அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

மழை - அரசியல் 11/30/2008


நண்பர் லக்கி, "பெய்யெனப் பெய்திடும் மாமழை!” என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் அவருடைய பின்னூட்டங்களுக்கு பதில் எழுத நினைத்து, அது கொஞ்சம் அதிகமாகிவிட, அதை ஒரு பதிவாக்கிவிட்டேன்.

//
பிளாட் போட்டு விற்றால் விசாரிக்காமல் வாங்க நமக்கு எங்கே போயிற்று புத்தி. ஏரியை மடக்கி விற்கிறார்கள். சீப்பாக கிடக்கிறது என்று வாங்கிப் போடுவது யார்?
//
இதில் விற்றவனும்,  வாங்கியவனும் குற்றவாளிகளே. இதை தடுக்காமல், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அரசியல்வியாதிகளையும்,  அதிகாரிகளையும் எந்த் LIST-ல சேர்க்கிறது?

நாட்டையும் நகரையும் நிர்வகிக்க தானே மக்கள் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் சரியாக நிர்வகிக்கிறார்களா? கொஞ்சம் நெஞ்ச தொட்டு சொல்லுங்க? இந்த மாதிரி புறம்போக்கு இடங்களை ஒரு அரசியல்வாதி தொடர்பில்லாமல், விற்க முடியுமா? 

மறுபடியும் விடாமல்
//ஒரு கோடியே முப்பது லட்சம் பேர் வசிக்க ஏற்ற நகரமா சென்னை? இவ்வளவு பேரையும் அரசியல்வாதிகளா சென்னைக்கு கொண்டுவந்தார்கள்?
//

ஒரு வீட்டில் மூன்று பேருக்கு மேல் வசிக்க முடியாத, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொண்டால் யார் தப்பு? குடும்பத் தலைவன்/தலைவி தானே? இந்த மக்கள் தொகை ஒரே நாளில் பெருகிடவில்லையே. தொழில் நிறுவனங்களை பரவலாக்கிருக்கலாமே? இதற்கும் ஒரு TRADEMARK பதில் உண்டு, ”கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறு இது”.

எந்த ஒரு சின்ன நிறுவனத்தை எடுத்தாலும், ஆண்டு ஆரம்பத்திலேயே அவர்களது குறிக்கோளையும் அதை நிறைவேற்றுவதற்கான, வழிமுறைகள்/சாத்தியக்கூறு/நடைமுறை சிக்க்ல்கள் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து விடுவார்கள்.

நடந்ததை விடுங்கள், இன்னும் இரண்டொரு வருடங்களில், இதே போன்றொரு வெள்ளம் கண்டிப்பாக வரும், அதை எதிர் கொள்ள எதாவது வழிமுறைகள் வைத்திருக்கிறார்களா? அப்படியெனில், அதில் பொதுமக்களின் /அரசியல் வாதிகளின்/அதிகாரிகளின் பங்கு என்ன? 

There is a Parasitic Manager's Credo in software industly

Blame the innocent. 
Take credit for other's work.
Fire the hero when he tells you off in front of the other parasites.

This quote will perfectly fit to our politician.

நீங்களும் இந்த அப்பாவி பொதுமக்கள் மீது பழி சுமத்திட்டீங்க, ஆமா, இன்னும் ”எங்களுக்கு நிவாரணமா எதாவது பிச்சை போடுங்க”-னு கேக்குறானே அவன் குற்றவாளி தான்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா - சொ,செ,சூ. வைத்துக்கொண்ட பொதுமக்கள் தப்பானவர்கள் தான், குற்றவாளிகள் தான்

உங்கள் பாணியிலே புத்திசாலி தனமா ஒரு கேள்வி. அந்த அரசியல்வியாதியும்/அதிகாரியும் பொதுமக்களில் ஒருவர் தானே? 

இதே மாதிரி ஒரு வெள்ளம் 2002 தீபாவளி நேரத்தில் வந்தது, அதில் நேரடியாக பாதிக்கப்பட்டவன் நான். இன்னும் அதே நிலைமை தான் என்று நினைக்கும் போது கொஞ்சம் கவலையா இருக்கு.



தாய்ப்பாசம் 11/27/2008


என் கல்லூரித்தோழி எனக்கு ஈ-மெயிலில் அனுப்பிய தாய்ப்பாசம் பற்றிய கவிதை. இதே போன்று எனக்கு இன்னொரு கவிதையும் அனுப்பியிருந்தாள். இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடித்திருந்ததால், இதை பதிவிட்டுள்ளேன். அவள் ஒரு நல்ல செய்தி சொல்ல முயற்சி செய்கிறாள் என்று நினைக்கிறேன் :) . எனது வாழ்த்துக்கள் அவருக்கு என்றென்றும் உண்டு. இதோ அவர் அனுப்பிய கவிதை:



மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
‘குடை எடுத்துட்டுப்
போக வெண்டியதுதானே’
என்றான் அண்ணன்.
‘எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே’
என்றாள் அக்கா.
‘சளி பிடிச்சுகிட்டு
செல்வு வைக்கப்போற பாரு’
என்றார் அப்பா.
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
“மழையை!”.
------ யாரோ

ஆனால், எனக்கு என்னவோ தந்தை பாசம் தான் அதிகம். அதனால் தான் என்னவோ ”தேவர் மகன்”, ”தவமாய் தவமிருந்து”, “Octorber Sky”, ”வாரணம் ஆயிரம் ( நிறைய ஓட்டைகள் இருந்தாலும்)” படங்களை பிடித்திருந்தது. நீங்கள் படித்து ரசித்த தந்தையைப் பற்றிய கவிதைகளை இங்கே பின்னூட்டமிடலாம். 


உலக பொருளாதாரம் - ஒரு நகைச்சுவை 11/25/2008


நேற்று டீக்கடையில்* நானும் என் நண்பரும் வழக்கம் போல சமூக முற்போக்கு** சம்பந்தமான விவாதம் செய்யும் போது, திடீர்னு எங்க பேச்சு உலக பொருளாதாரம் பக்கம் போயிடுச்சு, நமக்கு தான் அதெல்லாம் அத்துப்படி ஆச்சே..

நான் என் நண்பர்கிட்ட கேட்டேன். என்னங்க பாஸ், பெடரல் கவர்மெண்ட், Fenny Mae, Freddie Mac- ஐ காப்பத்துனதும் இல்லாம, அதுக்க அப்புறமா BIG 3-னு சொல்ல கூடிய 3 பெரிய கார் ( இவங்க தான் ப்ளைட்-ல போய் Bail Out பிச்சை கேட்டவுங்க) நிறுவனங்களுக்கும் $25B (சரியான தொகை தானா ?) பைல் Bail Out குடுக்க போறதா சொல்றாங்க, இப்போ என்னடான்னா Citibank-ஐ காப்பாத்த மறுபடியும் $20B குடுக்க போறாங்களாம். ஆனா Citibank $320B வேணும் அப்டினு பெரிய அண்டா-வை தூக்கிட்டு வர்றாங்க. என்னங்க நடக்குது இங்கே? அப்டினு கேட்டா அதுக்கு அவர் சொன்ன சுறுக் ஜோக் இங்கே:  

அதாவது ஓர் அமெரிக்கன், ஒரு சீனாக்காரன், ஓர் அரேபியன், இவனுங்களுக்குள்ள ஒரு போட்டி யாரு ரொம்ப பெரிய பணக்காரன்னு. சீனாக்காரன், நான் தான்டா உங்க எல்லோரையும் விட பணக்காரன் அப்டினு சொல்லிட்டு பையில இருந்து ஒரு 100 யுவான் நோட்டை எடுத்து, அதுல புகையிலையை வச்சு உருட்டி புகை பிடிக்க ஆரம்பிச்சுட்டான். உடனே அரேபியன் த்தூ... இவ்ளோ தானா அப்டினு 10000 திர்ஹாம் நோட்டுல புகையிலையை வச்சு உருட்டி புகை பிடிக்க ஆரம்பிச்சுட்டான். அடுத்து வந்த அமெரிக்கன் அவனுங்க ரெண்டு பேரையும் நக்கலா பாத்து சிரிச்சுட்டு பையில இருந்து ஒரு செக் எடுத்து அதுல 1 Million Dollars னு எழுதி, அந்த செக்-ல புகையிலையை வச்சு உருட்டி புகை பிடிக்க ஆரம்பிச்சுட்டானாம். இப்போ புரியுதுங்களா இவனுங்க Bail Out Technology.  

டீக்கடை* 
-- தேவை இல்லாத ஆணியெல்லாம் புடிங்கி களைச்சு போன பிறகு, அந்த களைப்ப நீக்குவதற்காகவும், தூக்கத்த கலைப்பதற்காகவும் ஒரு 3PM வாக்கில் டீ சாப்பிட போவோம்.. அது தான் எங்கள் டீக்கடை.  

சமூக முற்போக்கு** 
-- George Bush, ஈராக் மேல போர் தொடுத்தது தப்பு அப்டினு அவருக்கு ஒரு கண்டனம் (தந்தி அனுப்பிச்சா கண்டு பிடிச்சுடுவாங்க)/ ஆலோசனை / எச்சரிக்கை விடுறது 
-- இந்தியாவில் லஞ்சத்தை எப்படி ஒழிக்கலாம் அப்படினு இங்க அமெரிக்காவுல உக்காந்துகிட்டு கருத்து சொல்றது.
ரத்தின சுருக்கமா சொல்றதுனா.. தேவை இல்லாத ஆணி புடுங்குறது.


என்னைக் கவர்ந்த கதாநாயகி - நேட்டலி போட்மேன் (Natalie Portman) 11/21/2008

என்ன தான் தமிழ் திரையுலகில் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள்( கதாநாயகிகள்) மின்னினாலும், என்னுடைய இதய வானில் இன்னும் நீச்சல் அடித்து கொண்டிருக்கும் ஒரே நாயகி ரஞ்சனி தான்.. ரொம்ப பேருக்கு அப்படி ஒரு நடிகை இருப்பதே தெரியாமல் இருக்கலாம். முதல் மரியாதை, கடலோர கவிதைகள் படங்களில் இரண்டாவது கதாநயாகியாக நடித்திருப்பார்.

எனக்கும் அந்த இரண்டு படங்கள் மட்டும் தான் தெரியும். என்னொட நண்பர்களுக்கெல்லாம் இந்த விசயம் தெரியும் என்பதால், அவளை TV -யில பார்த்தா போதும் உடனே என்னை கூப்பிட்டு பாக்க சொல்வானுங்க( பெரும்பாலும் இந்த ரெண்டு படத்துல தான் அவள பார்த்து இருக்கேன்). அப்படித்தான்  ஒரு தடவை தூங்கி கிட்டு இருந்த என்னை எழுப்பி என் நண்பன் TV பாக்க சொன்னான், பாத்தா என் தலைவி ஒரு Doctor, தலைவர் கார்த்திக்கு வைத்தியம் பாத்தாங்க( படம் பேரு தெரியல, யாராவது தெரிஞ்சா சொல்லுங்க). அதுக்கு அப்புறம் பலர் வந்தாலும் இன்னும் எனக்கு ரஞ்சனி மேல அப்படி ஒர் ஈர்ப்பு.

அப்படி நட்டு வச்ச குத்து கல்லு மாதிரி இருந்த நம்மள, ஒரு கத்ரீனா புயல் - ஜெருசெலம்-ல பிறந்து இப்போ ஹாலிவுட் -ல மையம் கொண்டுள்ள புயல், ஒரே தாக்கா தாக்கிடுச்சு.

முதன் முதலில் ஹாலிவுட் படங்களை பார்க்க ஆரம்பிக்கும் போது, action படங்களையே பார்க்க ஆரம்பிச்ச நான், அப்புறம் சில நாட்களுக்கு பிறகு அனைத்து action படங்களுமே ஒரே மாதிரி stereo type -ஆக இருப்பது போல் தோன்ற ஆரம்பித்தது. அதுக்கு அப்புறம் chick flick படங்களை பார்க்க ஆரம்பித்தேன், அப்படி பார்க்கும் கதாநயகிகளை வைத்தே படங்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்த எனக்கு Julia Stiles நடித்த
10 Things I hate about you, அதில் அவளுடைய face expression ரொம்ப பிடிச்சு போச்சு. காதலை/டேட்டிங்கை வெறுக்கும் ஒரு மூத்த சகோதரியாக நடித்திருப்பார். ஹீத் லெட்ஜரை தப்பிக்க வைக்க வகுப்பறையில் இவர் எடுக்கும் முயற்சி.... வாவ்.. அதுக்கு அப்புறம் Mandy Moore, Nicole Kidman, Jennifer Aniston, Katie Holmes, Catherine Zeta-Jones, Salma Hayek (இவர பத்தி ஒரு புத்தகமே போடலாம் ) Scarlett Johansson ஆகியோர் நடித்த பெரும்பாலான படங்களை பார்த்தாகிவிட்டது.. அதுக்கு அப்புறமா தான், நான் நேட்டலி போட்மேன்((Natalie Portman) நடித்த படங்களை  பார்க்க ஆரம்பிச்சேன்

அவர் நடித்த 90% படங்களை பார்த்தாச்சு; Star Wars Series படங்களை தவிர்த்து கிட்ட தட்ட அனைத்தையும் பார்த்தாகிவிட்டது. என்னா நடிப்பு! என்னா நடிப்பு!!

மவுன ராகம் கார்த்திக் மாதிரி, Cold Mountain படத்தில் மிக குறைந்த நேரமே நடித்தாலும்,முத்திரை பதித்திருப்பார். Jude Law-விடம் உன் பக்கத்துல படுத்துக்கவா அப்படினு ஏக்கத்தோடு கேக்கும்போதும் சரி, தன் பிள்ளையை காப்பற்ற போராடும் போதும் சரி, பின்னி பெடல் எடுத்திருப்பார். இந்த படத்தில் ஒரெ ஒரு குறை என்னவென்றால், இவரது கிண்டல் கலந்த வெக்க சிரிப்பு மட்டும் மிஸ்ஸிங்.

The Professional படத்தின் Audition க்காக, இவர் பங்கு பெற்ற போது இவருக்கு வயது 12-13 தான், ஆனா பாருங்க இவரின் திறமையை, படத்திலும் சும்மா புகுந்து விளையாடிருப்பார். இதே போன்றொரு Audition காட்சி "Anywhere but here" படத்திலும் வரும், அதில் தன் அம்மாவாக நடித்த சூசன்- கிண்டல் பண்ணி நடிக்க தெரியாதது மாதிரி நடித்திருப்பார். இப்படி இவர் நடித்த படங்களை அடுக்கி கொண்டே போகலாம்..

என்னை மிகவும் கவர்ந்தது V for Vendetta , Closer & The Other Boleyn Girl படங்கள் தான். V for Vendetta படத்துக்காக தன் தலையை மொட்டை போட்டிருந்திருக்கிறார். Closer  டத்தின் ஆரம்பத்தில Slow motion-ல நடந்து வர்றதுல இருந்து.... இறுதியில Jude Law வோட காதலை வேண்டாம்னு சொல்றது வரைக்கும் சும்மா அநாயசமா புகுந்து விளையாடி இருப்பார். இந்த படத்துல நடிச்சதுக்காக Oscar Award-க்கு பரிந்துரை செய்யபட்டு, துரதிர்ஷம் காரணமாக (?) இவருக்கு அந்த Award கிடைக்கல. இந்த படத்துல அந்த வெக்கம் கலந்த கிண்டல் (இவரோட Trademark) சிரிப்பு நிறைய இருக்கும். Mr. Magorium's Wonder Emporium படத்துல இவரோட Trademark சிரிப்பு நீக்கமற நிறைஞ்சு இருக்கும்.

அப்புறம் The Other Boleyn Girlஒரு உதாரணத்துக்கு சொல்லனும்னா பார்த்தேன் ரசித்தேன் படத்துல சிம்ரன பண்ணிய பானு கதாபாத்திரம் மாதிரி தான். ஆனா இதுல வீரியம் இன்னும் ஜாஸ்தி, கூட நடித்த எல்லோரையும் தூக்கி சாப்பிட்டானு சொல்லலாம், அந்த அளவுக்கு வலிமையானது அவளது நடிப்பும்/அந்த கதாபத்திரமும். அரசரை தன் கைக்குள்ள வச்சுகிறதுக்காக இவர் எடுக்கிற ஒவ்வொரு முடிவும் அதை வெளிப்படுத்துற தோரணையும்... அப்படியே வாழ்ந்திருக்கா அப்டினு சொல்ற மாதிரி இருந்துச்சு. ஆனா இறுதியில் அவர் எடுக்கும் தவறான முடிவால் மொத்த குடும்பமும் சின்னா பின்னமாகி போறது தான் சோகம்.

எதோ எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டேன், யாருக்காவது இவளை பற்றிய மேலதிக தகவல் தெரிஞ்சா இங்கே பின்னூட்டத்தில் எனக்கும் தெரிவிக்கவும்(நாட்டுக்கு ரொம்ப முக்கியமோ இல்லியோ(?!); எனக்கு ரொம்ப முக்கியம் :) )

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் 11/17/2008


சமீபத்தில்-இந்த வார இறுதியில் "வாரணம் ஆயிரம்" படம் பார்க்க New Jersey போகும் போது, தற்செயலாக இந்த பாட்டை கேட்க நேர்ந்தது, சட்டென்று என் கவனத்தை ஈர்த்துக்கொண்டது அந்த பாடல், மிக அருமையான மெல்லிசை பாடல், ஒன்றிரண்டு வார்த்தைகளை தவிர அனைத்துமே சுத்த தமிழ் வார்த்தைகள். 

இந்த பாடல் எனக்கு தில் படத்தில் வரும் " உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?" என்ற பாடலை எனக்கு நினைவூட்ட தவறவில்லை..

பாடல் இடம் பெற்ற படம்: பொறி
பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ
இசை : தீனா

இதோ அந்த பாடல் வரிகளுடன் :

ஆண்:
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெண்:
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆண்:
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்

பெண்:
ஆள் இல்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

ஆண்:
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெண்:
ஹ்ம்ம்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆண்:
பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்

பெண்:
பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்துடும் முதல் மாலை

ஆண்:
புகைப்படம்  எடுக்கையில் திணறும் புன்னகை அன்பே அன்பே நீ தானே
அடை மழை நேரத்தில பருகிம் தேநீர் அன்பே அன்பே நீ தானே

பெண்:
ஹ்ம்ம்
தினமும் காலையில் எனது வாசலில் இருக்கும் நாளிதழ் நீ தானே

ஆண்:
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெண்:
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆண்:
தாய் மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

பெண்:
தேய்பிறை போல் படும் நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

ஆண்:
செல்-போன் சினுங்கிட குவிகிற கவனம் அன்பே அன்பே நீ தானே
பிடித்தவர் தருகிற பரிசு பொருளும் நீ தானே

பெண்:
ஹ்ம்ம்
எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை ரசிக்கும் வாசகன் நீ தானே

ஆண்:
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெண்:
ஹ..ஹா.ஹா..
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆண்:
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்

பெண்:
ஆள் இல்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

ஆண்:
ஹ..ஹா.ஹா..
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்