவரும் அவர் பங்குக்கு ஓதிட்டு போயிட்டார்.

”என்னய்யா நடக்குது இங்கே”  கேள்வி மனச போட்டு குழப்ப, விசாரணையில் இறங்கும் போது, ஒரு சில மக்கள் விடுமுறை இருந்தா அதை கவர் பண்றதுக்காக, ”ஒவர் டைம் பாக்குறேன்” சொல்லி ஒப்பேத்தியிருக்கானுங்க, அதுல ஒருத்தன் தான் அந்த மீட்டிங் பார்ட்டி. ”ஏனய்யா இந்த பேராசை.. அத்தனைக்கும் ஆசைபடுங்கிறது இப்படியா தப்பா புரிஞ்சுக்கிறது.”

போன வருசமே பட்ஜெட்ல ஒரு துண்டு விழுந்துச்சு.. இந்த வருசம் பட்ஜெட்டுல கிங் சைஸ் பெட்ஷீட்டே விழுந்திருக்கு, இந்த நேரத்துல இது தேவையா? பொன் முட்டை இடுற வாத்தின் பொ** அறுக்கலாமா?

செலீனா - ஓர் இசையின் பயணம் 1/16/2009


80களின் இறுதியிலும் 90-ன் ஆரம்பத்திலும் இசை உலகில் சிறகடித்து பறக்க ஆரம்பித்த பாடகி- செலீனாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் படம். 

மெக்சிகோ-அமெரிக்க தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்த செலீனா. இளமையிலே நல்ல குரல்வளம் கொண்ட செலீனாவின் வசன உச்சரிப்பு போன்ற சின்ன சின்ன தவறுகளை களைந்து மெருகேற்றுகிறார் அவரின் தந்தை. செலீனாவின் புகழ் பரவ ஆரம்பிக்கிறது இசைக்குழுவை விரிவடைகிறது. புதிதாக வந்த கிடாரிஸ்ட் Chris-ஐ காதலித்து பல எதிர்ப்புகளுக் கிடையே மணந்து பின் குடும்பத்துடன் சேர்கிறார். ”வெண்ணெய் திரண்டு வர தாழி உடைந்தது போல” தொடர் வெற்றிகளை படைத்த அந்த இளம் இசைப் புயல் பணத்தகராறினால் தனது ரசிக மன்றங்களின் செயலாளரினால் சுட்டுக் கொல்லப் படுகிறார். 

அவரின் கடைசி மேடை நிகழ்ச்சியில் - அரங்கத்தில் நிறைந்திருக்கும் ரசிகர்களுக்கு கையசைத்து கொண்டே பயணம் செய்யும் காட்சியில் தொடங்கி பின்னோக்கி நகர்கிறது கதை. படம் பார்த்தவுடன் அந்த மேடை நிகழ்ச்சி வீடியோவை தேடி பார்க்கும் போது, உடையிலிருந்து அனைத்தையும் அருமையாக டிரான்ஸ்லேட் பண்ணியது தெரிந்த்து.

முகலாய மன்னன் அக்பரின் அரசவையின் இசைக்கலைஞன் தான்சே-வை பற்றி படித்திருக்கிறேன். அவர் பாடி மேக மல்ஹர் ராகம் பாடினால் மழை வருமாம் தீபக் ராகம் பாடினால் தீப்பிடிக்குமாம். அவரின் தன் இசையால் விலங்குகளையும் கேட்க வைக்க முடியுமாம். 

அதே போல மெக்சிகோ இசை நிகழ்ச்சியில் எதிர்பாராத அள்வுக்கு மக்கள் திரண்டு விட, இவரின் பாடலில் மக்கள் கிளர்ச்சியடைந்து நெரிசல் அதிகமாகி மேடை சரிய ஆரம்பிக்கிறது. இசை நிகழ்ச்சியை தடை செய்வதை தவிர வேறு வழியில்லை என்ற அந்த சூழலில் அனைத்து மக்களையும்/ ரசிகர்கூட்டத்தையும் தன் பாட்டால் கட்டி போடும் அந்த காட்சி அருமையிலும் அருமை. 

இசையை தவிர்த்து பிரச்சினைகளை கையாளும் திறமைசாலியாக இருந்திருக்கிறார் செலீனா. மெக்சிகோவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ஏற்படும் மொழி பிரச்சினையை தன் அன்பால் சமாளிக்கிறார். 

ஒருவர் வாழ்நாள் முழுவதும் செய்யக் கூடிய சாதனையை தன் 24 வயதிலே சாதித்த செலீனா, தனது சொந்த வாழ்வில் தனக்கு சரி என்று பட்டதால், பணம்,புகழ் என எதை பற்றியும் கவலை படாமல், தான் காதலித்த Chris-ஐ தனது 21 வயதில் திருமணம் செய்து கொள்கிறார் தனது 23வது வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்கிறார். ஆனால் விதி விளையாடி விடுகிறது. 

தனது 24வது பிறந்த நாளை கொண்டாட 16 தினங்களே எஞ்சியிருந்த போது அந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. தொடர்ந்து இப்போதைய அமெரிக்க அதிபரும், அப்போதைய Texax கவர்னருமான புஷ். இவரின் பிறந்த நாளை செலினியா தினம் என அறிவித்து அவரின் புகழுக்கும் மேலும் புகழ் சேர்த்திருக்கிறார்.

Jennifer Lopez மிக சரியான தேர்வு. இவர் ஏற்கனவே பிரபல பாடகி என்பதால் மேடை பாடகர்க்குறிய மேனரிசங்கள் அனைத்தும் வெகு சிறப்பாக/இயல்பாக பதிந்திருக்கிறார். இவர் Richard Gere  உடன் நடித்த Shall We Dance? படத்தை விட நடிப்பிலும் நடனத்திலும் இந்த படம் ஒரு படி மேல் என்றே சொல்லலாம். 

தனிப்பட்ட காதல் மற்றும் குடும்ப வாழ்வையும் பொது வாழ்வையும் அவருடைய புகழுக்கு சிறிது களங்கம் வராமல் மிகச்சரியாக கலந்திருப்பது பாராட்டுக்குறிய ஒன்று.

இதே மாதிரியான இசை கலைஞனின் உண்மைக் கதையை விவரிக்கிறது Walk the Line என்ற படம், Joaquin Phoenix மற்றும் Reese Witherspoon  நடித்திருந்தனர். Ladder 49 படத்தில் தீயணைப்புத்துறை வீர்ராக/கதாநாயகனாக நடித்திருந்தாலும் Gladiator படத்தில் வில்லன் கதாபாத்திரமே இவருக்கு சரியாக பொருந்தியது. 

Walk the Line படம் பார்த்து பிறகு, Johnny Cash –ன் live concert ஆல்பம் ஒன்றை பார்க்கும் போது தான், அவரது பாவனைகளை – கிடாரை தலைகீழாக கையாள்வது; பாடும்போது வாயை ஒரு பக்கமாக குவித்துக் கொள்வது முழுவதுமாக என அனைத்தையும் உள்வாங்கி கனகச்சிதமாக Joaquin Phoenix வெளிப்படுத்தியிருந்த்து தெரிய வந்தது.

செலீனா - ஓர் இசையின் பயணம்

நிகழ் கதைகள்…2 குரல் பரிமாற்றம் 1/14/2009

எவ்வளவு நேரம் தான் அடக்கிட்டு இருக்கிறது, ஆத்திரத்தை அடக்குனாலும் அதை அடக்க கூடாது சும்மாவா சொல்லி இருக்காங்க.  "வில்”லில் இருந்து புறப்பட்ட அம்பு போல , எங்கடா இருக்கு கழிவறைனு தேடி கண்டுபிடிச்சு.. ஆ....ரம்பிச்சு.. .போய்கிட்டு இருக்கான் நம்ம (டுபுக்கு) ராமன். 

சிறிது நேர ஆசுவாசத்திற்கு பிறகு, பக்கத்து (கழி)அறையிலிருந்து மெல்லிய குரல் கேட்க, கொஞ்சம் கூர்ந்து கவனிக்கும் போது “ஹலோ எப்படி இருக்கீங்க?” என்றது அந்த குரல். 

யாருடா இது? இங்க வந்து குசலம் விசாரிக்கிறது என்று யோசித்து கொண்டிருக்கையில், மறுபடியும், “என்ன கேக்குதா? நல்லா இருக்கீங்களா?” என்றது அந்த அதட்டல் குரல்.

”ம்ம்.. நல்லா இருக்கேன்”  என்று 30டெசிபலில் லேசாக முணுமுணுத்தான் தயக்கத்துடன் (டுபுக்கு)ராமன்.

“சரி, எப்படி போய்கிட்டு இருக்கு?” என்றது மறுமனை குரல்.

என்னடா இது வம்பா போச்சு, நேரங்கெட்ட நேரத்துல கேட்க கூடாத கேள்வி எல்லாம் கேக்குறானு யோசிச்சுகிட்டே. “நேத்துக்கு கம்பேர் பண்ணும் போது இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்ல” என்றான் (டுபுக்கு)ராமன். 

“வெயில் காலம்னாலே இது தான் பிரச்னை. அங்க தண்ணி பிரச்னை எல்லாம் இல்லையே?” என்றது அக்கறையுடன் அந்த குரல்

வேக வேகமா குழாயில தண்ணி வர்றத சோதிச்சுட்டு, “இங்க தண்ணி பிரச்னை இல்லீங்க”  என்றான் (டுபுக்கு) ராமன் கொஞ்சம் தெம்புடன். மனசுக்குள் "என்ன ஒரு கரிசனம்" என எண்ணிக்கொண்டான்

“கொஞ்சம் சத்தமா பேசுங்க, சரியா கேக்க மாட்டேங்குது.. இப்ப தான் வந்தீங்களா?” என்றது மறுபடியும் அந்த குரல்.

“ம்ம்.. ஆமா இப்போதான் வந்தேன்.. நீங்க எப்போ வந்தீங்க” என்றான் சிறிதே முனைப்புடன்.

“சரி நான் வச்சிடுறேன்.. அப்புறம் பேசலாம்.. இங்க பக்கத்துல ஒருத்தன் நான் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிகிட்டு இருக்கான்”  என்றது எரிச்சலுடன் அந்த குரல்

டுபுக்கு ராமன் “#@&$##$@#$@#@$@#^*$%#@$@#@$@#”

பி.கு : ”கரு” எங்கோ எதிலோ படித்தது.



Slumdog Millionaire 1/11/2009



என்னை மாதிரி கொஞ்சம் இளகிய மனசுக்காரங்க(?) படம் பாக்க போறதுக்கு முன்னாடி கோக், பாப்கார்ன் வாங்காம போறது ரொம்ப நல்லது, வாங்கிட்டு போனால, வீணா போவது உறுதி. குப்பத்தை அந்த அளவுக்கு ரொம்ப்ப்பப.. ஆழ்ழ்ழ்ம்ம்மமா காமிச்சிருக்காங்க.

குப்பத்திலிருந்து தவழ்ந்து, வளர்ந்து,  அடிபட்டு, மிதிபட்டு, வாழ்ந்த ஒரு பையன் (ஜமால்) Who wants to be Millionaire போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறான், அவனின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை கொஞ்சம் கலீஜ் கலந்து ரொம்ப சுவாரஸ்யமாக விளக்குகிறது இந்த Slumdog Millionaire

இதேமாதிரி ஒரு படம் தமிழிலும் வந்து பப்படம் ஆனது. கார்த்திக் கதாநாயகனாக நடித்த “கலக்றே சந்துரு” என்ற படம், கொஞ்சம் தான் பார்த்தேன். அதில் கடைசி கேள்வி குதுப்மினாரை பற்றி இருக்கும், அதிலும் கடைசி கேள்விக்கு கதாநாயகன் போனில் ராதாரவியை தொடர்பு கொள்வார். ஊர்வசி தான் நிகழ்ச்சி தொகுப்பாளர். ஆனால் அப்படி ஒரு படம் வந்தது ரொம்ப பேருக்கு தெரியாது.

ரெண்டு வருசத்துக்கு முன்னே ஒரு சிவாஜி ஃபீவர் இருந்த்து, யார் வீட்டுக்கு போனாலும் “எப்படி இருக்கீங்க”  என்று கேட்பதுக்கு பதிலா, ”சிவாஜி பாத்துட்டீங்களா” என்ற குசல விசாரிப்புதான் அதிகமிருந்தது. அதே மாதிரியான ஒரு ஃபீவர் இந்திய மக்களிடையே இப்போ இந்த படத்துக்கும் இருக்கு. ஆனா ஒரே ஒரு வித்தியாசம், இந்த படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சிருப்பது தான். 

படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்தில் தியேட்டரே வீச்சமடிக்கிற உணர்வு, அந்த வாசனையை கொஞ்சம் மட்டுபடுத்துவது ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் “O..Saya” பாடலும் தான். இந்த படத்தில் இசை அமைத்ததற்காக கோல்டன் குளோப் விருதுக்கு இவர் பரிந்துரை செய்யபட்டுள்ளார்.

போலீஸ் விசாரணையில், இரண்டு மூன்று கேள்விகளிலே ஜமால் பொய் சொல்லவில்லை என்று தெரிகிறது, விசாரணையை விட்டு அவனது வாழ்க்கையை தெரிந்து கொள்ளும் ஆர்வம் போலீஸ்க்கு ஏற்படுவது போல நமக்கும் அதே ஆர்வம் தொற்றிக்கொள்வது படத்தோடு நாம் ஒன்றிப் போவதையே காட்டுகிறது. போலீஸ் ஸ்டேசன், தாஜ்மஹால் தொடர்பான காட்சிகளில் தியேட்டரே சிரித்தது. ஆனாலும் பட்த்தில் சொல்லிக்கொள்ளும் படியான கூர்மையான வசனங்கள் ஏதுமில்லை. ஹிந்தியில் எடுத்திருந்தால் இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம்.

குறிப்பிடத்தக்க இன்னொரு விசயம் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் எடுக்கப்பட்டது, பாடல் காட்சி உள்பட ( நம்மூர்க்காரகள் கொஞ்சம் கவனிக்க வேண்டிய விசயம் இது). ரயில் நிலையம் தொடர்பான காட்சிகள் அனைத்தும், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான சத்ரபதி சிவாஜி டெர்மினஸில்(CST) படப்பிடிப்பு நடத்தபட்டது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே அந்நியன் படத்தை மலேசியாவில் பார்க்கும் போது, விக்ரம் இந்தியாவை மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பேசுவார், இந்த மாதிரி ஒப்பீட்டு காட்சி/வசனங்களை நம் நாட்டில் பார்த்தால் பரவாயில்லை, ஆனால் அயல்நாட்டில் அந்த நாட்டினருடன் பார்க்கும் போது ஒருவித கூச்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது இதிலும் அமெரிக்காவுடன் இந்தியாவை ஒப்பிடும் காட்சி துரதிர்ஷ்டவசமாக இடம்பெற்றிருக்கிறது.

எந்தவித அழுகையோ, புலம்பலோ, பக்கம் பக்கமாக வசனமோ இல்லாமல் மெல்லிய நகைச்சுவை படர, வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருக்கும் ஒருவனின் வலிகளை பார்வையாளர்கள் உணரும் வண்ணம் மிக ஆழமான காட்சிகளுடன் விளக்குகிறது இந்த Slumdog Millionaire.

என்னது படத்தோட கதையா? அதெல்லாம் சொல்ல முடியாது. தியேட்டர்ல போய் பாத்துக்கோங்க. ஜமாலும் லத்திகாவும் முத்தம் குடுத்தவுடனே படம் முடிஞ்சதா நெனச்சு எழுந்தால், ஒரு பாடலை தவறவிட வாய்ப்பு உண்டு. 

2008ல் நான் பார்த்த அயல் மொழி திரைப்படங்கள் 1/11/2009

தலைகீழா நின்றாலும் தமிழ் படத்தை தவிர மற்ற மொழி படங்களை பாக்கிறதில்லைனு ஒரு திமிறுல இருந்தேன் 2008க்கு முன்னே. தண்ணி, தம்மு என எந்த கெட்ட பழக்கமும் இல்லாததனால (நம்புங்கப்பா) எனக்கு சினிமாதான் ஒரே பொழுதுபோக்கு, தமிழ் படஙகள் வ்ராத நாட்களில் Youtube தான் கைகொடுக்கும். 

திரும்ப திரும்ப எத்தனை தடவை தான் பாடலையும்/நகைச்சுவையையும் கேட்பது, கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பித்த போது தான், சரி கொஞ்சம் ஹாலிவுட் படங்களையும் தான் பார்ப்போமே என்று தோன்றியது. 

முதல்ல கிடச்ச படத்த பார்த்தேன். அப்புறம் ராபர்ட் டி நீரோ, அல் பசினோ படங்களையும், மார்டின் ஸ்கார்சஸி, ஆல்பிரட் ஹிட்ச்காக் படங்களையும் பார்த்தேன், அடுத்து, ஸ்கார்லெட் ஜோஹான்ஸன், நேட்டலி போட்மேன் படங்கள், தொடர்ந்தது ஆங்கிலம் அல்லாத அயல் மொழி படங்கள்(ஜபபான், பிரென்சு, இத்தாலி) படங்களும் பட்டியலில் இடம்பெற்றன. படங்களை பற்றி தெரிந்து கொள்ளுவதற்காக ஒரு வருட சந்தாவில் Entertainment Weekly வார இதழையும் வாங்கினேன். படங்கள் தொடர்பான எனது தேடலில் லைப்ரேரியன் Lynda அவர்களின் பங்கு அளப்பரியது. 

I am taking this opportunity to thank LYNDA who helped me a lot on searching movies. Thanks Lynda!

கொஞ்ச படங்கள் பார்த்து முடித்தவுடன், ஒரு கணக்குக்காக நான் பார்த்த படங்களை எழுதி வைக்க ஆரம்பித்தேன். அதற்கு அடுத்தபடியாக எனக்கு பிடித்த படங்களை பற்றிய என் கருத்துகளை பதிவாகவும் எழுத ஆரம்பித்தேன்.

கடந்த 2008ம் ஆண்டில் நான் பார்த்த தமிழ் அல்லாத அயல் மொழி திரைப்படங்களின் பட்டியல் இதோ. இந்த வருடம் இதில பாதியாவது எட்ட முடியுமா என்று தெரியவில்லை.

எண்

படம் பெயர்

எண்

படம் பெயர்

1

10 Things I Hate About You

225

Minority Report

2

12 Angry Men

226

Miss Congeniality

3

12 Monkeys

227

Miss Congeniality 2: Armed & Fabulous

4

15 Minutes

228

Mission Impossible

5

2 Days in Paris

229

Momento

6

25th Hour

230

Monster Inc

7

3 days of condor

231

Mr. and Mrs. Smith

8

3:10 to Yuma

232

Mr. Magarium's Wonder Emporium

9

3:10 to Yuma (new)

233

Mr.Smith goes to Washington

10

300

234

Mrs Henderson Presents

11

50 First Dates

235

Mrs. Doubtfire

12

8 1/2

236

Munich

13

A Bug's Life

237

My blueberry nights

14

A clockwork orange

238

My cousin Vinny

15

A Good woman

239

Namesake

16

A Hard Day's Night

240

National Treasure

17

A perfect murder

241

Never been kissed

18

A prairie home companion

242

No country for old men

19

A walk to remember

243

No reservations

20

About a Boy

244

North by Northwest

21

After hours

245

Northfork

22

After the sunset

246

Notorious

23

All about my Mother

247

Notting Hill

24

Along came Polly

248

Ocean's eleven

25

American Beauty

249

Ocean's thirteen

26

American Gangster

250

Ocean's twelve

27

American Pie

251

October sky

28

American Wedding

252

Office Space

29

America's Sweetheart

253

Once upon a time in America

30

An Affair to remember

254

Once Upon a Time in the West

31

Analyze that

255

One flew over the cuckoo's nest

32

Analyze this

256

Out of Africa

33

Anger Management

257

Out of Time

34

Annie Hall

258

Patch Adams

35

Anywhere but here

259

Paycheck

36

As Good as it gets

260

People I know

37

Atonement

261

Philadelphia

38

Away from her

262

Phonebooth

39

Backdraft

263

Piececs of April

40

Bad Boys

264

Premonition

41

Bandidas

265

Pretty woman

42

Bang the drum slowly

266

Prozac Nation

43

Basic Instinct I

267

Psycho

44

Basic Instinct II

268

Pulp fiction

45

Batman Begins

269

Raging bull

46

Be Cool

270

Ran

47

Because I said so

271

Rashomon

48

Before sunrise

272

Ratatouille

49

Before sunset

273

Rear window

50

Being John Malkovich

274

Red Dragon

51

Bella

275

Red Eye

52

Big Night

276

Rent for Love

53

Black Dahlia

277

Requiem for a Dream

54

Black Mail

278

Rescue Dawn

55

Blind Dating

279

Reservoir Dogs

56

Blood Diamond

280

Riding alone for thousands of miles

57

BORAT

281

Riding in Cars with Boys

58

Braveheart

282

Risky Business

59

Brazil

283

Road to Perdition

60

Breaking and Entering

284

Rocky I

61

Breathless

285

Rocky II

62

Broken Flowers

286

Rocky III

63

Bruce Almighty

287

Rocky IV

64

Cape Fear

288

Rocky V

65

Captain Corelli's Mandolin

289

Romance & Cigarettes

66

Carolina

290

Rope

67

Cartlito's Way

291

Rumor has it…

68

Casablanca

292

Run Lola Run

69

Casino

293

Runaway Bride

70

Catch and Release

294

Runaway Jury

71

Catch Me If You Can

295

S1MONE

72

Charlie Wilson's War

296

Sanjuro

73

Chasing Amy

297

Saved!

74

Chasing Liberty

298

Saving Private Ryan

75

Chicago

299

Say It isnt So

76

China town

300

Scarecrow

77

Cinema Paradiso

301

Scarface

78

City by the sea

302

Scent of woman

79

City of God

303

Schlinder's List

80

Closer

304

Scoop

81

Clueless

305

Sea of love

82

Cold Mountain

306

Selena

83

Committed

307

Sense and Sensibility

84

Crash

308

Serpico

85

Cruel Intentions 2

309

Seven Samurai

86

Cruising

310

Shakespeare in love

87

Dark knight

311

Shall we dance?

88

Déjà vu

312

Shattered

89

Derailed

313

Shrek

90

Desperado

314

Shrek II

91

Devil's Advocate

315

Shrek tale

92

Dial M for Murder

316

Sideways

93

Die Hard

317

Sin City

94

Dimonds are forever

318

Singin' in the rain

95

Dog day afternoon

319

Sliding Doors

96

Dogma

320

Small time crooks

97

Donnie Brasco

321

Smart People

98

Double Indemnity

322

Snatch

99

Dr. Strangelove

323

Some like it hot

100

Eastern Promises

324

Someone like you

101

Elephant

325

Stage Fright

102

Enchanted

326

Stranger on a train

103

Enemy at the Gates

327

Sunset Boulevard

104

Entrapment

328

Sweet Land

105

Euro Trip

329

SweetHome Alabama

106

Everyone says I love you

330

Swordfish

107

Everything you want

331

Sydney White

108

Exorcism of emily rose

332

Taxi Driver

109

Factotum

333

Thank you for Smoking

110

Failure to launch

334

The 39 Steps

111

Fatal Attraction

335

The Air I Breath

112

Field of Dreams

336

The Bad news Bears

113

Fight Club

337

The Birds

114

Final Destination I

338

The Bourne Identity

115

Final Destination II

339

The Brave One

116

Final Destination III

340

The Break-up

117

Finding Forrester

341

The curse of the golden flower

118

Finding Nimo

342

The Da Vinci Code

119

Firewall

343

The Darjeeling Limited

120

Flighplan

344

The Day after tomorrow

121

Forrest Gump

345

The Deer hunter

122

Four Weddings and a funeral

346

The Departed

123

Freaky Friday

347

The English Patient

124

Frida

348

The Englishman Who Went Up a Hill But Came Down a Mountain

125

Friends with Money

349

The Exorcism of Emily Rose

126

Fun with Dick and Jane

350

The Family Stone

127

Galaxy Quest

351

The Game

128

Gandhi

352

The Godfather I

129

Garden State

353

The Godfather II

130

Georgia Rule

354

The Godfather III

131

Get Shorty

355

The Gods Must Be Crazy

132

Ghost Rider

356

The Gods Must Be Crazy II

133

Ghost World

357

The Golden Compass

134

Girl with a Pearl Earring

358

The Good shepherd

135

Gladiator

359

The Good, the Bad and the Ugly

136

Glengarry Glen Ross

360

The Graduate

137

Glory

361

The Great Debaters

138

God Must be Crazy I

362

The Great escape

139

God Must be Crazy II

363

The Guru

140

Goldfinger

364

The heartbreak kid

141

Good Luck chuck

365

The HOAX

142

Good Morning, Vietnam

366

The Holiday

143

Good will Hunting

367

The honeymooners

144

Great Expectations

368

The Hot Chick

145

Greenfingers

369

The Hushler

146

Groundhog Day

370

The Incredibles

147

Guess who

371

The Invasion

148

Happy Times

372

The Island

149

Harold and Kumar go to White Castle

373

The King of Comedy

150

Harsh Times

374

The Lives of others

151

Heat

375

The Lizzie McGuire Movie

152

Hero

376

The Machinist

153

Hide and Seek

377

The Magnificent Seven

154

Hitch

378

The Majestic

155

Hotel Rwanda

379

The Man Who Knew Too Much

156

House of Sand and Fog

380

The Man who wasn't there

157

How to Deal

381

The Manchurian Candidate

158

How to Marry a Millionaire

382

The Mask

159

How to Steal a Million

383

The Mask of Zorro

160

I Am Legend

384

The Motorcycle diaries

161

I confess

385

The Mummy Returns

162

I could Never be your Woman

386

The name of the rose

163

Ikiru

387

The Nanny Diaries

164

In good Company

388

The New World

165

In her Shoes

389

The Other Boleyn Girl

166

Independence Day

390

The Others

167

Indiana Jones and last crusade

391

The Others ( Nicole Kidman)

168

Indiana Jones and temple of doom

392

The Panic in Needle Park

169

Insomnia

393

The Perfect score

170

Intimate Strangers

394

The Pink panther

171

It could happen to you

395

The Prestige

172

It happened in one night

396

The Prince and Me

173

It's a Wonderful Life

397

The Princess Diaries

174

Jackie Brown

398

The Recruit

175

Jaws

399

The Rock

176

Jay and Silent Bob strike back

400

The Score

177

Jerry Maquire

401

The Scorpion King

178

Just Married

402

the Sea Inside

179

Kalifornia

403

The Seven Year Itch

180

Kill Bill: Vol. I

404

The Shawshank Redemption

181

Kill Bill: Vol. II

405

The Silence of the lambs

182

King Kong NEW

406

The Sixth sense

183

King Kong OLD

407

The Spiderwick Chronicles

184

L.A. confidential

408

The Sting

185

Ladder 49

409

The Terminal

186

Lagaan

410

The third man

187

Lage raho munna bhai

411

The Tiger and the Snow

188

Lara craft tomb rider

412

The Unbearable Lightness of being

189

Lars and the Real Girl

413

The United States of Leland

190

Last Tango in Paris

414

The untouchables

191

Laurel Canyon

415

The usual suspects

192

Lawrance of Arabia

416

The war of the worlds

193

Leaving Las Vegas

417

The way we were

194

Legally Blond

418

The wrong man

195

Leon - The Professional

419

There will be blood

196

Liar Liar

420

There's something about Mary

197

License to Wed

421

Tie me Up/Tie me Down

198

Life is Beautiful

422

To catch a Thief

199

Little Black book

423

To kill a mockingbird

200

Little Miss Sunshine

424

Tootsie

201

Little Woman

425

Top Gun

202

Lock, stock and two smoking barrels

426

Toy Story I

203

Lonely Hearts

427

Toy Story II

204

Look at me

428

Traffic

205

Lord of war

429

Two for the money

206

Lost in Translation

430

Two weeks notice

207

Love Actually

431

Unfaithful

208

Love me if you dare

432

V for Vendetta

209

M

433

Vantage Point

210

Mad money

434

Vertigo

211

March of the penguins

435

Volver

212

Margot at the wedding

436

Wag the dog

213

Marnie

437

Walk the Line

214

Match Point

438

Wall Street

215

Matrix Reloaded

439

Wedding crashers

216

Mean Creek

440

We're no angels

217

Mean Girls

441

What woman Want

218

Mean Streets

442

Where the heart is

219

Meet the parents

443

Where the money is

220

Men in Black

444

Wonder Boys

221

Michael Clayton

445

Working Girl

222

Milk Money

446

Yojimbo

223

Million Dollar Baby

447

You only live twice

224

Millions